“உப்பால் சாரமேறின” ஆலோசனை
“அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”—கொலோசேயர் 4:6.
மனித சரித்திரத்தில், உணவு தயாரிப்பில் உப்பு ஒரு விசேஷ பாகத்தை வகித்து வந்திருக்கிறது. அது உணவைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. மற்றும் உணவுக்குச் சுவையூட்டுகிறது. எனவேதான் உப்பில்லா பண்டம் குப்பையிலே அல்லது உதவாதது என்று கருதப்படுகிறது. எனவே கிறிஸ்தவ பேச்சு “உப்பால் சாரமேறினதாய்” இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். (கொலோசேயர் 4:6) இது விசேஷமாக, ஆலோசனை கொடுக்கும்போது உண்மையாயிருக்கிறது. ஏன்?
2. ஆலோசனை கொடுப்பதன் நோக்கம் ஏதோ விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு காரியமல்ல. அநேக சந்தர்ப்பங்களில், ஆலோசனை கொடுக்கப்படுகிறவர் தன்னுடைய நிலைமைக்குப் பொருந்தக்கூடிய சில பைபிள் நியமங்களை ஏற்கெனவே அறிந்தவராயிருக்கிறார். ஆனால் அவற்றைப் பொருந்தும் காரியத்தில் அல்லது அவற்றின் முக்கியத்துவத்தைக் காணும் காரியத்தில் அவருக்கு பிரச்னை இருக்கிறது. எனவே, ஒருவருடைய யோசனை முறையை மாற்றுவதே கிறிஸ்தவ ஆலோசனை கொடுப்பதில் உட்பட்டிருக்கும் உண்மையான சவால். (கலாத்தியர் 6:1; எபேசியர் 4:11, 12) எனவே “உப்பு” தேவைப்படுகிறது.
3. ஆலோசனை கொடுப்பது உண்மையிலேயே ஒரு சவால், அந்தச் சவாலைச் சந்திப்பதற்கு அலோசகருக்கு அறிவும் விவேகமும் தேவை. (நீதிமொழிகள் 2:1, 2, 9; 2 தீமோத்தேயு 4:2) மகிழ்ச்சிக்குரிய அம்சம் என்னவெனில், யெகோவா நமக்குப் பைபிளைக் கொடுத்திருக்கிறார். அதில் நமக்குத் தேவையான அறிவுமட்டுமல்ல. ஆனால் கடவுளுடைய விவேகமுள்ள மனிதரால் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் உட்பட்டிருக்கும் பல முன்மாதிரிகளும் அடங்கியிருக்கிறது. இவற்றில் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்பது நாம் அதிக திறம்பட்ட ஆலோசகர்களாக இருக்க நமக்கு உதவிசெய்யும்.
“அதிசயமான ஆலோசனைக் கர்த்தா”வைக் கவனியுங்கள்
4 உதாரணமாக, “அதிசயமான ஆலோசனைக் கர்த்தா”வாகிய இயேசுவைக் கவனியுங்கள். முதல் நூற்றாண்டின் முடிவில். ஆசியா மாவட்டத்திலுள்ள ஏழு சபைகளுக்கும் இயேசு ஆலோசனைக் கடிதங்களை அனுப்பினார். தங்கள் சபைகளுக்கு ஆலோசனை கொடுக்கவேண்டிய மூப்பர்களுக்கு இந்தக் கடிதங்கள் அருமையான மாதிரியாக இருக்கிறது. தனிப்பட்டவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும் காரியத்திலும் இதன் நியமங்கள் நன்கு பொருந்துகிறது. இயேசுசிந்தித்த பிரச்னைகள் வினைமையானவை: விசுவாச துரோகம். “யேசபேல்” செல்வாக்கு, வெதுவெதுப்பாயிருத்தல், பொருளாசை போன்றவை. (வெளிப்படுத்துதல் 2:4, 14, 15, 20-23; 3:1, 14-18) எனவே இயேசு இந்தப் பிரச்னைகளை ஒளிவுமறைவின்றி பேசினார். அந்தச் சபைகளுக்கு அவர் என்ன சொல்ல விரும்பினார் என்பது குறித்து எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. இன்று, கிறிஸ்தவ மூப்பர்கள் தங்கள் சபைகளுக்கு ஆலோசனை கொடுக்கும்போது இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாய் தங்கள் ஆலோசனையில் மனத்தாழ்மை, தயவு ஆகிய “உப்பை” சேர்த்துக்கொள்ள வேண்டும். (பிலிப்பியர் 2:3-8; மத்தேயு 11:29) மறுபட்சத்தில், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாய் அவர்கள் ஒளிவுமறைவின்றி பேச வேண்டும். சபை குறிப்பை தவரவிடும் வகையில் கொடுக்கப்படும் ஆலோசனை தெளிவற்றதாக அல்லது பொதுப்படையாக இருந்துவிடக்கூடாது.
5 இயேசு கூடுமானவரை, முதலாவதாக சபைகளைப் பலமாகப் போற்றினார், மற்றும் கட்டியெழுப்பும் உற்சாகமான வார்த்தைகளோடு தம்முடைய ஆலோசனையை முடித்தார். (வெளிப்படுத்துதல் 2:2, 3, 7; 3:4, 5) கிறிஸ்தவ ஆலோசகர்களுங்கூட தங்களுடைய ஆலோசனைகளைப் போற்றுதல் மற்றும் உற்சாகம் ஆகிய “உப்பால்” சாரமேற்றிட வேண்டும், அனுபவமுள்ள ஒரு மூப்பர் சொன்னார்: “சகோதரரைத் திட்டுவதிலே நீங்கள் உண்மையில் அதிகத்தை சாதிப்பதில்லை.” உறுதியான ஆலோசனையைக் கொடுக்கும்போது, கட்டுப்பாட்டுணர்ச்சி சிதைந்துவிட்டதாக உணரும் அந்த நிலைக்கு மூப்பர்கள் அவரை விட்டுவிடக்கூடாது, மாறாக, வரக்கூடிய நாட்களில் நன்றாக செய்வதற்குப் பலப்படுத்தப்பட்டவராகவும் தீர்மானமுள்ளவர்களாகவும் உணரச் செய்யவேண்டும்.—கொரிந்தியர் 1:11-4-ஐ ஒப்பிடவும்.
6. சிமிர்னா மற்றும் பிலதெல்பியா சபைகளுக்கான இயேசுவின் செய்திகளைப் பற்றியதென்ன? இந்தச் சகோதரர்களின் பேரில் அவருக்குக் குறைகள் ஏதுமில்லை. ஆனால் அவர்கள் கடுமையான சோதனைகளை எதிர்பட்டுக்கொண்டிருந்ததால், தொடர்ந்து சகிப்புத்தன்மையைக் காண்பிக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்.. (வெளிப்படுத்துதல் 2:8-11; 3:7-13) கிறிஸ்தவ கண்காணிகள் திருத்தம் தேவைப்படும்போது ஆலோசனை கொடுப்பவர்களாக இருக்கவேண்டியது மட்டுமல்லாமல், அவர்களுடைய நல்ல வேலைகளுக்காக அவர்களைப் போற்றவும், சகிப்புத்தன்மையோடிருப்பதற்காக உற்சாகத்தைக் கொடுக்கவும் எப்பொழுதும் கவனமாயிருக்க வேண்டும்.—ரோமர் 12:12.
உவமைகளை உபயோகியுங்கள்
7. பரலோக ராஜ்யத்தில் யார் முதன்மையாக இருக்கப்போவது என்பது குறித்து தம்முடைய சீஷர்கள் அக்கறையாயிருந்தபோது, இயேசு ஆலோசனை கொடுத்தார். இந்தக் காரியத்தின்பேரில் அக்கறையாயிருந்ததற்கு அவர்களைத் திட்டியிருக்கலாம். அதற்குப் பதிலாக அவர் ‘தம்முடைய வார்த்தைகளை உப்பால் சாரமுள்ளதாக்கினார்.’ ஓர் இளம் பிள்ளையை அழைத்து அவர் சொன்னதாவது: “இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.” (மத்தேயு 18:1-4; லூக்கா 9:46-48) அவர் கொடுத்த ஆலோசனை தெளிவாகவும், ஆனால் தயவாகவும் கட்டியெழுப்புவதாகவும் இருந்தது. பரலோக ராஜ்யம் இவ்வுலக ராஜ்யத்திலிருந்து அதிக வித்தியாசப்பட்டது என்பதைக் காண்பிப்பதன் மூலம் இயேசு தம்முடைய சீஷர்களைத் தாழ்மையாக இருக்க உற்சாகப்படுத்தினது மட்டுமின்றி அவர்களுடைய விவாதத்திற்குரிய காரணத்தை நீக்கிப்போட முயன்றார்.
8. இந்தக் காரியத்தில் இயேசுவின் திறம்பட்ட போதனாமுறையை கவனியுங்கள். ஓர் உயிருள்ள உதாரணம்—ஓர் இளம் பிள்ளை! ஞானமுள்ள ஆலோசகர்கள் தங்களுடைய வார்த்தைகளை உவமைகள் அல்லது எடுத்துக்காட்டுகளாகிய “உப்பால்” சாரமேற்றுகின்றனர். இவை காரியத்தின் வினைமையான தன்மையைப் பெறுகிறவர் பிரச்னையை நிதானிப்பதற்கும் ஒரு புதிய வெளிச்சத்தில் அதைப் பார்ப்பதற்கும் உதவுகிறது. உவமைகள் வெகுவாக அழுத்தத்தைக் குறிக்கிறது.
9. காயீன் வினைமையான ஒரு தவற்றை செய்யும் ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்று அவனை எச்சரிக்கும்போது, யெகோவா, பாவத்தை ஒரு கொடிய மிருகமாக விவரித்தார். அவர் சொன்னார்: “பாவம் உன் வாசலில் பதுங்கியிருக்கும், அதின் ஆசை உன்மீதேயிருக்கும்.” (ஆதியாகமம் 4:7, தி.மொ.) மனந்திரும்பிய நினிவே மக்களை யெகோவா அழிக்காதிருந்தபோது யோனா எரிச்சலடைந்த சமயத்தில், கடவுள் அவனுக்கு ஒரு நிழல்தரும் ஆமணக்குச் செடியை முளைப்பிக்கப்பண்ணீனார். அந்தச் செடி பட்டுபோனபோது யோனா குறைகூறினான். அப்பொழுது யெகோவா சொன்னார்: “நீ ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும். . .இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நாண் பரிதபியாமலிருப்பேனோ.” (யோனா 4:5-11) நிச்சயமாகவே ஒரு பலமான ஆலோசனை!
10. அதுபோலவே, பெற்றோர் தன்னுடைய கூட்டுறவைக் கட்டுப்படுத்தியது குறித்து ஓர் இளம் பெண் அதிக வருத்தப்பட்டாள். அவளுக்கு உதவி செய்ய ஒரு பயணக் கண்காணி பின்வருமாறு இந்த உதாரணத்தை உபயோகித்தார்: “உனக்குத் தையல் வேலை இஷ்டம் அல்லவா? உன்னுடைய ஒரு சிநேகிதிக்காக ஒரு கவர்ச்சியான உடையைத் தைத்துக்கொடுக்க நீ ஏராளமாக நேரத்தை செலவழித்தாய் என்று வைத்துக்கொள்ள, ஆனால். அதை அவளுக்குக் கொடுத்தபிறகு, அவள் அதைத் தரையை துடைப்பதற்காக உபயோகிப்பதை நீ பார்க்கிறாய். உனக்கு எப்படி இருக்கும்?” தான் வருத்தப்படுவாள் என்று அந்த இளம் பெண் ஒப்புக்கொண்டாள். எனவே அந்த ஊழியர் தொடர்ந்து சொன்னதாவது: “உன்னுடைய பெற்றோரும் அப்படித்தான் நோக்குகிறீர்கள். உன்னை வளர்ப்பதில் அவர்கள் ஏராளமான நேரத்தை செலவழித்திருக்கிறார்கள். உன்னைக் குறித்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள். உனக்குக் கேடு விளைவிக்கும் ஆட்களோடு நீ கூட்டுறவு கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பம்.” தன்னுடைய பெற்றோர் என்ன செய்யமுயன்றுகொண்டிருந்தார்கள் என்பதை அவள் போற்றுவதற்கு இந்த உதாரணம் உதவியாயிருந்தது.
கேள்விகள் கேளுங்கள்
11 அர்த்தமற்ற எரிச்சல் குறித்து யெகோவா யோனாவிடம் பேசும்போது அவர் கேள்விகளையும் கேட்டார் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நினிவே அழிக்கப்படவில்லை என்பதைக் கண்டு எரிச்சலடைந்தபோது யெகோவா அவனை நோக்கி: “நீ எரிச்சலடைகிறது நல்லதோ?” என்று கேட்டார். யோனா பதில் சொல்லவில்லை. எனவே யெகோவா தேவன் அந்த ஆமணக்குச் செடியை வளரவிட்டு பின்பு பட்டுபோகச் செய்தார். அப்பொழுது யோனா இரட்டிப்பாய்ச் சோர்வடைந்தான். எனவே யெகோவா அவனிடம்: “நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான்,” என்றான் தீர்க்கதரிசி இந்த முறையை பதில் சொன்னதால், யெகோவா ஒரு சாதாரண செடியின் பேரில் யோனாவின் மனநிலையை நினிவே பட்டணத்தின் பேரில் தம்முடைய மனநிலையுடன் ஒப்பிடலானார். “நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ?” என்ற தீர்மானமான கேள்வியைக் கேட்டார். (யோனா 4:4, 9, 11) இப்படியாக யோனா, மனந்திரும்பிய நினிவே பட்டணத்தார்பேரில் யெகோவாவின் மனநிலையைக் கொண்டிருக்கும்படி அவனுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது.
12 ஆம், ஆலோசனை தேவைப்படும் ஒருவரின் நினைவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள ஆலோசகருக்குக் கேள்விகள் உதவியாயிருக்கின்றனர். தன்னுடைய சொந்த பிரச்னைகளையும், உள்நோக்கங்களையும் தெளிவாக உணர்ந்துகொள்வதற்கு அவை ஆலோசனை பெறும் தனிப்பட்ட ஆட்களுக்கு அதிக உதவியாயிருக்கிறது. உதாரணமாக, வீட்டிற்கு வருவதற்கு வாகனத்தை எடுப்பதற்கு முன்பு மதுபானம் அருந்துவதற்குத் தனக்கு முழு உரிமை இருக்கிறது என்பதாக ஒருவர் வற்புறுத்தக்கூடும். ‘மதுபானம் என்னை ஒன்றும் பண்ணாது’ என்பதாக அவர் உணரக் கூடும். இது குறித்து ஒரு நண்பர் இப்படியாக அவருக்கு நியாயமான காரணங்களை எடுத்துக்காட்டவிரும்பலாம். ‘ஆனால் உங்களுடைய தவறில்லாத ஒரு விபத்திற்குள்ளானீர்கள் என்றால், நீங்கள் மதுபானம் அருந்தியிருப்பதைக் கவனிக்கும் போலீஸ் என்ன நினைப்பார்? ஒருவேளை நீங்கள் அருந்திய மதுபானம் உங்களுடைய செயல்களைச் சிறிதளவுக்குப் பாதித்திருக்கிறது. என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய தன்னியல்புச் செயல்கள் பூரண நிலையிலில்லாதிருக்கும்போது, நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு உண்மையிலேயே விரும்புவீர்களா? ஒரு சிறிய அளவு மதுபானத்தினிமித்தம் இப்படிப்பட்ட ஆபத்துக்களைத் தேடிக்கொள்வதில் பிரயோஜனம் உண்டா?’
13 கிறிஸ்தவ ஆலோசனை எல்லா சமயங்களிலும் பைபிள் ஆதாரம் கொண்டவை. கூடிய மட்டும் கிறிஸ்தவ ஆலோசகர்கள் ஆலோசனை கொடுக்கும்போது பைபிளைத்தான் உபயோகிக்கின்றனர். (எபிரேயர் 4:12) ஓர் எடுத்துக்காட்டு: அனுகூலமுள்ள ஒரு மூப்பர் பிரசங்க வேலையில் சுறுசுறுப்பாயில்லாத ஒருவருக்கு உதவிசெய்ய முயன்றுகொண்டிருந்தார். இரண்டு பிள்ளைகளையுடைய ஒரு மனிதனைப் பற்றிய இயேசுவின் உவமைக்குக் கவனத்தைத் திருப்பினார். தன்னுடைய திராட்சத் தோட்டத்தில் வேலை செய்யும்படியாக அந்த மனிதன் இரண்டு பேரையும் கேட்டுக்கொண்டான். முதல் மகன் போகிறேன் என்று சொல்லி போகவில்லை. இரண்டாவது மகன் மாட்டேன் என்று சொல்லியும், பின்பு போக தீர்மானித்தான். (மத்தேயு 21:28-31) பின்பு அந்த ஆலோசகர். “இந்த இரண்டு மகன்களில் நீங்கள் இப்பொழுது யாரைப்போல் செயல்படுகிறீர்கள்?” என்று கேட்டார். பிரஸ்தாபி அதன் கருத்தைப் புரிந்துகொண்டார். விஷேசமாக ஆலோசகர் சொன்ன பின்வரும் வார்த்தைகள் குறிப்பைப் புரிந்துகொள்ள உதவி செய்தது: “திராட்சத் தோட்டத்தின் சொந்தக்காரராகிய யெகோவா தேவன் உங்களுடைய நிலைமையை எப்படி நோக்குகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”
14. சந்தேகங்களையுடையவர்களுக்கு, விவாகம் அல்லது மற்ற குடும்பப் பிரச்னையுடையவர்களுக்கு, தனிப்பட்டவர்களுடன் மனகஷ்டங்களையுடையவர்களுக்கு அல்லது மற்ற கடினமான நிலைமைகளிலுள்ளவர்களுக்கு உதவிசெய்யும் காரியத்திலும் அப்படியே இருக்கிறது.a திறம்பட்ட கேள்விகள் ஆலோசனை பெறுகிறவர்கள் நிதானிக்கவும், தங்களைத் தாங்களே சோதித்து பார்ப்பதற்கும், சரியான முடிவுகளுக்கு வருவதற்கும் உதவியாயிருக்கிறது..
கவனமாக செவிகொடுங்கள்
15. என்றபோதிலும், கேள்விகளைக் கேட்பது, நீங்கள் பதில்களுக்குச் செவிகொடுக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 18:13) யோபுவுக்கு “ஆறுதலளிக்க வந்த” அந்த மூன்றுபேர் விழுந்த வலையில் நீங்கள் விழுந்துவிட வேண்டாம். யோபு அவர்களிடம் பேசினான். ஆனால் அவர்கள் உண்மையிலேயே செவிகொடுக்கவில்லை. யோபின் கஷ்டங்கள் அவனுடைய சொந்த பாவத்தின் விளைவுகள் என்ற முடிவுக்கு அவர்கள் ஏற்கெனவே வந்துவிட்டிருந்தார்கள். (யோபு 16:2; 22:4-11) மாறாக ஒரு கிறிஸ்தவ ஆலோசகர் கவனமாக செவிகொடுக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, முழு கதையும் அல்லது விவரமும் சொல்லி முடிக்கப்படவில்லை. என்பதைக் குறிப்பாய்க் காண்பிக்கும் குறிப்பிடத்தக்க நிறுத்தங்களையோ அல்லது குரலில் மாறுதல்களையோ கவனிக்கக்கூடும். ஒருவேளை ஓர் உப கேள்வி அந்த நபரின் மனதில் மறைந்திருக்கக்கூடிய ஒரு கருத்தை 4.—நீதிமொழிகள் 20:5—ஐ ஒப்பிடவும்.
16. இது எல்லா சமயத்திலும் எளிதாயிருக்காது என்பது உண்மைதான். அமைதியிழந்த ஒருவர், “என்னுடைய பெற்றோரை வெறுக்கிறேன்!” அல்லது “என்னுடைய புருஷனோடு இனிமேல் என்னால் வாழவே முடியாது!” என்று வெடிக்கக்கூடும். அப்படிப்பட்ட காரியங்களைக் கேட்பது கஷ்டமாயிருக்கலாம். ஆனால் தான் உண்மையாயிருந்தது விருதா என்று ஆசாப் குறைகூறியபோது யெகோவா அவனுக்குச் செவிகொடுக்க மனமுள்ளவராக இருந்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். (சங்கீதம் 73:13, 14) தான் முட்டாளாக்கப்பட்டதாக எரேமியா சொன்னபோதுகூட கடவுள் அவனுக்குச் செவிகொடுத்தார். (எரேமியா 20:7) நீதிமான்கள் துன்மார்க்கரால் ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் அதை யெகோவா பார்ப்பதுமில்லை என்றும் ஆபகூக் குறைகூறுவதாக இருந்தது. (ஆபகூக் 1:13-17) அதுபோல கிறிஸ்தவ ஆலோசகருங்கூட செவிகொடுக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். ஆட்களுக்கு இப்படிப்பட்ட உணர்வுகள் உண்மையிலேயே இருக்குமானால், ஆலோசனை கொடுப்பவர் இதைக் குறித்து அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர் உதவிசெய்யமுடியும். தனிப்பட்ட நபர் என்ன செய்திருக்கிறார் என்பதற்குப் பதிலாக அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்பதன் பேரில் கருத்து தெரிவிக்க அவரை நயமாகத் துரிதப்படுத்துவதை அவர் தவிர்க்கவேண்டும். அதே சமயத்தில் பலமாக அல்லது தீர்ப்பளிக்கும் விதத்தில் பிரதிபலிப்பதையும் ஆலோசகர் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நபர் தன்னுடைய இருதயத்தைத் திறந்து வைப்பதைத் தடைசெய்துவிடும்.—நீதிமொழிகள் 14:29; 17:27.
17. சில சமயங்களில் ஆலோசனை கொடுப்பதில் பெரும் பாகம் செவிகொடுத்தலாக இருக்கிறது. அவர் தன்னுடைய கவலையை, உடைந்த இருதயத்தை அல்லது உணர்ச்சி வேதனையை ஊற்றிவிட அனுமதிக்கவேண்டும். நகோமி மோவாப் வயல்களிலிருந்து திரும்பினபோது இஸ்ரவேல் பெண்கள், “இவள் நகோமியோ?” என்று சொல்லி வாழ்த்தினார்கள். ஆனால் நகோமி விசனத்துடன்: “நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று சொல்லுங்கள். சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப்போனேன். யெகோவா என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார். யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில் என்னை நகோமி என்பானேன்?” (ரூத் 1:19-21) அதற்கு இஸ்ரவேல் பெண்கள் பதில் சொல்ல அதிகமில்லை. ஆனால் மற்றவர்கள் தங்களுடைய உணர்ச்சி வேதனையை வெளிப்படுத்தும்போது, அன்பு காண்பிக்கும் விதத்தில் அவர்களுக்குச் செவிகொடுக்க ஆயத்தமாயிருப்பதுதானே அவர்களுடைய வேதனையை ஆற்றுவதாயிருக்கும்.”b
உண்மைநிலை அறிந்து செயல்படுங்கள்
18. ஆலோசனைக்குப் பிரதிபலிப்புகள் வித்தியாசப்படுகிறது என்பது உண்மைதான். யோனா யெகோவாவின் ஆலோசனைக்கு நன்கு பிரதிபலித்தான். அவனுடைய எரிச்சலும் கோபமும் நல்ல விதத்தில் தணிந்ததால், மற்றவர்களும் தன்னுடைய அனுபவத்திலிருந்து நன்மையடையும்பொருட்டு அவன் தன் அனுபவத்தை அறிக்கை செய்தான். மனத்தாழ்மை குறித்த பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கு இயேசுவின் சீஷர்களுக்குச் சிறிது காலம் எடுத்தது. ஏன் இயேசுவானவர் மரிக்கும் அந்த இரவுதானே, தங்களில் யார் பெரியவர் என்ற விவாதத்துக்குட்பட்டவர்கள்! (லூக்கா 22:24) எனவே ஆலோசனை கொடுப்பவர்கள் பொறுமையாயிருக்க வேண்டும். (பிரசங்கி 7.8) தவறான மனநிலை ஆழமாக வேர்கொண்டிருக்கும் ஒருவர் சாதாரணமாக ஒரு மூப்பரின் ஒரு சில வார்த்தைகளால் தன் வழியை மாற்றிக்கொள்ளமாட்டார். விவாகத் துணைவர்களுக்கிடையே இருக்கும் நீண்ட கால பிரச்னை, முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவனின் ஓரே சந்திப்பில் மறைந்துவிடாது. கடுமையான வியாதிகள் குணமடைவதற்கு மாதங்கள் எடுக்கின்றன. வினைமையான ஆவிக்குரிய பிரச்னைகளும் அப்படியே. சிலர் நல்ல ஆலோசனைகளுக்குச் செவிகொடுக்க மாட்டார்கள். யெகோவாவால் ஆலோசனை கூறப்பட்டும் காயீன் போய் தன் சகோதரனைக் கொலை செய்தான்.—ஆதியாகமம் 4:6-8.
19. கடுமையான பிரச்னைகளையுடையவர்கள் சபையிலிருந்து தாங்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து உண்மையில் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு உடன் கிறிஸ்தவன் ஒருவருடைய நாள்பட்ட மனசோர்வை அல்லது ஒரு பெருஞ்சேதம் அல்லது கடுமையான ஓர் அனுபவம் ஏற்படுத்திய உணர்ச்சிக் காயங்களை நீக்க முடியாது. ஒருவர் உடல் நலமற்று இருக்கும்போது. அவரை சௌகரியமாக வைத்துக்கொள்ளும் காரியத்தையே மருத்துவர்கள் அநேகமாகச் செய்கின்றனர். காலந்தானே அவருடைய உடல் ஆரோக்கியமடையச் செய்கிறது. அதுபோல. ஒரு கிறிஸ்தவன் உணர்ச்சி சம்பந்தமாகத் துன்பத் துயரில் இருக்கும்போது, சபை அவரை சௌகரியமாக வைத்திட” பிரயாசப்படலாம் இதை அவர்கள் அவரோடு சேர்ந்தும் அவருக்காகவும் ஜெபம் செய்வதன் மூலமும், சமயம் கிடைக்கும்போதெல்லாம் உற்சாகமான வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும் தங்களாலான நடைமுறையான உதவியை அளிப்பதன் மூலமும் செய்யலாம். அப்பொழுது காலமும் யெகோவாவின் ஆவியும் குணம்பெறச் செய்கின்றன. (நீதிமொழிகள் 12:25); யாக்கோபு 5:14, 15) உறவினர்ப்புணர்ச்சிகக்குள்ளான ஒருவர் இப்படியாக எழுதினார்: “உறவினர்ப்புணர்ச்சி உங்களில் கடுமையான உணர்ச்சி வேதனையை ஏற்படுத்தக்கூடுமென்றாலும், உங்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் யெகோவாவின் அமைப்பு ஏராளம் செய்கிறது. வேத வசனங்களிலிருந்து கிடைக்கும் உதவியாலும் சகோதர சகோதரிகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவாலும் நீங்கள் அதை மேற்கொள்ள முடியும்.”c
20. ஆம், கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்யும் உத்தரவாதமுள்ளவர்களாயிருக்கின்றனர். சபையிலுள்ள எல்லாருமே, குறிப்பாக மூப்பர்கள் பிறர் நலனில் அக்கறையுடையவர்களாயிருந்து தேவையான சமயங்களில் தயவான வேதப்பூர்வமான ஆலோசனையைக் கொடுக்க வேண்டும். (பிலிப்பியர் 2:4) அப்படிப்பட்ட ஆலோசனை சர்வாதிகார முறை கொண்டதாய் அல்லது மூர்க்கமானதாய் இருக்கக்கூடாது. அதே சமயத்தில் மற்றவருடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார் என்ற எண்ணத்தையும் கொடுத்துவிடக்கூடாது. மாறாக அது வே வசனங்களின் அடிப்படையில் “உப்பால் சாரமேறினதாய்” இருக்க வேண்டும். (கொலோசெயர் 4:16) நம் எல்லாருக்குமே உதவி தேவை, எனவே சரியான சமயத்தில் கொடுக்கப்படும் தயை மற்றும் உற்சாகம் என்ற ‘உப்பால் சாரமேற்றப்பட்ட’ ஆலோசனை நம் எல்லோரையும் நித்திய ஜீவ பாதையில் தொடர்ந்து செல்ல உதவி செய்யும்.
[அடிக்குறிப்புகள்]
a விவாகமான தம்பதிகளுக்கு ஆலோசனை கொடுப்பதில் கூடுதலான தகவல்களுக்கு “உண்மையிலேயே உதவும் ஆலோசனை கொடுப்பது எப்படி?” என்ற ஜூலை 22, 1883 ஆங்கில விழித்தெழு! கட்டுரைகளைப் பாருங்கள்.
b மனசோர்வடைந்துள்ள கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பதன் பேரில் ஆலோசனைக்கு “சோர்வடைந்த ஆத்துமாக்களிடம் ஆறுதலாய்ப் பேசுங்கள்.” என்ற ஏப்ரல் 15, 1982 ஆங்கில காவற்கோபுரம் கட்டுரையையும் “ஒரு கல்விமானின் நாவு—சோர்ந்தவர்களை ஊக்குவிப்பதற்கு” என்ற ஜூன் 1, 1982 ஆங்கில காவற்கோபுரம் கட்டுரையையும் பார்க்கவும்.
c உணர்ச்சி காயங்களையுடையவர்களுக்கு உதவி செய்வதில் கூடுதலான தகவல்களுக்கு ஆகஸ்ட் 1, 1983 ஆங்கில காவற்கோபுரம் பத்திரிக்கையில் “மனமொடிந்தவர்களுக்கு நம்பிக்கை. “மற்றும் “அவர்கள் உதவி செய்ய விரும்புகிறவர்கள்” என்ற கட்டுரைகளையும் அக்டோபர் 1, 1983 வெளியீட்டில் “உறவினர்ப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி,” என்ற கட்டுரையையும் பாருங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஏழு சபைகளுக்கு இயேசு கொடுத்த ஆலோசனையின் எந்த அம்சங்கள் இன்று மூப்பர்களுக்கு உதவியாயிருக்கின்றன?
◻ ஆலோசனை கொடுப்பதில் உவமைகளை அல்லது எடுத்துக்காட்டுகளை பயன்படுத்துதலில் என்ன வேதப்பூர்வமான உதாரணங்கள் இருக்கின்றன?
◻ ஒரு கிறிஸ்தவ ஆலோசகருக்குக் கேள்விகள் எந்தளவுக்கு உண்மையிலேயே மதிப்புடையவையாய் இருக்கின்றன?
◻ திறமை வாய்ந்த ஆலோசகர் பைபிளை எப்படி பயன்படுத்தலாம்?
◻ ஆலோசனை கொடுக்கும் ஒருவர் ஏன் கவனமாக செவிகொடுப்பவராகவும் இருக்க வேண்டும்?
[கேள்விகள்]
1, 2 கிறிஸ்தவ ஆலோசனை ஏன் “உப்பால் சாரமேறினதாய்” இருக்க வேண்டும்?
3. கிறிஸ்தவ ஆலோசகருக்கு யெகோவா என்ன உதவியை அளித்திருக்கிறார்?
4. சபைக்கு ஆலோசனை கொடுப்பதில் ஒரு கிறிஸ்தவ மூப்பர் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்?
5, 6. ஏழு சபைகளுக்கு இயேசு கொடுத்த செய்திகளிலிருந்து ஒரு மூப்பர் என்ன கூடுதலான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
7, 8. இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்த ஆலோசனை எப்படி “உப்பால் சாரமேறினதாய்” இருந்தது? (பி) நாம் ஆலோசனை கொடுக்கும்போது உவமைகள் அல்லது எடுத்துக்காட்டுகள் ஏன் அருமையான உதவியாயிருக்கின்றன?
9. ஆலோசனை கொடுப்பதில் எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துதலில் வேறு என்ன வேதப்பூர்வமான முன்மாதிரிகள் இருக்கின்றன?
10. ஓர் இளம் பிள்ளை தன்னுடைய பெற்றோரின் உள்நோக்கத்தைத் தெரிந்துகொள்ளும்படி தற்கால கிறிஸ்தவ மூப்பர் எப்படி ஒரு உதாரணத்தைப் பயன்படுத்தினார்?
11. யோவானுக்கு ஆலோசனை கொடுப்பதில் யெகோவா எப்படிக் கேள்விகளைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தினார்?
12. ஆலோசனை கொடுப்பதில் கேள்விகள் எந்தளவுக்கு மதிப்புள்ளவை? விளக்குங்கள்.
13. ஆலோசனை கொடுப்பதில் ஆலோசகர் ஒருவர் எப்படிக் கேள்விகளுடன் பைபிளையும் பயன்படுத்தினார்? இது ஏன் பலனுள்ளதாயிருந்தது?
14. ஆலோசனை கொடுப்பதில் கேள்விகள் அருமையான கருவியாக இருக்கக்கூடிய வேறு சில சந்தர்ப்பங்கள் யாவை?
15. (எ) யோபின் மூன்று “ஆறுதலாளர்களும்” என்ன செய்ய தவறினார்கள்? (பி) செவிகொடுத்துக் கேட்பது எப்படி ஒரு கிறிஸ்தவ ஆலோசகருக்கு உதவியாயிருக்கும்?
16. உணர்ச்சி சம்பந்தமாக பாதிக்கப்பட்டிருக்கும் உடன் கிறிஸ்தவர்களின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பது கடினமாயிருக்கும்போது ஒரு ஆலோசகருக்குத் தேவைப்படுவது என்ன?
17. நம்முடைய சகோதரர்கள் சொல்லும் காரியங்களுக்குச் செவி கொடுப்பதுதானே எப்படிச் சில சமயங்களில் அவர்களுக்கு ஆறுதலளிக்கும் வழியாயிருக்கிறது?
18. (எ) யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் கொடுத்த ஆலோசனைக்குக் கிடைத்த சில பிரதிபலிப்புகள் என்ன? (பி) கிறிஸ்தவ ஆலோசகர் என்ன தன்மையை வளர்க்க வேண்டும்?
19. உணர்ச்சிக் காயங்களை உடையவர்களுக்குச் சபை எப்படி உதவிசெய்யலாம்?
20. நாம் எல்லாரும் யெகோவாவைத் தொடர்ந்து சேவிக்க பிரயாசப்படும்போது ஆலோசனை என்ன பாகம் வகிக்கிறது?
[பக்கம் 13-ன் படம்]
யோனா கசந்துகொண்டான். எரிச்சலடைந்தான், ஆனால் யெகோவாவின் ஆலோசனைக்கு நன்கு பிரதிபலித்தான்
[பக்கம் 14-ன் படம்]
தன்னுடைய குறிப்பை விளக்க இயேசு ஓர் இளம் பிள்ளையை உபயோகித்து, தெளிவாகவும், தயவாகவும் கட்டியெழுப்பும் விதத்திலும் தம்முடைய சீஷர்களுக்கு ஆலோசனை கொடுத்தார்