-
யோசுவா 20:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘மோசே மூலம் நான் உங்களுக்குச் சொன்னபடி, அடைக்கல நகரங்களைத்+ தேர்ந்தெடுங்கள். 3 அப்போதுதான், யாரையாவது தெரியாத்தனமாகவோ எதேச்சையாகவோ கொலை செய்தவன் இந்த நகரங்களுக்கு ஓடிப்போக முடியும். பழிவாங்குபவனால்+ கொல்லப்படாதபடி அங்கே போய் அவன் அடைக்கலம் பெற முடியும்.
-
-
யோசுவா 20:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அவர் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள். நப்தலி மலைப்பகுதியில் உள்ள கலிலேயாவைச் சேர்ந்த கேதேஸ்,+ எப்பிராயீம் மலைப்பகுதியில் உள்ள சீகேம்,+ யூதா மலைப்பகுதியில் உள்ள கீரியாத்-அர்பா,+ அதாவது எப்ரோன், ஆகிய நகரங்களைத் தனியாக* பிரித்து வைத்தார்கள். 8 எரிகோவுக்குக் கிழக்கிலே, ரூபன் கோத்திரத்துக்குச் சொந்தமான பீடபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசர்,+ காத் கோத்திரத்துக்குச் சொந்தமான கீலேயாத்திலுள்ள ராமோத்,+ மனாசே கோத்திரத்துக்குச் சொந்தமான பாசானிலுள்ள கோலான்+ ஆகிய நகரங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.+
-
-
யோசுவா 21:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 லேவியின் வம்சத்தில் வந்த கெர்சோனியர்களுக்கு+ மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருடைய பங்கிலிருந்து கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய பாசானிலுள்ள கோலானும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், பெயேஸ்திராவும் அதன் மேய்ச்சல் நிலங்களும். ஆக மொத்தம், இரண்டு நகரங்கள் கொடுக்கப்பட்டன.
-