யெகோவாவின் நாளை மனதில் இடைவிடாது வைத்துவாருங்கள்
‘கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்திருப்பார்கள்.’—2 பேதுரு 3:3, NW.
1. தற்கால கிறிஸ்தவர் ஒருவர் என்ன அவசர உணர்வுடையவராக இருந்தார்?
முழுநேர போதக ஊழியராக 66 ஆண்டுகளுக்கு மேற்பட்டு சேவை செய்த ஒருவர் இவ்வாறு எழுதினார்: “அவசரத் தன்மையின் கூருணர்ச்சி எனக்கு எப்போதும் இருந்தது. அர்மகெதோன் மிக நெருங்கியிருப்பது என் சிந்தனையில் எப்போதும் இடைவிடாமல் இருந்துவந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) ‘யெகோவாவின் நாளினது வந்திருக்த்தலை மனதில் இடைவிடாது வைத்திருக்கும்படி’ அப்போஸ்தலன் பேதுரு ஊக்குவித்த பிரகாரம், என் தகப்பனும், அவருக்கு முன்னதாக அவருடைய தகப்பனும் செய்ததைப்போல், நானும் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகத்தை, ‘காணாதபோதிலும் நிச்சயமான’ ஒன்றாக எப்போதும் அதைக் கருதிவந்திருக்கிறேன்.”—2 பேதுரு 3:11, 12, NW; எபிரெயர் 11:1; ஏசாயா 11:6-9; வெளிப்படுத்துதல் 21:3, 4.
2. யெகோவாவின் நாளை மனதில் இடைவிடாது வைப்பது என்பதன் அர்த்தம் என்ன?
2 யெகோவாவின் நாளை ‘மனதில் இடைவிடாது வைத்திருக்கும்படி’ பேதுரு சொன்னது, அதை நம் மனதிலிருந்து விலக்காமல் நாம் வைத்திருப்பதைக் குறிக்கிறது. யெகோவா, தாம் வாக்களித்த புதிய உலகத்தை ஸ்தாபிப்பதற்குத் தொடங்கும் நடவடிக்கையாக, இந்தக் காரிய ஒழுங்குமுறையை அவர் அழிக்கப்போகும் அந்த நாள் வெகு சமீபத்தில் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. உடனடியாக நமக்கு முன்னால் அது இருப்பதாக, நாம் அதைத் தெளிவாகக் காணுமளவில் அது நமக்கு மிக மெய்ம்மையானதாய் இருக்க வேண்டும். அப்படித்தான் கடவுளுடைய பூர்வகால தீர்க்கதரிசிகளுக்கு அது அவ்வளவு மெய்ம்மையாக இருந்தது, அது சமீபித்திருப்பதாக அவர்கள் அதைக் குறித்து அடிக்கடி பேசினார்கள்.—ஏசாயா 13:6; யோவேல் 1:15 2:1; ஒபதியா 15; செப்பனியா 1:7, 14.
3. யெகோவாவின் நாளைப் பற்றிய பேதுருவின் அறிவுரையை எது தூண்டுவித்ததாகத் தெரிகிறது?
3 “நாளைக்கு அடுத்த தினம்” அது வரக்கூடும் என்பதுபோல் யெகோவாவின் நாளைக் கருதும்படி பேதுரு ஏன் நம்மைத் தூண்டுவித்தார்? ஏனெனில், தீங்குசெய்வோர் தண்டிக்கப்படப்போகிற காலமாகிய, கிறிஸ்துவின் வாக்குப்பண்ணப்பட்ட வந்திருத்தலைப் பற்றிய எண்ணத்தை சிலர் பரியாசம் செய்யத் தொடங்கியிருந்ததாகத் தெரிகிறது. (2 பேதுரு 3:3, 4) ஆகையால், தன் இரண்டாம் நிருபத்தின் மூன்றாவது அதிகாரத்தில், இந்தப் பரியாசக்காரரின் குற்றச்சாட்டுகளுக்குப் பேதுரு பதிலளிக்கிறார். அதை நாம் இப்போது ஆலோசிப்போம்.
நினைவில் வைக்கும்படி அன்பான வேண்டுகோள்
4. நாம் எதை நினைவில் வைத்திருக்கும்படி பேதுரு விரும்புகிறார்?
4 தன் சகோதரரிடமாக பேதுருவுக்கு இருந்த பாசம், இந்த அதிகாரத்தில் அவர்களை, “பிரியமானவர்களே” என்று அவர் மறுபடியும் மறுபடியுமாகப் பலமுறை குறிப்பிட்டு பேசுவதால் காட்டப்படுகிறது. தங்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்ததை மறவாதிருக்கும்படி அவர்களை அன்போடு கேட்டுக்கொள்பவராய், பேதுரு இவ்வாறு தொடங்குகிறார்: “பிரியமானவர்களே . . . உங்கள் களங்கமற்ற மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். நீங்கள் நினைவுகூரவேண்டியவைகள் பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளும் உங்கள் அப்போஸ்தலர் மூலமாய் வந்த கட்டளையுமே. இந்தக் கட்டளை ஆண்டவரும் இரட்சகருமானவருடையது.”—2 பேதுரு 3:1, 2, 8, 14, 17, தி.மொ.; யூதா 17.
5. யெகோவாவின் நாளைப் பற்றி சில தீர்க்கதரிசிகள் என்ன சொன்னார்கள்?
5 “பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட” எந்த “வார்த்தைகளை” நினைவுகூரும்படி வாசகர்களை பேதுரு ஊக்கமூட்டுகிறார்? ராஜ்ய வல்லமையில் கிறிஸ்துவின் வந்திருத்தலையும், தேவபக்தியில்லாதவர்களின் ஆக்கினைத்தீர்ப்பையும் பற்றியவையே. முன்பே இந்தக் கூற்றுகளுக்கு பேதுரு கவனத்தை இழுத்திருந்தார். (2 பேதுரு 1:16-19; 2:3-10, தி.மொ.) யூதா, ஏனோக்கைக் குறிப்பிடுகிறார். தீங்கு செய்வோர்மீது கடவுள் அளிக்கவிருந்த ஆக்கினைத்தீர்ப்பைப் பற்றி எச்சரித்ததில் முதலாவதாக பதிவுசெய்யப்பட்ட தீர்க்கதரிசியாக அவர் இருந்தார். (யூதா 14, 15) ஏனோக்குக்குப்பின் மற்ற தீர்க்கதரிசிகள் வந்தனர், இவர்கள் எழுதினதை நாம் மறந்துவிட பேதுரு விரும்புகிறதில்லை.—ஏசாயா 66:15, 16; செப்பனியா 1:15-18; சகரியா 14:6-9.
6. கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் சொன்ன எந்தக் கூற்றுகள் யெகோவாவின் நாளைப் பற்றி நமக்கு அறிவொளி அளிக்கின்றன?
6 கூடுதலாக, ‘ஆண்டவரும் இரட்சகருமானவருடைய கட்டளைகளையும்’ நினைவுபடுத்திக்கொள்ளும்படி பேதுரு தன் வாசகர்களுக்குச் சொல்கிறார். இயேசுவின் கட்டளையில் இந்த அறிவுரை அடங்கியிருக்கிறது: “உங்கள் இருதயங்கள் . . . எப்போதாகிலும் பாரமடையாதபடி உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். . . . அந்த நாள் திடீரென ஒரு கண்ணியைப்போல் உங்கள்மேல் வரும்.” “அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருங்கள்.” (லூக்கா 21:34-36; மாற்கு 13:33; தி.மொ.) அப்போஸ்தலர்கள் சொல்லியிருக்கிறவற்றிற்கும் கவனம் செலுத்தும்படி பேதுரு நமக்கு வற்புறுத்தி சொல்கிறார். உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.”—1 தெசலோனிக்கேயர் 5:2, 6.
பரியாசக்காரரின் இச்சைகள்
7, 8. (அ) கடவுளுடைய எச்சரிக்கை செய்திகளைப் பரியாசம் செய்வோர் என்ன வகையான மனிதர்கள்? (ஆ) இந்தப் பரியாசக்காரர் என்ன உரிமைபாராட்டிக்கொள்கிறார்கள்?
7 முன்பு குறிப்பிட்டபடி, பூர்வ காலங்களிலிருந்த இஸ்ரவேலர் யெகோவாவின் தீர்க்கதரிசிகளைப் பரியாசம்பண்ணியிருந்ததைப் போலவே, இத்தகைய எச்சரிக்கையைப் பரியாசம்பண்ண சிலர் தொடங்கியிருந்ததே பேதுருவின் அறிவுரைக்குக் காரணமாக இருக்கிறது. (2 நாளாகமம் 36:16) பேதுரு இவ்வாறு விளக்குகிறார்: “முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நட”ப்பார்கள். 2 பேதுரு 3:3) இந்தப் பரியாசக்காரரின் இச்சைகள் ‘தேவபக்தியற்ற காரியங்களுக்கானவை’ என்று யூதா சொல்கிறார், அவர்களை “மிருகத்தனமான மனிதர், ஆவிக்குரியத்தன்மை இல்லாதவர்கள்” என்று அவர் குறிப்பிடுகிறார்.—யூதா 17-19, NW.
8 ‘அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடப்பவர்கள்’ என்று பேதுரு சொன்ன கள்ளப் போதகர்கள் ஆவிக்குரியத்தன்மை இல்லாதவர்களான இந்தப் பரியாசக்காரருக்குள் இருக்கலாம். (2 பேதுரு 2:1, 10, 14) உண்மையுள்ள கிறிஸ்தவர்களை, அவர்கள் ஏளனமாக இவ்வாறு கேட்கிறார்கள்: “அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே.”—2 பேதுரு 3:4.
9. (அ) கடவுளுடைய வார்த்தையில் வியாபித்திருக்கும் அவசரத் தன்மையின் உணர்வைக் கெடுப்பதற்கு பரியாசக்காரர் ஏன் முயற்சி செய்கிறார்கள்? (ஆ) யெகோவாவின் நாளை மனதில் இடைவிடாமல் வைத்து வருவது எவ்வாறு நமக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கிறது?
9 இந்தப் பரியாசம் ஏன்? கிறிஸ்துவின் வந்திருக்கை ஒருபோதும் நடவாது என்றும், மனித விவகாரங்களில் கடவுள் ஒருபோதும் தலையிடவில்லை, ஒருபோதும் தலையிடப்போவதுமில்லை என்றும் சொல்வதேன்? கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற அவசரத் தன்மையின் உணர்வைக் கெடுப்பதன்மூலம், மற்றவர்களை ஆவிக்குரிய அக்கறையற்ற ஒரு நிலைக்குள் தூங்கச் செய்து, தன்னல கற்பழிப்புகளுக்கு எளிதாய் அவர்களை அகப்பட செய்விப்பதற்கே இந்த மிருகத்தனமான பரியாசக்காரர் நாடுகின்றனர். ஆவிக்குரிய பிரகாரமாய் இன்று விழிப்புள்ளவர்களாக நிலைத்திருப்பதற்கு, எத்தகைய வல்லமைவாய்ந்த ஊக்கமூட்டுதலாக அது நமக்கு இருக்கிறது! யெகோவாவின் நாளை நாம் இடைவிடாமல் மனதில் வைத்து, அவருடைய கண்கள் நம்மை நோக்கிக்கொண்டிருக்கின்றன என்பதை எப்போதும் நினைவுகூருவோமாக! இவ்வாறு, யெகோவாவை ஆர்வத்துடன் சேவித்து, நம் ஒழுக்க தூய்மையை காத்து வருவதற்கு நாம் தூண்டியியக்கப்படுவோம்.—சங்கீதம் 11:4; ஏசாயா 29:15; எசேக்கியேல் 8:12; 12:27; செப்பனியா 1:12.
வேண்டுமென்றேயும் இகழத்தக்கதும்
10. பரியாசக்காரர் சொல்வது தவறு என்பதை பேதுரு எவ்வாறு நிரூபிக்கிறார்?
10 முக்கியமான உண்மையை இத்தகைய பரியாசக்காரர் புறக்கணிக்கின்றனர். அதை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணித்து, மற்றவர்களும் அதை மறந்துவிடும்படி செய்விக்கப் பிரயாசப்படுகின்றனர். ஏன்? மக்களை தாங்கள் இன்னுமதிக எளிதாய் கற்பிழக்கச் செய்வதற்கேயாகும். பேதுரு இவ்வாறு எழுதுகிறார்: “பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள் [“வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள்,” தி.மொ.].” (2 பேதுரு 3:5, 6) ஆம், பூமியிலிருந்த அக்கிரமத்தை, நோவாவின் நாளின் ஜலப்பிரளயத்தின்போது, யெகோவா நிச்சயமாகவே தொலைத்தொழித்தார்; இது இயேசுதாமே அறிவுறுத்தின ஓர் உண்மை. (மத்தேயு 24:37-39; லூக்கா 17:26, 27; 2 பேதுரு 2:5) ஆகையால், பரியாசக்காரர் சொல்வதற்கு நேர்மாறாக, சகலமும் ‘சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாகவே’ தொடர்ந்துகொண்டு இல்லை
11. பூர்வ கிறிஸ்தவர்களின், உரிய காலத்துக்கு முற்பட்ட என்ன எதிர்பார்ப்புகள், அவர்களைப் பரியாசம் செய்யும்படி சிலரை வழிநடத்தின?
11 உண்மையான கிறிஸ்தவர்களுக்கு இன்னும் மெய்ம்மையாக நிறைவேறாத எதிர்பார்ப்புகள் இருந்திருந்ததால் பரியாசக்காரர் அவர்களைப் பரியாசம் செய்திருக்கலாம். இயேசு மரிப்பதற்குச் சில நாட்களுக்கு முன், அவருடைய சீஷர்கள், “தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் [“உடனடியாக,” NW] வெளிப்படுமென்று . . . நினைத்”தார்கள். பின்பு, அவருடைய உயிர்த்தெழுதலுக்குப்பின், ராஜ்யம் அப்போதே உடனடியாக ஏற்படுத்தப்படுமாவென அவர்கள் கேட்டார்கள். மேலும், பேதுரு தன் இரண்டாவது நிருபத்தை எழுதினதற்கு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, “யெகோவாவின் நாள் இங்கே இருக்கிறது” என்று அப்போஸ்தன் பவுலினிடமிருந்தோ அவருடைய தோழர்களிடமிருந்தோ வந்ததாக கருதிக்கொண்ட “வாய்ச்சொல்லான ஒரு செய்தியால்” அல்லது “ஒரு கடிதத்தால்” சிலர் “பரபரப்புற்றிருந்தார்கள்.” (லூக்கா 19:11; 2 தெசலோனிக்கேயர் 2:2, NW; அப்போஸ்தலர் 1:6) எனினும், இயேசுவின் சீஷர்களின் அத்தகைய எதிர்பார்ப்புகள் போலியானவையாக அல்ல, உரியகாலத்திற்கு முற்பட்டவையாக மாத்திரமே இருந்தன. யெகோவாவின் நாள் நிச்சயமாகவே வரும்!
கடவுளுடைய வார்த்தை நம்பத்தக்கது
12. ‘யெகோவாவின் நாளைப்’ பற்றிய அதன் தீர்க்கதரிசனங்களில் கடவுளுடைய வார்த்தை எவ்வாறு நம்பத்தக்கதாக நிரூபித்திருக்கிறது?
12 முன்பு கவனித்ததன் பிரகாரம், யெகோவாவின் பழித்தீர்க்கும் நாள் சமீபித்திருந்தது என்று கிறிஸ்தவ காலத்திற்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகள் அடிக்கடி எச்சரித்தனர். கீழ்ப்படியாமல் மோசமாக நடந்த தம்முடைய ஜனத்தின்மீது, பொ.ச.மு. 607-ல் யெகோவா தம்முடைய பழித்தீர்ப்பை நிறைவேற்றினபோது, சிறிய அளவான ‘யெகோவாவின் நாள்’ வந்தது. (செப்பனியா 1:14-18) பின்னால், பாபிலோனும் எகிப்தும் உட்பட, மற்ற தேசங்கள் அத்தகைய “யெகோவாவின் நாள்” ஒன்றை அனுபவித்தார்கள். (ஏசாயா 13:6-9; எரேமியா 46:1-10; ஒபதியா 15, தி.மொ.) முதல் நூற்றாண்டு யூதக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுங்கூட முன்னறிவிக்கப்பட்டது; பொ.ச. 70-ல் ரோம சேனைகள் யூதேயாவைப் பாழாக்கினபோது இது சம்பவித்தது. (லூக்கா 19:41-44; 1 பேதுரு 4:7) ஆனால், எதிர்காலத்தில் வரவிருக்கிற “யெகோவாவின் நாள்” ஒன்றை பேதுரு குறிப்பிடுகிறார்; அதன் மிகைப்பட்ட அளவில் அது, நோவாவின் நாளில் நடந்த பூகோள ஜலப்பிரளயத்தையுங்கூட மிகச் சிறியதாகத் தோன்றச் செய்யும்!
13. இந்தக் காரிய ஒழுங்குமுறை நிச்சயமாக முடிவடையும் என்பதைச் சரித்திரப் பூர்வமான எந்த முன்மாதிரி மெய்ப்பித்துக் காட்டுகிறது?
13 “அதே வார்த்தையினால்” என்று சொல்லி, வரவிருந்த அந்த அழிவைப் பற்றிய தன் விவரிப்பை பேதுரு தொடங்குகிறார். “கடவுளின் வார்த்தையால்,” ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த பூமி “தண்ணீருக்கு வெளியேயும் தண்ணீரின் மத்தியிலும்” நின்றது, என்று இப்போதுதான் சொல்லியிருந்தார். பைபிளின் சிருஷ்டிப்பு விவரத்தில் விவரிக்கப்பட்ட இந்த நிலைமை, கடவுளுடைய கட்டளையால், அல்லது வார்த்தையால் தண்ணீர்கள் கீழே வீழ்ந்தபோது, ஜலப்பிரளயம் உண்டாவதை சாத்தியமாக்கிற்று. பேதுரு தொடர்ந்து சொல்கிறார்: “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே [கடவுளுடைய] வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கின்றன.” (2 பேதுரு 3:5-7, NW; ஆதியாகமம் 1:6-8) இதற்கு யெகோவாவின் நம்பத்தக்க வார்த்தை நமக்கு இருக்கிறது! தம்முடைய மகா நாளின் பற்றியெரிகிற கோபாக்கினையில்—இந்த “வானங்களுக்கும் பூமிக்கும்”—இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு—அவர் முடிவைக் கொண்டுவருவார்! (செப்பனியா 3:8) ஆனால் எப்பொழுது?
முடிவு வருவதற்கான ஆவல்
14. நாம் இப்பொழுது கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று ஏன் திடநம்பிக்கையுடன் இருக்கலாம்?
14 முடிவு எப்பொழுது வரும் என்று அறிய இயேசுவின் சீஷர்கள் விரும்பினார்கள், ஆகையால் அவரை இவ்வாறு கேட்டார்கள்: “உம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?” அந்த யூத ஒழுங்குமுறை எப்போது முடிவடையும் என்பதைப் பற்றி அவர்கள் கேட்டதாகத் தெரிகிறது; ஆனால் இயேசுவின் பதில், தற்போதைய ‘வானங்களும் பூமியும்’ எப்போது அழிவடையும் என்பதன்பேரிலேயே முக்கியமாய் ஊன்றப்பட்டது. உலகப் போர்கள், உணவு குறைபாடுகள், பூமியதிர்ச்சிகள், நோய், கடுங்குற்றச் செயல்கள் போன்றவற்றை இயேசு முன்னறிவித்தார். (மத்தேயு 24:3-14, NW; லூக்கா 21:5-36) ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக்’ குறிக்குமென இயேசு கொடுத்த அடையாளமும், அதோடுகூட ‘கடைசி நாட்களை’ அடையாளங்காட்டும் என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட காரியங்களும் 1914-ம் ஆண்டிலிருந்து, நிறைவேறி வருவதை நாம் பார்த்து வந்திருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) மெய்யாகவே, இந்தக் காரிய ஒழுங்குமுறைக்குரிய முடிவின் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி பெருமளவில் உள்ளது!
15. இயேசுவின் எச்சரிக்கை இருந்தும், கிறிஸ்தவர்கள் என்ன செய்ய மனம் சாய்ந்திருக்கின்றனர்?
15 யெகோவாவின் நாள் எப்போது வரும் என்பதை அறிய யெகோவாவின் சாட்சிகள் மிகுந்த ஆவலோடு இருந்துவந்திருக்கிறார்கள். அவர்களுடைய மிகுந்த ஆவலில், அது எப்போது வரலாம் என்பதை ஊகித்து மதிப்பிட முயற்சிகள் செய்திருக்கிறார்கள். ஆனால், அப்படி செய்ததில், ‘குறிக்கப்பட்ட காலம் எப்பொழுதென்று அறியாதிருக்கிறோம்’ என்ற தங்கள் எஜமானரின் எச்சரிக்கையைக் கவனத்தில் ஏற்காத இயேசுவின் பூர்வ சீஷர்களைப்போல், அவர்கள் தவறினார்கள். (மாற்கு 13:32, 33) உரிய காலத்திற்கு முற்பட்ட அவர்களுடைய எதிர்பார்ப்புகளின் நிமித்தமாக உண்மையுள்ள கிறிஸ்தவர்களை, பரியாசக்காரர் கேலி செய்திருக்கின்றனர். (2 பேதுரு 3:3, 4) எனினும், யெகோவாவின் நாள் நிச்சயமாக வரும், அவருடைய கால அட்டவணையின்படி வரும், என்று பேதுரு உறுதியளிக்கிறார்.
யெகோவாவின் நோக்குநிலையைக் கொண்டிருப்பது அவசியம்
16. நாம் ஞானமாய் எந்த அறிவுரைக்குச் செவிகொடுக்கிறோம்?
16 பேதுரு இப்பொழுது நம்மை நினைப்பூட்டுகிற பிரகாரம், காலத்தைப் பற்றிய யெகோவாவின் நோக்குநிலையை நாம் கொண்டிருப்பது அவசியம்: “பிரியமானவர்களே, கர்த்தருக்கு [“யெகோவாவுக்கு,” NW] ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.” இதோடு ஒப்பிட, 70 அல்லது 80 ஆண்டுகளான நம்முடைய ஆயுள்காலம் எவ்வளவு குறுகியது! (2 பேதுரு 3:8; சங்கீதம் 90:4, 10) ஆகையால், கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றம் தாமதிப்பதுபோல் தோன்றினால், கடவுளுடைய தீர்க்கதரிசியின் இந்த அறிவுரையை நாம் ஏற்க வேண்டும்: “அது [குறிப்பிட்ட காலம்] தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.”—ஆபகூக் 2:3.
17. பலர் எதிர்பார்த்ததைவிட அதிகம் நீடித்ததாக இந்தக் கடைசி நாட்கள் தொடர்ந்திருக்கிறபோதிலும், எதைக் குறித்து நாம் திட நம்பிக்கையுடன் இருக்கலாம்?
17 இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்கள், பலர் எதிர்பார்த்ததைவிட அதிகமாய் தொடர்ந்து நீடித்திருப்பது ஏன்? பேதுரு அடுத்தபடியாக விளக்குகிற பிரகாரம், நல்ல ஒரு காரணத்தினிமித்தமாகவே ஆகும்: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [“யெகோவா,” NW) தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:9) மனிதவர்க்கம் முழுவதற்கும் மிகச் சிறந்த நலனுக்கேதுவானவற்றையே யெகோவா கருதுகிறார். அவர் பின்வருமாறு சொல்லுகிறபடி, ஜனங்களின் உயிர்களில் அக்கறையுடையவராக இருக்கிறார்: “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்.” (எசேக்கியேல் 33:11) ஆகையால், பரிபூரண ஞானமும் அன்புமுள்ள நம்முடைய சிருஷ்டிகரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, முடிவு சரியான நேரத்தில் வருமென்று நாம் திடநம்பிக்கையுடன் இருக்கலாம்!
எது ஒழிந்துபோகும்?
18, 19. (அ) இந்தக் காரிய ஒழுங்குமுறையை அழிக்கும்படி யெகோவா ஏன் தீர்மானித்தார்? (ஆ) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவை பேதுரு எவ்வாறு விவரிக்கிறார், உண்மையில் எது அழிக்கப்படும்?
18 தம்மைச் சேவிப்போரை யெகோவா உண்மையில் நேசிப்பதால், அவர்களுக்குத் துன்பத்தைக் கொண்டுவருகிற எல்லாரையும் அவர் ஒழித்துப்போடுவார். (சங்கீதம் 37:9-11, 29) முன்னால் பவுல் குறிப்பிட்டதுபோல், எதிர்பாராத நேரத்தில் இந்த அழிவு வரும் என்று பேதுரு குறிப்பிட்டு இவ்வாறு எழுதுகிறார்: “ஆண்டவரின் [“யெகோவாவின்,” NW) நாள் திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமடவென்று அகன்றுபோம், பஞ்சபூதங்கள் வெந்துருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் வெளியாகும்.” (2 பேதுரு 3:10, தி.மொ. 1 தெசலோனிக்கேயர் 5:2) சொல்லர்த்தமான வானங்களும் பூமியும் ஜலப்பிரளயத்தில் அழிந்துவிடவில்லை, யெகோவாவின் நாளின்போதும் அவை அழியமாட்டா. அப்படியானால், எவை “ஒழிந்துபோகும்” அல்லது அழிக்கப்பட்டுப் போகும்.
19 ‘வானங்களைப்’ போல், மனிதவர்க்கத்தின்மீது அதிகாரம் செலுத்திவந்திருக்கிற மனித அரசாங்கங்கள் முடிவடையும், அவ்வாறே ‘பூமியும்’ அல்லது தேவபக்தியற்ற மனித சமுதாயமும் முடிவடையும். “மடமடவென்று” என்பது, வானங்கள் வேகமாய் கடந்துபோவதை ஒருவேளைக் குறிக்கலாம்; இன்றைய சீர்கெட்ட மனித சமுதாயத்தை உண்டுபண்ணுகிற “பஞ்சபூதங்கள்” “வெந்துருகிப்போம்” அல்லது அழிக்கப்படும். ‘பூமி’ அதன் ‘கிரியைகள்’ உட்பட ‘வெளியாக்கப்படும்.’ உலக ஒழுங்குமுறை முழுவதற்கும் அதற்குரிய தகுதியான முடிவை யெகோவா கொண்டுவருகையில், மனிதரின் பொல்லாத கிரியைகளை முழுமையாய் அவர் வெளியாக்குவார்.
உங்கள் நம்பிக்கையின்மீது கவனம் தொடர்ந்து ஊன்றியிருக்கச் செய்யுங்கள்
20. சமீப எதிர்காலத்தில் வரவிருக்கிற சம்பவங்களைப் பற்றிய நம்முடைய அறிவால் நம்முடைய வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட வேண்டும்?
20 திடீரென்று நிகழவிருக்கிற இந்தச் சம்பவங்கள் சமீபித்திருப்பதால், நாம், ‘யெகோவாவின் நாளின் வருகையை மனதில் இடைவிடாமல் வைத்து காத்திருந்து, பரிசுத்த நடத்தைக்குரிய செயல்களிலும் தேவபக்திக்குரிய செயல்களிலும்’ ஈடுபட்டிருக்க வேண்டும் என்று பேதுரு சொல்கிறார். இதைப்பற்றி எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது! “வானங்கள் எரிந்தழிந்துபோம் பூதங்கள் கடுமையான வெப்பத்தால் உருகிப்போம்.” (2 பேதுரு 3:11, 12, NW) திடீரென்று நிகழவிருக்கிற இந்தச் சம்பவங்கள் நாளைக்கே சம்பவிக்கத் தொடங்கக் கூடும் என்ற இந்த உண்மை, நாம் செய்யும் அல்லது செய்யத் திட்டமிடும் எல்லாவற்றையும் பாதிக்க வேண்டும்.
21. தற்போதைய வானங்களுக்கும் பூமிக்கும் பதிலாக எவை அவ்விடத்தை ஏற்கும்?
21 இந்தப் பழைய ஒழுங்குமுறைக்குப் பதிலாக அதன் இடத்தை எது ஏற்கும் என்பதை பேதுரு இப்போது நமக்குச் சொல்கிறார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13; ஏசாயா 65:17) ஆ, எத்தகைய மகத்தான விடுதலை! கிறிஸ்துவும் 1,44,000 உடன் ஆட்சியாளரும் “புதிய” அரசாங்க ‘வானங்களாக’ அமைவார்கள். “புதிய பூமி,” இந்த உலகத்தின் முடிவைத் தப்பிப் பிழைத்திருக்கப்போகிற ஜனங்களால் ஆகியதாயிருக்கும்.—1 யோவான் 2:17; வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3.
அவசரத் தன்மையையும் ஒழுக்கத் தூய்மையையும் காத்துவாருங்கள்
22 (அ) ஆவிக்குரிய எந்தக் கறையையும் அல்லது மாசுவையும் தவிர்க்க எது நமக்கு உதவிசெய்யும்? (ஆ) என்ன ஆபத்தைப் பற்றி பேதுரு எச்சரிக்கிறார்?
22 “ஆகவே, பிரியமானவர்களே,” பேதுரு தொடர்ந்து சொல்கிறார், “இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் மாசற்றவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படக் கருத்தாயிருங்கள். நமது ஆண்டவரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்.” யெகோவாவின் நாளுக்காக ஆவலோடு காத்திருப்பதும், அது தாமதிப்பதுபோல் தோன்றும் எதையும், கடவுளுடைய பொறுமையின் தெரிவிப்பாகக் கருதுவதும், ஆவிக்குரிய எந்தக் கறையையும் மாசுவையும் தவிர்க்க நமக்கு உதவிசெய்யும். இன்னும், ஆபத்து இருக்கிறது! “நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுல்” எழுதினவைகளில், “சில காரியங்கள் அறிகிறதற்கு அறிதானவைகள்; கல்வியில்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோல இவைகளையும் புரட்டுகிறார்கள்; இதினால் அவர்களுக்கு அழிவு வரும்” என்று பேதுரு எச்சரிக்கிறார்.—2 பேதுரு 3:14-16, தி.மொ.
23. பேதுருவின் முடிவான அறிவுரை என்ன?
23 கடவுளுடைய தகுதியற்ற தயவைப்பற்றி பவுல் எழுதினவற்றை, கள்ளப் போதகர்கள் புரட்டி, காமவிகார நடத்தைக்கு ஒரு சாக்குப்போக்காக அவற்றைப் பயன்படுத்தினதாகத் தெரிகிறது. பேதுரு தன் பிரிவு அறிவுரையை எழுதுகையில் இதை ஒருவேளை மனதில் வைத்திருக்கலாம்: “ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு”ங்கள். பின்பு, இவ்வாறு அவர்களை ஊக்குவித்து, தன் நிருபத்தை முடிக்கிறார்: “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் [“தகுதியற்ற தயவிலும்,” NW) அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.”—2 பேதுரு 3:17, 18.
24. என்ன மனப்பான்மையை யெகோவாவின் ஊழியர்கள் எல்லாரும் ஏற்றிருக்க வேண்டும்?
24 தெளிவாகவே, தன் சகோதரரைப் பலப்படுத்தும்படி பேதுரு விரும்புகிறார். தொடக்கத்தில் குறிப்பிட்ட அந்த உண்மையுள்ள 82 வயது சாட்சி வெளிப்படுத்தின அந்த மனப்பான்மையை உடையோராக எல்லாரும் இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்: “‘யெகோவாவின் நாளினது வந்திருத்தலை மனதில் இடைவிடாது வைத்திருக்கும்படி’ அப்போஸ்தலன் பேதுரு ஊக்குவித்தப் பிரகாரம், நான் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகத்தை, ‘காணாதபோதிலும் நிச்சயமான’ ஒன்றாக நான் எப்போதும் கருதிவந்திருக்கிறேன்.” அதே வகையில் நாம் எல்லாரும் நம் வாழ்க்கையை நடத்துவோமாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்
◻ யெகோவாவின் நாளை “மனதில் இடைவிடாது வைத்துவருதல்” என்பதன் அர்த்தமென்ன?
◻ பரியாசக்காரர் எதை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனர், ஏன்?
◻ என்ன காரணத்திற்காக உண்மையுள்ள கிறிஸ்தவர்களைப் பரியாசக்காரர் பரியாசம் செய்திருக்கின்றனர்?
◻ என்ன நோக்குநிலையை நாம் காத்துவரவேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
யெகோவாவின் நாளை மனதில் இடைவிடாமல் வைத்துவருதலும் . . .
[பக்கம் 24-ன் படம்]
. . . பின்தொடரவிருக்கிற புதிய உலகமும்