உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 20:26, 27
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது.+ உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும்.+ 27 உங்களில் முதலாவதாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்.+

  • லூக்கா 9:48
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 48 “இந்தச் சின்னப் பிள்ளையை எனக்காக* ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்.+ உங்கள் எல்லாரிலும் யார் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்”+ என்று அவர்களிடம் சொன்னார்.

  • லூக்கா 22:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 நீங்களோ அப்படி இருக்கக் கூடாது.+ உங்களில் மிக உயர்ந்தவராக இருப்பவர் எல்லாருக்கும் சிறியவரைப் போல் இருக்க வேண்டும்,+ உங்களை வழிநடத்துகிறவர் பணிவிடைக்காரரைப் போல் இருக்க வேண்டும்.

  • ரோமர் 12:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள். ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.*+

  • 1 பேதுரு 5:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 5 அதேபோல் இளைஞர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு* அடிபணிந்து நடங்கள்.+ எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.* ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்