ஏசாயா
62 பிரகாசமான வெளிச்சம்போல் சீயோனில் நீதி ஒளிவீசும்வரை+
நான் அமைதியாக* இருக்க மாட்டேன்.+
எரிகிற தீப்பந்தம்போல் மீட்பு எருசலேமில் ஒளிவீசும்வரை+
நான் சும்மா இருக்க மாட்டேன்.
நீ புதிய பெயரால் அழைக்கப்படுவாய்.+
யெகோவாவே உனக்கு அந்தப் பெயரை வைப்பார்.
3 யெகோவாவின் கையில் நீ அழகான கிரீடமாக இருப்பாய்.
உன் கடவுளுடைய கையில் ஒரு மணிமகுடமாக இருப்பாய்.
இனி உன் தேசம் பாழான தேசம் என்று அழைக்கப்படாது.+
மணமானவள் என்றே அது அழைக்கப்படும்.
ஏனென்றால், யெகோவா உன்மேல் பிரியமாயிருப்பார்.
உன் தேசம் மணமானவளைப் போல இருக்கும்.
5 ஒரு வாலிபன் ஒரு கன்னிப்பெண்ணைக் கல்யாணம் செய்வது போல,
உன் மக்கள் உன்னைக் கல்யாணம் செய்வார்கள்.
மணமகன் தன் மணமகளைப் பார்த்து சந்தோஷப்படுவதைப் போல
உன் கடவுள் உன்னைப் பார்த்து சந்தோஷப்படுவார்.+
6 எருசலேமே, உன் மதில்கள்மேல் நான் காவல்காரர்களை நிற்க வைத்திருக்கிறேன்.
அவர்கள் அமைதியாக இல்லாமல் ராத்திரி பகலாக விடாமல் எச்சரிப்பு கொடுக்க வேண்டும்.
யெகோவாவைப் பற்றி அறிவிக்கிறவர்களே,
ஓய்ந்துபோகாதீர்கள்.
7 அவர் எருசலேமை நிலைநாட்டி, பூமியெங்கும் அதன் புகழைப் பரப்பும்வரை+
அவரிடம் வேண்டிக்கொண்டே இருங்கள்.”
8 யெகோவா தன்னுடைய பலமான வலது கையை உயர்த்தி இப்படி உறுதிமொழி கொடுத்திருக்கிறார்:
“உங்கள் தானியத்தை இனியும் எதிரிகள் சாப்பிடுவதற்கு விட மாட்டேன்.
நீங்கள் பாடுபட்டுத் தயாரித்த புதிய திராட்சமதுவை இனியும் மற்ற தேசத்து ஜனங்கள் குடிக்க அனுமதிக்க மாட்டேன்.+
9 தானியத்தை அறுவடை செய்கிறவர்கள்தான் அதைச் சாப்பிடுவார்கள், அவர்கள் யெகோவாவைப் புகழ்வார்கள்.
திராட்சமதுவைத் தயாரித்தவர்கள்தான் அதை என் பரிசுத்த பிரகாரங்களில் குடிப்பார்கள்.”+
10 வாருங்கள், வாசலைத் தாண்டி வாருங்கள்.
ஜனங்களுக்காக வழியைத் தயார்படுத்துங்கள்.+
நெடுஞ்சாலையை அமையுங்கள்; அதைப் புதிதாக அமையுங்கள்.
கற்களையெல்லாம் எடுத்துப் போடுங்கள்.+
ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.*+
11 பூமியெங்கும் யெகோவா இதை அறிவித்திருக்கிறார்: