தானியேல்
12 அதோடு அவர், “அந்தக் காலத்தில், உன் ஜனங்களுக்குத் துணையாக நிற்கிற மகா அதிபதியாகிய+ மிகாவேல்*+ செயலில் இறங்குவார்.* பூமியில் முதன்முதலாக ஒரு தேசம் உருவானதுமுதல் அதுவரை வந்திருக்காத மிக வேதனையான காலம் வரும். அப்போது, உன் ஜனங்களில் யாருடைய பெயரெல்லாம் கடவுளுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ+ அவர்கள் எல்லாரும் தப்பிப்பார்கள்.+ 2 மண்ணுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் பலர் எழுந்திருப்பார்கள். அவர்களில் சிலர் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள். மற்றவர்கள் வெட்கத்துக்கும் முடிவில்லாத இழிவுக்கும் ஆளாவார்கள்.
3 விவேகமுள்ளவர்கள்* வானத்தின் ஒளியைப் போல் பிரகாசிப்பார்கள். பலரை நீதியின் வழிக்குக் கொண்டுவருகிறவர்கள் நட்சத்திரங்களைப் போல் என்றென்றும் ஜொலிப்பார்கள்.
4 தானியேலே, முடிவு காலம்வரை நீ இந்த வார்த்தைகளை ரகசியமாக வைத்து, இந்தப் புத்தகத்துக்கு முத்திரை போடு.+ அப்போது இதைப் பலர் அலசி ஆராய்வார்கள், உண்மையான அறிவும் பெருகும்”+ என்றார்.
5 பின்பு தானியேலாகிய நான், ஆற்றுக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு பேர் நிற்பதைப் பார்த்தேன். ஒருவர் ஆற்றுக்கு இந்தப் பக்கத்திலும் இன்னொருவர் அந்தப் பக்கத்திலும் நின்றுகொண்டிருந்தார்கள்.+ 6 நாரிழை* உடை போட்டுக்கொண்டு+ ஆற்றின் மேல் நின்றுகொண்டிருந்தவரிடம் மற்றவர், “இந்த ஆச்சரியமான காரியங்கள் முடிவுக்கு வர எவ்வளவு காலம் ஆகும்?” என்று கேட்டார். 7 அப்போது, நாரிழை உடை போட்டுக்கொண்டு ஆற்றின் மேல் நின்றுகொண்டிருந்தவர் பேசுவதைக் கேட்டேன். அவர் தன் வலது கையையும் இடது கையையும் வானத்துக்கு நேராக உயர்த்தி, என்றென்றும் வாழ்கிறவர்மேல்+ சத்தியம் செய்து, “குறிக்கப்பட்ட ஒரு காலமும், இரண்டு காலங்களும், அரைக் காலமும்* ஆகும். பரிசுத்த ஜனங்களின் பலம் அடக்கப்பட்டதுமே+ இவையெல்லாம் முடிவுக்கு வரும்” என்று சொன்னார்.
8 நான் அதைக் கேட்டேன், ஆனால் புரிந்துகொள்ள முடியவில்லை.+ அதனால், “எஜமானே, இவற்றின் முடிவில் என்ன நடக்கும்?” என்று கேட்டேன்.
9 அதற்கு அவர், “தானியேலே, நீ போகலாம். ஏனென்றால், இந்த வார்த்தைகள் முடிவு காலம்வரை ரகசியமாக வைக்கப்பட்டு, முத்திரை போடப்பட்டிருக்கும்.+ 10 பலர் தங்களைச் சுத்தமாக்கிக்கொண்டு, தூய்மைப்படுத்திக்கொண்டு, புடமிடப்பட்டவர்களாய் ஆவார்கள்.+ கெட்டவர்கள் கெட்டதையே செய்வார்கள், அவர்களில் ஒருவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், விவேகம்* உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.+
11 வழக்கமான* பலி+ நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பானது+ ஏற்படுத்தப்பட்ட பின்பு 1,290 நாட்கள் கடந்து போகும்.
12 1,335 நாட்கள்வரை காத்திருக்கிறவர்கள்* சந்தோஷமானவர்கள்.
13 நீ முடிவுவரை சகித்திரு. அதன்பின் ஓய்வெடுப்பாய். ஆனால், முடிவு நாளில் உன் பங்கை* பெறுவதற்காக எழுந்திருப்பாய்”+ என்றார்.