ஏசாயா
48 யாக்கோபின் வம்சத்தாரே, இதைக் கேளுங்கள்.
நீங்கள் இஸ்ரவேல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறீர்கள்.+
நீங்கள் யூதாவின் ஊற்றிலிருந்து* வந்தவர்கள்.
நீங்கள் யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்கிறீர்கள்.+
இஸ்ரவேலின் கடவுளை வணங்குகிறீர்கள்.
ஆனாலும், அதையெல்லாம் உண்மையோடும் நீதியோடும் செய்வதில்லை.+
2 நீங்கள்* பரிசுத்த நகரத்தைச்+ சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்.
இஸ்ரவேலின் கடவுளுடைய உதவியைத் தேடுகிறீர்கள்.+
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.
3 அவர் இப்படிச் சொல்கிறார்:
“நடந்து முடிந்த விஷயங்களெல்லாம் ரொம்பக் காலத்திற்கு முன்னாலேயே நான் சொன்னதுதான்.
அதை என் வாயாலேயே சொன்னேன்.
அதை எல்லாருக்கும் தெரியப்படுத்தினேன்.+
அதைத் திடீரென்று நடத்திக் காட்டினேன்.+
4 நீங்கள் எந்தளவுக்கு முரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர்கள் என்று எனக்குத் தெரியும்.
உங்கள் கழுத்து இரும்பு போலவும், உங்கள் நெற்றி செம்பு போலவும் கடினமாக இருக்கிறது.+
5 அதனால்தான், இந்த விஷயங்களெல்லாம் நடப்பதற்கு முன்பே,
நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.
‘எங்களுடைய தெய்வம்தான்* இதைச் செய்தது.
நாங்கள் செதுக்கிய சிலையும் நாங்கள் வார்த்த உலோகச் சிலையும்தான் இதையெல்லாம் சொன்னது’ என்று நீங்கள் சொல்லாமல் இருப்பதற்காகவே இப்படிச் செய்தேன்.
6 இதையெல்லாம் நீங்கள் காதால் கேட்டீர்களே, கண்ணால் பார்த்தீர்களே.
மற்றவர்களிடம் சொல்ல மாட்டீர்களா?+
இன்றுமுதல் புதிய விஷயங்களை உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.+
உங்களுக்கு மறைக்கப்பட்டிருந்த ரகசியங்களைத் தெரிவிக்கப்போகிறேன்.
7 இதெல்லாம் இப்போதுதான் தோன்றின, ரொம்பக் காலத்துக்கு முன்பு அல்ல.
அதனால், ‘இதெல்லாம் எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்’ என்று உங்களால் சொல்ல முடியாது.
இதெல்லாம் இன்றுவரை நீங்கள் கேள்விப்படாத விஷயங்கள்.
நீங்கள் எல்லாரும் நம்பிக்கைத் துரோகிகள் என்று எனக்குத் தெரியும்.+
பிறந்ததிலிருந்தே அடங்காதவர்கள் என்று பெயரெடுத்திருக்கிறீர்கள்.+
9 ஆனாலும், என் பெயரின் புகழுக்காக என்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்வேன்.+
என்னுடைய மகிமைக்காக என்னையே கட்டுப்படுத்திக்கொள்வேன்.
உங்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+
10 நான் உங்களைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலப் புடமிடவில்லை.+
வேதனை என்ற நெருப்பில் போட்டு உங்களைச் சோதித்துப் பார்த்தேன்.*+
11 நான் எனக்காகவே, என் பெயருக்காகவே, எல்லாவற்றையும் செய்கிறேன்.+
என் பெயர் கெட்டுப்போக நான் எப்படி அனுமதிப்பேன்?+
என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்.
12 நான் அழைத்த யாக்கோபே, இஸ்ரவேலே, நான் சொல்வதைக் கேள்.
நான் மாறாதவர்.+ முதலும் நானே, கடைசியும் நானே.+
நான் கட்டளை கொடுத்தால் அவை கீழ்ப்படியும்.
14 நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவந்து கேளுங்கள்.
எந்தத் தெய்வமாவது இதையெல்லாம் சொன்னது உண்டா?
யெகோவாவுக்குப் பிரியமானவன்+
15 நானே இதைச் சொன்னேன், நான்தான் அவனைக் கூப்பிட்டேன்.+
அவனை அழைத்து வந்தேன், அவனுக்கு வெற்றி தருவேன்.+
16 நீங்கள் என்னிடம் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்.
தொடக்கத்திலிருந்தே நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன்.+
அது நடக்க ஆரம்பித்ததிலிருந்தே நான் அங்கே இருந்தேன்.”
இப்போது உன்னதப் பேரரசராகிய யெகோவா அவருடைய சக்தியைத் தந்து என்னை அனுப்பியிருக்கிறார்.
17 இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும், உங்களை விடுவிக்கிறவருமான யெகோவா+ சொல்வது இதுதான்:
“யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள்.
உங்களுக்குப் பிரயோஜனமானதை* நான் கற்றுக்கொடுக்கிறேன்.+
நீங்கள் நடக்க வேண்டிய வழியில் உங்களை நடத்துகிறேன்.+
18 நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்!
அவர்களுடைய பெயர் என்முன் நிலைத்திருக்கும், அது ஒருபோதும் அழியாது.”
20 பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள்!+
கல்தேயர்களைவிட்டு ஓடி வாருங்கள்!
அதைப் பற்றி எல்லாருக்கும் சந்தோஷமாகச் சொல்லுங்கள்!+
பூமியெங்கும் இருக்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்!+
இப்படிச் சொல்லுங்கள்: “யெகோவா அவருடைய ஊழியனான யாக்கோபை விடுவித்திருக்கிறார்.+
21 பாலைநிலம் வழியாக அவருடைய ஜனங்களை அழைத்து வந்தபோது அவர்களைத் தாகத்தில் தவிக்க விடாமல்,+
அவர்களுக்காக அவர் கற்பாறையைப் பிளந்தார்.
அதிலிருந்து தண்ணீரைப் பாய்ந்து வரச் செய்தார்.”+
22 “கெட்டவர்களுக்கு நிம்மதியே இருக்காது” என்று யெகோவா சொல்கிறார்.+