சங்கீதம்
தாவீதின் பாடல்.
27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார்.
யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+
யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+
யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்?
2 என் எதிரிகளான அக்கிரமக்காரர்கள் என்னை ஒழித்துக்கட்ட நினைத்து என்னைத் தாக்கினார்கள்.+
ஆனால், அவர்கள்தான் தடுமாறி விழுந்தார்கள்.
எனக்கு எதிராகப் போரே மூண்டாலும்,
நான் நம்பிக்கையோடு இருப்பேன்.
4 யெகோவாவிடம் ஒன்றைக் கேட்டேன்.
யெகோவா எவ்வளவு இனிமையானவர் என்பதைப் பார்த்துக்கொண்டும்,
அவருடைய ஆலயத்தைப் பிரமிப்போடு ரசித்துக்கொண்டும்,*+
என் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று கேட்டேன்.+
அதற்காகத்தான் எப்போதும் ஏங்குவேன்.
5 ஆபத்து நாளில் அவர் என்னைத் தன்னுடைய புகலிடத்தில் மறைத்து வைப்பார்.+
தன்னுடைய கூடாரத்தின் மறைவில் என்னை ஒளித்து வைப்பார்.+
கற்பாறையின் உயரத்திலே என்னைக் கொண்டுபோய் வைப்பார்.+
6 என்னைச் சூழ்ந்திருக்கிற எதிரிகளின் முன்னால் இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறேன்.
அதனால், சந்தோஷ ஆரவாரத்தோடு அவருடைய கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.
யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.*
8 “என்னை* தேடுங்கள்” என்று நீங்கள் கொடுத்த கட்டளையை என் இதயம் எனக்குச் சொன்னது.
யெகோவாவே, நான் நிச்சயம் உங்களைத் தேடுவேன்.+
9 உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+
கோபத்தில் உங்களுடைய ஊழியனை ஒதுக்கிவிடாதீர்கள்.
நீங்கள்தான் எனக்குத் துணை.+
என்னை மீட்கும் கடவுளே, என்னைக் கைவிடாமலும் என்னைவிட்டு விலகாமலும் இருங்கள்.
11 யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+
எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக என்னை நேர்வழியில் நடத்துங்கள்.
12 விரோதிகளிடம் என்னை ஒப்படைத்துவிடாதீர்கள்.+
எனக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்ல ஆட்கள் கிளம்பியிருக்கிறார்கள்.+
என்னைத் தாக்கப்போவதாக அவர்கள் மிரட்டுகிறார்கள்.
13 என் வாழ்நாளெல்லாம் யெகோவா எனக்கு நல்லது செய்வார் என்ற விசுவாசம் மட்டும் இல்லையென்றால்,
14 யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.+
தைரியமாக இரு, நெஞ்சத்தில் உறுதியோடு இரு.+
எப்போதும் யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.