மரணத்தின் மேல் வெற்றி—உங்களுக்குச் சாத்தியமா?
மரணத்தின் மேல் வெற்றி! எவ்வளவு மகிழ்ச்சிகரமானது! அந்த எண்ணமே மனிதர்களின் இருதயத்தை அனல் கொள்ளச் செய்கிறது. ஆனால் தொன்று தொட்டு இது வேறுவிதமாக இருந்து வருகிறது. மரணம் மனிதவர்க்கத்தின்மீது வெற்றிகரமாக ஆளுகை செய்து வருகிறது. ஆகவே அப்படிப்பட்ட முழு மாற்றம் எப்படி சாத்தியப்படக்கூடும்? யார் அதைச் செய்யக்கூடும்? மரணத்தின் மேல் வெற்றிகொள்வது உங்களுக்குச் சாத்தியமா?
மரணத்தின் ஆரம்பம்
2 மரணம் என்பது மெய்மையானதொன்று. துயரத்தை அனுபவிக்கும் மனித குடும்பம் நன்கு அறிந்திருக்கிற பிரகாரம் இது ஒரு கட்டுக்கதை அல்ல. இந்துமதத்தின் ரிக்வேதம் மரணத்தின் ஆரம்பத்தைப்பற்றியதில் முதலில் மரித்த மனிதன் இயமன் என்று சொல்கிறது. இயமன் என்பது முதல் மனிதனுக்கு இன்னொரு பெயர் என்றும் அவனுடைய இரட்டை சகோதரியாகிய இயமி முதல் ஸ்திரீ என்றும் ரிக்வேதம் குறிப்பாக உணர்த்துகிறது. நாம் வாசிக்கிறோம்: “பூமியையும், வரப்போகும் நாட்களையும் மனதில் கொண்டு தந்தையிடமிருந்து பிறக்கும் ஒரு மகனைப் பெறச் செய்வாயாக. ஆம், இதை, ஓர் இறக்கக் கூடியவனாக இருப்பவனிடமிருந்து வரும் சந்ததியை, மரணமில்லாத தன்மையைப் பெற்றவர்கள் ஆவலுடன் உன்னிடம் நாடுகிறார்கள்” (ரிக்.வே.10.1.3).1 இப்படியாக, ரிக்வேதம் இயமனை மரிக்கும் தன்மை பெற்றுள்ள ஒரே ஆள், அதாவது, முதல் மனிதன் என்றும், “பூமிக்கும், வரப்போகும் நாட்களுக்கும்” சந்ததியை அவன் பெறவேண்டும் என்பது அவனுக்கான பரலோகச் சித்தம் என்றும் விவரிக்கிறது.
3 மனிதவர்க்கத்துக்கு மரணம் புகுத்தப்பட்டதைப்பற்றி ரிக் வேதம் சொல்கிறது: “அவன் (இயமன்) கடவுளின் நிமித்தம் மரணத்தைத் தன்னுடைய பாகமாகத் தெரிவு செய்தான். மனிதனின் நலனுக்கான நித்திய ஜீவனை அவன் தெரிவு செய்யவில்லை” (ரிக்.வே.10.13.4) அக்கறையூட்டும் வகையில் இயமன் என்றால் “நிறுத்தம்” என்று அர்த்தப்படுகிறது.2 பூமியில் நித்திய ஜீவனுக்கு நிறுத்தத்தைக் கொண்டுவந்த பெயர் பெற்றவனுக்குப் பொருத்தமான அர்த்தமாய் இருக்கிறது.
4 இந்த ரிக்வேத மேற்கோள்கள் முதல் மனிதன் மற்றும் ஸ்திரீயைப் பற்றியும் அவர்கள் மனித குடும்பத்திற்கு மரணத்தை எப்படிக் கொண்டு வந்தார்கள் என்பதைப் பற்றியும் பைபிளின் முந்திய பதிவுகளை நினைவுக்குக் கொண்டு வருவதாய் தோன்றுகிறது. உதாரணமாக, முதல் மனிதனும், ஸ்திரீயும் நெருங்கிய உறவுக்குள் இருந்தனர் என்பதை பைபிள் விவரம் வெளிக்காட்டுகிறது. ஆதாம் சொன்னது போல: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்.” (ஆதியாகமம் 2:23) மற்றும், முதல் ஜோடி “பலுகிப் பெருகி பூமியை நிரப்புவது” கடவுளுடைய சித்தமாக இருந்தது. (ஆதியாகமம் 1:28) மேலுமாக, முதல் மனிதனாகிய ஆதாம் வேண்டுமென்றே செய்த கீழ்ப்படியாமையின் செயல் மூலம் ஜீவனைத் தள்ளிவிட்டு மரணத்தைத் தெரிவு செய்தான். இது மனிதனுடைய நலனுக்காக இல்லை, ஏனெனில், இது பரம்பரை குணம் என்னும் இயற்கை சட்டத்தின்படி செயல்படும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் மூலமாக அவனுடைய சந்ததியினர் அனைவரும் ஜீவனை இழப்பதில் விளைவடைந்தது. ஆகவே பைபிள் கூறுகிறது: “பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, “புசிக்க வேண்டாம்” என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.”—ஆதியாகமம் 3:17, 19.
5 முதல் மனிதனின் செயல்கள் அவனுடைய சந்ததியைப் பாதித்தது என்பதை விளக்கும்போது பைபிள் சொல்கிறது: “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” மரணம் என்பது சிருஷ்டிகரான கடவுளுக்குக் கீழ்ப்படியாமையால் வந்த ஒரு தண்டனை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. கடவுளுக்குக் கீழ்ப்படியாமை ஒரு பாவம், மற்றும் “பாவத்தின் சம்பளம் மரணம்.”—ரோமர் 5:12; 6:23.
6 பாவம் என்பது தெய்வீக சட்டத்தை மீறிநடப்பது என்றும் அதற்குத் தண்டனை மரணம் என்றும் ரிக்வேதம் காட்டுகிறது. நாம் வாசிக்கிறோம்: “உம்முடைய சட்டம் எதுவானாலும், ஓ கடவுளே, ஓ வருணனே, மனிதர்களாகிய நாங்கள் அனுதினமும் மீறிநடக்கிறோம், உம்முடைய கோபத்தினாலே அழிந்து போகாதபடிக்கு எங்களை மரணத்திற்கு இரையாகக் கொடுக்க வேண்டாம்.” (ரிக்.வே.1.25.1,2) வேத எழுத்தாளர்கள் பாவம் இன்னது என்பதையும், மரணம் பாவத்திற்குத் தண்டனை என்ற கருத்தையும் வெளிப்படையாகவே உணர்ந்தவர்களாக, ஜெபம் மற்றும் பலிகள் மூலமாக தங்கள் கடவுட்களைச் சாந்தப்படுத்த முயன்றார்கள். அநேக ரிக்வேதத் துதிப்பாடல்கள் பாவத்தை நீக்க ஜெபங்களையும், தங்கள் கடவுட்களைச் சாந்தப்படுத்த பலிகளையும் அளிப்பதாக எழுதப்பட்டிருக்கின்றன. பரலோகத்தினிடமாக ஒரு நீதிசம்பந்தப்பட்ட கடமையுணர்வு இருப்பதை அறிந்தவர்களாய், தங்கள் கடவுளாகிய வருணனை நீதி நெறிச்சட்டத்தை நிலைநிறுத்துபவராக ஆக்கியிருக்கிறார்கள்.3
மரணத்தைப் பற்றிய பயம்
7 மனித குடும்பத்தின் அனுபவங்களில் மரணம் என்பது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தும் ஒரு காரியம் என்பதைப் பற்றி சந்தேகமில்லை. இழப்பு நேரிட்டவர்களுக்கு இது பெருந்துன்பத்தை அளிக்கும் இழப்பாகவும், ஈடு செய்யமுடியா துயர உணர்வையும் தருவதாய் இருக்கிறது. பொதுவாகவே, மனிதவர்க்கம் மரணத்தினிடமாக நேச உணர்வு கொண்டதாக இல்லை. மரணம் என்பதற்கு சமஸ்கிருத வார்த்தை ம்ருத்யு. ரிக்வேதம் ம்ருத்யுவை ஆளுருவங் கொடுக்கப்பட்ட மரணம் என்றும், பயா (பயம்) என்பவனின் குமாரன் என்றும் வருணிக்கிறது. இது மரணத்திற்கும், பயத்திற்கும் இடையேயுள்ள நெருங்கிய சம்பந்தத்தைக் குறிப்பாக உணர்த்துகிறது. உண்மையில், பூர்வ வேத எழுத்துக்களில் மரணத்தைப் பற்றிய குறிப்புகள், மரணம் பயத்தோடு நோக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.4
8 இந்து எழுத்தாளரான ரோஹித் மெஹ்தா, மரணம் அநேக மனிதர்களில் பயத்தை வரவழைக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்.5 கதா-உபநிஷத் என்ற இந்துமத புத்தகத்தில் ஓர் உருவகக்கதையைக் கலந்தாலோசிக்கையில் திரு. மெஹ்தா எழுதினார்: “அஞ்சாத இளைஞனின் கேள்விகளுக்கு மரணம் ஏன் அதன் இரகசியத்தை வெளிப்படுத்த மனமில்லாமலிருக்கிறது? இந்த மரண இரகசியத்தை மனிதன் அறிந்தால் நிச்சயமாக அவனுக்கு மரணபயம் இல்லாமற்போகும் என்று ஒருவேளை இயமன் நினைத்திருப்பான்.”
9 இந்த மரணபயம்தான் மனித இனத்தை எல்லாவிதமான மூட நம்பிக்கைகளுக்கும், சகுனங்களுக்கும் மனதின் பிரகாரமான அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்களைப்” பற்றி பைபிள் பேசுகிறது. (எபிரெயர் 2:15) மரணபயத்தினால் மனிதர்கள் எப்படி அடிமைத்தனத்திற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்? வாழ்க்கையின் இயக்கங்களைப் பேரளவில் தடைசெய்யும் கட்டுப்பாடான சகுனங்கள், பழக்கவழக்கங்கள், மற்றும் மூட நம்பிக்கைகள் மூலமாகவே. உதாரணமாக, “Knowledge of Omens” (நிமித்த ஞானம்) என்ற இந்துக்களின் சமய குறிப்பேடு முக்கியமாக ஜோதிட சாஸ்திரத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.6 “Law of the Lizard” (பல்லி சாஸ்திர விதி) என்ற சகுன சாஸ்திர விதியும் இருந்தது.7 ஒரு பூனை வழியின் குறுக்கே போவது சகுனங்கள் எல்லாவற்றிலேயும் ஒரு மோசமான சகுனம். அது சாவுக்கு அறிகுறி. இந்தச் சகுனங்கள் பற்றிய எல்லா பயமும் மரணபயத்திலிருந்து உண்டாகிறது; அது ஒருவன் தன்னுடைய வாழ்க்கையை எவ்விதமாக நடத்துகிறான் என்பதை ஆழ்ந்த விதமாக பாதிக்கிறது. உண்மையில் மரணம் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்வது, அதன் சம்பந்தமான பயத்தை நீக்க நிச்சயமாக உதவி செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஆத்துமா மற்றும் ஆவி—அவை என்ன?
10 மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? மரிப்பவர்களின் நிலைமை என்ன? உண்மையில், மரிக்கும்போது என்ன சம்பவிக்கிறது? மரித்தவர்களின் நிலைமையைப்பற்றிய நிச்சயமில்லாத தன்மை “ஆத்துமா” மற்றும் “ஆவி” என்ற வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுதலைச் சுற்றி இருக்கிறது. மேலே கேட்கப்பட்ட கேள்விகளைப் பற்றிய உண்மையைக் கண்டுபிடிக்க, இந்த வார்த்தைகளின் ஆரம்ப அர்த்தத்திற்கும் அதற்குப் பிற்காலத்தில் மத விமர்சகர்களால் கொடுக்கப்பட்ட அர்த்தத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காண்பிப்பது தேவையாய் இருக்கிறது. இந்தப் பொருட்களின் உண்மையை அறிவதற்கு, மனிதர்கள் ஊக்கமாய்க் கூறும் அர்த்தத்தின் அடிப்படையில் ஏற்கெனவே கொண்டிருக்கும் கருத்துக்களிலிருந்து ஒருவர் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி, மானிட மதபோதகர்கள், மற்றவர்களிலிருந்து வித்தியாசமான அர்த்தங்களை அளிக்கிறார்கள். ஆகவே சில அர்த்தங்கள் “ஆத்துமா” மற்றும் ”ஆவி” ஆகியவற்றின் ஆதி அர்த்தங்களிலிருந்து வித்தியாசமானவையாக இருக்க நேரிடுகிறது.
11 உதாரணமாக, “ஆத்துமா” என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகிய ஆத்மா என்ற வார்த்தையை மொழிபெயர்க்க அடிக்கடி உபயோகப்படுத்தப்படுகிறது. இது சரியா? சிலர் இந்தச் சமஸ்கிருத வார்த்தையை “சுவாசித்தல்” என்ற அர்த்தமுடைய அன் என்ற மூலத்திலிருந்து அமைத்திருக்கிறார்கள்; மற்றவர்கள் “இயங்குதல்” என்ற அர்த்தமுடைய அத் என்பதிலிருந்தும் இன்னும் மற்றவர்கள் “ஊதுதல்” என்ற அர்த்தமுடைய வா என்பதிலிருந்தும் அமைத்திருக்கிறார்கள். பழைய அமைப்பு முறை, “சுவாசித்தல்” என்ற மூலத்திலிருந்து வந்தது என்று நம்பப்படுகிறது.8 இதை, ஆரம்பத்தில் பைபிளின் பெரும்பான்மையான பகுதிகளை எழுத உபயோகிக்கப்பட்ட எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் “ஆவி” என்பதற்கான வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. எபிரேய வார்த்தையும் (ரூவா), கிரேக்க வார்த்தையும் (நியூமா) “சுவாசம்” அல்லது “காற்று” என்ற அடிப்படை அர்த்தத்தைக் கொடுக்கிறது. மற்றும் ஆங்கில வார்த்தையாகிய spirit (ஸ்பிரிட்) “சுவாசம்” என்ற அர்த்தமுடைய spiritus (ஸ்பிரிட்டுஸ்) என்ற இலத்தீன் மொழியிலிருந்து வருகிறது.
12 “ஆவி” என்பதற்கான எபிரேய, கிரேக்க மற்றும் ஆங்கில வார்த்தைகள் அநேக விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளின் எல்லா உபயோகங்களிலும் ஒரு காரியத்தைப் பொதுப்படையாகக் கொண்டிருக்கின்றன.9 அவை எல்லாம் சுவாசம் அல்லது காற்று போன்று மனிதனால் காணக்கூடாத மற்றும் இயங்கும் ஒரு விசையைக் குறிப்பதாக இருக்கிறது. தெளிவாகவே, சமஸ்கிருத வார்த்தையாகிய “ஆத்மா,” ஆத்துமா என்பதற்குப் பதிலாக “ஆவி” என்று மொழிபெயர்க்கப்படுவது சரியாக இருக்கிறது. எனவே, “தேவன் ஆவியாயிருக்கிறார்,” என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்படும்போது இவ்வாறு எழுதப்பட்டது: “ஈஷ்வர் ஆத்மா” (யோவான் 4:24) இது ஏனெனில், “ஆவி” மற்றும் “ஆத்மா” குறிப்பதுபோல கடவுள் காணக்கூடாதவராகவும், சக்தி வாய்ந்தவராகவும் இருக்கிறார். ஆனால், கடவுள் உண்மையிலேயே, ஒருபோதும் உடலை நீங்கிய ஆவி அல்ல. கடவுள் எப்பொழுதும் தன்னிறைவான ஆவியாய் இருந்திருக்கிறார், இனிமேலும் எப்பொழுதும் அப்படியே இருப்பார்!
13 பைபிளில் ஆதியாகமம் 2:7-ல் நாம் இந்தக் கூற்றை வாசிக்கிறோம். “மனுஷன் ஜீவாத்துமாவானான்.” இங்கே காணப்படுகிற “ஆத்துமா” என்ற வார்த்தை எபிரேய வார்த்தையாகிய நெபெஷ் என்பதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த எபிரேய வார்த்தை “சுவாசித்தல்” என்று அர்த்தப்படுத்தும் ஒரு மூலத்திலிருந்து வருகிறது. இருந்தபோதிலும், இது “ஓர் உயிருள்ள பிராணியை, ஒரு தனி நபரை, ஓர் ஆளை”க் குறிக்கிறது. இந்த வசனம் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது “ஜீவாத்துமா” என்ற சொற்றொடர் “ச சாத்மபிராணி பபுவா” என்று மொழிபெயர்க்கப்பட்டது. சாத்மபிராணி மூன்று வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது: சா-ஆத்மா-பிராணி.10 சா என்றால் “உடன்”; ஆத்மா11 என்றால் “ஆவி”; மற்றும் பிராணா என்பது “ஜீவன், உயிர், ஜீவசுவாசம்.”12 பிராணி13 என்ற சமஸ்கிருத வார்த்தை, எபிரேய வார்த்தையாகிய நெபெஷ் போன்று “ஓர் உயிருள்ள அல்லது உணர்வு ஆற்றல் உள்ள பிராணி, ஒரு தனிநபர், ஓர் ஆளை,” அர்த்தப்படுத்துகிறது.
14 சமஸ்கிருதத்தில், பிராணி என்பது சொல்லர்த்தமான வகையில், “ஒரு சுவாசிக்கும் ஜீவனைக்”14 குறிப்பிடுகிறது. எபிரேய வார்த்தையாகிய நெபெஷ் என்பதும் அதே முக்கியத்துவத்தை உடையதாய் இருக்கிறது. மிருகங்களும் சுவாசிக்கும் ஜீவன்கள்; அவைகளும் சுவாசிக்கின்றன. ஆகவே சமஸ்கிருத பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் ஆதியாகமம் 2:19-ல் மனிதர்களையல்ல, மிருகங்களைக் குறிக்கும் “ஆத்துமா” என்பதற்கான எபிரேய வார்த்தையாகிய நெபெஷ் என்பதை பிராணே (பிராணி என்பதற்கான பன்மை) என்று மொழிபெயர்த்தனர். இப்படியாக, சமஸ்கிருத பைபிளில் ஆத்துமா என்பதற்கான எபிரேய வார்த்தையாகிய நெபெஷ் மற்றும் கிரேக்க வார்த்தையாகிய சைக்கீ என்பதை மொழிபெயர்க்க பிராண் என்பது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
15 எனவே, “[மனுஷன்] ஜீவாத்துமாவானான்” என்ற சொற்றொடரின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பை (ச சாத்மபிராணி பபுவா) சொல்லர்த்தமாக தமிழில் “[மனுஷன்] உடன் ஆவி ஆத்துமா ஆனான்” என்று மொழிபெயர்க்கலாம். (ஆதியாகமம் 2:7) அது சரியாக இவ்வாறு வாசிக்கப்படலாம்: “[மனுஷன்] ஆவியுள்ள ஆத்துமா ஆனான்” அல்லது “உயிர்ப்பிக்கப்பட்ட ஆத்துமாவானான்”. ஆதியாகமத்திலுள்ள இந்தக் கூற்று பிற்பாடு 1 கொரிந்தியர் 15:45-ல் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. இங்கே, எழுத்தாளர் ஆதியாகமத்தை மேற்கோள் காட்டி சொல்கிறார்: “முந்திய மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான்.” இதன் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கிறது: “புருஷ ஆதாம் ஜீவப்பிராணி பபுவா”. “ஜீவாத்துமா” என்ற சொற்றொடர் ஜீவப்பிராணி என்று காணப்படுகிறது. ஜீவா15 என்ற வார்த்தை “உயிருள்ளது” என்பதைக் குறிக்கிறது. பிராணி என்ற வார்த்தை “ஆத்துமா” என்ற வார்த்தையை மொழிபெயர்க்க உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
16 சில இந்திய மொழிகளில் “ஆத்துமா” மற்றும் “ஆவி” ஆகிய வார்த்தைகளை ஒன்றின் இடத்தில் மற்றொன்றைப் பயன்படுத்துவதன் விளைவாக குழப்பம் உண்டாகிறது.16 பைபிளை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கும்போது, கல்விமான்கள் தாங்கள் ஏற்கெனவே கொண்டிருக்கும் நம்பிக்கைகள் இந்த வார்த்தைகளின் உபயோகத்தை பாதிக்க அனுமதித்தனர்.16 இருந்தபோதிலும், பைபிள் எழுதப்பட்ட மொழிகளிலும், சமஸ்கிருதத்திலும் “ஆத்துமா” (நெபெஷ், பிராண்) மற்றும் “ஆவி” (ரூவா, ஆத்மா) என்ற வார்த்தைகளை ஒன்றன் இடத்தில் மற்றொன்றை பயன்படுத்த முடியாது.a
17 “ஆத்துமா” மற்றும் “ஆவி” ஆகியவற்றைப் பற்றிய உண்மையை அறிய நாம் அவைகளின் இரண்டு வேறுபட்ட அர்த்தங்களையும், அவற்றின் தனிப்பட்ட பிரயோகங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும். ஒரு வித்தியாசம் இருக்கிறது என்பது பைபிளில் எபிரெயர் 4:12-ல் தெளிவாகக் காணப்படுகிறது. அங்கே இவ்வாறு சொல்கிறது: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், ஆத்துமாவையும் (பிராண், சமஸ்கிருதம்) ஆவியையும் (ஆத்மா, சமஸ்கிருதம்) பிரிக்கத்தக்கதாய் இருக்கிறது”. இந்த வித்தியாசம் 1 தெசலோனிக்கேயர் 5:23-லும் காணப்படுகிறது.
18 அப்படியானால், பிராண் அல்லது ஆத்துமா என்றழைக்கப்படுவது என்ன? இது மரணத்திற்குப் பின்னும் உயிர்வாழ்கிறதா? இந்தக் கேள்வி அநேக நூற்றாண்டுகளாக மனிதனை அலைக்கழித்தது. கதா-உபநிஷத்17 இந்து மதத்தினரின் மரண தேவனுக்கும் இளைஞனான நாச்சிகேதனுக்கும் இடையே நடந்த விசித்திரமான உரையாடல் ஒன்றை சொல்கிறது. நாச்சிகேதன் சொல்கிறான்: “சிலர், மரணத்திற்குப்பிறகு ஆத்துமா உயிருடன் வாழ்கிறது என்றும், மற்றவர்கள் அது அப்படியில்லை என்றும் சொல்கிறார்கள். இந்தக் கேள்விக்கான உண்மையான பதிலை நீ எனக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்ற இந்த மூன்றாவது வரத்தை நான் உன்னிடம் கேட்கிறேன்.” இப்படியாக இந்த உபநிஷதம் மரணத்திற்குப்பிறகு உயிர்வாழும் காரியத்தில் சில சந்தேகங்களை எழுப்புகிறது. வேதங்கள் எழுதப்பட்டபின்னும் மரித்தவர்களின் நிலையைப் பற்றியதில் வேறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்கிறது. இந்தப் பொதுவான கேள்விக்கு உபநிஷதம் எவ்வாறு பதிலளிக்கிறது? அது சொன்னது: “இந்த விஷயத்தில் தேவர்களும் முன்பு சந்தேகம் உள்ளவர்களாக இருந்தனர். இது புரிந்துகொள்வதற்கு எளிதல்ல. இந்தப் பொருள் நுணுக்கமானது அந்த வரத்திற்காக என்னை அழுத்திக் கேட்காமல் விட்டுவிடு; வேறொரு வரத்தைத் தெரிவு செய், நாச்சிகேதனே!”18 ஆகவே, இதன் காரணமாக சில மத வகுப்புகளில் இந்தக் கேள்வியைக் குறித்ததில் சந்தேகம் நிலவுகிறது.
19 அநேகர், ஓர் ஆள் மரணத்திற்குப் பிறகும் உயிர்வாழ்தலைத் தீர்மானிக்கப்பட்ட காரியமாக எடுத்துக் கொள்கிறார்கள்.19 ஆனால் சிந்திக்கும் மனிதர்கள் கருத்துக்களை வெறுமனே திணிப்பதில் அக்கறையுள்ளவர்களாக இல்லை. அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க அத்தாட்சியை விரும்புகிறார்கள். சில ஆட்கள் வாழ்க்கை குறுகியதாய் இருப்பதைக் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தங்களுடைய பாதுகாப்பற்ற உணர்வை வெற்றிகொள்வதற்கான ஒருவழியாக, மதவாதிகள் மரணத்திற்குப்பின் உயிர்வாழ்தலை வெறுமென தாங்களே உருவாக்கி கற்பிக்கிறார்கள் என்றும் சிலர் நம்புகிறார்கள். சிலருடைய இருதயமானது மரணம் உயிர்வாழ்க்கையைக் குறுகியதாக்குகிற இந்தக் கருத்தை வெறுக்கிறது,20 இருந்தபோதிலும், கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மனதிற்குத்21 திருப்தியளிப்பதாக இல்லை. மரணத்தில், உண்மையிலேயே என்ன சம்பவிக்கிறது?
மரணத்தின்போது என்ன சம்பவிக்கிறது?
20 பிராண் அல்லது ஆத்துமாவைப்பற்றி பைபிள் அதிக அறிவொளியூட்டுகிறது. அது மரித்தவர்களின் நிலையைக் குறித்து ஆறுதலான, மகிழ்ச்சியூட்டும் தகவல்களைக் கொண்டிருக்கிறது. நம்முடைய அன்பிலிருக்கும் மரித்தவர்களுக்கு நம்பிக்கையும் அளிக்கிறது. மனித ஆத்துமாவைப் பற்றிய பைபிள் விவரம் ஆதியாகமம் 2:7-ல் காணப்படுகிறது. “தேவனாகிய யெகோவா மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் [சாத்மபிராணி, சமஸ்கிருதம்]. மனிதன் ஓர் ஆத்துமாவைப் பெறவில்லை, மாறாக, அவன் ஜீவாத்துமா ஆனான் என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். ஆகவே மனிதன் ஓர் ஆத்துமா. ஆகவே, நீங்கள் ஓர் ஆத்துமாவை உடையவர்களாக இல்லை, மாறாக, நீங்கள் தானே ஓர் ஆத்துமா. ஓர் உயிருள்ள மனித ஆத்துமா இரண்டு இன்றியமையாத பாகங்களைப் பெற்றிருக்கிறது: மாம்ச உடல் மற்றும் உயிர்ச் சக்தி (ஆத்மா). உயிர்ச் சக்தியை உடலிலிருந்து பிரித்தால் அங்கே உயிருள்ள ஆத்துமா இருப்பதில்லை. ஆத்துமா தொடர்ந்து இருப்பதில்லை. மனிதன் இனிமேலும் “ஒரு சுவாசிப்பவனாக” இல்லை; ஆகவே, அவன் இனிமேலும் ஓர் ஆத்துமா அல்ல. இது தண்ணீர் பிராணவாயு மற்றும் நீரக வாயு ஆகியவற்றால் ஆனது போன்றது. இந்த இரண்டு வாயுக்களையும் சரியான அளவில் சேர்க்கும்போது தண்ணீர் உண்டாகிறது. இந்தக் கூட்டுப் பொருளிலிருந்து ஏதாவது ஒரு வாயுவை பிரித்தெடுத்தால் தண்ணீர் தொடர்ந்து இருப்பதில்லை.
21 இவ்விதமாக, மரணத்தில், நீங்கள் ஓர் உடலிலிருந்து நீங்கிய ஆத்துமாவாக இருப்பதில்லை. இல்லை, காரணமென்னவென்றால், உங்கள் மாம்ச உடல் உங்கள் ஆத்துமாவின் ஒரு பாகமாக இருக்கிறது. உடல் மரிக்கும்போது, ஆத்துமா செத்துவிடுகிறது, அது இனிமேலும் தொடர்ந்து இருப்பதில்லை. நீங்கள் உடலைப் பிரிந்த ஆவியாக அல்லது ஆத்மாவாகவும் இல்லை. ஏன் அப்படியில்லை? ஏனென்றால் ஆத்மா என்பது ஆளைக்குறிக்காத ஓர் உயிர்ச்சக்தி, அல்லது ஆவி. அதுவே உயிருள்ள ஆத்துமாவை இயக்குவதாயும், ஆத்துமா சிந்திப்பதற்கும், நடமாடுவதற்கும், உயிர்வாழ்வதற்கும் சக்தியளிக்கிறது. உயிருள்ள ஆத்துமாவுக்குள், உயிர்ச்சக்தி அல்லது ஆத்மா அணைந்துவிடும்போது உண்டாகும் விளைவானது, வெளிச்சம் தரும் விளக்கிலிருந்து மின்சாரத்தை நீக்கிவிடும் போது சம்பவிப்பதற்கு ஒப்பாக இருக்கிறது. வெளிச்சம் அணைந்துவிடுகிறது. வெளிச்சம் எங்கே சென்றது? அது தொடர்ந்து இருப்பதில்லை, அவ்வளவுதான். இந்தக் காரணத்துக்காகவே, மரணம் என்பது ஜீவனுக்கு எதிர்மறையாய் இருக்கிறது. ஆகவே மரணம் ஜீவனைத் தருகின்ற சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படியாமையால் மனிதவர்க்கத்துக்குத் தண்டனையாக வந்தது.
22 ஆகவே, மனித ஆத்துமா என்பது அழியாமையை உடையதல்ல. மாறாக மரணத்திற்கும், அழிவிற்கும் உட்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பைபிள் சொல்வதாவது: “இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே (பிராணி, சமஸ்கிருதம்) சாகும்.” (எசேக்கியேல் 18:4) ஆகவே, மரித்தோரின் நிலைமையானது மனித ரிஷிகளும், மத முனிவர்களும், குருக்களும் அதைப்பற்றி அனுமானமாகச் சொல்வதற்கு மிகவும் வித்தியாசமானதாய் இருக்கிறது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் அதிகாரப்பூர்வமாகக் கூறுகிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”—சங்கீதம் 146:3, 4; பிரசங்கி 9:5, 10.
23 இப்படியாக, மரணம் ஒருவருடைய யோசனைக்கும், உணர்வுக்கும் முழுமையான நிறுத்தத்தைக் கொண்டுவருகிறது என்பதை பைபிள் போதிக்கிறது, மரணமானது செய்கை, வித்தை, அறிவு, ஞானம் ஆகிய செயல்களுக்கு முடிவைக் கொண்டுவருகிறது. மரணம் என்பது இல்லாதிருத்தல். நிச்சயமாகவே, மரணத்திற்குப் பிறகு உயிர்வாழ்க்கை இல்லை! மனித ஆத்துமா மற்றும் மரித்தவர்களின் நிலைமை ஆகியவற்றின் விளக்கம் அநேகருக்கு அதிர்ச்சியைக் கொண்டுவரலாம். ஆனால், பூமியின் வடிவம் உருண்டையானது என்று கண்டுபிடிக்கப்பட்டபோதும் அப்படித்தான் இருந்தது. மனிதவர்க்கம் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டியதாய் இருந்தது. அதேபோலவே, ஜப்பானின் சக்கரவர்த்தி தன்னுடைய மானிடத்தன்மையை ஒப்புக்கொண்டு, தன்னுடைய தேவத்துவத்தைக் கைவிட்டபோது இலட்சக்கணக்கானோரின் கருத்துக்கள் உண்மைக்கு இசைவாய் சரிசெய்யப்படவேண்டியிருந்தது. மேலும், விஞ்ஞானிகள் மனிதனை சந்திரனில் வைத்தபோது, இலட்சக்கணக்கானோர் இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்த தங்கள் கருத்துக்களைத் திருத்தியமைக்க வேண்டியிருந்தது, அதேபோலவே இந்த இருபதாம் நூற்றாண்டிலே பூமி முழுவதிலும் இலட்சக்கணக்கான ஜனங்கள் அழியக்கூடிய ஆத்துமா மற்றும் மரித்தோரின் உணர்வற்ற நிலையைப் பற்றிய பைபிள் உபதேசங்களின் கண்டுபிடிப்புகளுக்கு இசைய தங்கள் நம்பிக்கைகளை ஏற்கெனவே சரிசெய்து கொண்டிருக்கிறார்கள்.
24 ஆனால் மரித்தவர்களைப்பற்றிய இந்த அறிவு எப்படி ஆறுதலையும், உற்சாகத்தையும் அளிக்கிறது? நம் அன்பிற்குரிய மரித்தவர்கள் எங்கேயோ வேதனையை அனுபவித்துக் கொண்டில்லை என்பதை அறிவது உண்மையில் ஆறுதலளிப்பதாக இருக்கிறது. அவர்கள் அரை உயிருள்ள, ஜடத்துவமான ‘நிர்வாணம்’22 என்ற நிலையிலே இல்லை. அவர்கள் இரக்கமற்ற, கருணையற்ற, தொடர்ந்துவரும் மறுபிறப்புகள் அல்லது சம்சாரங்களிலே23 வருத்தப்பட்டுக்கொண்டும் இல்லை. அல்லது, அவர்கள் என்றுமாக அடையாளம் காணப்படாமல், தனி ஆள் தன்மை இல்லாத பரமாத்மன்24 அல்லது உலக ஆவி என்ற தொகுதியைச் சேர்ந்து கொள்ளும்படியாக விமோட்சணம்25 அடைவதுமில்லை. ஆனால், மரித்தவர்கள் மரித்தவர்களே. அவர்கள் தொடர்ந்த உயிர்வாழ்க்கையற்ற நிலையில் இருக்கின்றனர். மேலும், மரித்த அன்புக்குரிவர்களுக்கு ஓர் ஒளிமயமான நம்பிக்கை இருக்கிறது. இதன் காரணமாகவே மேலே சொல்லப்பட்ட மரித்தவர்கள் பற்றிய தகவல்கள் ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருக்கிறது. ஆனால், நாம் இப்பொழுது கேட்கிறோம்: மரித்தவர்களுக்கு மறுபடியும் ஜீவனைப் பெறுதவற்கான என்ன நம்பிக்கை இருக்கிறது? மேலும் உயிரோடிருப்பவர்களுக்கும் என்ன நம்பிக்கை இருக்கிறது?
ஒரு நீதி சம்பந்தமான பிரச்னை
25 பரம்பரை குணாதிசயங்கள் கடத்தப்படுவதனால் உறுதியாக்கப்பட்ட கடவுளுடைய நீதியான கட்டளையினால் நம்முடைய மனித இனம் பாவத்திற்கும் மரணத்திற்கும் உட்படுத்தப்பட்டதை நீங்கள் நினைவுகூருங்கள். ஆகவே இந்தப் பிரச்னை எழும்புகிறது: நியாயாதிபதியாய் இருக்கும் கடவுள் உண்மையான நீதியை மீறாமல் தன்னுடைய கட்டளைக்கு அல்லது தீர்மானத்திற்குக் கனம் கொடுப்பதையும், அதே சமயத்தில் நம்முடைய இனத்தைப் பாவத்தினின்றும், மரணத்தினின்றும் மீட்பதையும் எப்படிச் செய்வார்? சட்டத்தை மீறுபவர் மரணத்தினால் தண்டிக்கப்படவேண்டும் என்பதை தெய்வீக சட்டமும் நீதியும் வற்புறுத்துவதால் நீதியை மீறாமல் எவ்வாறு பாவிகள் விடுதலையாக்கப்படவும், மரணம் நீக்கப்படவும் கூடும்? கடவுள் அன்பிலும், இரக்கத்திலும் பரிபூரணராக இருப்பது மட்டுமல்லாமல் நீதியிலும் பரிபூரணராக இருக்கிறார். கடவுள் நியாயமற்றவர் அல்ல. தன்னுடைய வார்த்தையை உயர்த்திக் காண்பிக்கவும், கடவுளும் பேரரசருமாக இருக்கும் தன்னுடைய நிலையைக் காத்துக் கொள்ளவும், மீறக்கூடாத தன்னுடைய சொந்த சட்டத்தைக் கடவுள் அசட்டை செய்யமாட்டார்.
26 அளிப்பவரும், தன்னுடைய தீர்மானத்தை நிறைவேற்றுபவருமாகிய கடவுள் சர்வலோக நியாயாதிபதி என்ற தன்னுடைய நிலையைக் காத்துக் கொள்ளும் தீர்மானத்திற்கு இசைய செயல்படவேண்டும். ஒரு நீதியான அடிப்படையின்மேல் இல்லாமல் சட்டத்தை மீறும் ஒரு நபருக்கு இரக்கம் அளிப்பது நீதியைப் புரட்டுவதாக இருக்கும். நீதி உண்மையானதாக இருக்கவேண்டுமானால் பாவிகளுக்கான தெய்வீக இரக்கம் சட்டபூர்வமானதாக இருக்கவேண்டும். ஆகவே, பாவிகள் விடுதலையாக்கப்பட்டு உண்மையான ஜீவனை மறுபடியும் பெறுவதற்குத் திருப்திகரமான ஈடு அல்லது சரிசமமான மீட்கும் பொருள் கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். (1 தீமோத்தேயு 2:5, 6) இவ்விதமாக, கடவுள் முழு பிரபஞ்சத்தின் மரியாதையையும், கீழ்ப்படிதலையும் தொடர்ந்து பெற்றுக்கொள்வார்.
27 நம் எல்லோருக்கும் முற்பிதாவாகிய ஆதாம் தெரிந்து கொள்ளும் சுயாதீனத்தை சுயநலமாகப் பயன்படுத்துவதற்கு மாற்றீடாக தன்னுடைய சொந்த பரிபூரண மானிட ஜீவனையும், நித்திய ஜீவனுக்கான உரிமையையும் பறிகொடுத்தான். இப்படிச் செய்ததினால் நம்மையும் சேர்த்துத் தன்னுடைய எதிர்கால சந்ததி எல்லாரையும் பாவத்திற்கும் மரணத்திற்கும் விற்றுவிட்டான். நம்முடைய முதல் முற்பிதா நித்திய ஜீவனைப் பறிகொடுத்ததால் நம்முடைய நித்திய ஜீவனுக்கான வாய்ப்பையும் இழந்தோம். உதாரணமாக விளக்குவோமேயானால், ஒரு தகப்பன் குடும்பத்தின் தங்க நகைகளை ஒரு வட்டிக்குக் கடன் கொடுப்பவருக்கோ அல்லது வங்கிக்கோ பறிகொடுத்ததன் காரணமாக தன்னுடைய குடும்பம் துக்ககரமான சூழ்நிலைக்கு விழுந்ததற்கு ஓரளவு ஒப்பாக இருக்கிறது. இப்பொழுது அந்தக் குடும்பம் அதன் தங்க நகைகள் இல்லாமல் வாழ்க்கை நடத்துகிறது. அதன் சந்ததியும் அதைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆனால் பிற்பாடு அந்தச் சந்ததி அந்த வட்டிக்குக் கடன் கொடுப்பவர் நீதியைச் சரிக்கட்ட போதுமானதாக கருதும் ஒரு மீட்கும் விலையை அவருக்குக் கொடுப்பதன் மூலம் தங்களுடைய குடும்பத்தின் தங்க நகைகளை அந்த வட்டிக்குப் பணம் கொடுப்பவரிடமிருந்து மீட்டுக்கொள்ள முடிகிறது.
28 அதுபோலவே, நீதியை நிறைவேற்ற, மனிதவர்க்கத்தைப் பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் மீட்டுக்கொண்டு அவர்களுடைய பிறப்புரிமையை மீண்டும் நிலைநாட்ட அவர்களுக்கு ஒரு மீட்பு, அல்லது, விலைமதிப்பு தேவையானது. ரிக்வேதத்தில் பலிகள் அழுத்திக் காண்பிக்கப்படுவது முற்பிதாக்களின் பலியிடும் பழக்கங்களின் நினைவுகளில் வேரூன்றியதாக இருக்கலாம். (ஆதியாகமம் 4:4; 8:20-ஐ ஒப்பிடவும்) வேதக் காலங்களில் குதிரைகள், எருதுகள், வெள்ளாடுகள், மற்றும் செம்மறியாடுகள் ஆகியவை பலியிடப்பட்டன என்று Indian Wisdom (இந்திய ஞானம்) என்ற புத்தகம் காட்டுகிறது. அது மேலும் சொல்வதாவது; “அத்தகைய பலிகள் கருணையைப் பெறுவதற்கானது.”26 தேவர்களோடு ஒரு நல்ல நிலைநிற்கையைப் பெறுவதற்கு உயிர்களின் இரத்தம் பலியிடப்படவேண்டும் என்பதைப் பூர்வ இந்துக்கள் எப்படியோ உணர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
29 இருந்தபோதிலும், பூர்வ வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டார்: “காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமாட்டாதே.” (எபிரெயர் 10:4) தேவையான விலைமதிப்பு முற்பிதாவாகிய ஆதாம் கீழ்ப்படியாத வாழ்க்கைக்கு மாற்றீடாக பறிகொடுத்த பரிபூரண ஜீவனுக்குச் சரிசமமாக இருக்கும் ஒரு பரிபூரண ஜீவன். இந்த ஒரே மீட்கும் பொருளின் மதிப்புதானே கடவுளுடைய பரிபூரண நீதியைத் திருப்தி செய்வதாய் இருக்கும். ஆனால் மனிதர்களான நாம் அத்தகைய பெரிய விலைமதிப்பை அளிக்கும் நிலையில் இருக்கிறோமா? நம்மை நம்முடைய பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையாக்கிக் கொள்வதற்கான மீட்கும் விலைமதிப்பை நம்மால் அளிக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்வதை நேர்மை வற்புறுத்துகிறது. ஒரு நேர்மையுள்ள பைபிள் எழுத்தாளன் ஒப்புக்கொண்டதாவது: “ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக் கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும் பொருளை தேவனுக்குக் கொடுக்கவும் கூடாதே.”—சங்கீதம் 49:7, 8.
கடவுளுடைய அன்பு உதவிக்கு வருகிறது
30 மனிதவர்க்கத்தின் உதவியற்ற நிலையை அறிந்தவராய் கடவுள் தன்னுடைய ஆச்சரியப்படத்தக்க அன்பினால் நம்முடைய உதவிக்கு வந்தார். தேவையான கிரயத்தைக் கடவுள் தன்னுடைய பரிபூரண ஆவிக்குமாரர்களிடையே தயார் செய்தார். பைபிள் சொல்கிறது: “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) நம்முடைய பரிபூரண மானிட முற்பிதாவுக்குச் சரிசமமான கிரயமாக இருப்பதற்கு இந்த ஆவிக்குமாரன் மனிதனாக வேண்டியிருந்தது. ஓர் ஆவி மறு உருவம் அல்லது அவதாரம் நம்முடைய மனித மூதாதைக்குச் சரிசமமான மதிப்புள்ளதாய் இருக்க முடியாது. ஆகவே மனித இனத்தின் ஒருவராய் ஒரு பரிபூரண மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவராய்—கூடுதலாகவும் குறைவாகவும் இல்லாமல்—இருப்பதற்குக் கடவுளுடைய ஒரே பேறான ஆவிக்குமாரன் தன்னுடைய ஆவி உருவத்தைக் களைந்துவிட்டு நம்முடைய மனித இனத்தில் அதிசயமான விதத்தில் பிறக்க வேண்டியிருந்தது மிகவும் சரியானதே. பைபிள் அதை இவ்வாறு சொல்கிறது: “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்—கலாத்தியர் 4:4, 5.
31 ஸ்திரீயினிடத்தில் பிறந்த பரிபூரண மனிதனாக இருப்பதால் மீட்கும் பொருள் மதிப்பை அளிக்கக்கூடிய அல்லது மனிதவர்க்கத்தைப் பாவத்தினின்றும் மரணத்தினின்றும் மீட்டுக்கொள்ளக்கூடிய கடவுளுடைய ஆவிக்குரிய குமாரன் யார்? மனித சரித்திரத்தினூடே அநேக மனிதர்கள் தங்களைப் பரிசுத்தவான்களாகவும், ரிஷிகளாகவும், ஸ்வாமிகளாகவும், உலக குருக்களாகவும், புனித மனிதர்களாகவும், தெய்வமனிதர்களாகவும், சீர்திருத்தவாதிகளாகவும் உரிமை பாராட்டி வந்தனர். ஆனால் அவர்களில் ஒருவரும் தங்களை ஒரு மீட்பராகவோ, மீட்கும் பொருளைக் கொடுப்பவராகவோ உரிமைப் பாராட்டவில்லை. அவர்களில் ஒருவரும் மீட்டுக்கொள்ளுதல் என்ற மதக் கோட்பாட்டை அறிந்தவர்களாகவோ, புரிந்துகொண்டவர்களாகவோ தோன்றுவது இல்லை. மதத்தின் சரித்திரத்திலேயே ஓர் ஆவிக்குரிய குருதான் மனிதவர்க்கத்தைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்பவராக உரிமை பாராட்டினார். “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்,” என்று சொன்னதும் அவர்தான்.—மத்தேயு 20:28.
32 இவரை அடையாளம் காட்டுகையில் கடவுளுடைய வார்த்தை கூறுவதாவது: “தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.” (எபிரெயர் 2:9) இதன் காரணமாகவே, இயேசு கிறிஸ்துவின் மரணம் சாதாரண மரணம் அல்ல—அது ஒரு பலி. நம்முடைய மனிதவர்க்கத்தின் ஜீவ உரிமைகளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கிறிஸ்து தன்னுடைய பரிபூரண மனித ஜீவனையும் மற்றும் பூமிக்குரிய எதிர்பார்ப்புகளையும் இழந்தார். இப்படியாக, தன்னுடைய பூமிக்குரிய ஊழியத்தினாலும் பலியாகிய மரணத்தினாலும் கிறிஸ்து இயேசு மனிதவர்க்கத்தின் மீட்பர் ஆனார். ஆகவே, இவ்வாறு எழுதப்பட்டது: “ஆனாலும் மீறுதலின் பலன் கிருபைவரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே (ஆதாமுடைய பாவம்) அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர் மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே நீதியினாலே (கிறிஸ்துவின் பலி) எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.”—ரோமர் 5:15, 18.
33 ஒரு காலரா கொள்ளைநோய் ஒரே ஒரு நோய்ப்பட்டவரிடமிருந்து ஒரு கிராமம் முழுவதுமாக தீவிரித்து பரவுகிறது போலவும், ஒரே ஒரு வைத்தியனின் மருந்து மூலமாக அதே கிராமத்திலுள்ள அநேகருக்கு ஆரோக்கியம் வருகிறது போலவும், ஒரே மனிதனின் பரம்பரையில் வந்த இலட்சக்கணக்கான பாவிகளுக்கு மீட்பு கொண்டுவருவதற்குக் கடவுளுடைய பரிபூரண நீதி ஒரே ஒரு சரிசமமான மீட்கும் பொருள் மதிப்பை அனுமதிக்கிறது.—1 தீமோத்தேயு 2:5, 6, ஒப்பிடுங்கள்.
34 நம்முடைய இனத்தின் ஜீவனுக்கான உரிமைகளை வாங்குவதற்கான விலைமதிப்பாகிய தன்னுடைய மானிட பலியின் மதிப்பைப் பரலோகத்திலுள்ள கடவுளுக்கு முன்பாக அளிப்பதற்கு ஏதுவாக கடவுள் தம்முடைய குமாரனுக்கு ஆவிக்குரிய ஜீவனை மறுபடியும் தந்து பலனளித்தார். இப்படிச் செய்வதன் மூலம் ஆதாமுடைய சந்ததிக்கு மறுபடியும் ஜீவனுக்கான உரிமையைக் கொடுப்பதற்குக் கடவுள் ஒரு நீதியான ஆதாரத்தை உடையவராய் இருந்தார். பைபிள் சொல்கிறது: “ஏனெனில் கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.” (1 பேதுரு 3:18) மிகவும் முக்கியமாக இந்த மகத்தான நிறைவேற்றமானது கடவுளுடைய ஆரம்ப சிருஷ்டிப்பு வேலையையும், அவருடைய வார்த்தையையும், அவருடைய நீதியையும் நிலைநிறுத்துகிறது.
மரணத்தின் மேல் வெற்றி கொள்ளுதல்
35 இந்த ஜீவ உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ள நாம் விரும்புகிறோமா? அப்படி விரும்பினால் நாம் எதை செய்ய வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டின் பெரிய சர்வதேசீய கூட்டம் இப்பொழுது செய்துவருவதுபோல கடவுளுக்கும் அவருடைய ஒரே பேறான குமாரனுக்கும் அவர்களுடைய தன்னையே அர்ப்பணிக்கும் அன்பிற்கும் தகுதியற்ற கிருபைக்கும் நாம் நன்றியுணர்வை வெளிக்காட்ட வேண்டும். பைபிள் அவர்களை இவ்வாறு வருணிக்கிறது: “ இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு (இயேசு கிறிஸ்து) முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9, 10) இருபதாம் நூற்றாண்டின் வரலாற்று உண்மைகள், குறிப்பாக 1935-வது ஆண்டிலிருந்து, நன்றியுணர்வுள்ள இந்தச் சர்வதேசீய திரள்கூட்டம் இன்றைக்குப் பூமியின் எல்லா கண்டங்களிலும் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆனால் நாம் இந்த நன்றியை எப்படி வெளிக்காட்டலாம்?
36 நாம் பரலோகத்தின் கடவுளை அடையாளம் கண்டுகொள்வதும், அவரை எப்படி வணங்கவேண்டும் என்பதை கற்றுக் கொள்வதும், தேவையாய் இருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக பூர்வகால தீர்க்கதரிசியாகிய மோசே கடவுளைக் காணவேண்டும் என்று ஞானமற்ற விதமாக கேட்டான். அதன் விளைவு என்ன? நாம் வாசிக்கிறோம்: “‘உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்.’ ஆனால் அவர் சொன்னது: ‘என்னுடைய தயையையெல்லாம் உனக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணி, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்’ . . . மேலும் அவர் சொன்னது: ‘நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டும் உயிரோடிருக்கக்கூடாது’” “யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார். யெகோவா அவனுக்கு முன்பாகக் கடந்து போகிறபோது, அவர்: ‘யெகோவா, யெகோவா, இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகாதயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியை குற்றமற்றவனாக விடாதவர்.’”—யாத்திராகமம் 33:18-20; 34:5-7, NW.
37 காணக்கூடாத கடவுள் இப்படிப்பட்ட அழகிய வருணிப்புக்கு ஒப்பானவராக இருப்பதைத்தானே நாம் எதிர்பார்க்கிறோம்? நாம் பாராட்டவும், தொழவும் கூடியவராய் இருப்பது இப்படிப்பட்ட கடவுள்தான். ஆனால் நாம் யெகோவாவை எப்படித் தொழுதுகொள்ள வேண்டும்? நாம் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். பைபிள் சொல்வதாவது: “உண்மையாய் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும் காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:23, 24) கடவுளை ஆவியோடு தொழுதுகொள்ள வேண்டும் என்பது இடங்கள், பொருட்கள், கட்டடங்கள் ஆகியவற்றைப் புனிதப்படுத்துதலும், கடவுளுக்கு உருவம் அமைத்தலும் விலக்கப்படவேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது, உண்மைதானே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பிதாவாகிய யெகோவாவை உண்மையோடு தொழுதுகொள்வது என்பது நம்முடைய மதப் பழக்கங்கள், நம்பிக்கைகள், மேலும் போதனைகள் ஆகியவை கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களின் உண்மையான நிலைக்கு, காரியங்களின் யதார்த்தமான உண்மைக்கு இசைவாயிருக்க வேண்டும். கடவுளின் சார்பாக பேசும் முக்கிய பிரதிநிதி பிதாவுடன் ஜெபத்தில் பேசினார்: “உம்முடைய வார்த்தை சத்தியம்”—யோவான் 17:17; அப்போஸ்தலர் 17:24, 25-ஐ ஒப்பிடவும்.
38 யெகோவா மெய்க் கடவுள் என்றால், இயேசு கிறிஸ்து யார்? யூதர்களுக்குக் கிறிஸ்து ஓர் இடறலாக இருந்தார். யூதரல்லாதவர்களுக்குக் கிறிஸ்து பைத்தியமாக இருந்தார். பைபிள் கூறுகிறது: “நாங்களோ கழுமரத்தில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.” (1 கொரிந்தியர் 1:23) யூதர்கள் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம் அவருடைய வாழ்க்கை முறையும், அவருடைய மரணமும் அவர்களுடைய தேசீய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தியாக்கவில்லை. மானிட ஊகத்தின் மூலம் கடவுளைத் தேடிய யூதரல்லாத மற்ற ஜாதிகளுக்குக் கிறிஸ்துவின் வாழ்க்கை முறையும் மரணமும் முற்றிலும் புரியவில்லை. அவருடைய மரணம் முற்றிலும் வீணானதாகவும், தேவையற்றதாகவும் தோன்றியது. கிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்டதும், நிறைவேற்றப்பட்டதுமாகிய கடவுளாகிய யெகோவாவின் சித்தமும் நோக்கமும் மானிட ஊகங்களுக்கும், மதிப்புகளுக்கும் அதிசயமான மாறுபாட்டை உடையதாய் இருப்பதால் பைத்தியமாகக் காணப்பட்டது.
39 இன்றைக்கும் கூட இலட்சக்கணக்கான ஜனங்கள் கிறிஸ்து இயேசுவில் இடறி விழுகிறார்கள். அவர்களுடைய கணிப்பில் கிறிஸ்து பைத்தியம். நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி அப்படித்தான் உணருகிறீர்களா? மாறாக, இன்று இலட்சக்கணக்கானவர்கள் இயேசு கிறிஸ்துவின் உண்மையான மதிப்பிலே தங்களுக்குள் திருப்தியடைந்திருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்து சர்வ வல்லமையுள்ள கடவுளாக இல்லை, ஆனால் யெகோவாவின் குமாரனாக இருக்கிறார் என்பதை அடையாளங் கண்டுகொள்ளுகிறார்கள். யெகோவாவுடைய சிருஷ்டிகளிலே கிறிஸ்து முதற்பேறானவர் மற்றும் கடவுள் அவரை மற்ற சிருஷ்டிகளுக்கும் வார்த்தையாக அல்லது அவர் சார்பாக பேசுபவராக ஆக்கினார். ஆகவே நாம் வாசிக்கிறோம்: “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.” (யோவான் 1:1-3) இப்படியாக இயேசு கிறிஸ்து மனிதனாக வாழ்வதற்கு முன்னால் கடவுளுடைய “திறமையுள்ள ஊழியராகவும்,” கடவுளுடைய குரல் அல்லது அவர் சார்பாக பேசுபவராகவும் இரண்டு பாகங்களை நிறைவு செய்தார்.—நீதிமொழிகள் 8:22, 30-ஐ ஒப்பிடவும்; கொலோசெயர் 1:15, 16.
40 தன்னுடைய சொந்த மானிட பலியின் மேலும் அதனுடைய ஜீவனைத் திரும்ப அளிக்கும் நன்மைகளின் மேலும் அதிகாரமுடையவராக கிறிஸ்து பரலோகத்தின் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்பாக பிரதான ஆசாரியராக இருக்கிறார். நாம் வாசிக்கிறோம்: “கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.” மேலும், அதன் காரணமாக, ஜீவனை அளிக்க கடவுளுடைய பிரதான பிரதிநிதியாக இருக்கிறார். ஒரு போதகரின் பாகத்தில், இயேசு, கடவுளாகிய யெகோவாவின் எல்லா உண்மை வணக்கத்தாரின் குருவாக இருக்கிறார்: “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார். நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.”—எபிரெயர் 9:11, 12; மத்தேயு 23:8; அப்போஸ்தலர் 3:15-ஐ ஒப்பிடவும்.
41 ஆகவே, இயேசு கிறிஸ்து வெறும் ஒரு மதசீர்திருத்தவாதி என்பதைக் காட்டிலும் அதிகத்திற்கு தகுதியுடையவர். முக்கியமாக, இந்தப் பொல்லாத காரிய ஒழுங்கைச் சீர்த்திருத்த முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். இந்தக் காரணத்திற்காகவே, இயேசு, உலக மதமாற்றத்தையல்ல, மிகுந்த உபத்திரவத்தைப் பிரசங்கித்தார். அவர் சொன்னார்: “ஏனெனில், உலகமுண்டானது முதல் இது வரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.” (மத்தேயு 24:21, 22) அந்த ‘மிகுந்த உபத்திரவம்’ பொல்லாதவர்களை அழித்து எல்லா சிருஷ்டிக்கு முன்பாகவும் யெகோவாவுடைய நீதியை நிலைநிறுத்தும். என்றபோதிலும் இயேசுவின் வார்த்தைகள் ‘சிலர் தப்புவிக்கப்படுவார்கள்’ என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது. இது ஏனெனில், கிறிஸ்து செம்மையான இருதயமுள்ளவர்களை நேசிக்கிறார். அதனால்தான் அவர், அவர்களுக்காக மரித்தார். நாம் இயேசுவின் ஆள்தன்மையை இந்த வார்த்தைகளிலே சற்று காண முடிகிறது: “பின்பு இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி அவர்களை சொஸ்தமாக்கினார். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள்மேல் மனதுருகினார்.”—மத்தேயு 9:35, 36.
42 நம்முடைய இருபதாம் நூற்றாண்டிலுங்கூட அநேக ஜனங்கள் “மேய்ப்பனில்லாத ஆடுகள் போலத் தொய்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருக்கிறார்கள். இயேசு அதே அனுதாபத்தை அவர்களிடம் கொண்டிருக்கிறார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். ஆகவேதான் தன்னையே அர்ப்பணிக்கும் குமாரன் மூலமாக கடவுளுடைய ராஜ்யம் வெகு சீக்கிரத்தில் அதன் தயையுள்ள ஆட்சியை “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப் பிழைக்கும் உண்மையுள்ள ஆட்கள் மீது செலுத்தும். கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்தது: “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்.”—ஏசாயா 32:1.
43 கடவுளுடைய ராஜ்யம் என்பது இயேசு கிறிஸ்துவின் தலைமையின் கீழ், நன்கு பரிசோதிக்கப்பட்ட, உண்மையுள்ள, உத்தமத்தைக் காத்துக் கொள்ளும் ஆட்களின் ஒரு குழு அமைக்கும் ஒரு பரலோக அரசாங்கம். இது பூமி முழுவதிலும் தன்னுடைய அரசுரிமையைச் செயல்படுத்தும் கடவுளுடைய பரலோக ராஜ்யம். (வெளிப்படுத்துதல் 5:10) இன்றைக்கு ஜனங்கள் வேலைவாய்ப்புகளுக்கும், வீட்டு வசதிகளுக்கும், உடல் ஆரோக்கிய நன்மைகளுக்கும் தங்களுடைய மனித அரசாங்கங்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். மேலும் அநேக அரசாங்கங்கள் தங்களுடைய குடிமக்களுக்கு இந்த நன்மைகளை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடர்ச்சியான ஐந்தாண்டு திட்டங்களை வகுக்கின்றன. ஆனால் அவைகள் தங்களுடைய மரித்தவர்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையையும் அளிப்பதில்லை. மேலும் முந்தின அரசாங்கங்களின் வரலாற்று அனுபவங்கள், தங்களுடைய உயிரோடிருப்பவர்களுக்கான திட்டங்களின் முழு வெற்றிக்கான வாய்ப்புகளுக்கும் சாதகமாக இல்லை.
44 ஆயினும் கடவுளுடைய ராஜ்யம், தொடர்ச்சியான ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக அல்ல, மாறாக, ஆயிரம் ஆண்டு திட்டத்தின் மூலமாக, “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” செய்யும். எனவே நாம் வாசிக்கிறோம்: “அன்றியும் நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின் மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது . . . அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.” (எபேசியர் 3:20; வெளிப்படுத்துதல் 20:4) ஆயிர வருட அரசாட்சியின்போது கடவுளுடைய ராஜ-ஆசாரியர் பூமியின் சந்தோஷமான ஜனங்களுக்குத் தன்னுடைய கிரய பலியின் நன்மைகளைப் பிரயோகிப்பார். பாவமும் அதனுடைய தீங்கான விளைவுகளுமாகிய நோய், அபூரணம் மற்றும் வயோதிபம் ஆகியவை மாம்ச உடல்களிலிருந்து நீக்கப்பட்டுவிடும். ஆகவே மனிதர்கள் மரணத்தின் மேல் வெற்றி பெறுதவற்குக் கடவுளுடைய ராஜ்யமே அவருடைய கருவியாக இருக்கிறது.
45 இந்த வாக்குறுதிகளுக்குக் கடவுள் தாமே கொடுக்கிற உத்தரவாதங்கள் சிலவற்றை நாம் சேர்ந்து வாசிக்கலாம்: “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தை யெகோவா எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.” “என் ஆத்துமாவே, யெகோவாவை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினாலே உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது வாலவயது போலாகிறது.”—சங்கீதம் 32:1, 2; 103:2-5, NW.
46 “‘அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; அவன் தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.’ அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன் மேல் பிரியமாகி அந்த மனுஷனிடமாக அவருடைய நீதியை திரும்பவும் நிலைநிறுத்துவார்.” (யோபு 33:25, 26, NW) இன்னும் சொல்வதானால், கிறிஸ்துவினுடைய ஆயிரம் வருட அரசாட்சி நம்முடைய தற்போதைய சந்ததியின் வாழ்நாட்காலத்திற்குள்ளாகவே ஆரம்பமாகும் என்பதை எல்லா அத்தாட்சிகளும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன!b
47 மனிதவர்க்கத்தின் உலகத்திற்கு கிறிஸ்துவின் கிரயபலியின் மதிப்பைப் பிரயோகிப்பதற்கு ஞாபகார்த்த கல்லறைகளிலிருந்து மரித்த ஆத்துமாக்கள் மறுபடியும் உயிர்பெற்று வரவேண்டும். ஆகவே கிறிஸ்துவின் மூலமாக செயல்படும் கடவுளுடைய ராஜ்யம் மரித்த இலட்சக்கணக்கான மனிதர்களை உயிர்த்தெழுப்புவதை நிறைவேற்றும். கடவுளுடைய வார்த்தை அதையே உறுதியளிக்கிறது. “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:13) இது எப்படிச் செய்யப்படக்கூடும்? சிருஷ்டிகர் புதிய மானிட மாம்ச அங்க ஜீவிகளை மறுபடியும் பூமியின் தூளிலிருந்து சிருஷ்டித்து, புதிய மூளை இணைப்பு நரம்புகளின் மீது தன்னுடைய பூரண ஞாபக சக்தியினால் நினைவுகூரப்பட்ட பழைய வாழ்க்கை மாதிரிபடிவங்களைப் பதியவைத்து ஒவ்வொரு அங்கஜீவியிலும் உயிர்சக்தியை அல்லது ஆத்மாவைச் செலுத்துவார். பிறகு, இந்த மறுபடியும் சிருஷ்டிக்கப்பட்ட உயிர்வாழும் ஆத்துமாக்கள் அல்லது ஜீவாப்பிராணே பூமியில் மறுபடியும் வாழும். என்னே ஒரு மிகப் பெரிய அதிசயம்! இதை யெகோவா மட்டுமே நீதியான மீட்கும்பொருள் ஏற்பாட்டின் மூலமாக செய்ய முடியும். நேசிக்கப்பட்ட மரித்தவர்களின் எதிர்கால ஜீவன் காணக்கூடாத ஓர் அழியாத ஆத்துமாவைச் சார்ந்து அல்ல, மாறாக, கடவுளாகிய யெகோவாவின் தவறாத அன்பு மற்றும் ஞாபகத்தின்மேல் சார்ந்திருக்கிறது என்பதற்கும் இதுவே காரணமாய் இருக்கிறது. உண்மையில், “எல்லாச் சத்துருக்களையும் தனது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும் வரைக்கும், அவர் (கிறிஸ்து) ஆளுகை செய்யவேண்டியது. பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம்.” (1 கொரிந்தியர் 15:25, 26) மரணம் மறுபடியும் ஒருபோதும் கடவுளின் மானிட சிருஷ்டியின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
48 என்ன ஒரு மகத்தான நம்பிக்கை! எவ்வளவு திருப்தியாக இருக்கிறது! அந்த எண்ணமே மனிதவர்க்கத்தின் இருதயங்களுக்கு அனலூட்டுவதாக இருக்கிறது. நிச்சயமாகவே, மரணத்தின் மேல் வெற்றி கொள்வது உங்களுக்குச் சாத்தியமாகும்! நீங்கள் அதைத் தெரிந்து கொள்வீர்களா? நம்முடைய முதல் முற்பிதாவின் தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தை மதித்ததுபோல கடவுள் உங்களுடைய தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தையும் மதிக்கிறார். ஆனால் நீங்கள் ஞானமான தெரிந்தெடுத்தலைச் செய்ய நாங்கள் ஜெபிக்கிறோம். வெற்றி கொண்டதனால் களிப்போடு, “மரணமே உன் வெற்றி எங்கே? மரணமே உன் கூர் எங்கே?” என்று சத்தமிடும் எதிர்காலத்தில் சந்தோஷமாக இருக்கும் ஆட்களில் ஒருவராக நீங்களும் இருப்பீர்களாக.—1 கொரிந்தியர் 15:55, NW.
புத்தகப் பட்டியல்
1. The Hymns of the Rigveda by Ralph T. H. Griffith [ரிக் வேதக் கீதங்கள், 1896-ல் ரால்ப் T. H. கிரிபித் எழுதியது. 1973-ல் J. L. சாஸ்திரி திருத்திய பதிப்பு. மறு அச்சுப் பதிப்பு: 1976-ல் நியு டெல்லியைச் சேர்ந்த மோத்திலால் பனார்ஸிதாஸ். (ரிக் வேதத்தின் இந்தப் பதிப்புதான் இச்சிறுபுத்தகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.)]
2. A Dictionary of Hinduism, by Margaret and James Stutley (ஓர் இந்துமத அகராதி, மார்க்ரட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி எழுதியது), பக்கம் 346, அல்லீட் பப்ளிஷர்ஸ், 1977.
3. மேற்கண்ட பிரசுரம், பக்கம் 324.
4. மேற்கண்ட பிரசுரம், பக்கம் 194.
5. The Journey With Death by Rohit Mehta (மரணத்துடன் பயணம், ரோஹிட் மேத்தா எழுதியது), பக்கம் 7. மோத்திலால் பனார்ஸிதாஸ், டெல்லி, 1977.
6. ஓர் இந்துமத அகராதி, பக்கம் 209 குறிப்பிடுவதாவது: “நிமித்தஞானா ‘Knowledge of Omens’” ‘நிமித்த ஞானம்’ என்பது குறிசொல்வது பற்றிய அறிவு.
7. Hindu Religion, Customs and Manners by P. Thomas (இந்து மதம், பழக்கவழக்கங்களும் பாவனைகளும், P. தாமஸ் எழுதியது), பக்கம் 76, 77, D. B. தராப்போர்வாலா சன்ஸ் & கோ. பம்பாய், 1956 குறிப்பிடுவதாவது: “கெளலி சாஸ்திரா அல்லது பல்லி சாஸ்திர ஞானம்.”
8. A Sanskrit–English Dictionary by Sir M. Monier Williams (ஒரு சமஸ்கிருத—ஆங்கில அகராதி, சர் M. மானியர் வில்லியம்ஸ் தயாரித்தது) பக்கம் 135, முதல் பதிப்பு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 1899. மோத்திலால் பனார்ஸிதாஸ், டெல்லி, 1976 மறு அச்சுப்பதிப்பு. ஓர் இந்துமத அகராதி, பக்கம் 31.
9. Aid to Bible Understanding by Watch Tower Society (பைபிளைப் புரிந்து கொள்வதற்கு உதவி, உவாட்ச் டவர் சொஸையட்டி தயாரித்தது), 1971, பக்கம் 1542.
10. ஒரு சமஸ்கிருத—ஆங்கில அகராதி, பக்கம் 1200.
11. மேற்கண்ட பிரசுரம், பக்கம் 135
12. மேற்கண்ட பிரசுரம், பக்கம் 705
13. மேற்கண்ட பிரசுரம், பக்கம் 706
14. பைபிளைப் புரிந்து கொள்வதற்கு உதவி, பக்கம் 1533.
15. ஒரு சமஸ்கிருத—ஆங்கில அகராதி, பக்கம் 422.
16. இந்திய மொழி பைபிள்களில் “ஆத்துமா” மற்றும் “ஆவி” என்ற பதத்தின் உபயோகத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் கீழ்க்காணும் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் சில எடுத்துக்காட்டுகளால் விளக்கப்படுகிறது:
வசனம் மூல சமஸ் ஹிந் பெங் மராத் குஜ மலை
ஆதி. 1:2 ருவாக் ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மாவு
ஆதி. 2:7 நெபெஷ் பிராணி பிராணி பிராணி பிராணி பிராணி தேஹி
மத். 2:20 சைக்கீ பிராணா பிராணா பிராண் ஜீவா ஜீவா பிராணன்
யோ. 4:24 நியூமா ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மாவு
1தெச. 5:23 நியூமா ஆத்மன் ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மாவு
1 தெச.5:23 சைக்கீ பிராணி பிராணா பிரான் ஜீவா பிரான் பிராணன்
எபி. 4:12 சைக்கீ பிராணி ஜீவா பிரான் ஜீவா ஜீவா பிராணன்
எபி. 4:12 நியூமா ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மா ஆத்மாவு
மேற்கண்ட பட்டியலில் மொழி சுருக்கத்திற்கு விளக்கம்:
மூல = மூல மொழி பெங் = பெங்காலி குஜ = குஜராத்தி
சமஸ் = சமஸ்கிருதம் மராத் = மராத்தி மலை = மலையாளம்
ஹிந் = ஹிந்தி
தமிழ் மொழி பைபிளில் சைக்கீ (psy-khe’) என்ற பதத்திற்குரிய மொழிபெயர்ப்பு குறைந்த பட்சம் ஏழு வித்தியாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறது, இவற்றில் ஐந்து சமஸ்கிருதத்திலிருந்து வந்த வார்த்தைகள். சைக்கீ 102 முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்க, தமிழ் பைபிள் பின்வரும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது:
ஆத்துமா (சமஸ்கிருதம்: “ஆவி, உள்ளபொருள்”) 36 முறை
ஜீவன் (சமஸ்கிருதம்: “உயிர், உயிரோடிருத்தல்”) 32 முறை
மனம் (சமஸ்கிருதம்: “எண்ணம், யோசனை, மனது, இருதயம்”) 9 முறை
மனுஷன் (சமஸ்கிருதம்: “மனிதன்”) ரோமர் 13:1
பிராணன் (சமஸ்கிருதம்: “ஆத்துமா, சுவாசம், இருப்பது”) 5 முறை
உயிர் (தமிழ்: “உயிர், உயிரோடிருத்தல், இருப்பது”) 10 முறை
பேர் (தமிழ்: “பெயர், புகழ், நபர்) 4 முறை
பட்டியலில் குறிப்பிடாதது 5 முறை
Greek New Testament Terms in Indian Languages by J. S. M. Hooper (இந்திய மொழிகளில் கிரேக்க புதிய ஏற்பாட்டுப் பதங்கள் J. S. M. ஹூப்பர் எழுதியது) பார்க்கவும். இந்திய பைபிள் சங்கம், 1957, பக்கங்கள் 176, 177, 240, 241.
நெபெஷ் (ne’phesh) மற்றும் சைக்கீ என்ற வார்த்தைகளுக்குத் தமிழ் பைபிளில் பயன்படுத்தப்பட்ட பிராணா என்ற சமஸ்கிருத பதம் காணப்படும் சில வசன எடுத்துக்காட்டுகள்: ஆதியாகமம் 19:19, 20; 25:8; 35:29; 47:25; 1 சாமுவேல் 19:5, 11; 22:23; 23:15; 24:11; 2 சாமுவேல் 1:9; 23:17; 1 இராஜாக்கள் 1:12; 2:23; 3:11; 19:2, 3, 10, 14; 7:7; 1 நாளாகமம் 11:19; 2 நாளாகமம் 1:11; மத்தேயு 2:20; அப்போஸ்தலர் 15:25, 26; 20:14; ரோமர் 16:4; பிலிப்பியர் 2:30; வெளிப்படுத்துதல் 16:3.—The Concordance to the Tamil Bible by D. A. Thrower (தமிழ் வேதாகம ஒத்து வாக்கிய சொல் அகராதி, D. A. த்ரோவர், தயாரித்தது, 1943.) கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை, 1976 மறு அச்சுப்பதிப்பு.
“ஆத்துமா” என்ற வார்த்தைக்குப் பொதுவாக பயன்டுத்தப்பட்டிருக்கும் மலையாள வார்த்தை தேஹி. இது சமஸ்கிருத வார்த்தையாகிய தேயா என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. இதன் அர்த்தம் “படைக்கப்பட்டது,” அல்லது தேஹா, இது சரீரத்தை அல்லது தேஹின் “ஒரு சரீரத்தைக் கொண்டிருத்தலை அர்த்தப்படுத்துகிறது.
17. Indian Wisdom by Sir M. Monier Williams (இந்திய ஞானம், சர் M. மோனியர் வில்லியம்ஸ் எழுதியது), 1893, பக்கம் 41. காஸ்மோ பிரசுரங்கள், நியு டெல்லி, 1978 மறு அச்சுப்பதிப்பு.
18. The Sacred Writings of the World’s Great Religions by S. E. Frost, Jr., (உலகத்திலுள்ள மாமதங்களின் புனித எழுத்துக்கள், S. E. ஃப்ராஸ்ட் ஜூனியர் எழுதியது), 1943, பக்கம் 33. புதிய வீட்டு நூலகம், தி பிளாக்கிஸ்டன் கம்பெனி, பிலெதெல்பியா, 1947 மறு அச்சுப்பதிப்பு.
19. மரணத்துடன் பயணம், பக்கம் 11.
20. Hinduism by Nirad C. Chaudhuri (இந்து மதம், நிராட் C. செளதுரி எழுதியது.) பக்கம் 312. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், நியு யார்க், 1979.
21 மரணத்துடன் பயணம், பக்கம் 14.
22. The Wonder That Was India by A. L. Bashman (வியக்கத்தகுந்த இந்தியா, A. L. பாஷ்மான் எழுதியது) பக்கம் 271. ரூப்பா & கோவுடன் சேர்ந்து ஃபான்டானா புத்தகங்கள், நியு டெல்லி, 1984-ல் மறு அச்சுப்பதிப்பு.
23. ஓர் இந்து மத அகராதி, பக்கம் 264.
24. ஓர் இந்து மத அகராதி, பக்கங்கள் 31, 219.
25. வியக்கத்தகுந்த இந்தியா, பக்கம் 323.
26. இந்திய ஞானம், பக்கம் 28.
[அடிக்குறிப்புகள்]
b நிரூபணத்திற்கு உவாட்ச் டவர் சொஸையட்டியால் பிரசுரிக்கப்பட்ட “குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்” என்ற சிறு புத்தகத்தைப் பார்க்கவும்.
[கேள்விகள்]
1. மரணத்தின்மேல் வெற்றி கொள்ளுவது என்ற கருத்தினிடமாக நீங்கள் எப்படிப் பிரதிபலிக்கிறீர்கள்?
2, 3. ரிக்வேதத்தின் பிரகாரம் மனிதவர்க்கத்திற்கு மரணம் எப்படி வந்தது?
4. (எ) மரணத்தின் ஆரம்பத்தைப் பற்றிய பைபிள் பதிவை ரிக்வேதம் மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வருவதாகத் தோன்றுவது ஏன்? (பி) மரணத்துக்குக் காரணத்தைக் கடவுள் ஆதாமுக்கு எப்படி விவரித்தார்?
5. இது ஆதாமின் சந்ததியாரை எப்படிப் பாதித்தது? ஏன்?
6. (எ) பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை ரிக்வேதம் ஒத்துக்கொள்கிறதா? (பி) பரலோகத்தினிடமாக என்ன கடமையை ரிக்வேத எழுத்தாளர்கள் உணர்ந்தார்கள்?
7. மரணம் பற்றிய எண்ணம் மனித இனத்தின்மேல் என்ன பாதிப்பைக் கொண்டுள்ளது?
8. மரண பயத்தைப்பற்றி என்ன ஒப்புக் கொள்ளப்படுகிறது?
9. (எ) மரணபயம் மனித இனத்தை எவ்வாறு அடிமைப்படுத்தியிருக்கிறது? (பி) இந்தப் பயத்தை நீக்க எது உதவி செய்யும்?
10. (எ) மரணத்தின் சம்பந்தமாக என்ன கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன? (பி) உண்மையான பதில்களை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?
11, 12. (எ) “ஆவி” என்பதற்கான சமஸ்கிருத வார்த்தை என்ன? அது எதை அர்த்தப்படுத்துகிறது? (பி) கடவுள் ஓர் ஆவியாக இருக்கிறார் என்று சொல்லப்படுவது ஏன்?
13, 14. “ஆத்துமா” என்பதை மொழிபெயர்க்க உபயோகிக்கப்படும் சமஸ்கிருத வார்த்தை என்ன? அதன் அர்த்தம் என்ன?
15. பைபிளில் ஆதியாகமம் 2:7 மற்றும் 1 கொரிந்தியர் 15:45-ல் “ஆத்துமா” என்பதற்கான சமஸ்கிருத வார்த்தை எவ்வாறு உபயோகிக்கப்பட்டிருக்கிறது?
16. “ஆத்துமா” மற்றும் “ஆவி” என்பவற்றின் அர்த்தத்தைக் குறித்ததில் ஏன் குழப்பம் இருக்கிறது? அது இருக்க வேண்டியதுதானா?
17. “ஆத்துமா” மற்றும் “ஆவி” சம்பந்தமான உண்மையை நாம் எவ்விதம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்?
18. (எ) நூற்றாண்டுகளாக எந்தக் கேள்வி மனிதவர்க்கத்தை அலைக்கழித்திருக்கிறது? (பி) வேத காலங்களில் என்ன வேறுபட்ட கருத்துக்கள் இருந்தன?
19. மரணத்திற்குப் பின் உயிர்வாழும் நம்பிக்கையினிடமாக மதவாதிகள் என்ன பல்வேறுபட்ட மனப்பான்மைகளைக் கொண்டிருக்கின்றனர்?
20. (எ) முதல் மனித ஆத்துமாவின் சிருஷ்டிப்பைப் பைபிள் எவ்வாறு விவரிக்கிறது? (பி) உயிருள்ள மனித ஆத்துமா என்ன பாகங்களைக் கொண்டுள்ளது? அது எவ்வாறு உதாரணத்துடன் விளக்கப்படலாம்?
21. (எ) மரணம் ஏன் ஒருவரை உடல் களைந்த ஆத்துமாவாக ஆக்குவதில்லை? (பி) மரணத்தில் ஒருவர் உடல் களைந்த ஆவியாக ஏன் ஆவதில்லை? உதாரணத்துடன் விளக்கவும்.
22. (எ) ஆத்துமா மரிக்கும் என்பதைக் காட்டுவதற்குப் பைபிள் சொல்வது என்ன? (பி) மரித்தவர்களின் நிலைமையை பைபிள் எவ்வாறு விளக்குகிறது?
23. (எ) இதுவரையாக சிந்தித்ததில் நாம் மரணத்தின் சம்பந்தமாக என்ன உண்மையைக் கண்டுபிடித்துள்ளோம்? (பி) மரணத்தின் சம்பந்தமாக நாம் கொண்டிருந்த கருத்துக்களைத் திருத்தியமைக்க முடியுமா? உதாரணத்தோடு விளக்கவும்.
24. மரித்தவர்களின் நிலை சம்பந்தமாக இந்த உண்மைகள் ஏன் ஆறுதல் அளிப்பதாக இருக்கின்றன?
25. நாம் ஏன் ஒரு நீதிப் பிரச்னையை எதிர்ப்படுகிறோம்? அது என்ன?
26. பிரச்னைக்குத் தீர்வு காண என்ன தேவைப்படுகிறது? ஏன்?
27, 28. (எ) முதல் முற்பிதா மூலமாக நாம் எதை இழந்தோம்? (பி) இது எவ்வாறு மறுபடியும் மீட்டுக் கொள்ளப்படும் என்பதை உதாரணத்துடன் விளக்கவும். (சி) பூர்வ இந்து மதத்தினர் தங்கள் தேவர்களுடன் ஒரு நல்ல நிலைநிற்கையைப்பெற என்ன செய்தார்கள்? அதற்கு என்ன காரணம் இருந்திருக்கக்கூடும்?
29. (எ) தேவையான விலைமதிப்பை மிருக பலிகளால் ஏன் சரிக்கட்ட முடியாது? (பி) தேவையான விலைமதிப்பை மனித இனம் அளிக்கக்கூடுமா?
30. (எ) மனிதனை அவனுடைய உதவியற்ற நிலையிலிருந்து கடவுள் எவ்வாறு காப்பாற்றினார்? (பி) சரியான விலைமதிப்புக்குக் கடவுளுடைய ஓர் ஆவிக்குமாரன் எவ்வாறு உபயோகிக்கப்பட்டார்?
31. (எ) சரித்திரத்தின் மதத் தலைவர்கள் மரணத்தின் மேல் உண்மையான வெற்றியை ஏன் கவனிக்கத் தவறினார்கள்? (பி) மனிதர்களாகிய நாம் ஒரு மீட்பர் இல்லாமல் முழுமையாகக் கைவிடப்பட்டுவிட்டோமா? நீங்கள் ஏன் அவ்விதமாக பதிலளிக்கிறீர்கள்?
32, 33. (எ) கிறிஸ்துவின் மரணம் ஏன் ஒரு சாதாரணமான மரணம் அல்ல? (பி) மீட்கும் பொருள் கோட்பாட்டை உதாரணத்துடன் விளக்கவும். மேலும், ஒரு மனிதனின் செயல் எப்படி இலட்சக்கணக்கானோரைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிக்கும் என்பதை விளக்கவும்.
34. (எ) மனித ஜீவனுக்கான உரிமைகள் எவ்வாறு, மற்றும், எந்த நோக்கத்திற்காக கடவுளிடத்தில் அளிக்கப்பட்டது? (பி) மீட்பு ஏற்பாடு கடவுளுக்கு எதைச் செய்யும்?
35. கிறிஸ்துவினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட ஜீவ உரிமைகளை நாம் பயன்படுத்திக்கொள்ள என்ன செய்யவேண்டும்?
36. (எ) நாம் எவ்வாறு நன்றியுணர்வைக் கடவுளுக்கு வெளிக்காட்டலாம்? (பி) யெகோவா எப்படிப்பட்ட கடவுள்?
37. (எ) ஒருவர் கடவுளை “ஆவியோடு” எப்படித் தொழுதுகொள்ளலாம்? (பி) ஒருவர் பிதாவை “உண்மையோடு” எப்படித் தொழுதுகொள்ளலாம்?
38. கிறிஸ்து இயேசு எப்படி, ஏன் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்?
39. (எ) கிறிஸ்து இயேசுவின் சம்பந்தமாக எந்தக் காரியத்தில் இலட்சக்கணக்கானோர் திருப்தியடைந்தவர்களாக இருக்கின்றனர்? (பி) அவரைப்பற்றி எதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?
40. (எ) கடவுளுக்கு முன்பாக மனிதவர்க்கத்தின் பிரதான ஆசாரியராக எப்படி கிறிஸ்து தகுதி பெறுகிறார்? (பி) யெகோவாவுடைய வணக்கத்தாரிடமாக எந்தப் பாகத்தைக் கிறிஸ்து நிறைவேற்றுகிறார்?
41. (எ) கிறிஸ்து உலக சீர்த்திருத்துதலை ஏன் பிரசங்கிக்கவில்லை? (பி) “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்களா? (சி) இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர்?
42. இன்றைக்குத் துன்பப்படுகிற ஜனங்கள் எப்படிச் சீக்கிரத்தில் நிவாரணம் பெறுவார்கள்?
43. (எ) கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன? (பி) மனித அரசாங்கங்கள் எப்படித் தங்களுடைய குடிமக்களுக்கு நன்மை செய்ய முயற்சி செய்திருக்கின்றன? எந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது?
44. (எ) ஆயிரம் வருட காலப்பகுதியில் கடவுள் எதை செய்து முடிப்பார்? (பி) மனிதர்கள் மரணத்தின் மேல் வெற்றிபெறுவதற்கான ஏற்பாட்டை கடவுள் எதன் மூலமாக செய்வார்?
45, 46. (எ) பாவம், வியாதி மற்றும் ஜீவன் சம்பந்தமாக கடவுள் என்ன உத்தரவாதம் கொடுக்கிறார்? (பி) நீதி மற்றும் நித்திய இளமையை மனிதவர்க்கத்துக்கு மறுபடியும் நிலைநாட்ட கடவுள் என்ன உத்தரவாதத்தைக் கொடுக்கிறார்?
47. (எ) கிறிஸ்துவின் கிரயபலியின் நன்மைகள் ஞாபகார்த்த கல்லறைகளிலிருக்கும் மரித்தவர்களுக்கு எப்படிப் பிரயோகிக்கப்படக்கூடும்? (பி) யெகோவா மரித்த மனித ஆத்துமாக்களை எப்படி உயிர்த்தெழுப்புவார்? (சி) எது வரைக்கும் கடவுளுடைய குமாரன் அரசராக ஆளுகை செய்வார்?
48. (எ) மரணத்தின் மேல் வெற்றி கொள்வது உங்களுக்குச் சாத்தியமா? (பி) என்ன வெற்றி குரலை நீங்கள் எதிர்காலத்திற்குத் தெரிந்து கொள்ளலாம்?
[பக்கம் 5-ன் படம்]
முதல் மனித ஜோடி மனித குலத்திற்கு மரணத்தைக் கொண்டுவந்தனர்
[பக்கம் 7-ன் படம்]
இழப்பு மற்றும் உதவியற்ற நிலையின் துயர் தரும் உணர்வுகளை மரணம் கொண்டுவருகிறது
[பக்கம் 11-ன் படம்]
இவை எல்லாமே ஆத்துமாக்கள்
[பக்கம் 13-ன் படம்]
உடல் + உயிர்சக்தி = உயிருள்ள ஆத்துமா
[பக்கம் 18-ன் படம்]
மனிதவர்க்கத்தைப் பாவத்திலிருந்து மீட்டுக்கொள்ள கடவுள் நீதியால் சமநிலையாக்கப்பட்ட அன்பை உபயோகித்தார்
[பக்கம் 20-ன் படம்]
பரிபூரணராகிய இயேசு ஆதாமுக்குச் சரிசமமான மதிப்புள்ளவரானார்
[பக்கம் 22-ன் படம்]
கடவுளை வணங்க பெரிய கட்டடங்களோ அல்லது சிலைகளோ நமக்குத் தேவையில்லை
[பக்கம் 23-ன் படம்]
ஆதாமின் பாவம் இயேசுவின் பலியைத் தேவைப்படுத்தியது
[பக்கம் 27-ன் படம்]
மரணத்தின் மேல் வெற்றி பெறுதல்