பாடல் 109
யெகோவாவின் தலைமகனை வாழ்த்தி வரவேற்போம்!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. வாழ்த்-தி வ-ர-வேற்-போம்,
“யா”-வின் த-லை-ம-க-னை!
ஆம், ரா-ஜா-தி ரா-ஜ-னை,
நீ-தி-மா-றா மன்-ன-னை!
அ-வர்-தம் பே-ராட்-சி-யில்
ஆ-சி பொ-ழி-வா-ரே!
யெ-கோ-வா-வின் ஆட்-சி-யை
உ-யர்த்-தி-டு-வா-ரே!
(பல்லவி)
வாழ்த்-தி வ-ர-வேற்-போம்,
“யா”-வின் த-லை-ம-க-னை!
ஆ-ரம்-பம் அ-வ-ராட்-சி!
ஆம், விண்-ணி-லே தே-வாட்-சி!
2. வாழ்த்-தி வ-ர-வேற்-போம்,
“யா”-வின் த-லை-ம-க-னை!
நம் பா-வம் மன்-னிக்-க-வே
மீட்-பு-வி-லை தந்-தா-ரே!
மைந்-த-ரின் ம-ணப்-பெண்-ணே,
த-யார் வெண் ஆ-டை-யில்!
ப-ர-ம வி-வா-க-மே
தீர்க்-கும் வி-வா-த-மே!
(பல்லவி)
வாழ்த்-தி வ-ர-வேற்-போம்,
“யா”-வின் த-லை-ம-க-னை!
ஆ-ரம்-பம் அ-வ-ராட்-சி!
ஆம், விண்-ணி-லே தே-வாட்-சி!
(காண்க: சங். 2:6; 45:3, 4; வெளி. 19:8.)