நீதிமொழிகள்
3 நேர்மையானவர்களின் உத்தம குணம் அவர்களை வழிநடத்தும்.+
ஆனால், துரோகிகளின் குறுக்குபுத்தி அவர்களை அழித்துவிடும்.+
5 குற்றமற்றவர்களுடைய நீதி அவர்களுடைய பாதையை நேராக்கும்.
ஆனால், அக்கிரமக்காரர்கள் தங்களுடைய அக்கிரமத்தாலேயே விழுந்துபோவார்கள்.+
6 நேர்மையானவர்களுடைய நீதி அவர்களைக் காப்பாற்றும்.+
ஆனால், துரோகிகள் தங்களுடைய ஆசைகளிலேயே சிக்கிக்கொள்வார்கள்.+
7 பொல்லாதவன் சாகும்போது அவனுடைய எதிர்பார்ப்பு அழிந்துபோகிறது.
தன் பலத்தின் மேல் அவன் வைத்திருக்கிற நம்பிக்கையும் அழிந்துபோகிறது.+
8 நீதிமான் இக்கட்டிலிருந்து காப்பாற்றப்படுகிறான்.
ஆனால், பொல்லாதவன் அந்த இக்கட்டில் மாட்டிக்கொள்கிறான்.+
9 கடவுளைவிட்டு விலகியவன்* தன் வாயால் அடுத்தவர்களைச் சீரழிக்கிறான்.
ஆனால், நீதிமான்கள் தங்களுடைய அறிவால் தப்பித்துக்கொள்கிறார்கள்.+
10 நீதிமான்களுடைய நல்ல குணத்தால் நகரமே சந்தோஷப்படுகிறது.
ஆனால், பொல்லாதவர்கள் அழியும்போது ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.+
11 நேர்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தால் நகரம் செழிக்கிறது.+
ஆனால், பொல்லாதவர்களுடைய வாயினால் அது சின்னாபின்னமாகிறது.+
13 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் ரகசியத்தை அம்பலப்படுத்துகிறான்.+
ஆனால், நம்பகமானவன் ரகசியத்தைக் காப்பாற்றுகிறான்.
14 திறமையான வழிநடத்துதல் இல்லையென்றால் மக்கள் திண்டாடுவார்கள்.
15 முன்பின் தெரியாதவனுடைய கடனுக்குப் பொறுப்பு ஏற்கிறவன் கண்டிப்பாக அவதிப்படுவான்.+
ஆனால், கைகுலுக்கி ஒப்பந்தம் செய்யாதவன் பாதுகாப்பாக இருப்பான்.
18 பொல்லாதவன் சம்பாதிக்கிற கூலியால் எந்தப் பலனும் கிடைக்காது.+
ஆனால், நீதியை விதைக்கிறவன் நல்ல பலனை அறுப்பான்.+
19 நீதியின் பக்கம் உறுதியாக நிற்கிறவன் வாழ்வு அடைவான்.+
ஆனால், அக்கிரமம் செய்ய ஓடுகிறவன் மரணம் அடைவான்.
20 கோணலான புத்தி* உள்ளவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.+
ஆனால், குற்றமற்ற வழியில் நடக்கிறவர்கள் அவருக்குப் பிரியமானவர்கள்.+
21 இது உறுதி: அக்கிரமக்காரன் தண்டனையிலிருந்து தப்பிக்க மாட்டான்.+
ஆனால், நீதிமான்களின் பிள்ளைகள் தப்பித்துக்கொள்வார்கள்.
22 புத்தியில்லாமல் நடக்கிற அழகான பெண்,
பன்றியின் மூக்கில் இருக்கிற தங்க மூக்குத்திபோல் இருக்கிறாள்.
23 நீதிமான்களின் விருப்பம் நன்மையைக் கொண்டுவரும்.+
ஆனால், பொல்லாதவர்களின் நம்பிக்கை கடும் கோபத்தைக் கொண்டுவரும்.
24 தாராளமாகக் கொடுக்கிறவன்* ஏராளமாகப் பெறுகிறான்.+
கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் காட்டுகிறவன் ஏழையாகிறான்.+
25 தாராள குணமுள்ளவன் செழிப்பான்.+
மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறவன் புத்துணர்ச்சி அடைவான்.*+
26 தானியத்தைப் பதுக்கி வைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்.
ஆனால், அதை விற்கிறவனைப் புகழ்வார்கள்.
27 நல்லது செய்வதில் தீவிரமாக இருக்கிறவன் மற்றவருடைய பிரியத்தை* சம்பாதிக்கிறான்.+
ஆனால், கெட்டது செய்வதில் குறியாக இருக்கிறவனுக்குக் கெட்டதுதான் நடக்கும்.+
28 தன்னுடைய சொத்துப்பத்துகளை நம்புகிறவன் விழுந்துபோவான்.+
ஆனால், நீதிமான்கள் இளந்தளிரைப் போலத் தழைப்பார்கள்.+
29 தன் குடும்பத்துக்குத் துன்பத்தை* கொண்டுவருகிறவன் காற்றைத்தான் சொத்தாகப் பெறுவான்.+
ஞானமுள்ளவனுக்கு முட்டாள் வேலைக்காரனாக இருப்பான்.