வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மே 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 27-29
“யெகோவாவைப் போல பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்”
யெகோவாவின் பண்புகளை முழுமையாக மதித்துணருங்கள்
14 அந்த ஐந்து பெண்களும் மோசேயிடம் வந்து, “எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப் போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும்” என்று சொல்லி முறையிட்டார்கள். ‘சட்டத்தை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாதே’ என்று மோசே பதிலளித்தாரா? இல்லை. ‘அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுபோனார்.’ (எண். 27:2-5) யெகோவா என்ன சொன்னார்? “செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்க வேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக.” அதுமட்டுமல்ல அதைச் சட்டமாக்கினார். “ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும்” என்று மோசேக்குக் கட்டளையிட்டார். (எண். 27:6-8; யோசு. 17:1-6) அது முதற்கொண்டு, இதே சூழ்நிலையிலிருந்த இஸ்ரவேல் பெண்களுக்கு ஆஸ்தி கொடுக்கப்பட்டது.
யெகோவாவின் பண்புகளை முழுமையாக மதித்துணருங்கள்
15 இது உண்மையிலேயே பாரபட்சமற்ற ஒரு தீர்மானம்! மற்ற இஸ்ரவேலரிடம் நடந்துகொண்ட விதமாகவே, நிர்க்கதியாக நின்ற அந்தப் பெண்களிடமும் யெகோவா நியாயமாக நடந்துகொண்டார், அவர்களைக் கௌரவித்தார். (சங். 68:5) யெகோவா தம்முடைய எல்லா ஊழியர்களிடமும் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்கிறார் என்பதற்கு இதுபோன்ற நிறைய பைபிள் பதிவுகள் சான்றளிக்கின்றன.—1 சா. 16:1-13; அப். 10:30-35, 44-48.
யெகோவாவின் பண்புகளை முழுமையாக மதித்துணருங்கள்
16 யெகோவாவின் பாரபட்சமற்ற குணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? பாரபட்சமற்ற தன்மையில் இரண்டு விஷயங்கள் இருப்பதை மறந்துவிடாதீர்கள். பாரபட்சமற்றவராக இருந்தால்தான் மற்றவர்களிடம் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்வோம். ‘எனக்கு பரந்த மனசு, யாரிடமும் பாரபட்சம் காட்டுறதில்ல’ என்று நாம் எல்லோருமே நினைத்துக்கொள்ளலாம். அதே சமயம் மற்றவர்களைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்று யதார்த்தமாக யோசித்துப்பார்ப்பது கஷ்டம்தான் என்பதையும் ஒத்துக்கொள்வோம். அப்படியென்றால், நாம் பாரபட்சமற்றவரா, இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஒருசமயம் தம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிய விரும்பினார். அதனால், தம்முடைய நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் “மனிதகுமாரனை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். (மத். 16:13, 14) இயேசுவின் முன்மாதிரியை நாமும் பின்பற்றலாம், அல்லவா? நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படையாகப் பேசுகிற உங்கள் நண்பர்கள் யாரிடமாவது கேட்கலாம். ஒரு குறிப்பிட்ட இனம், பணம், படிப்பு இவற்றைப் பார்த்துதான் மற்றவர்களிடம் பழகுகிறீர்கள் என்று அவர் சொன்னால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? யெகோவாவைப் போல மற்றவர்களிடம் துளியும் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்வதற்கு உதவும்படி ஊக்கமாக ஜெபம் செய்ய வேண்டும்.—மத். 7:7; கொலோ. 3:10, 11.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 528 பாரா 5
காணிக்கைகள்
திராட்சமது காணிக்கை. இஸ்ரவேலர்கள், பெரும்பாலான மற்ற காணிக்கைகளோடு இதையும் சேர்த்து செலுத்தினார்கள். முக்கியமாக, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் அவர்கள் குடியேறிய பிறகு இதைச் செலுத்தினார்கள். (எண் 15:2, 5, 8-10) அவர்கள் திராட்சமதுவை யெகோவாவுக்குக் காணிக்கையாகப் பலிபீடத்தில் ஊற்றினார்கள். (எண் 28:7, 14; யாத் 30:9-ஐயும் எண் 15:10-ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள்.) “விசுவாசத்தால் நீங்கள் செய்கிற பரிசுத்த சேவையின் மூலம் செலுத்துகிற பலிமீது நான் திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றப்பட்டாலும் சந்தோஷமாக இருப்பேன்” என்று பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலி 2:17) சகக் கிறிஸ்தவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்ய மனமுள்ளவராக இருந்ததைக் காட்டுவதற்குத்தான், திராட்சமது காணிக்கைபோல் தான் ஊற்றப்பட்டதாக பவுல் சொன்னார். அவர் இறப்பதற்குச் சில காலத்துக்கு முன் தீமோத்தேயுவுக்கு இப்படி எழுதினார்: “நான் ஏற்கெனவே என்னைத் திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றிவிட்டேன்; நான் விடுதலை பெறுகிற நேரம் நெருங்கிவிட்டது.”—2தீ 4:6.
மே 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 30-31
“உங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்துங்கள்”
it-2-E பக். 1162
நேர்ந்துகொள்வது
நேர்த்திக்கடன்கள் முழுக்க முழுக்க விருப்பப்பட்டு செலுத்தப்பட்டன. ஆனாலும், ஒருவர் நேர்ந்துகொண்டால், கடவுளுடைய சட்டத்தின்படி அதை அவர் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஏனென்றால், ஒருவர் அப்படி நேர்ந்துகொள்ளும்போது அதற்குத் தன்னுடைய உயிரையே உத்தரவாதமாக வைக்கிறார். (எண் 30:2; ரோ 1:31, 32-ஐயும் பாருங்கள்.) நேர்ந்துகொள்ளும் விஷயத்தில் நம்முடைய உயிர் உட்பட்டிருப்பதால்தான், ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கும்படி பைபிள் சொல்கிறது. அதனால், ஒரு விஷயத்துக்காக நேர்ந்துகொள்வதற்கு முன் அதில் உட்பட்டிருக்கிற பொறுப்புகளைப் பற்றி நன்றாக யோசித்துப்பார்க்க வேண்டும். “உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எதையாவது கொடுப்பதாக நேர்ந்துகொண்டால், . . . உங்கள் கடவுளாகிய யெகோவா அதை நிச்சயம் உங்களிடம் கேட்பார். நீங்கள் அதை நிறைவேற்றாவிட்டால் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள். நீங்கள் எதையும் நேர்ந்துகொள்ளாமல் இருந்தால், உங்களுக்குப் பாவம் இல்லை” என்று திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தது.—உபா 23:21, 22.
it-2-E பக். 1162
நேர்ந்துகொள்வது
இது, ஒரு செயலைச் செய்வதாகவோ, பலி அல்லது காணிக்கை செலுத்துவதாகவோ ஏதோவொரு சேவையைச் செய்வதாகவோ, சட்டவிரோதமாக இல்லாத சிலவற்றைத் தவிர்ப்பதாகவோ கடவுளுக்குக் கொடுக்கும் வாக்குறுதியைக் குறிக்கிறது. ஒருவர் நேர்ந்துகொள்ளும்போது, தன்னுடைய சொந்த விருப்பத்தின்படி அதைச் செய்கிறார். இது உறுதிமொழி எடுப்பதற்கு அல்லது சத்தியம் செய்வதற்கு சமமாக இருக்கிறது. சிலசமயங்களில் இந்த வார்த்தைகளை பைபிள் சேர்த்தும் சொல்கிறது. (எண் 30:2; மத் 5:33) “நேர்ந்துகொள்வது” ஒருவருடைய உள்நோக்கத்தைத் தெரியப்படுத்துகிறது. “உறுதிமொழி எடுப்பது” ஒரு உயர் அதிகாரிக்கு உண்மையோடு இருப்பதாக, அல்லது தான் கொடுத்த வாக்குறுதிக்குக் கட்டுப்படுவதாக சொல்வதைக் குறிக்கிறது. பெரும்பாலும் உறுதிமொழிகளோடு ஒப்பந்தமும் செய்யப்பட்டன.—ஆதி 26:28; 31:44, 53.
எண்ணாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
30:6-8—ஒரு கிறிஸ்தவர் தன் மனைவியின் பொருத்தனைகளை, அதாவது நேர்த்திக்கடன்களை, ஒதுக்கித் தள்ளலாமா? இன்று பொருத்தனைகளை குறித்ததில், அது தமக்கும் தனிப்பட்ட நபருக்கும் உரிய ஒன்றாக யெகோவா கருதுகிறார். எடுத்துக்காட்டாக, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பது ஒரு தனிப்பட்ட பொருத்தனையாகும். (கலாத்தியர் 6:5) அப்படிப்பட்ட ஒரு பொருத்தனையை ஒதுக்கித் தள்ளுவதற்கோ நிராகரிப்பதற்கோ ஒரு கணவருக்கு அதிகாரமில்லை. என்றாலும், கடவுளுடைய வார்த்தைக்கு, அல்லது கணவருக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு முரணாக பொருத்தனை செய்வதை ஒரு மனைவி தவிர்க்க வேண்டும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 28 பாரா 1
யெப்தா
வழிபாட்டுக் கூடாரத்தில் யெகோவாவுக்கென்று முழுமையாக சேவை செய்வதற்கு ஒருவரால் தன்னையே அர்ப்பணிக்க முடிந்தது. அப்படி ஒருவரை அர்ப்பணிக்க பெற்றோருக்கு உரிமை இருந்தது. உதாரணத்துக்கு, சாமுவேல் பிறப்பதற்கு முன்பே அவரை வழிபாட்டுக் கூடார சேவைக்கு அர்ப்பணிப்பதாக அவருடைய அம்மா அன்னாள் நேர்ந்துகொண்டார். அதை, அன்னாளின் கணவர் எல்க்கானா ஒத்துக்கொண்டார். சாமுவேல் பால்மறந்த உடனேயே அன்னாள் அவரை வழிபாட்டுக் கூடாரத்துக்கு கொண்டுபோய் விட்டார். அதோடு, பலி கொடுப்பதற்கு ஒரு காளையையும் கொண்டுபோனார். (1சா 1:11, 22-28; 2:11) சிம்சோனும்கூட பிறந்த சமயத்திலேயே நசரேயனாக கடவுளுக்குச் சேவை செய்வதற்கு விசேஷமாக அர்ப்பணிக்கப்பட்டார்.—நியா 13:2-5, 11-14; ஒரு மகள்மீது அப்பாவுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பற்றி எண் 30:3-5, 16-ல் சொல்லப்பட்டிருப்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்.
மே 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 32-33
“அந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரையும் நீங்கள் துரத்தியடிக்க வேண்டும்”
w10-E 8/1 பக். 23
உங்களுக்குத் தெரியுமா?
எபிரெய வேதாகமத்தில் அடிக்கடி வருகிற “ஆராதனை மேடுகள்” என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?
கடவுள் வாக்குக்கொடுத்த தேசத்துக்கு இஸ்ரவேலர்கள் போவதற்கு சற்று முன்பு, அங்கே வாழ்ந்த கானானியர்களின் வழிபாட்டு இடங்களை முற்றிலுமாக அழிக்கும்படி அவர்களிடம் யெகோவா சொல்லியிருந்தார். “அந்தத் தேசத்து ஜனங்கள் . . . வைத்திருக்கும் எல்லா கற்சிலைகளையும் உலோகச் சிலைகளையும் உடைத்துப்போட வேண்டும். அவர்களுடைய ஆராதனை மேடுகள் எல்லாவற்றையும் இடித்துப்போட வேண்டும்” என்று கடவுள் கட்டளையிட்டார். (எண்ணாகமம் 33:52) இந்த வழிபாட்டு இடங்கள், மலை உச்சியிலோ குன்றின் உச்சியிலோ இருந்திருக்கலாம். அல்லது மரங்களின்கீழோ நகரங்களிலோ கட்டப்பட்ட மேடைகளாக இருந்திருக்கலாம். (1 ராஜாக்கள் 14:23; 2 ராஜாக்கள் 17:29; எசேக்கியேல் 6:3) அந்த இடங்களில், பீடங்கள், பூஜைத் தூண்கள் அல்லது கம்பங்கள், சிலைகள், தூபபீடங்கள், வழிபாட்டுக்கான மற்ற பொருள்கள் இருந்திருக்கலாம்.
இஸ்ரவேலரின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
இஸ்ரவேலர் எதிர்ப்பட்டது போன்ற பல சவால்களை இன்று நாமும் எதிர்ப்படுகிறோம். இன்றைய சமுதாயத்திலும், மக்கள் அநேக விஷயங்களையும் தனிநபர்களையும் தெய்வங்களைப் போல் கருதுகிறார்கள். சிலர், பணத்தையும் அரசியல் அமைப்புமுறைகளையும் தெய்வமாகக் கருதுகிறார்கள். இன்னும் சிலர், பொழுதுபோக்கு துறையிலுள்ள நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், குறிப்பிட்ட மதத் தலைவர்கள் ஆகியோரையும், ஏன், குடும்ப அங்கத்தினர்களையும்கூட தெய்வமாகக் கருதுகிறார்கள். மேற்சொன்னவற்றில் ஏதாவது ஓர் அம்சம் நம் வாழ்க்கையில் முக்கியமானதாக ஆகிவிடக்கூடும். யெகோவாவை நேசிக்காதவர்களோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்வது கடவுளோடு நாம் அனுபவிக்கும் உறவைப் பாதிக்கக்கூடும்.
தவறான பாலுறவு, பாகால் வணக்கத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. அநேக இஸ்ரவேலரை மயக்கி தன் வலையில் சிக்க வைத்ததும் இதுவே. இன்றும் கடவுளுடைய மக்கள் பலர் இதுபோன்ற கண்ணிகளில் சிக்கிவிடுகிறார்கள். உதாரணமாக, ஒருவர் தன் வீட்டில், தனிமையில் இருக்கும்போது கம்ப்யூட்டரின் ‘மவுஸை’ தட்டினால் போதும். விஷயங்களை அறியும் ஆர்வ துடிப்புள்ள ஒருவர் அல்லது ஏமாளியான ஒருவர், தன் நல்ல மனசாட்சியை கெடுக்கும் காரியங்களைப் பார்ப்பதற்கு அது வழிநடத்திவிடும். இன்டர்நெட்டின் ஆபாச வலையில் ஒரு கிறிஸ்தவர் சிக்கிக்கொண்டால் அது எவ்வளவு வருத்தமான விஷயமாக இருக்கும்!
it-1-E பக். 404 பாரா 2
கானான்
கானானியர்களை அழிக்கும்படி “மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளில் ஒன்றையும் யோசுவா செய்யாமல் விடவில்லை.” (யோசு 11:15) ஆனால், தேசத்தில் நடக்கிற எல்லா கெட்ட காரியங்களுக்கும் காரணமாக இருந்தவர்களை முழுமையாக ஒழித்துக்கட்டுவதற்காக யோசுவா கொடுத்த வழிநடத்துதலுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியவில்லை. தேசத்தில் கானானியர்கள் தொடர்ந்து வாழ்ந்துவந்ததால், அவர்களுடைய மோசமான பழக்கவழக்கங்கள் இஸ்ரவேலர்களையும் தொற்றியது. இதனால், கடவுள் சொன்னபடி கானானியர்களை ஒழித்துக்கட்டியிருந்தால் அவர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்களோ அதைவிட அதிகமான இஸ்ரவேலர்கள் இறந்துபோனார்கள். அதுமட்டுமல்ல, வன்முறை, ஒழுக்கக்கேடு, சிலை வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட்டதாலும் நிறைய இஸ்ரவேலர்கள் இறந்துபோனார்கள். (எண் 33:55, 56; நியா 2:1-3, 11-23; சங் 106:34-43) தன்னுடைய நீதியும் நீதித்தீர்ப்புகளும் பாரபட்சமற்றதாக இருக்கும் என்ற எச்சரிப்பை இஸ்ரவேலர்களுக்கு யெகோவா ஏற்கெனவே கொடுத்திருந்தார். இஸ்ரவேலர்கள் கானானியர்களோடு ஒப்பந்தம் செய்தால்... அவர்களோடு சம்பந்தம் பண்ணினால்... யெகோவாவை வணங்குவதோடு அவர்களுடைய தெய்வங்களையும் வழிபட்டால்... அவர்களுடைய மதப் சம்பிரதாயங்களையும் தரங்கெட்ட பழக்கவழக்கங்களையும் கடைப்பிடித்தால்... கானானியர்களைப் போல இவர்களும் கண்டிப்பாக ‘தேசத்திலிருந்து துரத்தப்பட்டு’ அழிக்கப்படுவார்கள் என்று எச்சரித்திருந்தார்.—யாத் 23:32, 33; 34:12-17; லேவி 18:26-30; உபா 7:2-5, 25, 26.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 359 பாரா 2
எல்லை
ஒரு கோத்திரத்துக்கு எந்தப் பகுதியைக் கொடுக்க வேண்டும் என்பதைக் குலுக்கல் முறையில் தீர்மானித்த பிறகு, அதன் எல்லையை அந்தக் கோத்திரத்தின் அளவைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டியிருந்தது. “நீங்கள் அந்தத் தேசத்தை அந்தந்த கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் குலுக்கல் முறையில் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும். ஒரு தொகுதியில் நிறைய பேர் இருந்தால் அதிக நிலத்தைக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேர் மட்டும் இருந்தால் கொஞ்சம் நிலத்தை மட்டும் கொடுக்க வேண்டும். குலுக்கல் முறையில் ஒரு கோத்திரத்துக்கு எந்த இடம் விழுகிறதோ அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்.” (எண் 33:54) ஒவ்வொரு கோத்திரத்துக்கும் குலுக்கல் முறையில் எந்தப் பகுதி விழுந்தாலும், அந்தந்த கோத்திரத்தின் அளவுக்கு ஏற்றபடி அவற்றுக்குரிய எல்லைகளில் மாற்றம் செய்யப்படலாம். அதன்படி, யூதா கோத்திரத்துக்குக் கிடைத்த பகுதி மிகப் பெரியதாக இருந்ததால், அந்தப் பகுதியில் சிமியோன் கோத்திரத்துக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.—யோசு 19:9.
w09-E 10/1 பக். 30, பெட்டி
கடவுளுடைய ஆசீர்வாதத்தோடு நடந்த போர்கள்
கடவுளால் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூர்வ கால இஸ்ரவேலர்களுக்குப் போர் செய்வதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குக் கொடுத்திருந்த கானான் தேசத்துக்கு நுழைவதற்கு முன், இஸ்ரவேலர்களிடம் கடவுள் இப்படிச் சொன்னார்: “உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை [ஏழு தேசங்களை] உங்கள் கையில் கொடுப்பார். அவர்களை நீங்கள் தோற்கடித்து, கண்டிப்பாக அழித்துவிட வேண்டும். அவர்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது, அவர்களுக்குக் கருணையே காட்டக் கூடாது.” (உபாகமம் 7:1, 2) அதனால், இஸ்ரவேலர்களின் படைத் தளபதியான யோசுவா “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே” எதிரிகளைத் தோற்கடித்தார்.—யோசுவா 10:40.
மற்ற நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்ற பேராசையால்தான் இஸ்ரவேலர்கள் இப்படிப் போர் செய்தார்களா? இல்லவே இல்லை. அந்த ஜனங்கள், சிலை வழிபாட்டிலும், இரத்தம் சிந்துவதிலும், ஒழுக்கக்கேட்டிலும் மூழ்கியிருந்தார்கள். தங்களுடைய பிள்ளைகளைக்கூட நெருப்பில் பலி கொடுத்தார்கள். (எண்ணாகமம் 33:52; எரேமியா 7:31) கடவுள் பரிசுத்தமானவர், நீதியுள்ளவர் மக்கள்மேல் அன்பு காட்டுகிறவர். அதனால்தான், அசுத்தமான எல்லாவற்றையும் தேசத்திலிருந்து ஒழித்துக்கட்ட முடிவுசெய்தார். இருந்தாலும், யெகோவா இதயத்தைப் பார்க்கிறவர். அதனால், கெட்ட வழிகளை விட்டுவிட்டு தன்னை வணங்கியவர்களை அவர் காப்பாற்றினார். இன்றுள்ள எந்தவொரு படைத் தளபதியும் இப்படியொரு விஷயத்தைச் செய்ய மாட்டார்.
மே 24-30
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 34-36
“யெகோவாவிடம் தஞ்சம் அடையுங்கள்”
யெகோவாவிடம் தஞ்சம் அடைகிறீர்களா?
4 ஒரு இஸ்ரவேலர் தெரியாத்தனமாக யாரையாவது கொலை செய்திருந்தாலும், ஒரு அப்பாவியைக் கொன்ற பழியை அவர் சுமக்க வேண்டியிருந்தது. (ஆதி. 9:5) ஆனாலும், அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு இரக்கம் காட்ட ஆறு அடைக்கல நகரங்களை யெகோவா ஏற்பாடு செய்திருந்தார். தெரியாத்தனமாகக் கொலை செய்தவர், பழிவாங்க வேண்டியவரிடமிருந்து தப்பித்து, அந்த நகரங்களில் ஒன்றுக்குள் ஓடிப்போய், பாதுகாப்பாக இருக்க முடிந்தது. ஆனால், தலைமைக் குரு சாகும்வரை அவர் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது.—எண். 35:15, 28..
யெகோவாவிடம் தஞ்சம் அடைகிறீர்களா?
6 ஒரு இஸ்ரவேலர் தற்செயலாக யாரையாவது கொலை செய்துவிட்டால், அடைக்கல நகரத்துக்கு ஓடிப்போய், நகரவாசலில் இருந்த பெரியோர்களிடம் ‘தன்னுடைய வழக்கைச் சொல்ல வேண்டியிருந்தது.’ அந்தப் பெரியோர்கள் அவரை நகரத்துக்குள் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது. (யோசு. 20:4) பிற்பாடு, கொலை நடந்த நகரத்தின் பெரியோர்களிடமே அவரை அனுப்பி வைக்க வேண்டியிருந்தது. (எண்ணாகமம் 35:24, 25-ஐ வாசியுங்கள்.) அந்தக் கொலை தற்செயலாக நடந்ததை அந்தப் பெரியோர்கள் உறுதி செய்த பிறகு, அவரை மறுபடியும் அந்த அடைக்கல நகரத்துக்கே திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.
யெகோவாவிடம் தஞ்சம் அடைகிறீர்களா?
13 தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் அடைக்கல நகரத்துக்குள் போன பிறகு பாதுகாப்பாக இருந்தார். ‘அங்கே [அதாவது, அந்த நகரங்களில்] அடைக்கலம் பெற முடியும்’ என்று யெகோவா சொல்லியிருந்தார். (யோசு. 20:2, 3) ஏனென்றால், அங்கே போன பிறகு அந்த வழக்கு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கவில்லை. அதோடு, பழிவாங்க வேண்டியவர் அந்த நகரத்துக்குள் வரவும் அவரைக் கொலை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. அடைக்கலம் தேடிப் போனவர் அந்த நகரத்திலேயே இருந்தபோது யெகோவாவின் பாதுகாப்பு அவருக்கு இருந்தது. அந்த நகரம் அவருக்கு சிறையைப் போல இருக்கவில்லை. ஏனென்றால், வேலை செய்யவும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும், நிம்மதியோடு யெகோவாவுக்குச் சேவை செய்யவும் அவரால் முடிந்தது. சொல்லப்போனால், அவரால் சந்தோஷத்தோடும் திருப்தியோடும் வாழ முடிந்தது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w91-E 2/15 பக். 13 பாரா 13
எல்லாருக்கும் சரிசமமான மீட்புவிலை
13 ஆதாமும் சரி, ஏவாளும் சரி, மீட்புவிலையிலிருந்து நன்மை அடைய மாட்டார்கள். “மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது” என்று திருச்சட்டம் சொல்கிறது. (எண்ணாகமம் 35:31) ஆதாம் ஏமாற்றப்படவில்லை. அவன் வேண்டுமென்றே பாவம் செய்தான். (1 தீமோத்தேயு 2:14) இது அவனுடைய வாரிசுகளைக் கொலை செய்வதற்குச் சமமாக இருந்தது. எப்படி? ஆதாமுடைய பாவ இயல்பு அவர்களுக்குக் கடத்தப்பட்டதால், அவர்கள் எல்லாருமே மரண தண்டனையைப் பெற்றார்கள். பரிபூரண மனிதனாக இருந்த ஆதாம் வேண்டுமென்றே கடவுளுடைய சட்டத்தை மீறியதால், அவன் கண்டிப்பாக சாக வேண்டியிருந்தது. ஆதாம் வேண்டுமென்றே பாவம் செய்ததால் அவன் சார்பாக, யெகோவா மீட்புவிலையைக் கொடுப்பது அவருடைய நீதியான சட்டங்களுக்கு முரணாக இருந்திருக்கலாம். ஆனாலும், ஆதாம் செய்த பாவத்துக்கான விலையை கொடுப்பதன் மூலம் அவனுடைய வாரிசுகளுக்குக் கிடைத்த மரண தண்டனையை யெகோவா ரத்து செய்கிறார்.—ரோமர் 5:16.
மே 31–ஜூன் 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 1-2
“நீங்கள் கடவுளின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள்”
w96 3/15 பக். 23 பாரா 1
யெகோவா—நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவர்
நியமிக்கப்பட்ட சபை மூப்பர்கள், வினைமையான தவறுசெய்யப்பட்ட வழக்குகளில், நீதிவிசாரணை தீர்ப்புகளைச் செய்ய கடமைப்பட்டிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 5:12, 13) அவ்வாறு செய்கையில், கடவுளுடைய நியாயமானது கூடியபோதெல்லாம் இரக்கம் காட்டுவதற்கு நாடுகிறதென்பதை அவர்கள் நினைவில் வைக்கின்றனர். மனந்திரும்பாத பாவிகளின் காரியத்தில் இருப்பதுபோல்—இரக்கம் காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்றால், அதைக் காட்ட முடியாது. ஆனால், அத்தகைய தவறுசெய்தவர்களை மூப்பர்கள், பழிவாங்கும் மனப்பான்மையுடன் சபையை விட்டு விலக்குவதில்லை. சபைக்குப் புறம்பாக்கின நடவடிக்கைதானே அவரைத் தன் உணர்வுகளுக்கு வரச்செய்யும் என்று அவர்கள் நம்புகின்றனர். (எசேக்கியேல் 18:23-ஐ ஒப்பிடுக.) கிறிஸ்துவின் தலைமையின்கீழ், மூப்பர்கள் நியாயத்தின் சார்பாகச் சேவிக்கின்றனர். இது, “காற்றுக்கு ஒதுக்கைப்போல” அவர்கள் இருப்பதையும் உட்படுத்துகிறது. (ஏசாயா 32:1, 2, தி.மொ.) ஆகையால் அவர்கள், ஒருசார்பற்ற தன்மையையும் நியாயமானத் தன்மையையும் காட்ட வேண்டும்.—உபாகமம் 1:16, 17.
கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அதிகாரத்திற்கு உண்மையுடன் கீழ்ப்பட்டிருங்கள்
4 ஆனால் நியாயாதிபதியாக இருப்பதற்கு நியாயப்பிரமாணத்தை அத்துப்படியாக அறிந்திருப்பது மாத்திரமே போதவில்லை. அவர்கள் அபூரணராக இருந்ததால் தன்னலம், பாரபட்சம், பேராசை போன்ற வேண்டாத குணங்களால் நியாயத்தைப் புரட்டாதபடிக்கு கவனமாய் இருக்க வேண்டியிருந்தது. மோசே அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பது போலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது.’ ஆம், இஸ்ரவேலரின் நியாயாதிபதிகள் யெகோவாவின் சார்பாக நியாயம் வழங்கினார்கள். அது எத்தனை கெளரவமான, ஒப்பற்ற பாக்கியம்!—உபாகமம் 1:16, 17.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்பகமானவை
9 இஸ்ரவேலர்கள் ‘பயங்கரமான வனாந்தர வழியாக’ 40 வருட பயணத்தை ஆரம்பித்த சமயத்தில், யெகோவா அவர்களை எப்படி வழிநடத்துவார், காப்பாற்றுவார், பராமரிப்பார் போன்ற விவரங்களைக் கொடுக்கவில்லை. இருந்தாலும், அவர்கள் தம்மீது நம்பிக்கை வைத்து தம்முடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்தால் நன்மை அடைவார்கள் என்பதைப் பல விதங்களில் மெய்ப்பித்துக் காட்டினார். வாழ்வுக்கே வழியில்லாத அந்த வனாந்தரத்தில், யெகோவா இஸ்ரவேலர்களுக்கு ஆதரவாக இருந்ததை நினைப்பூட்ட பகலில் மேகஸ்தம்பத்தையும் இரவில் அக்கினிஸ்தம்பத்தையும் பயன்படுத்தி வழிநடத்தினார். (உபா. 1:19; யாத். 40:36-38) அவர்களுடைய அடிப்படைத் தேவைகளையும் கவனித்துக்கொண்டார். “அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.” சொல்லப்போனால், ‘அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடவில்லை.’—நெ. 9:19-21.
ஜூன் 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 3-4
“யெகோவாவின் சட்டங்கள் ஞானமானவை, நீதியானவை”
it-2-E பக். 1140 பாரா 5
புரிந்துகொள்ளுதல்
கடவுளுடைய வார்த்தையையும் கட்டளைகளையும் ஆர்வமாகப் படித்து அவற்றைக் கடைப்பிடிக்கிற ஒருவர் தனக்குக் கற்றுக்கொடுக்கிறவர்களைவிட விவேகமாகவும், பெரியவர்களைவிட புத்திக்கூர்மை உள்ளவராகவும் இருப்பார். (சங் 119:99, 100, 130; லூ 2:46, 47-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) கடவுளுடைய விதிமுறைகள் மற்றும் நீதித்தீர்ப்புகளிலிருந்துதான் அவருக்கு ஞானமும் புரிந்துகொள்ளுதலும் கிடைக்கின்றன. இஸ்ரவேலர்கள் அவற்றை உண்மையோடு கடைப்பிடித்திருந்தால், சுற்றியிருந்த ஜனங்களுக்கு முன்னால் “ஞானமும் புத்தியும் உள்ளவர்களாக” இருந்திருப்பார்கள். (உபா 4:5-8; சங் 111:7, 8, 10; 1ரா 2:3-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) புத்தியுள்ள ஒருவர், கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களை மீறக் கூடாது என்பதைப் புரிந்துவைத்திருப்பார், அவற்றின்படி வாழ்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புவார். அதோடு, கடவுளுக்குப் பிரியமான விதத்தில் வாழ உதவும்படி ஜெபமும் செய்வார். (சங் 119:169) கடவுளுடைய வார்த்தை அவருக்குள் ஆழமாக வேர்விட அனுமதிப்பார் (மத் 13:19-23), அதைத் தன்னுடைய இதயப் பலகையில் எழுதிக்கொள்வார் (நீதி 3:3-6; 7:1-4), “தவறான பாதை எல்லாவற்றையும்” வெறுத்து ஒதுக்குவார் (சங் 119:104). கடவுளுடைய மகன் பூமியில் இருந்தபோது இப்படிப் புரிந்துகொள்ளுதலோடு நடந்துகொண்டார். அதனால்தான், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்படவிருந்த சூழ்நிலையில்கூட அதிலிருந்து தப்பிக்க அவர் வழிதேடவில்லை. வேத வசனங்கள் நிறைவேற வேண்டுமென்றால் தன்னுடைய மரணம் அந்த விதத்தில்தான் இருக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துவைத்திருந்தார்.—மத் 26:51-54.
தாராளகுணம் ததும்புகையில்
அவள் கேட்டவையும் பார்த்தவையும் அவளை வியக்க வைத்தது! அந்த ராஜஸ்திரீ மனத்தாழ்மையுடன் பதிலளித்தாள்: “எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் சந்தோஷமுள்ளவர்கள்.” (1 இராஜாக்கள் 10:4-8, NW) சாலொமோனின் ஊழியர்கள் செல்வ செழிப்பில் திளைத்திருந்தனர். ஆனால், இதனால்தான் அவர்கள் சந்தோஷமுள்ளவர்கள் என அவள் சொல்லவில்லை. மாறாக, கடவுளால் அருளப்பட்ட சாலொமோனின் ஞானத்தை எப்போதும் கேட்கும் பாக்கியத்திற்காகவே அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். படைப்பாளருடைய ஞானத்திலும் அவருடைய குமாரனுடைய ஞானத்திலும் திளைத்து அதனால் சந்தோஷமடையும் இன்றைய யெகோவாவின் ஜனங்களுக்கு சேபாவின் ராஜஸ்திரீ என்னே ஒரு சிறந்த மாதிரி!
அந்த ராஜஸ்திரீயின் அடுத்த விமர்சனமும் குறிப்பிடத்தக்கது: “உம்முடைய கடவுளாகிய யெகோவா துதிக்கப்படுவாராக.” (1 இராஜாக்கள் 10:9, NW) சாலொமோனின் ஞானத்திலும் ஐசுவரியத்திலும் யெகோவாவின் கரம் இருந்ததற்கான அத்தாட்சியை அவள் தெளிவாக கண்டாள். இது, ஆரம்பத்தில் இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதிக்கு இசைவாக இருக்கிறது. அவர் சொன்னார்: ‘என்னுடைய கட்டளைகளை கைக்கொண்டு நடப்பது,’ “ஜனங்களின் கண்களுக்கு முன்பாக . . . உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.”—உபாகமம் 4:5-7.
நீங்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய்’ இருக்கிறீர்களா?
13 யெகோவா தம் மக்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்கு மிகச் சிறந்ததையே அளிக்கிறார். (யாக்கோபு 1:17) உதாரணத்திற்கு, இஸ்ரவேலர்களுக்காக யெகோவா ஒரு தேசத்தைக் கொடுத்தபோது அது ‘பாலும், தேனும் ஓடுகிற தேசமாய்’ இருந்தது. எகிப்து தேசமும் அதேபோல் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த தேசம் ஒரு விசேஷித்த விதத்திலாவது வித்தியாசமாய் இருந்தது. “அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம்” என்று மோசே இஸ்ரவேலர்களிடம் கூறினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், யெகோவா அவர்களைப் பார்த்துக்கொள்வதால் அவர்கள் வளமாக வாழ்வார்கள். இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு உண்மையாய் இருந்த காலம்வரை யெகோவா அவர்களை மிகுதியாக ஆசீர்வதித்தார். அவர்களுடைய வாழ்க்கை முறையும் அவர்களைச் சுற்றி இருந்த தேசத்தாரிலிருந்து நிகரற்றதாய் தனித்துக் காணப்பட்டது. ஆம், யெகோவாவின் ஆசீர்வாதமே “ஐசுவரியத்தைத் தரும்”!—எண்ணாகமம் 16:13; உபாகமம் 4:5-8; 11:8-15.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உபாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
4:15-20, 23, 24—உருவங்களை உண்டாக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அழகிற்காக பொருட்களின் சொரூபங்களை உருவாக்கக் கூடாது என்று அர்த்தமா? இல்லை. வழிபாட்டிற்காக—‘தொழுது சேவிப்பதற்காக’ உருவங்களை உண்டாக்குவதே இங்கு தடை செய்யப்பட்டது. அழகிற்காக சிற்பங்களை செதுக்குவதையோ ஓவியங்களை வரைவதையோ பைபிள் தடை செய்வதில்லை.—1 இராஜாக்கள் 7:18, 25.
ஜூன் 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 5-6
“யெகோவாமேல் அன்புகாட்ட உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்”
பெற்றோரே, உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்
11 இந்த விஷயம் சம்பந்தமாக, உபாகமம் 6:5-7-லுள்ள பைபிள் வசனங்கள்தான் மிக அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகின்றன. தயவுசெய்து உங்கள் பைபிளைத் திறந்து, அந்த வசனங்களை வாசியுங்கள். பெற்றோர்கள் முதலில் தங்களுடைய ஆன்மீகத்தன்மையை வளர்த்துக்கொள்ளுமாறும், யெகோவா மீதான அன்பை வளர்த்துக்கொள்ளுமாறும், அவருடைய வார்த்தைகளை மனதார ஏற்றுக்கொள்ளுமாறும் அங்கு சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அப்படியானால், பெற்றோர்களாகிய நீங்கள் யெகோவாவுடைய வழிகளையும், நியமங்களையும், சட்டங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டு அவற்றை நேசிக்க வேண்டுமானால், கடவுளுடைய வார்த்தையான பைபிளைத் தவறாமல் வாசிப்பதற்கும், தியானிப்பதற்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போது உங்கள் இருதயம் அருமையான பைபிள் சத்தியங்களால் பொங்கிவழியும், அதன் விளைவாக உங்களுக்கு பயபக்தியும், மகிழ்ச்சியும் உண்டாகும், யெகோவா மீது அன்பும் உண்டாகும். அதுமட்டுமல்ல, உங்கள் பிள்ளைகளுக்கு ஏராளமான நல்ல விஷயங்களை உங்களால் கற்றுத்தரவும் முடியும்.—லூக்கா 6:45.
உண்மையான கல்வியைக் கற்க என் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவ முடியும்?
உங்களுடைய லட்சியங்கள், விருப்பங்கள், ஒழுக்கத் தராதரங்கள் போன்றவை உங்களுடைய சொல்லில் மட்டுமல்ல செயலிலும் தெளிவாகத் தெரியும். (ரோமர் 2:21, 22) சிசு பருவத்திலிருந்தே பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரை உன்னிப்பாகக் கவனிப்பதன்மூலம் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைக் கவனித்து, பெரும்பாலும் அவற்றிற்கே பிள்ளைகளும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நீங்கள் உண்மையிலேயே யெகோவாவிடம் அன்பாயிருந்தால் உங்களுடைய பிள்ளைகள் அதைக் கவனிப்பார்கள். உதாரணமாக, பைபிளை வாசிப்பதற்கும் ஆழ்ந்து படிப்பதற்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை அவர்கள் காண்பார்கள். உங்களுடைய வாழ்க்கையில் ராஜ்யம் சம்பந்தமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களென அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். (மத்தேயு 6:33) நீங்கள் தவறாமல் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொண்டு, ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் பங்குகொள்கையில், யெகோவாவுக்குச் செய்யும் பரிசுத்த சேவையை அதிமுக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.—மத்தேயு 28:19, 20; எபிரெயர் 10:24, 25.
பெற்றோரே, உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்
14 உபாகமம் 6:7 காண்பிக்கிறபடி, பெற்றோராகிய நீங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் உங்கள் பிள்ளைகளிடம் ஆன்மீகக் காரியங்களைப் பற்றிக் கலந்துபேசலாம். ஒன்றாகச் சேர்ந்து பயணிக்கும்போதோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ, ஓய்வாகப் பொழுதைக் கழிக்கும்போதோ உங்கள் பிள்ளைகளுடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம். ஆனால் அதற்காக, பைபிள் சத்தியங்களைப் பற்றி அவர்களுக்கு வாய் ஓயாமல் “லெக்சர்” கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டாம். மாறாக, குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசும்போது உற்சாகமூட்டும் விதத்தில் ஆன்மீக ரீதியிலேயே பேச முயலுங்கள். உதாரணத்திற்கு, விழித்தெழு! பத்திரிகையில் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான கட்டுரைகள் வெளிவருகின்றன. எனவே, யெகோவாவின் படைப்புகளான மிருக ஜீவன்களைப் பற்றியும், உலகெங்கிலும் உள்ள கண்ணுக்கினிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்களைப் பற்றியும், மனிதர்களின் பலதரப்பட்ட அருமையான கலாச்சாரம், வாழ்க்கைப் பாணி ஆகியவற்றைப் பற்றியும் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அந்தப் பத்திரிகையில் இருக்கின்றன. அத்தகைய விஷயங்களைக் கலந்துபேசும்போது, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் தந்திருக்கும் பிரசுரங்களை அதிகமாக வாசிக்க வேண்டுமென்ற ஆசை பிள்ளைகளுக்கு ஏற்படும்.—மத்தேயு 24:45-47.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
அன்பும் நியாயமும்—பூர்வ இஸ்ரவேலில்
11 பாடங்கள்: நம்முடைய வெளித்தோற்றத்தைவிட உள்ளுக்குள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும், நம் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதையும் யெகோவா பார்க்கிறார். (1 சா. 16:7) நம் யோசனைகள், உணர்வுகள், செயல்கள் என எதுவுமே அவருக்குத் தெரியாமல் போகாது. நம் இதயத்தில் நல்ல விஷயங்கள் இருக்கின்றனவா என்று அவர் பார்க்கிறார்; அந்த நல்ல விஷயங்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறார். கெட்ட யோசனைகள் கெட்ட செயல்களில் போய் முடிவதற்கு முன்பே, அவற்றை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்றும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.—2 நா. 16:9; மத். 5:27-30.
ஜூன் 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 7-8
“அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது”
w12-E 7/1 பக். 29 பாரா 2
தன்னை வணங்குகிறவர்களை மட்டுமே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஏன் சொன்னார்?
பொய்க் கடவுள்களை வணங்க வைப்பதன் மூலம் தன்னுடைய மக்களைப் பாவக் குழியில் விழ வைக்க சாத்தான் நினைக்கிறான் என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால்தான், மற்ற தெய்வங்களை வணங்குகிறவர்களைப் பற்றி கடவுள் இப்படி எச்சரித்தார்: “உங்கள் மகன்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் செய்துவிடுவார்கள்.” இப்படிப்பட்ட வாழ்க்கை ஆபத்தானது. ஏனென்றால், இஸ்ரவேலர்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டால், யெகோவாவின் தயவையும் பாதுகாப்பையும் இழந்துவிடுவார்கள். அதனால், சுலபமாக எதிரிகளுக்கு இரையாகிவிடுவார்கள். அப்படியானால், வாக்குக்கொடுக்கப்பட்ட மேசியா எப்படி இஸ்ரவேலர்களின் சந்ததியில் வர முடியும்? அதனால்தான், மற்ற தெய்வங்களை வழிபடுகிறவர்களைக் கல்யாணம் செய்துகொள்ள இஸ்ரவேலர்களை சாத்தான் தூண்டினான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
“எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” திருமணம் செய்யுங்கள்—இந்த காலத்திற்கும் பொருந்துமா?
இருந்தாலும், நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியைத்தான் கல்யாணம் செய்ய வேண்டுமென்று யெகோவா சொல்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என்று யோசிக்கிறீர்களா? நமக்கு எது நல்லது என்று அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். தவறான ஒரு முடிவை எடுத்து, அதனால் நாம் கஷ்டப்பட வேண்டுமென்று அவர் விரும்புவதில்லை. நெகேமியா வாழ்ந்த காலத்தில், நிறைய யூதர்கள் யெகோவாவை வணங்காத பெண்களை கல்யாணம் செய்தார்கள். சாலொமோனைப் போல் இருக்காதீர்கள் என்று நெகேமியா சொன்னார். சாலொமோனுடைய “கடவுள் அவருக்கு அன்பு காட்டினார். . . . இருப்பினும் வேற்றினப் பெண்கள் அவரையும் பாவம் செய்திட செய்தார்கள்” என்று சொன்னார். (நெ. 13:23-26, பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒருவரை கல்யாணம் செய்ய வேண்டுமென்று நம்முடைய நன்மைக்குத்தான் யெகோவா சொல்கிறார். (சங். 19:7-10; ஏசா. 48:17, 18) யெகோவா நம்மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். அதனால், அவர் கொடுக்கிற ஆலோசனைக்கு உண்மை கிறிஸ்தவர்கள் ரொம்ப நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்வதற்கான உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதனால்தான் அவருக்கு கீழ்ப்படியவும் செய்கிறார்கள்.—நீதி. 1:5.
உங்கள் நண்பர்கள் யார்?
12 நீங்கள் கல்யாணம் செய்யப் போகிறீர்களா? உங்கள் வாழ்க்கை துணையாக யாரை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது ரொம்ப முக்கியம். ஏனென்றால், “விசுவாசிகளாக இல்லாதவர்களுடன் பிணைக்கப்படாதீர்கள். நீதிக்கும் அநீதிக்கும் உறவேது? ஒளிக்கும் இருளுக்கும் தொடர்பேது?” என்று பைபிள் சொல்கிறது. (2 கொ. 6:14) அதோடு, “எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் செய்ய வேண்டும் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. அதாவது, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானம் எடுத்த... யெகோவாவுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற... ஒருவரையே கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. (1 கொ. 7:39) அப்படி செய்யும்போது, கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையோடு இருக்க உங்கள் வாழ்க்கை துணை உதவி செய்வார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவா நமது அன்றாட தேவைகளுக்கு வழிசெய்கிறார்
4 அன்றாட ஆகாரத்திற்காக நாம் செய்யும் ஜெபம், அன்றாட ஆவிக்குரிய உணவும் நமக்கு தேவை என்பதைக்கூட நினைப்பூட்ட வேண்டும். பல நாள் உபவாசித்த பிறகு இயேசு மிகவும் பசியாக இருந்தார்; அந்த சந்தர்ப்பத்திலும், கல்லுகளை அப்பமாக்கும்படி சாத்தான் சோதித்தபோது இயேசு இணங்கவில்லை. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என சொன்னார். (மத்தேயு 4:4) தீர்க்கதரிசியாகிய மோசே சொன்னதைத்தான் இங்கே இயேசு மேற்கோள் காட்டினார். மோசே இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “அவர் [யெகோவா] உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.” (உபாகமம் 8:3) யெகோவா இஸ்ரவேலருக்கு மன்னாவை வழங்கிய விதம், அவர்களுக்கு உணவளித்தது மட்டுமல்லாமல் ஆவிக்குரிய பாடங்களையும் புகட்டியது. அதில் ஒரு பாடம்: அவர்கள் ‘ஒவ்வொரு நாளுக்கு வேண்டிய மன்னாவை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ள’ வேண்டியிருந்தது. அதைவிட அதிகமாக அவர்கள் சேகரித்தால் அது புழுத்துப்போய் நாற்றமெடுக்குமென சொல்லப்பட்டது. (யாத்திராகமம் 16:4, 20) இருந்தாலும் ஓய்வுநாளுக்குரியதையும் சேர்த்து அதற்கு முந்தைய ஆறாம் நாளில் அவர்கள் சேகரித்து வைக்க வேண்டியிருந்தது; அப்போதோ அது கெட்டுப்போகவில்லை. (யாத்திராகமம் 16:5, 23, 24) ஆகவே அந்த மன்னா கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை இஸ்ரவேலர் மனதில் பதிய வைத்தது; அதோடு, அப்பத்தின் மீது மட்டுமல்ல ஆனால் ‘யெகோவாவுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையின்’ மீதும் அவர்களுடைய வாழ்க்கை சார்ந்திருந்ததை அது உணர்த்தியது.
ஜூன் 28–ஜூலை 4
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 9-10
“உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் என்ன கேட்கிறார்?”
யெகோவா நம்மிடம் எதைக் கேட்கிறார்?
அவருக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிய எவை நம்மைத் தூண்டும்? முதல் அம்சத்தைச் சுட்டிக்காட்டி மோசே இவ்வாறு சொன்னார்: ‘உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்பட’ வேண்டும். (வசனம் 12) இந்தப் பயம், தண்டனை கிடைத்துவிடுமோ என்று அஞ்சி நடுங்குவதைக் குறிப்பதில்லை; மாறாக, கடவுள் மீதும் அவருடைய நெறிமுறைகள் மீதும் பயபக்தி காட்டுவதைக் குறிக்கிறது. கடவுள்மீது நமக்கு ஆழ்ந்த பக்தி இருந்தால், அவருக்குப் பிடிக்காததைச் செய்ய மாட்டோம்.
என்றாலும், கடவுளுக்குக் கீழ்ப்படிய எது நம்மை முக்கியமாகத் தூண்ட வேண்டும்? “அவரிடத்தில் [யெகோவாவிடத்தில்] அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவி” என்று மோசே குறிப்பிட்டார். (வசனம் 12) கடவுள்மீதான அன்பு வெறும் ஓர் உணர்ச்சியைக் குறிப்பதில்லை. ஒரு புத்தகம் விளக்குகிறபடி, “உணர்ச்சிகளைக் குறிக்கும் எபிரெய வினைச்சொற்கள் சிலசமயங்களில் அந்த உணர்ச்சிகளால் விளைகிற செயல்களையும்கூட குறிக்கின்றன.” கடவுள்மீது அன்பு காட்டுவதென்பது, அவரிடம் “அன்பாக நடந்துகொள்வதை” அர்த்தப்படுத்துவதாக அதே புத்தகம் சொல்கிறது. ஆக, நாம் உண்மையிலேயே கடவுள்மீது அன்பு வைத்திருந்தால், எப்போதும் அவரது விருப்பப்படி நடந்துகொள்வோம்.—நீதிமொழிகள் 27:11.
யெகோவா நம்மிடம் எதைக் கேட்கிறார்?
நாம் மனப்பூர்வமாகக் கீழ்ப்படியும்போது ஆசீர்வாதங்களைப் பெறுவோம். “நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளை . . . உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ள வேண்டும்” என்று மோசே சொன்னார். (வசனம் 13) ஆம், யெகோவாவின் ஒவ்வொரு கற்பனையும், அதாவது அவர் நம்மிடம் கேட்கிற அனைத்தும், நம் நன்மைக்கே! இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) எனவே, நமக்கு நிரந்தர நன்மை அளிக்கும் கட்டளைகளை மட்டுமே அவர் தந்திருக்கிறார். (ஏசாயா 48:17) யெகோவா நம்மிடம் கேட்கிற அனைத்தையும் நாம் செய்யும்போது, இக்காலத்தில் பல வேதனைகளைத் தவிர்ப்போம், எதிர்காலத்திலும் அவரது அரசாங்கத்தில் முடிவில்லாத ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
உண்மையிலேயே ‘கடவுளிடம் நெருங்கி வர’ முடியுமா?
2 அப்படிப்பட்ட நெருக்கத்தை அனுபவித்தவர்களில் ஒருவர், பூர்வத்தில் வாழ்ந்த ஆபிரகாம் ஆவார். கோத்திரத் தகப்பனாகிய அவரை ‘என் சிநேகிதன்’ என யெகோவா அழைத்தார். (ஏசாயா 41:8) ஆம், ஆபிரகாமை யெகோவா தம் சொந்த நண்பராக கருதினார். ஆபிரகாம் ‘யெகோவாவின்மீது விசுவாசம் வைத்த’ காரணத்தால் அப்படிப்பட்ட நெருங்கிய உறவை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றார். (யாக்கோபு 2:23, NW) இன்றும்கூட, யெகோவா தம்மை அன்போடு சேவிப்போருடன் பாசப் ‘பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள’ வாய்ப்புகளைத் தேடுகிறார். (உபாகமம் 10:15, NW) “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவரும் உங்களிடம் நெருங்கி வருவார்” என அவரது வார்த்தை உந்துவிக்கிறது. (யாக்கோபு 4:8, NW) இந்த வார்த்தைகளில் ஒரு அழைப்பும் கொடுக்கப்படுகிறது, ஒரு வாக்குறுதியும் கொடுக்கப்படுகிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 103
ஏனாக்கியர்கள்
இவர்கள், கானானின் மலைப் பிரதேசங்களிலும் சில கடலோரப் பகுதிகளிலும், குறிப்பாகத் தெற்குப் பகுதியில் வாழ்ந்த மிகவும் உயரமான மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருகாலத்தில், ஏனாக்கியர்களில் முக்கியமானவர்களான அகீமான், சேசாய், தல்மாய் என்ற மூன்று பேர் எப்ரோன் நகரத்தில் வாழ்ந்துவந்தார்கள். (எண் 13:22) அங்கேதான், எபிரெய உளவாளிகளான 12 பேர் ஏனாக்கியர்களை முதல் தடவையாகப் பார்த்தார்கள். அந்த உளவாளிகளில் 10 பேர் ஏனாக்கியர்களைப் பார்த்து பயந்ததால் தவறான தகவலைச் சொன்னார்கள். அவர்கள் பெருவெள்ளத்துக்கு முன்பு வாழ்ந்த நெஃபிலிம்களின் வாரிசுகள் என்பதாகவும் அவர்களுக்கு முன்னால், தாங்கள் “வெட்டுக்கிளிகளைப் போல” தெரிந்ததாகவும் சொன்னார்கள். (எண் 13:28-33; உபா 1:28) ராட்சதர்களைப் போல இருந்த ஏமியர்கள் மற்றும் ரெப்பாயீமியர்களை விவரிப்பதற்குக்கூட ஏனாக்கியர்களை ஒப்பிட்டுச் சொன்னார்கள். அந்தளவுக்கு அவர்களுடைய உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. அவர்கள் அவ்வளவு பலசாலிகளாக இருந்ததால்தான், ‘ஏனாக்கியர்களோடு மோத யாராலும் முடியாது’ என்ற பழமொழி ஜனங்கள் மத்தியில் பேசப்பட்டிருக்கலாம்.—உபா 2:10, 11, 20, 21; 9:1-3.