-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
பரிபூரணராக: இங்கே ‘பரிபூரணம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, “முழுமை,” “முதிர்ச்சி” என்ற அர்த்தத்தைத் தரலாம்; அல்லது, ஒரு அதிகாரி ஏற்படுத்தியிருக்கும் தராதரங்களின்படி “குற்றமற்றவராக” இருப்பதை அர்த்தப்படுத்தலாம். யெகோவா மட்டும்தான் முழுமையான கருத்தில் பரிபூரணராக இருக்கிறார். அதனால், இந்த வார்த்தை மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும்போது அவர்கள் ஓரளவுக்குப் பரிபூரணமாக இருப்பதைத்தான் குறிக்கிறது. இந்த வசனத்தில், யெகோவாவின் மீதும் மற்ற மனிதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் முழுமையான அன்பு காட்ட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒருவர் பாவ இயல்புள்ளவராக இருந்தாலும் இப்படிப்பட்ட அன்பை அவரால் காட்ட முடியும்.
-