யெகோவாவின் அமைப்போடு உண்மைப்பற்றுறுதியுடன் சேவித்தல்
“உண்மைப்பற்றுறுதியுள்ள ஒருவனிடம் உண்மைப்பற்றுறுதியோடு நீர் செயல்படுவீர்.”—2 சாமுவேல் 22:26, NW.
1, 2. சபையில் நாம் எல்லாரும் பெரும்பாலும் காணும் உண்மைப்பற்றுறுதிக்குரிய சில உதாரணங்கள் யாவை?
ஓர் இரவு நேரத்தில், மூப்பர் ஒருவர், கிறிஸ்தவ கூட்டத்திற்காக ஒரு பேச்சை தயாரிக்கிறார். அவர் அதை நிறுத்திவிட்டு சற்று இளைப்பாற வேண்டுமென்று விரும்புகிறார். இருந்தாலும், மாறாக, தொடர்ந்து வேலை செய்துகொண்டு, மந்தையினரின் இருதயங்களை எட்டி ஊக்குவிக்கக்கூடிய வேதப்பூர்வ முன்மாதிரிகளையும் உவமைகளையும் தேடிக்கொண்டிருக்கிறார். கூட்டம் நடக்கும் இரவில், அதே சபையிலுள்ள, மிகக் களைப்புற்றிருந்த பெற்றோர் இருவர், வீட்டில் இளைப்பாற வேண்டுமென்றிருந்தபோதிலும், பொறுமையுடன் தங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்தி கூட்டத்துக்குச் செல்கின்றனர். கூட்டம் முடிந்த பின்பு, கிறிஸ்தவர்கள் அடங்கிய ஒரு தொகுதியினர் மூப்பர் கொடுத்த பேச்சைப் பற்றி கலந்துரையாடுகிறார்கள். ஒரு சகோதரி, அதே சகோதரர் தன் உணர்ச்சிகளைப் புண்படுத்தியதைக் குறிப்பிட தன் மனம் தூண்டியபோதிலும், அவர் சொன்ன குறிப்புகளில் ஒன்றைப் பற்றி ஆர்வத்துடன் பேசுகிறாள். இந்தக் காட்சிகளில் பொதுவாக ஒத்துள்ள கருத்தை நீங்கள் காண்கிறீர்களா?
2 உண்மைப்பற்றுறுதியே ஒத்துள்ள அந்தக் கருத்து. அந்த மூப்பர், கடவுளுடைய மந்தைக்குச் சேவை செய்யும்படி உண்மைப்பற்றுறுதியுடன் உழைக்கிறார்; அந்தப் பெற்றோர், உண்மைப்பற்றுறுதியுடன் சபை கூட்டங்களுக்குச் செல்கின்றனர்; அந்தச் சகோதரி, உண்மைப்பற்றுறுதியுடன் மூப்பர்களை ஆதரிக்கிறாள். (எபிரெயர் 10:24, 25; 13:17; 1 பேதுரு 5:2) ஆம், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், யெகோவாவின் அமைப்புடன் உண்மைப்பற்றுறுதியோடு சேவிக்கும்படி கடவுளுடைய ஜனங்கள் தீர்மானித்திருப்பதை நாம் காண்கிறோம்.
3. யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பினிடமாக உண்மைப்பற்றுறுதியுடன் நாம் நிலைத்திருப்பது ஏன் அவ்வளவு முக்கியம்?
3 இந்தச் சீரழிந்த உலகத்தின்மீது யெகோவா பார்வை செலுத்துகையில், வெகு சொற்பமான உண்மைப்பற்றுறுதியையே அவர் காண்கிறார். (மீகா 7:2) தம்முடைய ஜனத்தின் உண்மைப்பற்றுறுதியை அவர் கவனிக்கையில் அவருடைய இருதயம் எவ்வளவாய் மகிழ்ச்சியடையும்! ஆம், உங்கள் உண்மைப்பற்றுறுதிதானே அவரை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எனினும், முதல் கலகக்காரனாகிய சாத்தானுக்கு அது கோபமூட்டி, அவனைப் பொய்யனாக நிரூபிக்கிறது. (நீதிமொழிகள் 27:11; யோவான் 8:44) யெகோவாவினிடமும் பூமிக்குரிய அவருடைய அமைப்பினிடமும் கொண்டுள்ள உங்கள் உண்மைப்பற்றுறுதியைக் கெடுத்துப்போட சாத்தான் முயற்சி செய்வான் என்பதை எதிர்பாருங்கள். சாத்தான் இதைச் செய்யும் சில வழிவகைகளை நாம் கவனிக்கலாம். இவ்வாறு, முடிவுவரையில் உண்மைப்பற்றுறுதியுள்ளவர்களாக நாம் எப்படி நிலைத்திருக்க முடியும் என்பதை நாம் மேலும் நன்றாக காணக்கூடும்.—2 கொரிந்தியர் 2:11.
அபூரணங்களின்பேரில் பார்வையை ஊன்றவைப்பது உண்மைப்பற்றுறுதியை படிப்படியாக அழித்துப்போடும்
4. (அ) அதிகாரத்தில் இருப்போரைக் குற்றங்குறை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் காண்பது ஏன் எளிது? (ஆ) கோராகு எவ்வாறு யெகோவாவின் அமைப்பினிடம் உண்மைப்பற்றுறுதி தவறினவனாக நிரூபித்தான்?
4 பொறுப்புள்ள ஸ்தானத்தில் ஒரு சகோதரன் இருக்கையில், அவருடைய தவறுகள் அதிக வெளிப்படையாகத் தோன்றலாம். ‘நம் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், நம் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுக்கப்’ பார்ப்பது எவ்வளவு எளிதாயுள்ளது! (மத்தேயு 7:1-5) எனினும், தவறுகளின்பேரில் கவனத்தை ஊன்றவைப்பது, உண்மைப்பற்றுறுதி இல்லாமல் போவதில் விளைவடையலாம். உதாரணமாக, கோராகுக்கும் தாவீதுக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். கோராகு அதிக பொறுப்புடையவனாக இருந்தான், மேலும் பல ஆண்டுகளாக அவன் உண்மைப்பற்றுறுதியுள்ளவனாகவும் இருந்திருக்கலாம்; ஆனால் அவன் பேராசையுடையவனாக ஆகிவிட்டான். தன் நெருங்கிய உறவினரான மோசேக்கும் ஆரோனுக்கும் இருந்த அதிகாரத்தை எதிர்க்கிறவனானான். மனிதரெல்லாரிலும் மிக சாந்தகுணமுள்ளவராக மோசே இருந்தபோதிலும், கோராகு அவரைக் குற்றம் கண்டுபிடிக்கும் கண்களுடன் நோக்கத் தொடங்கினதாகத் தெரிகிறது. மோசேயில் தவறுகளை அவன் கண்டிருக்கலாம். எனினும் அந்தத் தவறுகள், யெகோவாவின் அமைப்பினிடம் கோராகு உண்மைப்பற்றுறுதியுடனிருக்க தவறினதை நியாயமெனக் காட்டவில்லை. சபையின் மத்தியிலிருந்து அவன் அழிக்கப்பட்டான்.—எண்ணாகமம் 12:3; 16:11, 31-33.
5. சவுலுக்கு விரோதமாகக் கலகஞ்செய்யும்படியானத் தூண்டுதலை தாவீது ஏன் உணர்ந்திருக்கலாம்?
5 மறுபட்சத்தில் தாவீது, சவுல் அரசனின்கீழ் சேவித்தார். ஒரு காலத்தில் நல்ல அரசனாக இருந்த சவுல், மெய்யாகவே பொல்லாதவராகிவிட்டிருந்தார். பொறாமைகொண்ட சவுலின் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பிழைக்க, தாவீதுக்கு விசுவாசமும், சகிப்புத்தன்மையும், கொஞ்சம் சூழ்ச்சித்திறமையுங்கூட வேண்டியதாக இருந்தது. எனினும், பழிவாங்க தாவீதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, யெகோவா அபிஷேகம் செய்திருந்தவருக்கு விரோதமாக உண்மைப்பற்றுறுதியற்ற துரோகச் செயலைத் தான் நடப்பிப்பது, ‘யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து, நினைத்துப்பார்க்க முடியாதது’ என்று அவர் சொன்னார்.—1 சாமுவேல் 26:11, NW.
6. மூப்பர்களில் பலவீனங்களையும் தவறுகளையும் நாம் கண்டாலுங்கூட, நாம் ஒருபோதும் என்ன செய்ய மாட்டோம்?
6 நம் மத்தியில் தலைமைதாங்கி நடத்துகிற சிலர், தீர்ப்புசெய்வதில் தவறிழைத்தால், கடுமையான வார்த்தைகளைப் பேசினால், அல்லது பாரபட்சம் காட்டுவதாகத் தோன்றினால், அவர்களைப் பற்றி நாம் குறைகூறிக்கொண்டு இருப்போமா? குற்றங்காணும் மனப்பான்மையைச் சபையில் நிலவச் செய்வோமா? அதை எதிர்ப்போராக கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவோமா? நிச்சயமாகவே அவ்வாறு செய்ய மாட்டோம்! தாவீது அனுமதியாததுபோல், நாமும், மற்றவரின் தவறுகள், யெகோவாவினிடமாகவும் அவருடைய அமைப்பினிடமாகவும் உண்மைப்பற்றுறுதி இல்லாதவர்களாகும்படி நம்மைச் செய்விப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!—சங்கீதம் 119:165.
7. எருசலேமிலிருந்த ஆலயம் சம்பந்தமாகத் தோன்றியிருந்த தூய்மைகெட்ட நடவடிக்கைகள் சில யாவை, இவற்றைப் பற்றி இயேசு எவ்வாறு உணர்ந்தார்?
7 உண்மைப்பற்றுறுதிக்கு மிகப் பெரிய மனித முன்மாதிரியாக இயேசு கிறிஸ்து இருந்தார், அவர் யெகோவாவின் ‘உண்மைப்பற்றுறுதியுள்ளவர்’ என்று தீர்க்கதரிசனமாய் விவரிக்கப்பட்டார். (சங்கீதம் 16:10, NW) எருசலேமிலிருந்த ஆலயத்தை தூய்மைகெட்ட முறையில் தவறாகப் பயன்படுத்தினது, உண்மைப்பற்றுறுதியை ஒரு சவாலாக்கியிருக்க வேண்டும். பிரதான ஆசாரியனின் ஊழியமும் பலிகளும், தம் சொந்த ஊழியத்தையும் பலிக்குரிய மரணத்தையும் முன்குறித்துக் காட்டினவென்று இயேசு அறிந்திருந்தார். மேலும், இவற்றிலிருந்து ஆட்கள் கற்றுக்கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகையால், அந்த ஆலயம் “கள்ளர் குகை” ஆகியிருந்ததை அவர் கண்டபோது, நீதியுள்ள கடும் கோபம் மூண்டவரானார். கடவுளால் அருளப்பட்ட அதிகாரத்துடன், அதைச் சுத்திகரிக்க இரு முறை அவர் நடவடிக்கைகள் எடுத்தார்.a—மத்தேயு 21:12, 13; யோவான் 2:15-17.
8. (அ) ஆலய ஏற்பாட்டுக்கு இயேசு எவ்வாறு உண்மைப்பற்றுறுதியைக் காட்டினார்? (ஆ) யெகோவாவின் சுத்தமான அமைப்புடனிருந்து அவரை வணங்குவதை நாம் நன்றியோடு மதிக்கிறோம் என்று எவ்வாறு காட்டலாம்?
8 இருப்பினும், இந்த ஆலய ஏற்பாட்டை இயேசு உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரித்தார். பிள்ளை பருவத்திலிருந்தே ஆலயத்தில் பண்டிகைகளுக்கு ஆஜராகியிருந்தார்; அங்கு அடிக்கடி போதித்தார். தான் உண்மையில் கடமைப்பட்டிராதபோதிலும், ஆலய வரியையுங்கூட அவர் செலுத்தினார். (மத்தேயு 17:24-27) ஏழை விதவை, “தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம்” ஆலய காணிக்கைப் பெட்டியில் போட்டதற்காக இயேசு அவளைப் போற்றினார். அதற்குக் கொஞ்ச காலத்திற்குப்பின், யெகோவா அந்த ஆலயத்தை நிரந்தரமாக தள்ளிவிட்டார். ஆனால் அதுவரையில், இயேசு அதனிடம் உண்மைப்பற்றுறுதியுள்ளவராக இருந்தார். (மாற்கு 12:41-44; மத்தேயு 23:38) அந்த ஆலயம் உட்பட அந்த யூத ஒழுங்குமுறையைப் பார்க்கிலும் இன்று கடவுளின் பூமிக்குரிய அமைப்பு, மிக மேம்பட்டதாயுள்ளது. அது பரிபூரணமாக இல்லை என்பது உண்மைதான்; இதனிமித்தமே சில சமயங்களில் சரிப்படுத்துதல்கள் செய்யப்படுகின்றன. ஆனால் அது ஊழல்களால் களங்கப்படுத்தப்பட்டும் இல்லை, யெகோவா தேவன் அதை அகற்றி வேறொன்றை அதனிடத்தில் வைக்கப்போவதாகவும் இல்லை. அதனுள் காணும் ஏதாவது அபூரணங்கள் நம்மை மனக்கசப்படையும்படி, அல்லது குற்றங்குறை கூறும் எதிர்மறையான மனப்பான்மையை ஏற்கும்படி செய்விக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அதற்கு மாறாக, இயேசு கிறிஸ்து வைத்த உண்மைப்பற்றுறுதியின் மாதிரியை நாம் பின்பற்றுவோமாக.—1 பேதுரு 2:21.
நம்முடைய சொந்த அபூரணங்கள்
9, 10. (அ) உண்மைப்பற்றுறுதி யற்ற நடத்தைக்குள் உட்படும்படி நம்மை கவர்ந்திழுப்பதற்கு, சாத்தானின் காரிய ஒழுங்குமுறை எவ்வாறு நம் அபூரணங்களைப் பயன்படுத்திக்கொள்கிறது? (ஆ) மோசமான பாவம் செய்துவிடுகிற ஒரு நபர் என்ன செய்ய வேண்டும்?
9 உண்மைப்பற்றுறுதி இல்லாமையைப் பெருகச் செய்வதற்கு நம்முடைய அபூரணங்களையும் பயன்படுத்திக்கொள்ள சாத்தான் முயற்சி செய்கிறான். அவனுடைய காரிய ஒழுங்குமுறை, நம்முடைய பலவீனங்களை அனுகூலமாகப் பயன்படுத்தி, யெகோவாவின் பார்வையில் தவறானதைச் செய்யும்படி நம்மை கவர்ந்திழுக்கிறது. வருந்தத்தக்கதாக, ஒவ்வொரு ஆண்டிலும் ஆயிரக்கணக்கானோர் ஒழுக்கக்கேட்டுக்கு உட்படுகின்றனர். உண்மைப்பற்றுறுதியற்ற செயலோடுகூட, இரட்டை வாழ்க்கை நடத்துவதை சிலர் சேர்த்துக்கொண்டு, உண்மையான கிறிஸ்தவர்களாக நிலைத்திருப்பதுபோல் பாசாங்கு செய்கையில் தவறான போக்கிலும் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த விஷயத்தின்பேரில், விழித்தெழு! பத்திரிகையில், “இளைஞர் கேட்கின்றனர் . . .” என்ற தொடர் பகுதியில் வந்த கட்டுரைகளின்பேரில் தன் குறிப்பைத் தெரிவிப்பவளாக ஒரு பெண் இவ்வாறு எழுதினாள்: “அந்தக் கட்டுரைகள் என் வாழ்க்கை சரிதையாக இருந்தன.” யெகோவாவை நேசியாதிருந்த இளைஞருடன் நட்புறவுகளை அவள் இரகசியமாக வளர்த்திருந்தாள். அதன் விளைவு? அவள் எழுதுகிறாள்: “என் வாழ்க்கை படுகுழிக்குள் சென்றது, நான் ஒழுக்கக்கேட்டுக்கு உட்பட்டு கண்டிக்கப்பட வேண்டியதாயிற்று. யெகோவாவுடன் இருந்த என் உறவும் கெடுக்கப்பட்டது, என்மீது பெற்றோருக்கும் மூப்பருக்கும் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது.”b
10 இந்த இளம் பெண் மூப்பர்களிடமிருந்து உதவி பெற்று, உண்மைப்பற்றுறுதியுடன் யெகோவாவைச் சேவிப்பதற்குத் திரும்பிவந்தாள். எனினும், வருந்தத்தக்கவிதமாய், இதைவிட மோசமான விளைவுகளைப் பலர் அனுபவிக்கின்றனர்; சிலர், சபைக்கு ஒருபோதும் திரும்பிவராமற்போகின்றனர். உண்மைப்பற்றுறுதியுள்ளோராக நிலைத்திருந்து, இந்தப் பொல்லாத உலகத்தில் சோதனையை எதிர்த்து நிற்பது எவ்வளவு மிக மேலானது! உலகக் கூட்டுறவு, இழிவான பொழுதுபோக்கு போன்ற காரியங்களின்பேரில் காவற்கோபுரம் விழித்தெழு! பத்திரிகைகளில் வரும் எச்சரிக்கைகளைக் கவனத்தில் வையுங்கள். உண்மைப்பற்றுத்தவறும் நடத்தைக்குள் நீங்கள் எந்தச் சமயத்திலும் விழாமல் இருப்பீர்களாக. ஆனால் அவ்வாறு நீங்கள் இடறிவிழுந்துவிட்டால், விழவில்லை என்பதுபோல் ஒருபோதும் பாசாங்கு செய்யாதீர்கள். (சங்கீதம் 26:4) அதற்கு மாறாக, உதவியை நாடுங்கள். அதற்காகவே கிறிஸ்தவ பெற்றோரும் மூப்பர்களும் இருக்கிறார்கள்.—யாக்கோபு 5:14.
11. நம்பிக்கைக்கு இடமில்லாத அளவில் கெட்டவர்களாக நம்மைநாமே கருதிக்கொள்வது ஏன் தவறாக இருக்கும், நம்முடைய கருத்தைத் திருத்திக்கொள்வதற்கு பைபிளிலுள்ள என்ன முன்மாதிரி நமக்கு உதவிசெய்யலாம்?
11 நம்முடைய அபூரணங்கள் மற்றொரு வகையிலும் நமக்கு இடர் உண்டாக்கலாம். உண்மைப்பற்று தவறும் ஒரு செயலை நடப்பித்துவிட்ட சிலர், யெகோவாவைப் பிரியப்படுத்தும்படி முயற்சி செய்வதை விட்டுவிடுகின்றனர். தாவீது படுமோசமான பாவங்களைச் செய்தார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். எனினும், தாவீது மரித்து வெகுகாலமாகிவிட்ட பின்பும், யெகோவா அவரை உண்மையுள்ள ஊழியரென நினைவுகூர்ந்தார். (எபிரெயர் 11:32; 12:1) ஏன்? ஏனெனில், யெகோவாவைப் பிரியப்படுத்தும்படி பிரயாசப்படுவதை அவர் ஒருபோதும் விட்டுவிடவில்லை. நீதிமொழிகள் 24:16 இவ்வாறு சொல்கிறது: “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்.” நாம் போராடிக்கொண்டிருக்கும் ஏதோ பலவீனத்தின் காரணமாக, சிறு பாவங்களுக்குள் நாம் தவறி விழுந்துவிட்டால்—ஆம் திரும்பத்திரும்ப விழுந்துவிட்டால்,—நாம் தொடர்ந்து ‘எழுந்து’ கொண்டிருப்போமானால்—அதாவது, உள்ளப்பூர்வமாய் மனந்திரும்பி உண்மைப்பற்றுறுதியுள்ள போக்கைத் திரும்பத் தொடருவோமானால்—நிச்சயமாகவே, யெகோவாவின் பார்வையில் நாம் இன்னும் நீதியுள்ளோராக இருப்போம்.—ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 2:7.
உண்மைப்பற்றுத் தவறுதலின் மறைமுகமான வகைகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!
12. பரிசேயருடைய காரியத்தில், விட்டுக்கொடாமல் சட்டத்தை வலியுறுத்தின நோக்குநிலை எவ்வாறு உண்மைப்பற்றுறுதி தவறுதலுக்கு வழிநடத்தினது?
12 மறைமுகமான வகைகளிலும் உண்மைப்பற்றுத் தவறுதல் ஏற்படுகிறது! உண்மைப்பற்றுறுதியோடு இருப்பதுபோல் அது பொய்த்தோற்றமுங்கூட அளிக்கலாம்! உதாரணமாக, இயேசுவின் நாளிலிருந்த பரிசேயர்கள், தங்களை மேம்பட்ட உண்மைப்பற்றுறுதியுள்ளவர்களென எண்ணியிருக்கலாம்.c ஆனால் உண்மைப்பற்றுறுதியுள்ளோராக இருப்பதற்கும் மனிதனால் உண்டுபண்ணப்பட்ட சட்டங்களை வலியுறுத்துவோராக இருப்பதற்குமுள்ள வேறுபாட்டைக் காண அவர்கள் தவறினார்கள்; எப்படியெனில், அவர்கள் விடாக் கண்டிப்புடையோராயும், கனிவற்ற தீர்ப்புசெய்வோராயும் இருந்தனர். (ஒப்பிடுக: பிரசங்கி 7:16.) இவ்வாறு செய்ததில் அவர்கள்—தாங்கள் சேவை செய்ய வேண்டிய ஜனங்களுக்கும், தாங்கள் போதிப்பதாக உரிமைபாராட்டின நியாயப்பிரமாணத்தின் உண்மையான கருத்துக்கும், யெகோவா தேவனுக்குத்தாமேயும்—மெய்ம்மையில் உண்மைப்பற்றுத் தவறுவோராக இருந்தார்கள். எதிர்மாறாக, இயேசு, அன்பில் ஆதாரங்கொண்ட நியாயப்பிரமாணத்தின் மெய்யான கருத்துக்கு—உண்மைப்பற்றுறுதியுள்ளவராக இருந்தார். இவ்வாறு அவர், மேசியானிய தீர்க்கதரிசனங்கள் முன்னறிவித்திருந்தபடியே, ஜனங்களைக் கட்டியெழுப்பி ஊக்குவித்தார்.—ஏசாயா 42:3; 50:4; 61:1, 2,
13. (அ) எவ்வாறு கிறிஸ்தவ பெற்றோர்கள் உண்மைத் தவறுவோராக இருக்கக்கூடும்? (ஆ) தங்கள் பிள்ளைகளை சிட்சிப்பதில், பெற்றோர்கள் ஏன் மட்டுக்குமீறி கடுகடுப்போராக, குற்றங்காண்போராக, அல்லது எதிர்மறையான மனப்பான்மை காட்டுவோராக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்?
13 ஓரளவு அதிகாரத்தையுடைய கிறிஸ்தவர்கள், இந்தக் காரியத்தில் இயேசுவின் முன்மாதிரியிலிருந்து மிகுதியாய்ப் பயனடைகிறார்கள். உதாரணமாக, உண்மைப்பற்றுறுதியுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகளைச் சிட்சிக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். (நீதிமொழிகள் 13:24) எனினும், கோபத்தில் அளிக்கும் கடுமையான சிட்சையால், அல்லது விடாது கடுகடுத்து குற்றங்கூறுவதால், தங்கள் பிள்ளைகளுக்கு மனத்தாங்கல் உண்டுபண்ணிக்கொண்டு இராதபடி நிச்சயப்படுத்திக்கொள்கிறார்கள். தங்கள் பெற்றோரைத் தாங்கள் ஒருபோதும் பிரியப்படுத்த முடியாதென்று, அல்லது தங்கள் பெற்றோரின் மதம் அவர்களைக் குற்றங்குறை காண்போராகும்படியே செய்விப்பதாகத் தோன்றுகிறதென்று உணரும் பிள்ளைகள், மனச்சோர்வுடையவர்களாகி, அதன் விளைவாக, உண்மையான விசுவாசத்தைவிட்டு விலகிப்போவதில் இது முடிவடையக்கூடும்.—கொலோசெயர் 3:21.
14. கிறிஸ்தவ மேய்ப்பர்கள் எவ்வாறு தாங்கள் சேவை செய்யும் மந்தைக்கு உண்மைப்பற்றுறுதியுள்ளவர்களாக நிரூபிக்கலாம்?
14 இவ்வாறே, கிறிஸ்தவ மூப்பர்களும் பயணக் கண்காணிகளும் மந்தை எதிர்ப்படுகிற பிரச்சினைகளுக்கும் ஆபத்துக்களுக்கும் கவனம் செலுத்துகிறார்கள். உண்மைப்பற்றுறுதியுள்ள மேய்ப்பர்களாக, தேவையானபோது அறிவுரை அளிக்கிறார்கள். முதலாவதாக எல்லா தகவல்களும் தங்களுக்கு இருப்பதை நிச்சயப்படுத்திக்கொண்டு, தாங்கள் சொல்வது பைபிளிலும் சங்கத்தின் பிரசுரங்களிலும் கவனமாய் ஆதாரங்கொண்டிருக்கச் செய்கிறார்கள். (சங்கீதம் 119:105; நீதிமொழிகள் 18:13) ஆவிக்குரிய கட்டியெழுப்புதலுக்கும் போஷிப்புக்கும் தங்கள் பேரிலேயே செம்மறியாடுகள் நம்பியிருக்கின்றன என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகையால், நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றும்படி அவர்கள் நாடுகிறார்கள். வாரந்தோறும் கிறிஸ்தவ கூட்டங்களில்—அவர்களைப் பீறிப்போடாமல், மாறாக அவர்களை ஊக்குவித்து எழுப்பி, அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தி, உண்மைப் பற்றுறுதியுடன் அவர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள்.—மத்தேயு 20:28; எபேசியர் 4:11, 12: எபிரெயர் 13:20, 21.
15. எவ்வாறு முதல் நூற்றாண்டிலிருந்த சிலர், தங்கள் உண்மைப்பற்றுறுதிகள் தவறானவற்றின்மீது வைக்கப்பட்டிருந்ததாகக் காட்டினர்?
15 தவறானவரிடத்தில் உண்மைப்பற்றுதியுடன் இருப்பது, உண்மைப்பற்றுறுதியற்ற தன்மையின் மற்றொரு மறைமுகமான வகையாக உள்ளது. யெகோவா தேவனிடமாக நமக்கிருக்கும் உண்மைப்பற்றுறுதிக்கு மேலாக, வேறு எந்தப் பற்றுறுதியையும் நாம் வைப்பதை, பைபிளின் கருத்திலுள்ள மெய்யான உண்மைப்பற்றுறுதி அனுமதிக்கிறதில்லை. முதல் நூற்றாண்டிலிருந்த யூதர்கள் பலர், மோசேயின் நியாயப்பிரமாணத்தையும் யூதக் காரிய ஒழுங்குமுறையையும் விடாப்பிடியாகப் பற்றியிருந்தனர். எனினும், அந்தக் கலகக்கார ஜனத்தினிடமிருந்து ஆவிக்குரிய இஸ்ரவேல் ஜனத்தினிடம் தம்முடைய ஆசீர்வாதத்தை மாற்றுவதற்கான யெகோவாவின் காலம் வந்திருந்தது. சிலர் மாத்திரமே யெகோவாவிடம் உண்மைப்பற்றுறுதியுடையோராக இருந்து, இந்தப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்று அதற்கேற்றவாறு தங்களை அமைந்துக்கொண்டனர். உண்மையானக் கிறிஸ்தவர்கள் மத்தியிலுங்கூட, யூதமதத்திலிருந்து மாறினவர்கள், கிறிஸ்துவில் நிறைவேற்றமடைந்திருந்த மோசேயின் நியாயப்பிரமாணத்தினுடைய “பலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு” திரும்பி செல்வதை வற்புறுத்தினார்கள்.—கலாத்தியர் 4:9; 5:6-12; பிலிப்பியர் 3:2, 3.
16. சரிப்படுத்துதல்களுக்கு, யெகோவாவின் உண்மைப்பற்றுறுதியுள்ள ஊழியர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?
16 அதற்கு நேர்மாறாக, தற்காலங்களிலுள்ள யெகோவாவின் ஜனங்கள், மாற்றத்தின் காலங்களினூடே உண்மைப்பற்றுறுதியுள்ளோராகத் தங்களை நிரூபித்திருக்கின்றனர். வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தின் ஒளி தொடர்ந்து தெளிவடைந்துகொண்டு வருகையில், சரிப்படுத்துதல்கள் செய்யப்படுகின்றன. (நீதிமொழிகள் 4:18) சமீபத்தில் மத்தேயு 24:34-ல் பயன்படுத்தப்பட்ட “சந்ததி” என்ற பதத்தைப் பற்றிய நம் புரிந்துகொள்ளுதலையும், மத்தேயு 25:31-46-ல் குறிப்பிடப்பட்ட ‘செம்மறியாடுகளின்’ மற்றும் ‘வெள்ளாடுகளின்’ நியாயத்தீர்ப்பு காலத்தைப் பற்றிய நம் புரிந்துகொள்ளுதலையும், மேலும், இராணுவத்தைச் சாராத பொதுசேவைகளின் குறிப்பிட்ட வகைகளைப் பற்றியவற்றில் நம் கருத்தையும் தெளிவுபடுத்துவதற்கு, சமீபத்தில், “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” வகுப்பினர் நமக்கு உதவி செய்தனர். (மத்தேயு 24:45) இத்தகைய விஷயங்களின்பேரில் முந்திய புரிந்துகொள்ளுதலையே விடாப்பிடியாய் யெகோவாவின் சாட்சிகள் பலர் பற்றிக்கொண்டும், முன்னேறுவதற்கு மறுத்தும் இருந்திருந்தால், விசுவாசத்துரோகிகள் சிலர் மகிழ்ந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. ஏன்? யெகோவாவின் ஜனங்கள் உண்மைப்பற்றுறுதியுள்ளோராக இருக்கிறார்கள்.
17. நாம் நேசிக்கும் அருமையானவர்கள் எவ்வாறு நம் உண்மைப்பற்றுறுதியைச் சில சமயங்களில் சோதனைக்கு உட்படுத்தலாம்?
17 எனினும், தவறானவற்றில் காட்டப்படும் உண்மைப்பற்றுறுதிகள் நம்மைத்தானே பாதிக்கலாம். அன்பான நண்பர் ஒருவர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர்தானே, பைபிள் நியமங்களை மீறும் போக்கைத் தெரிந்துகொள்கையில் நமது உண்மைப்பற்றுறுதி சோதிக்கப்படலாம். இயல்பாய், குடும்ப உறுப்பினரிடமாகதான் நாம் உண்மைப்பற்றுறுதியை உணருகிறோம். ஆனால், யெகோவாவினிடமாக உள்ள நம் உண்மைப்பற்றுறுதிக்கு மேலாக அத்தகைய பற்றுறுதியை நாம் வைக்கக்கூடாது! (ஒப்பிடுக: 1 சாமுவேல் 23:16-18.) படுமோசமான ஒரு பாவத்தை மறைத்துவைக்கும்படி தவறுசெய்தவர்களுக்கு நாம் உதவிசெய்யவும் மாட்டோம், ‘சாந்தமுள்ள ஆவியோடு அவர்களை சீர்பொருந்தப்பண்ணுவதற்கு’ பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கிற மூப்பர்களுக்கு எதிராக அவர்கள் சார்பில் ஆதரவளிக்கவும் மாட்டோம். (கலாத்தியர் 6:1) அவ்வாறு செய்வது, யெகோவாவினிடமாகவும் அவருடைய அமைப்பினிடமாகவும், நமக்கு அருமையான ஒருவரிடமாகவும் உள்ள உண்மைப்பற்றுறுதியிலிருந்து தவறுவதாக இருக்கும். சிட்சை பெறுவதைத் தடுப்போராய், ஒரு பாவிக்கும் அவனுக்குத் தேவைப்படுகிற சிட்சைக்கும் இடையில் நிற்பது, யெகோவாவினுடைய அன்பின் வெளிக்காட்டு அவனை எட்டாதபடி தடுத்து இடையில் நிற்பதாக உண்மையில் உள்ளது. (எபிரெயர் 12:5-7) மேலும், “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்” என்பதையும் நினைவில் வையுங்கள். (நீதிமொழிகள் 27:6) கடவுளுடைய வார்த்தையில் ஆதாரங்கொண்ட வெளிப்படையான அன்புள்ள அறிவுரை, தவறுசெய்துவிட்ட, அன்புக்குரிய ஒருவரின் மதிப்புணர்ச்சியைப் புண்படுத்தலாம்; ஆனால் அது முடிவில் ஜீவனைக் காப்பதாக நிரூபிக்கலாம்!
உண்மைப்பற்றுறுதி, துன்புறுத்துதலையும் தாங்கி நிலைநிற்கிறது
18, 19. (அ) ஆகாப் நாபோத்தினிடம் என்ன செய்யும்படி கேட்டார், நாபோத் ஏன் அதைச் செய்ய மறுத்துவிட்டார்? (ஆ) அந்த விளைவுகளுக்கு நாபோத்தின் உண்மைப்பற்றுறுதி தகுந்ததாக இருந்ததா? விளக்குங்கள்.
18 சிலசமயங்களில் சாத்தான் நம்முடைய உண்மைப்பற்றுறுதியின்மீது நேர்முகத் தாக்குதல்கள் செய்கிறான். நாபோத்தின் காரியத்தைக் கவனியுங்கள். அவருடைய திராட்சத்தோட்டத்தை விற்கும்படி அரசன் ஆகாப் அவரை வற்புறுத்தினபோது, அவர் இவ்வாறு பதில் சொன்னார்: “நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்கு விற்றுப்போடாதபடி யெகோவா என்னைக் காப்பாராக.” (1 இராஜாக்கள் 21:3) நாபோத் பிடிவாதக்காரராக இல்லை, அவர் உண்மைப்பற்றுறுதியுள்ளவராக இருந்தார். இஸ்ரவேலர் ஒருவரும், பரம்பரையாக வரும் சுதந்திர நிலத்தை நிரந்தரமாக விற்றுவிடக்கூடாது என்று மோசேயின் நியாயப்பிரமாணம் கட்டளையிட்டது. (லேவியராகமம் 25:23-28) தான் கொல்லப்படும்படி இந்தக் கொடிய அரசன் செய்விப்பான் என்று நாபோத் நிச்சயமாய் அறிந்திருந்தார்; ஏனெனில், யெகோவாவின் தீர்க்கதரிசிகள் பலரைக் கொன்றுபோடும்படி ஆகாப் தன் மனைவியாகிய யேசபேலை ஏற்கெனவே அனுமதித்திருந்தான்! இருந்தபோதிலும் நாபோத் உறுதியாக நிலைநின்றார்.—1 இராஜாக்கள் 18:4.
19 உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பதற்குச் சில சமயங்களில் பெரும் தியாகம் தேவைப்படுகிறது. ‘பேலியாளின் மக்கள்’ சிலருடைய உதவியுடன் யேசபேல், நாபோத் செய்யாத ஒரு குற்றத்தை அவர்மேல் பொய்யாகச் சுமத்தினாள். இதன் விளைவாக அவரும் அவருடைய குமாரரும் கொல்லப்பட்டனர். (1 இராஜாக்கள் 21:7-16; 2 இராஜாக்கள் 9:26) நாபோத்தை உண்மைப்பற்றுறுதியுள்ளவர் என்று கருதினது தவறென இது அர்த்தமாகிறதா? இல்லை! இப்போதே யெகோவாவின் நினைவில் ‘பிழைத்திருக்கிறவர்களாக’ இருக்கிற உண்மைப்பற்றுறுதியுள்ள ஆண்களும் பெண்களுமானோருக்குள் நாபோத்தும் இருக்கிறார்; உயிர்த்தெழுப்பப்படும் சமயம் வரும் வரையில் பிரேதக்குழியில் பத்திரமாய்த் தூங்கிக்கொண்டிருக்கிறார்.—லூக்கா 20:38; அப்போஸ்தலர் 24:15.
20. நம்முடைய உண்மைப்பற்றுறுதியைக் காத்துவருவதற்கு, நம்பிக்கை எவ்வாறு நமக்கு உதவி செய்யலாம்?
20 இன்று யெகோவாவிடம் உண்மைப்பற்றுறுதியுள்ளோராக இருப்போருக்கு இதே வாக்குறுதி நம்பிக்கை அளிக்கிறது. உண்மைப்பற்றுறுதியுடன் இருப்பதற்கு இந்த உலகத்தில் நாம் பெரும் விலை செலுத்த வேண்டியதாக இருக்கலாம் என்று அறிந்திருக்கிறோம். தாம் உண்மைப்பற்றுறுதியுள்ளவராக இருப்பதற்கு, இயேசு கிறிஸ்து தம்முடைய உயிரை விலையாகச் செலுத்தினார்; தம்மைப் பின்பற்றுவோரும் அவ்வாறே நடத்தப்படுவர் என்று அவர்களிடம் சொன்னார். (யோவான் 15:20) எதிர்காலத்திற்கான அவருடைய நம்பிக்கை அவரைத் தாங்கி பலப்படுத்தினதுபோல், நம்முடைய நம்பிக்கையும் நம்மைப் பலப்படுத்துகிறது. (எபிரெயர் 12:2) இவ்வாறு, எல்லா வகையானத் துன்புறுத்துதலிலும் நாம் உண்மைப்பற்றுறுதியுள்ளோராக நிலைத்திருக்கலாம்.
21. தம்முடைய உண்மைப்பற்றுறுதியுள்ள ஊழியருக்கு என்ன உறுதிமொழியை யெகோவா அளிக்கிறார்?
21 இன்று நம்மில் சிலரே, நம்முடைய உண்மைப்பற்றுறுதியின்பேரில் அத்தகைய நேர்முகத் தாக்குதல்களை அனுபவிக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், முடிவு வருவதற்கு முன்பாக, மேலும் அதிகமானத் துன்புறுத்துதலை கடவுளுடைய ஜனங்கள் எதிர்ப்படலாம். நாம் எவ்வாறு நம்முடைய உண்மைப்பற்றுறுதியைக் காத்துக்கொள்வோம் என்பதைக் குறித்து உறுதியுடையோராக இருக்கலாம்? இப்போதே நம்முடைய உண்மைப்பற்றுறுதியைக் காத்துவருவதன் மூலம்தானே. யெகோவா நமக்கு ஒரு பெரும் பொறுப்பை—அவருடைய ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதும் போதிப்பதும்—அளித்திருக்கிறார். இந்த மிக முக்கிய வேலையில் உண்மைப்பற்றுறுதியுடன் நாம் தொடர்ந்து நிலைத்திருப்போமாக. (1 கொரிந்தியர் 15:58) யெகோவாவின் அமைப்பினிடமாக நம்முடைய உண்மைப்பற்றுறுதி, மனித அபூரணங்களால் படிப்படியாகக் கெடுக்கப்படுவதற்கு நாம் இடங்கொடாமல் மறுத்துவந்தால், மேலும், தவறான இடத்தில் வைக்கப்பட்ட உண்மைப்பற்றுறுதிகள் போன்ற, உண்மைப்பற்றுத் தவறுதலின் இத்தகைய மறைமுக வகைகளுக்கு எதிராக நம்மைக் காத்துவந்தால், மேலுமதிகக் கடுமையாக நம் உண்மைப்பற்றுறுதி சோதிக்கப்படுகையில், நாம் நன்றாய் ஆயத்தப்பட்டவர்களாக இருப்போம். எவ்வாறாயினும், யெகோவா தம்முடைய உண்மைப்பற்றுறுதியுள்ள ஊழியர்களிடம் தவறாமல் உண்மைப்பற்றுறுதியுள்ளவராக இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நாம் எப்போதும் மன அமைதியோடு இருக்கலாம். (2 சாமுவேல் 22:26, NW) ஆம், தம்முடைய உண்மைப்பற்றுறுதியுள்ள ஊழியர்களை அவர் காப்பார்.—சங்கீதம் 97:10, NW.
[அடிக்குறிப்புகள்]
a அத்தகைய லாபமுண்டாக்கின வியாபார நடவடிக்கையைத் தாக்குவதற்கு இயேசு தைரியமுடையவராக இருந்தார். ஒரு சரித்திராசிரியர் குறிப்பிடுவதன் பிரகாரம், ஆலய வரி, ஒரு தனிப்பட்ட பூர்வ யூத நாணயத்தில் செலுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு, ஆலயத்துக்கு வருவோர் பலர், அந்த வரியைச் செலுத்துவதற்குத் தங்கள் பணத்தை மாற்ற வேண்டியிருந்திருக்கும். இந்தப் பண மாற்றத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு கட்டணத்தை வாங்கும்படி அந்தப் பணமாற்றம் செய்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு லாபமாக பெரும் பணத்தொகைகள் வசூலிக்கப்பட்டன.
b விழித்தெழு! டிசம்பர் 22, 1993; ஜனவரி 8, 1994; மற்றும் ஜனவரி 22, 1994 காண்க.
c அவர்களுடைய இனத் தொகுதி, கிரேக்க செல்வாக்கை எதிர்த்துப்போராடும்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழும்பின ஹஸிதிம் என்ற தொகுதியிலிருந்து பரம்பரையாக வந்தது. “உண்மைப்பற்றுறுதியுள்ளவர்கள்” அல்லது “பக்திமான்கள்” என அர்த்தப்படுத்தும் கஸிதிம் என்ற எபிரெயச் சொல்லிலிருந்து இந்த ஹஸிதிம்கள் தங்கள் பெயரை ஏற்றார்கள். யெகோவாவின் ‘உண்மைப்பற்றுறுதியுள்ளவர்களைக்’ குறிப்பிடும் வேதவசனங்கள் ஏதோ விசேஷித்த முறையில் தங்களுக்குப் பொருந்தினதென்று அவர்கள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். (சங்கீதம் 50:5) இவர்களும், இவர்களுக்குப் பின் பரிசேயர்களும், நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு எழுத்தையும் விடாப்பிடியாய் எதிர்த்துப் போராடுவோராகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டவர்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ மற்றவர்களின் அபூரணங்கள் நம்மை உண்மைப்பற்றுறுதி தவறுவதற்கு வழிநடத்தாதபடி நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
◻ என்ன வழிகளில் நம் சொந்த அபூரணங்கள் நம்மை உண்மைப்பற்றுறுதி தவறுவதற்கு வழிநடத்தக்கூடும்?
◻ நம்முடைய உண்மைப்பற்றுறுதிகளைத் தவறான இடத்தில் வைக்கும் போக்கை நாம் எவ்வாறு எதிர்த்துத் தடுக்கலாம்?
◻ துன்புறுத்தப்படும் சமயங்களிலுங்கூட நம்முடைய உண்மைப்பற்றுறுதியைக் காத்துக்கொள்வதற்கு எது நமக்கு உதவி செய்யும்?
[பக்கம் 9-ன் பெட்டி]
பெத்தேலில் உண்மைப்பற்றுறுதியுடன் சேவை செய்தல்
“சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.” அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார். (1 கொரிந்தியர் 14:40) ஒரு சபை செயல்படுவதற்கு, ‘கிரம,’ அமைப்புமுறை தேவைப்படும் என்பதை பவுல் அறிந்திருந்தார். அவ்வாறே இன்று, சபை உறுப்பினரை புத்தகப் படிப்பு நடத்தப்படும் பல்வேறு இடங்களுக்கு நியமித்தல், வெளி ஊழியத்திற்காகக் கூடும் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், பிராந்தியம் சரியாக ஊழியம் செய்து முடிக்கப்படுவதைக் கவனித்தல், ஆகியவற்றைப்போன்ற நடைமுறையான காரியங்களில் மூப்பர்கள் தீர்மானங்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர். இத்தகைய ஏற்பாடுகள், சில சமயங்களில் உண்மைப்பற்றுறுதியைச் சோதிக்கிற பரீட்சைகளாகலாம். அவை தேவாவியால் ஏவப்பட்ட கட்டளைகள் அல்ல, ஒவ்வொரு தனி நபரின் சம்மதத்துக்கும் ஒத்தவையாக அவை இருக்க முடியாது.
கிறிஸ்தவ சபையில் செய்யப்பட்டிருக்கிற நடைமுறைக்குரிய ஏற்பாடுகள் சிலவற்றிற்கு உண்மைப்பற்றுறுதியுடையோராக இருப்பதை ஒரு சவாலாக சிலசமயங்களில் நீங்கள் காண்கிறீர்களா? அப்படியானால், பெத்தேலின் முன்மாதிரி உங்களுக்கு உதவியாயிருப்பதாக நீங்கள் காணலாம். “தேவனுடைய வீடு” என்று அர்த்தப்படும் எபிரெய பதமாகிய பெத்தேல் என்ற பெயர், ஐக்கிய மாகாணத்திலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமை அலுவலகம் உட்பட, எல்லா 104 கிளை அலுவலகங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. d பெத்தேலில் தங்கி வேலை செய்கிற விருப்பார்வ ஊழியர்கள், இந்த இடங்கள் யெகோவாவுக்கு பயபக்தியையும் உயர் மதிப்பையும் பிரதிபலிக்க வேண்டுமென விரும்புகின்றனர். இது, ஒவ்வொருவரின் பங்கிலும் உண்மைப்பற்றுறுதியைக் கேட்பதாயிருக்கிறது.
பெத்தேலைப் பார்க்க வருவோர், அங்கு தாங்கள் காண்கிற ஒழுங்கமைப்பையும் சுத்தத்தையும் பற்றி அடிக்கடி குறிப்பிடுகின்றனர். வேலைசெய்பவர்கள் ஒழுங்காக ஒன்றுபடுத்தி அமைக்கப்பட்டு மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்; அவர்களுடைய பேச்சும், ஒழுக்கமுறைகளும், அவர்களுடைய தோற்றமுங்கூட, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ மனசாட்சியைப் பிரதிபலிக்கின்றன. பெத்தேல் குடும்பத்தின் எல்லா உறுப்பினரும், கடவுளுடைய வார்த்தையின் தராதரங்களை உண்மைப்பற்றுறுதியுடன் கடைப்பிடிக்கின்றனர்.
கூடுதலாக, ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக வாழ்தல் (ஆங்கிலம்) என்ற தலைப்பையுடைய கையேடு ஒன்றை நிர்வாகக் குழுவினர் அவர்களுக்கு அளிக்கிறார்கள். ஒன்றுசேர்ந்து நன்றாக வேலை செய்ய, அத்தகைய பெரிய குடும்பத்திற்குத் தேவையான, நடைமுறையில் பயன்படுத்த முடிகிற சில ஏற்பாடுகளை அது தயவாகக் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 133:1) உதாரணமாக, அறைவசதி, சாப்பாடுகள், உடல்நலம் உடையும் சிகை அலங்காரமும், இன்னும் இவற்றைப்போன்ற காரியங்களைக் கையாளுகிறது. தங்கள் சொந்த விருப்பங்கள் வேறொரு திக்கில் அவர்களை வழிநடத்தலாம் என்றபோதிலும், அத்தகைய ஏற்பாடுகளை பெத்தேல் குடும்ப உறுப்பினர் உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரித்துக் கடைப்பிடிக்கின்றனர். இந்தக் கையேட்டை, கிளர்ச்சியற்ற சட்டங்களும் விதிமுறைகளும் அடங்கிய ஒரு தொகுப்பாக அல்ல, ஒற்றுமையையும் ஒத்திசைவையும் முன்னேற்றுவிக்கும்படி திட்டமிடப்பட்ட பயனுள்ள வழிகாட்டு குறிப்புகளின் ஒரு தொகுதியாகவே அவர்கள் கருதுகின்றனர். பைபிளில் ஆதாரங்கொண்ட இந்தச் செயற்படுமுறைகளைக் கடைப்பிடிப்பதில் கண்காணிகள் உண்மைப்பற்றுறுதியுள்ளோராக இருக்கிறார்கள்; தங்கள் பரிசுத்த பெத்தேல் சேவையைத் தொடர்ந்து நிறைவேற்றிவரும்படி பெத்தேல் குடும்பத்தினரை உடன்பாடான முறையில் கட்டியெழுப்பி ஊக்குவிப்பதில் அவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
d இந்தத் தொழிலக, அலுவலக, மற்றும் தங்கும் பகுதிகள், கடவுளுடைய மகா ஆவிக்குரிய ஆலயத்தை, அல்லது வீட்டை அமைவிக்கிறதில்லை. தூய்மையான வணக்கத்திற்குரிய கடவுளுடைய ஏற்பாடே அவருடைய ஆவிக்குரிய ஆலயமாக இருக்கிறது. (மீகா 4:1) அத்தகையதாக அது, பூமியின்மீதுள்ள எந்த சடப்பொருளான கட்டட அமைப்புக்கும் மட்டுப்படுத்தப்பட்டில்லை.
[பக்கம் 10-ன் பெட்டி]
உண்மைப்பற்றுறுதியாளனும் சட்டக்கடைப்பிடிப்பாளனும்
“உண்மைப்பற்றுறுதியாளனுக்கும் சட்டக் கடைப்பிடிப்பாளனுக்கும் உள்ள இந்தத் தனிவேறுபாடு எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் காணப்படலாம்” என்று, முன்னே 1916-ல் என்ஸைக்ளோபீடியா ஆஃப் ரிலிஜன் அண்ட் எத்திக்ஸ் குறிப்பிட்டது. அது இவ்வாறு விளக்கினது: “சட்டக் கடைப்பிடிப்பாளன் இருக்கிறான், தனக்குச் சொல்லப்படுகிறதை அவன் செய்கிறான், எந்தச் சட்டங்களையும் மீறுகிறதில்லை; எழுதப்பட்டு வாசிக்க முடிகிற ஒவ்வொரு வார்த்தையையும் கடைப்பிடிக்கிறான். இதைச் செய்கிற உண்மைப்பற்றுறுதியுள்ளவனும் இருக்கிறான், ஆனால், . . . இவன்மீது மேலும் அதிகமாக நம்பிக்கை வைக்கலாம், இவன் தன் முழு மனதையும் தன் கடமையின்மேல் ஊன்றவைக்கிறான். நிறைவேற்ற வேண்டிய நோக்கத்தின் உள்ளார்ந்த கருத்துக்கு இசைவாகத் தன் மனப்பான்மையை அமைத்துக்கொள்கிறான்.” பின்னால், இதே புத்தகம் இவ்வாறு குறிப்பிட்டது: “உண்மைப்பற்றுறுதியுடையோராக இருப்பது சட்டத்தைக் கடைப்பிடிப்பதைப் பார்க்கிலும் மிக அதிகப்பட்டிருப்பதாக உள்ளது. . . உண்மைப்பற்றுறுதியுள்ள மனிதன், முழு இருதயத்தோடும் மனதோடும் சேவிப்பவனாக, சட்டத்தைக் கடைப்பிடிப்பவனிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுகிறான் . . . தெரிந்து வேண்டுமென்றே செய்யும், அல்லது செய்யவேண்டியதைச் செய்யாமல் விடும், அல்லது அறியாமல் விடும், இத்தகைய பாவங்களைச் செய்வதற்கு அவன் தன்னை அனுமதிப்பதில்லை.”