மெகிதோ—தீர்க்கதரிசன அர்த்தமுள்ள பண்டையகால போர்க்களம்
“யெகோவாவே உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்.” 32 நூற்றாண்டுகளுக்கு முன்பாக தொகுக்கப்பட்ட ஒரு வெற்றிப்பாடல் அவ்வாறாக முடிவுற்றது. பண்டைய கால மெகிதோ பட்டணத்திற்கு அருகாமையில் ஒரு இராணுவ வெற்றியை அது கொண்டாடியது.
பைபிளின் பதிவின்படி இஸ்ரவேலின் நியாயாதிபதியான பராக்கிடம் 10,000 படைவீரரை தாபேர் மலையில் நிறுத்தும்படி கடவுள் கட்டளையிட்டார். வியப்புக்குரிய ஓர் எண்ணிக்கையா? ஒரு வேளை அப்படியிருக்கலாம். ஆனால் அந்த 10,000 மனப்பூர்வமான வேலையாட்களும் எந்த வித படைக்கலமும் இல்லாதிருந்தனர். அவர்களிடம் “கேடகமோ ஈட்டியோ காணப்படவில்லை” (நியாயாதிபதிகள் 4:3) என்றபோதிலும் எதிராளிகள் அப்படியிருக்கவில்லை. சேனாதிபதி சிசெராவினால் வழிநடத்தப்பட்ட காணானிய சேனை இராணுவ தொழில் நுட்பத்தில் புதிய நவீன சாதனங்களைக் கொண்டிருந்தனர். “தொளாயிரம் இருப்பு இரதங்கள் இருந்தது.” (நியாயாதிபதிகள் 4:3) இது கானானியர்களுக்கு வேகத்திற்கும் திறைமையான இயக்கத்திற்கும் ஊக்கத்தை அளித்தது. அதோடு மிகுதியான மனோநிலை சார்ந்த அனுகூலங்களையும் அளித்தது.
என்றபோதிலும் வெற்றியானது இராணுவ வீரம் மற்றும் அதனுடைய கருவிகளின் விளைவாக கிடைக்கும் வெற்றியாக இருக்கப்போவதில்லை, சிசெராவின் மிக மேன்மையான படைவீரர்கள் அப்பொழுது—உலர்ந்துபோயிருந்த கீசோன் நதியின் பள்ளத்தாக்கிலே வருவதற்கு வசீகரிக்கப்பட்டார்கள். யெகோவா பாராக்குக்கு கீழிறங்கி செல்வதற்கு அறிகுறி கொடுத்தார். 10,000 பேர் மலையிலிருந்து இறங்கி அந்த பள்ளத்தாக்கினிடமாக ஓடுவதை கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாய் யெகோவா தேவன் இடியோடுகூடிய பெரும் புயலை உண்டு பண்ணினார். காற்றும் மழையும் இப்பொழுது சத்துருக்களின் முகத்திலே மோதியடித்தன. அந்த கீசோன் நதியின் பள்ளத்தாக்கு இப்பொழுது தண்ணீர் பாய்ந்தோடும் இடமாக மாறிற்று. சிசெராவின் போர் இரதங்கள் நகர்த்தப்பட முடியாத அளவுக்கு சமுத்திர மணலில் சிக்கிக்கொண்டன. கலங்கடிக்கப்பட்டு சிசெராவின் சேனைகள் நடுக்கத்தில் ஓடிப்போனார்கள், என்றாலும் பின்தொடரப்பட்டு கொல்லப்படுவதற்கே இது வழிநடத்தியது. ”ஒருவனும் மீதியாயிருக்கவில்லை—நியாயாதிபதிகள் அதிகாரம் 4 மற்றும் 5.
இந்த மலைக்கச் செய்யும் வெற்றி பின்வரும் இந்த வார்த்தைகளை ஏவியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை: “யெகோவாவே உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள். அவரில் அன்பு கூறுகிறவர்களோ வல்லமையோடு உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள்.” (நியாயாதிபதிகள் 5:31) என்றபோதிலும் “இப்படியே” என்ற வார்த்தையைக் கவனியுங்கள், இந்தப் போரானது ஒரு தீர்க்கதரிசனப் போர் என்பதை அந்த வார்த்தை தெரிவித்தது. கடவுளுடைய எல்லா சத்துருக்களும் அழிந்து போகக்கூடிய இதைக்காட்டிலும் மிகப்பெரிதான எதிர்காலப் போரை சுட்டிக்காட்டுகிறது.
என்றபோதிலும், இஸ்ரவேலரைச் சுற்றியிருந்த பகைமையுணர்ச்சியுள்ள ஆட்கள் விரைவிலேயே இந்தப் பயங்கர அழிவை மறந்து போனார்கள், வெறும் 47 ஆண்டுகள் மட்டுமே கடந்த பிற்பாடு மீதியானியரின் தலைமையின் கீழ் மற்ற கூட்டு தேசங்கள் “ஏகமாய்க்கூடி. . .யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள்.” இது மெகிதோவிலிருந்து நீடிக்கும் ஒரு பள்ளத்தாக்கு. (நியாயாதிபதிகள் 6:33) பாளயமிறங்கின இந்தச் சத்துருக்கள் “வெட்டுக்கிளிகளைப் போல திரளாய் இருந்தார்கள்.” என்றபோதிலும் இந்த சமயம் இஸ்ரவேலின் சேனையானது சிறியதாகவே இருந்தது. ஆனால் தைரியமுள்ள 300 மனிதர்களடங்கிய சேனையாக இருந்தது. கிதியோனின் தலைமையின் கீழ் “பாளையத்தைச் சுற்றிலும்” அவர்கள் நின்றார்கள். கட்டளை பெற்றபோது அந்த 300 மனிதரும் எக்காளங்களை ஊதினார்கள். சப்தமாக பானைகளை உடைத்தார்கள். தீவட்டிகளை உயர்த்தி அசைத்தார்கள்: “யெகோவாவின் பட்டயம் கிதியோனின் பட்டயம்” என்று அச்சுறுத்தும் போர் முழக்கமிட்டார்கள். மீதியானியர் திடுக்கிட்டார்கள்! யெகோவா தேவன் “ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாக ஓங்கப்பண்ணினார்.” கிதியோனின் சிறு சேனை சத்துருக்களை விரட்டியடித்தார்கள்!—நியாயாதிபதிகள் அதிகாரம் 7.
மீதியானியர் செய்த அதே தவறை இன்றுள்ள நாமும் செய்வதற்கு துணிவு கொள்ளாதிருப்போமாக, அல்லது மெகிதோவின் முக்கியத்துவத்தை அசட்டையாய் ஒதுக்கிவிடாதிருப்போமாக. இந்தப் பண்டையகால போர்க்களத்தைக் குறித்து பைபிள் சுமார் 12 தடவைகள் பேசுகிறது. கூடுதலாக அங்கே மெகிதோ என்னுமிடத்தில் என்ன நிகழ்ந்ததோ அது நம்முடைய நாளிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த அர்த்தங்களை கொண்டிருப்பதாக பைபிள் தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகையால், நாம் இந்த வரலாற்று அடிப்படையிலான இடத்தைக் குறித்து பைபிள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி ஆகிய இரண்டும் என்ன சொல்லுகிறது என்பதைக் குறித்து பார்வையை செலுத்துவோமாக!
பண்டைய உலகத்தின் வழிபாதைகள் குறுக்கிடும் இடம்
ஆத்சோர் மற்றும் கேசேர் என்ற பட்டணங்களோடுகூட இந்த மெகிதோ பட்டணம் ஆசியர் மற்றும் வாணிப போக்குவரத்துப் பாதையாக ஒரு காலத்தில் மேம்பட்டு நின்றது அந்த மற்ற இரண்டு பட்டணங்களுக்கிடையில் மெகிதோ அமைந்திருந்தது. எனவே இது போர்த்திற நடவடிக்கைகளுக்கு மிகவும் ஏற்றதோர் இடமாய் அமர்ந்திருந்தது. எல்லா திசைகளிலிருந்து வரும் இயல்பான நுழைவாயில்களும் மலைப் பாதைகளும் சாலைகளும் அதனுடைய பள்ளத்தாக்கின் சமவெளியில் வந்து இணைந்தன. “மெகிதோ பல பாதைகள் குறுக்கிடும் ஒரு இடத்தில் அமைந்திருந்தது. மெய்யாகவே பண்டைய உலகத்தின் மிகப் பெரிய பாதை குறுக்கிட்டு பகுதிகள் ஒன்றில் இருந்தது” என்று பைபிளின் புவியியல் என்ற புத்தகம் விவரிக்கிறது.
கர்மேல் மலைத்தொடரின் வடகிழக்கு எல்லைபுறமாய் மெகிதோ பெரும் பகுதியைக் கொண்டிருந்தது. சுமார் 20 மைல்கள் (32 கி.மீ.) பரப்பளவையுடைய மிகப்பெரிய பள்ளத்தாக்கின் சமவெளியை உள்ளடக்கியதாயிருந்தது. மழை பொழியும் குளிர் காலத்தின்போது சுற்றியுள்ள மலைகளிலிருந்து கீழே வடிந்தோடிவரும் தண்ணீர் அருகாமையிலிருந்த கீசோன் ஆற்றை பெருக்கெடுத்து ஓடும்படி செய்தது. இவ்வாறாக அந்தப் பகுதியுங்கூட சீசோன் நீரோடை (சீசோன் நதி) பள்ளத்தாக்கு என்றழைக்கப்பட்டது. (நியாயாதிபதிகள் 4:13, NW) இஸ்ரவேலின் புவியியல் என்ற புத்தகம் சொல்வதாவது: “குளிர்கால மழையோடுகூட” அந்தப் பள்ளத்தாக்கின் மண்ணானது சேறும் சகதியும் மாறிவிடக்கூடியதாக இருக்கிறது. . .சீசோனின் சரிவு வாட்டம் வெகு சிறியதாக இருக்கிறது. மேலும் அந்த வெளியேற்றுப்பாதையில். . .எளிதில் அடைப்பு ஏற்பட்டுவிடுகிறது; எனவே இங்கே வெள்ளக்காடாகிவிடுகிறது.” இந்தச் சமவெளி எந்தளவுக்கு சேறும் சகதியுமாக மாறக்கூடும் என்பதை சிசெராவும் அவனுடைய சேனையும் அறிந்து கொண்டார் கள். என்றபோதிலும் மழையில்லாத கோடை காலங்களில் இந்த வெட்ட வெளியானது இரதங்களை போருக்காக பயிற்றுவிப்பதற்குரிய சிறந்த இடமாக இருந்தது. (சாலொமோனின் உன்னதப்பாட்டு 6:11, 12-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்) இராணுவ படைகளும்கூட அங்கே வசதியாக கூடிவர முடியும்
அப்படியானால், மெகிதோவை அரண்காப்புகளால் வலுப்படுத்துவதில் சாலொமோன் ராஜா நடவடிக்கை எடுத்ததில் ஆச்சரியமேதுமில்லை: “பிடித்த அமஞ்சி ஆட்களைக் கொண்டு சாலமோன் ராஜ நடவடிக்கை எடுத்ததில் ஆச்சரியமேதுமில்லை: “பிடித்த அமஞ்சி ஆட்களைக் கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும். . . எருசலேமின் மதிலையும் ஆத்தும சேரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.” (1 இராஜாக்கள் 9:15) பரந்த வெட்ட வெளியான பள்ளத்தாக்கை நோக்கியவாறு இருக்கும் ஒரு 70 அடி உயரமுள்ள (21 மீ.) மண்மேடு தானே ஒரு காலத்தில் மெகிதோ இருந்த இடத்தை இன்று சுட்டிக்காட்டுவதாயிருக்கிறது. பண்டைய காலங்களில் பழைய பாழடைந்த கட்டிடங்களின் மீதே புதிய கட்டிடங்கள் பெரும்பாலும் கட்டப்பட்டன. ஆகவே ஒவ்வொரு கட்டிட மட்டமும் சரித்திரத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்தை குறித்துக் காட்டக்கூடும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலிருந்து தொடங்கி சரித்திரத்தினூடே அடுக்கடுக்காக நகர்ப்படுகைகளை தோண்டிக் கொண்டே செல்கின்றனர். மெகிதோவிலே குறைந்தபட்சம் இப்படிப்பட்ட 20 நகர்ப்படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர். இது அந்தப் பட்டணம் பல தடவைகள் திரும்பத் திரும்ப கட்டப்பட்டிருந்தது என்பதைக் காட்டுகிறது. இந்த விடா முயற்சியுள்ள தோண்டுபவர்களுக்கு பைபிள் எவ்வாறு துணைபுரிந்திருக்கிறது?
மெகிதோ, ஆத்சோர், கேசேர் ஆகியவற்றை அரண்காப்பு செய்யும் சாலொமோனின் திட்டத்தில் பட்டண கோட்டை முன் வாயில்களைக் கட்டுவது சந்தேகமின்றி ஒரு இன்றியமையாத பாகமாக இருந்தது. சில காலத்திற்கு முன்பு இப்படிப்பட்ட வாயில் முகப்புகள் மெகிதோவிலே கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்பு விரைவிலேயே ஒரே விதமாக வடிவமைந்த முகப்புகள் ஆத்சோரிலும் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே பைபிளிலிருந்து பெற்ற ஒரு தகவல் குறிப்பைக் கொண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கேசேரிலும் தேடுவதற்குத் துவங்கினார்கள். ஆச்சரியத்துக்கிடமின்றி அதே வடிவமைப்பிலிருந்த வாயில் முகப்புகளை அங்கேயும் கண்டெடுத்தார்கள். பைபிள் மாணாக்கருக்கு இதன் முக்கியத்துவம்? ஒரு பிரபலமான தொல்பொருள் ஆராய்ச்சியாளர், பேராசிரியர் யோஹன்னன் அஹரோனி குறிப்பிடுவதாவது:
“மூன்று இடங்களில் நடத்தப்பட்ட நிலத்தை தோண்டியறியும் ஆய்வில் ஒரே வடிவமைப்பில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட மூன்று வாயில் முகப்புகள் பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டின் நில அடுக்கு படிவத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. . .படைவீரர்கள் தங்கியிருப்பதற்காக மூன்று அறைகளையும் மற்றும் நடைபாதையின் ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு அடுக்குகளான தூண்களையும் கொண்ட இதைப்போன்ற கோட்டைவாயில் முகப்புகள் இதுவரையில் வேறே இரண்டு இடங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர். . .ஆகையால் மும்மடங்கு அறைகளை கொண்ட ஆத்சோர், மெகிதோ மற்றும் கேத்சேர் பட்டணத்து கோட்டை வாயில் முகப்புகள் சாலொமோன் ஆட்சிபுரிந்த காலத்துக்குரியவை என்பதில் பண்டிதர்களுக்கிடையில் மெய்யாகவே முழு ஒத்திசைவு இருக்கிறது.”
டாக்டர் யீகேல் யாடின் இதற்கொப்பாகவே முடிவுசெய்கிறார்: “ஆத்சோர், மெகிதோ மற்றும் கேத்சேரில் கண்டுபிடிக்கப்பட்ட சாலொமோனின் அரண்காப்புகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளருக்கு பைபிள் எவ்வளவு முக்கியமான மற்றும் நடைமுறையான வழிகாட்டி என்பதற்கு போதனையளிக்கும் உதாரணமாக இருக்கிறது.”
ஒரு தீர்வான போர்க்களம்
மெகிதோ போர்த்திற நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடமாய் அமைந்திருந்ததன் காரணமாக, ஆரம்பகால சரித்திரத்தில் ஓர் போர்க்களம் என்ற கருத்துடன் இணைக்கப்படலாயிற்று என்பது விளங்கத்தக்கதே. உண்மையில், மெகிதோ என்பது பண்டைய எபிரேய வார்த்தை (ரெண்டு இவூஸ்”) “குறிப்பிடப்பட்ட இடத்தில், கூடு அல்லது படைவீரர்களின் கூட்டம்” என்பதை அர்த்தப்படுத்துவதற்கே சொல்லப்படுகிறது என்று பேராசிரியர் அஹெரோனி எழுதினார்.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரையில் வரலாற்று மூலங்களில் இந்த உண்மை குறித்து. வைக்கப்படாதபோதிலும் மெகிதோ ஒரு அரண்காப்பு செய்யப்பட்ட முக்கித்துவம் வாய்ந்த ஒரு பட்டணமாக இருந்தது. அந்தச் சமயத்தில் தட்மோஸ் -----கல்வெட்டுகளில் காணப்படுகிறது. எதிர்கிளர்ச்சி செய்யும் கானானிய பட்டணங்களை மெகிதோ கூட்டாக இணைத்தன இந்த பார்வோனின் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பு பதிவு செய்கிறது. . .எகிப்திய இராணுவ சேனையும் மற்றும் அந்த கானானிய போர் இரதங்களும் இந்த எதிர்கிளர்ச்சியின் காரணமாக மெகிதோவுக்கு அருகில் ஒரு தீர்வான போர்புரிந்தார்கள். இதுவே வெகு புராதன நடவடிக்கைகளாக இருக்கின்றன. இவர்களுடைய விவரங்களே பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. கானானிய படைகளை களத்திலிருந்து முற்றிலுமாக விரட்டியடித்தப் பின்னர், பார்வோன் திரளான கொள்ளை செல்வங்களையும் 924 போர் இரதங்களையும் கைப்பற்றினான்.
தி நியு இஸ்ரேல் அட்லாஸின் ஆசிரியரான டாக்டர் ஸெவ் லில்னே என்பவர் அந்தப் பள்ளத்தாக்கு “வரலாற்றின் ஆரம்பம் முதற்கொண்டு முதல் உலகப்போர் வரையிலுமாக பிரபல போர்களின் நிகழ்ச்சிக்குரிய இடமாக அமைந்திருந்தது” என்று கூடுதலாக வருணிக்கிறார்.
மெகிதோ—இறுதிப்போர் நடக்கும் இடமா?
பைபிளின் கடைசி புத்தகமான, வெளிப்படுத்துதல் “பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு” ஹார்மெகிதோன் [“மெகிதோவின் மலையில்”] அல்லது அர்மகெதோனில் கூட்டிச் சேர்க்கப்படக்கூடிய ஒரு தரிசனத்தைப் பதிவு செய்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14,16) பெயர்களில் ஒத்த தன்மை இருப்பதன் காரணமாக மெகிதோவின் நிஜமான நிலப்பரப்பிலேயே இந்த யுத்தம் நடைபெறும் என்று ஒரு சிலர் முடிவு செய்திருக்கின்றனர். என்றபோதிலும் மெகிதோனின் மண்மேடு ஒரு “மலை” என்று சொல்லக்கூடிய அளவுக்கு தகுதியுடையதல்ல. மேலுமாக இந்த மெகிதோவின் பள்ளத்தாக்கு பூகோளமெங்குமுள்ள ராஜாக்களுக்கும் மற்றும் அவர்களுடைய பெரும் சேனைகளுக்கும் மிகத்திரளான இராணுவ உபகரணங்களுக்கும் இடமளிக்கக்கூடிய அளவிற்கு பெரியதாக இருக்கிறதா? என்பதையும் சிந்தித்துப் பாருங்கல். “இது திருவெளிப்பாட்டின் மொழிநடையாக இருக்கிறது.” தி இன்டர் நேஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோபீடியா நமக்கு சொல்வதாவது, “அர்மகெதோன் என்பது ஒரு குறிப்பிடப்பட்ட பிராந்தியத்திற்கான” “ஒரு பெயராக பயன்படுத்தப்படவில்லை என்பது கூடிய காரியமே. ஆனால் இறுதித்தீர்வான போருக்காக பயன்படுத்தப்பட்ட அடையாள அர்த்தமுடைய பதமாக இருக்கிறது.”
அப்படியானால், “ஹார்-மெகிதோன்” என்பது என்ன? அது தெளிவாகவே அடையாள அர்த்தமுடைய ஒன்றாக இருக்கிறது. மெகிதோ அதன் வரலாற்றில் அறுதியிட்டு கூறமுடிந்த தீர்வான போர்களுக்கான இடமாக இருந்தது. இதிலிருந்து கருத்தைப் பெறுவதாய், வெளிப்படுத்துதல் புத்தம் நெருங்கி, வந்து கொண்டிருக்கும் ஒரு நிலைமையை அதாவது “எல்லா தேசங்களும்” கடவுளுடைய ஜனங்கள் மீது தங்கள் பகையை வெளிக்காட்டுவதில் உட்சக்கட்டத்தை எட்டும்போது நிகழவிருக்கும் நிலைமையை வருணித்துக் காட்டுவதற்காக அதை பயன்படுத்துகிறது. (மத்தேயு 24:9, 14) உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரிப்பதில் உண்மைமாறாமல் தொடர்ந்து நிலைத்திருப்பதன் காரணமாக அவர்களை அழித்துவிடுவதற்காக பூமிக்குரிய அரசர்கள் ஒன்றுபடுவார்கள் அதன் பயனாக “கூடிவருவார்கள்” என்றபோதிலும் யெகோவாவின் சாட்சிகள் பதிலுக்கு பதில் செய்யமாட்டார்கள். (ஏசாயா 2:1-4) அவர்களுக்காக போர் செய்யும்படி கடவுள் அவர்களுடைய ராஜாவான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நியமித்திருக்கிறார். அந்த நெருக்கடியான கட்டத்திலே, இந்தப் பரலோக அரசர் “பரலோகத்திலுள்ள சேனை”களோடுகூட தலையிட்டு “பூமியின் ராஜாக்களையும் அவர்களுடைய சேனைகளையும்” தாங்குவார். இந்தப் பூகோள போர் மெகிதோவில் நடைபெற்ற போர்களை போன்று தீர்வான ஒன்றா இருக்கும். தெபோராள் மற்றும் பாராக் அவர்களுடைய வெற்றிப் பாட்டு தீர்க்கதரிசனமுறைத்ததைப்போன்று எல்லா பூமிக்குரிய எதிரிகளும் “அழிக்கப்பட்டுப் போவார்கள்.”—வெளிப்படுத்துதல் 19:11-21; நியாயாதிபதிகள் 5:31.
நீங்கள் யெகோவாவின் நேசர்கள் மத்தியில் காணப்படுவீர்களா அல்லது அவருடைய சத்துருக்கள் மத்தியில் காணப்படுவீர்களா? யெகோவா தேவன் பக்கமும் அவருடைய ஜனங்கள் பக்கமும் நிலைநிற்கை எடுக்காதவர்கள் ஜீவனை இழந்து போகும் மெய்யான ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பைபிள் தெளிவாக காட்டுகிறது. (செப்பனியா 2:3 ; 1 தெசலோனிக்கேயர் 1:7-9) அதன் காரணமாக தாமதித்துக் கொண்டிருப்பதற்குக் காலம் இல்லை! “மிகுந்த உபத்திரவம்” அர்மகெதோனில் அதன் உச்சக்கட்டத்தை எட்டக்கூடிய சமயத்தை திட்டவட்டமாய் குறிப்பிடுகிறவராய் “இதோ, நான் திருடனைப்போல வருகிறேன்” என்று மகிமைப்படுத்தப்பட்ட இயேசுகிறிஸ்து எச்சரிக்கிறார்.—வெளிப்படுத்துதல் 16:15; மத்தேயு 24:21.
“சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் அந்த யுத்தமானது” மகத்தான நல்விளைவுகளை கொண்டிருக்கும் கடவுளுடைய ராஜ்யம் இந்த பூமியை பரதீசாக மாற்றியமைப்பதற்கான வழியை திறந்துவைக்கும். (மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:3-5) ஆனால் எல்லாவற்றிற்கும் மிக உன்னதமாயிருக்கும் அந்த பெயரை அது நியாய நிரூபணஞ்செய்யும். இது ஒரு பண்டையகால தீர்க்கதரிசன ஜெபத்தின் மகத்தான நிறைவேற்றமாக இருக்கும்:
மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே மகத்தான அழிக்கப்பட்டு. . .நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து. உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும் கர்த்தாவே, [யெகோவாவே, NW] அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும் யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்து போவார்களாக.”—சங்கீதம் 83:9, 5-18. (W86 2/15)
[பக்கம் 28-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மெகிதோ, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண் டங்களை இணைக்கும் முக்கியமானதோர் இராணுவம் மற்றும் வர்த்தக வழிபாதையாக இருந்தது
வர்த்தக பாதை
ஆத்சோர்
மெகிதோ
கேசேர்
எருசலேம்
[வரைப்படம்]
ஆசியா
ஆப்பிரிக்கா
[பக்கம் 29-ன் படம்]
மெகிதோவில் நடந்த போர்களைப் போன்று அர்மகெதோன் பூகோளப் போரும் தீர்வான ஒன்றாக இருக்கும் கடவுளுடைய பூமிக்குரிய பகைவர்கள் எல்லாருமே அழிக்கப்படுவர்