‘தேவன் உங்கள் பயிற்சியை முடிவுக்குக் கொண்டுவருவார்’
ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகும் ஓர் மல்யுத்த வீரன் கடினமாக உழைத்து தன்னைப் பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும். அந்த மகத்தான நாளன்று தன்னால் கூடிய வரையில் மிகச் சிறந்த பங்கை நிறைவேற்ற தன்னுடைய உடலை உருவமைக்க அவன் விரும்புகிறான். கிறிஸ்தவர்களுங்கூட ஒரு வித்தியாசப்பட்ட இலக்கிற்குக் கடினமாக உழைத்துத் தங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு சொன்னான்: “தேவபக்திக்கேதுவான இலக்கிற்கு உன்னை நீயே பயிற்றுவித்துக்கொண்டிரு.”—1 தீமோத்தேயு 4:7, NW.
இவ்வாறு ஒரு கிறிஸ்தவன் ஆவிக்குரிய நீதியில் தன்னைத்தானே உருவமைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஓர் மல்யுத்த வீரன் எவ்வாறு தன் உடலை கட்டமைத்துக் கொள்கிறானோ, அவ்வாறே ஒரு கிறிஸ்தவனும் தன்னுடைய ஆவிக்குரிய பலத்தையும் பொறுமையையும் கட்டமைத்துக் கொள்கிறான். கடவுளுடைய வார்த்தையை படிப்பதனாலும், ஜெபத்தினாலும், உடன் கிறிஸ்தவர்களோடு ஒழுங்காக கூட்டுறவு கொள்வதனாலும் தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படையாக தெரிவிப்பதனாலும் இதை அவன் செய்கிறான்.
மல்யுத்த வீரன் ஒருவனுக்கு எப்போதும் பயிற்சி தருபவர் ஒருவர் இருக்கிறார், கிறிஸ்தவர்களுங்கூட ஒரு பயிற்சியாசிரியரை கொண்டிருக்கின்றனர். அவர் யார்? யெகோவா தேவனை தவிர வேறொருவரும் இல்லை! கிறிஸ்தவர்களுடைய பயிற்சி திட்டத்தினிடம் யெகோவாவினுடைய அக்கறையை பேதுரு அப்போஸ்தலன் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகிறான்: “சகல கிருபையும் பொருந்தின தேவன்தாமே . . . உங்களைச் சீர்ப்படுத்தி [உங்கள் பயிற்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, NW] ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.” (1 பேதுரு 5:10) யெகோவா நமக்கு என்ன பயிற்றுவிப்பை கொடுக்கிறார்? அநேக வகைகளில் கொடுக்கிறார், கிறிஸ்தவர்கள் என்ற கட்டமைப்புக்குள் நிலைதங்கியிருக்க நாம் விரும்பினால் அனைத்தும் இன்றியமையாதது.
நேரடியான சிட்சை
பேதுருதாமே யெகோவாவிடத்திலிருந்து பயிற்றுவிப்பை பெற்றான். அவனுடைய அனுபவத்திலிருந்து அநேக காரியங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். சில சமயங்களில் பேதுரு பயிற்றுவிக்கப்பட்டதானது வேதனையூட்டும் ஒன்றாக இருந்தது. தேவனுடைய நோக்கத்திற்கிணங்க செயல்படுவதிலிருந்து இயேசுவை மனத்தளர்வுண்டாக்க பேதுரு முயற்சி செய்தபோது, “எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என இயேசு மறு உத்தரவு கூறுகையில் பேதுரு எவ்வாறு உணர்ந்திருப்பான் என்பதை கற்பனை செய்து பாருங்கள். (மத்தேயு 16:23) அநேக ஆண்டுகளுக்குப் பிற்பாடு, மனுஷரைப் பற்றிய பயம் ஞானமற்ற முறையில் செயல்பட அவனை வழிநடத்தினபோது அவன் எவ்வாறு உணர்ந்தான் என்பதையுங்கூட கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் யெகோவாவின் சிட்சையை பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு செயல்படுத்தினான்: “பேதுரு (கேபா) அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன் மேல் குற்றஞ்சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.”—கலாத்தியர் 2:11-14.
என்றாலும், பேதுருவை இரண்டு சமயங்களிலும் யெகோவா பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என்பதை அவன் கற்றுணர்ந்தான். (எபிரெயர் 12:11) இவ்விதமான பலமான கடிந்துரைப்புகளை யெகோவாவிடத்திலிருந்து வந்த சிட்சையாக ஏற்றுக் கொள்வதானது, பேதுருவை, காரியங்களின் பேரில் சரியான கருத்தைப் பெற உதவி செய்தது. மேலும், சாந்தம் மற்றும் மனத்தாழ்மை போன்ற அதிமுக்கியமான கிறிஸ்தவ குணங்களில் அவனை அது பயிற்றுவித்தது.—நீதிமொழிகள் 3:34; 15:33.
நிலைமைகளை கையாளுதல்
யெகோவா, கையாளுவதற்கு கடினமான சூழ்நிலைமைகளை எழும்ப அனுமதிப்பதன் மூலம் நம்மை பயிற்றுவிக்கக்கூடும், சில சமயங்களில், இவை கிறிஸ்தவ சபைக்குள்ளாகவுங்கூட இருக்கலாம். நாம் வழிநடத்துதலுக்காக ஜெபிப்பதனாலும், நாம் கற்றுக்கொண்ட பைபிள் நியமங்களைப் பொருத்தி பிரயோகிப்பதனாலும், இவ்விதமான நியமங்களைப் பொருத்துவது எப்போதும் எவ்வாறு சிறந்த வழிவகையாக இருக்கிறது என காண்பதாலும் நாம் கிறிஸ்தவர்களாக வளர்ச்சியடைகிறோம்.
இயேசுவின் அப்போஸ்தலர்களுக்கிடையில் எழும்பின ஆள்த்தன்மை சம்பந்தப்பட்ட மோதலில் வாக்குவாதத்தில்பேதுரு உட்பட்டிருந்தான். இவ்வகையான மோதல்கள் வாக்குவாதங்கள்—உண்மையில் அபூரணத்தன்மையின் விளைவாகவும் அனுபவமின்மையின் காரணமாகவும் இருந்தவற்றை—அன்பு, மனத்தாழ்மை, மற்றும் மன்னிக்கும் சுபாவம்—போன்ற அத்தியாவசிய கிறிஸ்தவ குணங்களில் தன்னுடைய சீஷர்களைப் பயிற்றுவிப்பதற்கான சந்தர்ப்பங்களாக, இயேசு எவ்வாறு பயன்படுத்தினார் என காண்பது அக்கறையூட்டும் ஒன்றாக இருக்கிறது.—மத்தேயு 18:15-17, 21, 22; லூக்கா 22:24-27.
பவுலுங்கூட ஆள்த்தன்மை சம்பந்தப்பட்ட மோதல்களை நேரில் காண்பவனாக இருந்தான். (அப்போஸ்தலர் 15:36-40; பிலிப்பியர் 4:2) இவ்வகையான பிரச்னைகள் பயிற்சி பெறுவதற்கு எவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்பதை பவுல் பின்வருமாறு விளக்குகிறான்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், யெகோவா உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:13, 14.
முதல் நூற்றாண்டில், அதிக கொடிதான அபாயம் கிறிஸ்தவர்கள் மத்தியில் தோன்றினது. இதைப் பற்றி பேதுரு பின்வருமாறு எச்சரித்ததாவது: “உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குள் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு தீவிரமான அழிவை வருவித்துக் கொள்வார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.” (2 பேதுரு 2:1, 2) இந்த அனுபவம் மனந்திரும்பாத “கள்ளப்போதகர்கள்” அழிவதில் விளைவடையும். (2 பேதுரு 2:3) ஆனால் விசுவாசத்துடன் நிலைநின்றவர்களைப் பற்றியதென்ன?
இந்த அனுபவம் “உண்மையான மனதை [தெளிந்த சிந்தனா ஆற்றல்களை, NW] எழுப்ப” அவர்களைப் பயிற்றுவிக்கும். (2 பேதுரு 3:2) கள்ளப்போதகங்கள் உள்ளே நுழைவதற்கு எதிராக காத்துக் கொள்வதில் அவர்கள் விழிப்புடனிருப்பதானது தங்கள் விசுவாசத்திற்கான காரணங்களை விமர்சிக்க அவர்களை அழைக்கும். அவர்கள் “கள்ளப் போதகர்க”ளுடைய செயல்களின் மோசமான முடிவுகளைக் காண்கையிலேயே, கிறிஸ்தவ சத்தியத்தினிடமாக அவர்களுடைய பற்றுறுதி இன்னும் பலப்படுத்தப்படுகிறது.—2 பேதுரு 3:3-7.
உதாரணமாக, ஒரு சபையிலே, வயதான யோவான் அப்போஸ்தலன் தீயோத்திரேப்பு என்ற ஒரு குறிப்பிட்ட மனுஷனால் எதிர்க்கப்பட்டான். அவன் யோவானின் அதிகாரத்திற்கு எவ்வகையிலும் மதிப்பு காட்டாமல் முதன்மையாயிருக்க விரும்பினவன், மேலும், அவன் யோவானிடத்திலிருந்து செய்தி எடுத்து வந்த ஆட்களை ஏற்றுக் கொள்ளாமலிருக்கிறதுமின்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் சபை நீக்கம் செய்ய முற்பட்டான். தீயோத்திரேப்பு இருந்த அதே சபையிலே இருந்த உண்மையான கிறிஸ்தவர்களுக்கு இது மனவேதனை தரும் ஒன்றாக இருந்திருக்கக்கூடும். ஆனால் இது தானே அவர்கள் “தீமையானதைப் பின்பற்று”கிறவர்கள் அல்லர் என்பதைக் காட்ட ஒரு வாய்ப்பை அவர்களுக்கு அளித்தது, இவ்வாறு யெகோவாவுக்கும் அப்போஸ்தலரின் அதிகாரத்திற்கும் உண்மைப்பற்றுறுதியில் மேம்பட்ட பயிற்சி பெற அவர்களைச் செய்தது—3 யோவான் 9-12.
கிறிஸ்தவர்களல்லாதவர்களோடு செயல் தொடர்பு கொள்கையில்
இயேசு தன்னைப் பின்பற்றுகிறவர்கள் உலகத்தின் பாகமானவரல்லர் என கூறினார். (யோவான் 17:16) ஒரு கிறிஸ்தவனுடைய முதல் உண்மைப்பற்றுறுதியானது யெகோவாவுக்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் இருக்க வேண்டும். அவன் தேவனுடைய ஒழுக்க தராதரங்களைக் காத்துக்கொள்ள முயலுகிறான். ஆதலால் அவனுடைய முக்கிய அக்கறைகளும் கவனமும் உலகத்திலுள்ளவர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. என்றாலும், ஒரு கிறிஸ்தவன் உலகத்தில் வாழ்ந்தாக வேண்டும், இது கட்டாயமாக அழுத்தங்களைக் கொண்டுவரும்.
பேதுரு, தன்னுடைய நீண்ட கால ஊழியத்தின்போது, அநேக சமயங்களில், கிறிஸ்தவர்கள் உலகத்திற்குத் தேவையானவற்றை அவர்களுடைய மனசாட்சி தூண்டும் காரியங்களோடு சீர்தூக்கிப் பார்த்தல் சம்பந்தமாக கடினமான தீர்மானங்கள் செய்ய வேண்டியிருப்பதைப் பார்த்திருக்கக்கூடும். பேதுரு தன்னுடைய முதலாம் நிருபத்திலே, கிறிஸ்தவர்கள் “நல் மனசாட்சியுடையவர்களாய்” இதை எப்படிச் செய்யலாம் என்பதற்குத் தெளிவான, நடைமுறைக்கேதுவான புத்திமதியைக் கொடுத்தான்.—2 பேதுரு 2:13-20; 3:1-6, 16.
நிச்சயமாகவே, கிறிஸ்தவர்களாக, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் தேவைகளுக்கு நாம் ஒருபோதும் கவனம் கொடுக்காது, இருக்கப்போகும் அந்தக் காலத்திற்காக நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கிடையில் நாம் சகிப்புத்தன்மையில் பயிற்றுவிக்கப்பட்டு சோதனைகளுக்கு எதிராகவும் தேவபத்தியற்ற செல்வாக்குகளுக்கு எதிராகவும் உண்மைப்பற்றுறுதியை செயல்முறைகளில் மெய்ப்பித்துக் காட்ட நாம் அனுமதிக்கப்படுகிறோம். நாம் வித்தியாசப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி பைபிள் நியமங்களைப் பொருத்துவதில் அனுபவம் பெறுகிற சமயத்திலேயே நாம் யெகோவா செயல்பட விரும்புகிற அறிவின்படி திடமனதோடு அந்த வழியில் செயல்படுவோமேயானால் நாம் நடைமுறைக்கேதுவான ஞானத்திலும் திடமனதுடன் இருப்பதிலும் பயிற்றுவிக்கப்படுகிறோம். இந்த ஒழுங்குமுறையில் வாழ்ந்ததன் காரணமாகவும் அநேக கடினமான பிரச்னைகள் வெற்றிகரமாக கையாண்டதன் காரணமாகவும் ஆ, எவ்வளவு அதிகமான பயிற்சியை நாம் பெற்றிருப்போம் என்பதைக் குறித்து எண்ணிப் பாருங்கள்!
துன்புறுத்தலின் கீழ்
தேவன் நம்மைப் பயிற்றுவிப்பதைக் குறித்து பேதுரு பேசுகையில், அவன் குறிப்பாக துன்புறுத்தலுடன் அதைத் தொடர்புடையதாக இணைக்கிறான். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலை எதிர்பார்க்க வேண்டும் என்பதை அவன் பின்வருமாறு காண்பிக்கிறான்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத் தேடிச் சுற்றித் திரிகிறான்.”—1 பேதுரு 5:8; 2 தீமோத்தேயு 3:12-ஐயும் பாருங்கள்.
பேதுரு தானே தனிப்பட்டவிதமாக துன்புறுத்தலை அனுபவித்ததன் காரணமாக இதைக் குறித்து பேசுவதற்கு அவன் யோக்கியதையுள்ளவனாக இருந்தான். கிறிஸ்தவ சபையின் ஆரம்ப காலங்களிலே அவனும் மற்ற அப்போஸ்தலர்களும் அடிக்கப்பட்டு பிரசங்கித்தலை நிறுத்தும்படி கட்டளையிடப்பட்டார்கள். அவர்களுடைய பிரதிபலிப்பு? அவர்கள் “அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தை விட்டுப் புறப்பட்டுப் போனா”ர்கள்.—அப்போஸ்தலர் 5:41.
இதனால்தான், பேதுரு பின்வருமாறு சொல்லுகையில், அனுபவத்திலிருந்தும் ஏவுதலின் கீழும் பேசினான்: “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானது உங்கள் மேல் தங்கியிருக்கிறது; அவர்களாலே தூஷிக்கப்படுகிறது; உங்களாலே மகிமைப்படுகிறது.”—1 பேதுரு 4:13, 14, NW.
ஆம், நேரடியான துன்புறுத்தலானது ஒரு வகை பயிற்சியாக இருக்கக்கூடும். இதன் கீழ், ஒரு கிறிஸ்தவனானவன் இன்னும் அதிகமாக தேவனுடைய ஆவியின் மீது நம்பியிருக்க கற்றுக்கொள்கிறான். அவனுடைய விசுவாசமானது “சோதிக்கப்பட்டு [சோதிக்கப்பட்ட குணமாக, NW]” வளர்ச்சியுறுகிறது. (1 பேதுரு 1:7) யெகோவாவுடைய வல்லமையின் மீது சார்ந்த திடமனதில் அவன் பயிற்றுவிக்கப்படுகிறான். (2 தீமோத்தேயு 1:7) அவன் நீடித்து தாங்கும் ஆற்றலுடைய சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்கிறான், மேலும், இயேசுவைப் போல, அவன் “பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்”கிறான்.—எபிரெயர் 5:8; 1 பேதுரு 2:23, 24.
யெகோவா நம் பயிற்சியை முடிவுக்குக் கொண்டுவருகிறார்
நிச்சயமாகவே, துன்புறுத்தல் உட்பட, ஒரு கிறிஸ்தவன் சகித்திருக்கும் கடினமான பிரச்னைகள் தேவனிடத்திலிருந்து வருகிறதில்லை. யாக்கோபு பின்வருமாறு ஆலோசனை சொல்லுகிறான்: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” (யாக்கோபு 1:13) பிரச்னைகள், அநேக காரணங்களினிமித்தம் எழும்பக்கூடும், ஆட்கள் தப்பிதங்கள் இழைப்பதும் அல்லது தங்களுடைய சுய இஷ்டத்தினால் தவறுகள் இழைப்பதும் இதில் உள்ளடங்கும் என்றாலும், இவ்வகையான காரியங்கள் நிகழும் ஒன்றாக இருப்பதால், யெகோவா தன்னுடைய ஊழியர்களை முக்கிய கிறிஸ்தவ தன்மைகளில் பயிற்றுவிப்பதற்கு இவற்றைப் பயன்படுத்துகிறார்.
யோபு, எரேமியா, பேதுரு, பவுல் மற்றும் பைபிள் காலங்களில் இருந்த கடவுளுடைய ஊழியர்கள் அனைவரும் இம்முறையில் பயிற்றுவிக்கப்பட்டனர். நாமுங்கூட, பல்வேறுபட்ட கடினமான சூழ்நிலைகளை எதிர்ப்படுகையில், அவை யெகோவாவால் அனுமதிக்கப்படும் பயிற்சிக்கான ஆதாரம் என கருதவேண்டும். யெகோவாவின் பலத்தினால் அவற்றை நாம் எதிர்ப்பட்டு சமாளிப்பதன் மூலம், கீழ்ப்படிதலிலும், ஞானத்திலும், மனத்தாழ்மையிலும், திடமனதிலும், அன்பிலும், பொறுமையிலும், மற்றும் மற்றநேக குணாதிசயங்களிலும் நாம் பயிற்றுவிக்கப்படுவோம்.—யாக்கோபு 1:2-4-ஐ ஒத்துப்பாருங்கள்.
நாம் பயிற்சிபெறும் இந்த நிலையானது ஒரு நாள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றறிந்திருப்பதனாலுங்கூட நாம் உற்சாகமடைகிறோம். இதைக் கொண்டு, பேதுரு தன் உடன் கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு ஆறுதலளித்தான், அவன் சொன்னதாவது: “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்துவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன் தாமே கொஞ்சக் காலம் பாடநுபவிக்கிற உங்களை சீர்ப்படுத்தி [உங்களது பயிற்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, NW] ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக.” (1 பேதுரு 5:10) பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை எதிர்நோக்கியிருக்கும் “திரள்கூட்டத்தினருக்கு” இவ்வார்த்தைகள் அதே உந்துவிப்போடு பொருந்துகின்றன.
அந்தக் கருத்து தன்னிலையிலேயே, இவ்வித பயிற்றுவிப்பு அனுபவங்களுக்குப் பொறுமையுடன் கீழ்ப்பட்டிருக்கவும், விட்டுக்கொடுக்காமல் இருப்பதில் தீர்மானமுள்ளவர்களாக இருக்கவும் நமக்கு உதவுகிறது. இதைச் செய்வதன் மூலம், நாம் பவுலுடைய பின்வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை அனுபவிப்போம்: “நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”—கலாத்தியர் 6:9. (w87 6⁄15)