யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்
15 பின்பு பரலோகத்தில் இன்னொரு அற்புதமான, பெரிய அடையாளத்தைப் பார்த்தேன். ஏழு தண்டனைகளை வைத்திருந்த ஏழு தேவதூதர்கள்+ இருந்தார்கள். அந்தத் தண்டனைகள்தான் கடைசி தண்டனைகள். ஏனென்றால், அந்தத் தண்டனைகளோடு கடவுளுடைய கோபம் தீரும்.+
2 பின்பு, நெருப்புக் கலந்த கண்ணாடிக் கடல்+ போன்ற ஒன்றைப் பார்த்தேன். மூர்க்க மிருகத்தின் மீதும் அதன் உருவத்தின் மீதும்+ அதன் பெயருக்குரிய எண்ணின் மீதும்+ வெற்றி பெற்றவர்கள்+ அந்தக் கண்ணாடிக் கடலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். கடவுளால் கொடுக்கப்பட்ட யாழ்களை அவர்கள் வைத்திருந்தார்கள். 3 கடவுளுடைய அடிமையான மோசேயின் பாட்டையும்+ ஆட்டுக்குட்டியானவரின்+ பாட்டையும் அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள்:
“சர்வவல்லமையுள்ள கடவுளாகிய+ யெகோவாவே,* உங்களுடைய செயல்கள் மகத்தானவை, அதிசயமானவை.+ என்றென்றுமுள்ள ராஜாவே,+ உங்களுடைய வழிகள் நீதியானவை, உண்மையானவை.+ 4 யெகோவாவே,* யார் உங்களுக்குப் பயந்து உங்களுடைய பெயரை மகிமைப்படுத்தாமல் இருப்பார்கள்? நீங்கள் ஒருவர்தான் உண்மையுள்ளவர்.*+ எல்லா தேசத்தாரும் உங்கள் முன்னால் வந்து உங்களை வணங்குவார்கள்.+ ஏனென்றால், உங்களுடைய கட்டளைகள் நீதியானவை என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கிறது.”
5 இதற்குப் பின்பு நான் பார்த்தபோது, சாட்சிக் கூடாரத்தில்+ இருக்கிற பரிசுத்த இடம்* பரலோகத்தில் திறக்கப்பட்டது.+ 6 ஏழு தண்டனைகளை வைத்திருந்த ஏழு தேவதூதர்கள்+ அந்தப் பரிசுத்த இடத்திலிருந்து வெளியே வந்தார்கள்; அவர்கள் சுத்தமான, பளபளப்பான நாரிழை* உடை போட்டுக்கொண்டு, மார்பைச் சுற்றி தங்கக் கச்சைகளைக் கட்டியிருந்தார்கள். 7 அப்போது, நான்கு ஜீவன்களில் ஒன்று, என்றென்றும் வாழ்கிற கடவுளின் கோபத்தால் நிறைந்திருந்த ஏழு தங்கக் கிண்ணங்களை+ அந்த ஏழு தேவதூதர்களுக்குக் கொடுத்தது. 8 அந்தச் சமயத்தில், கடவுளுடைய மகிமையாலும் அவருடைய வல்லமையாலும் பரிசுத்த இடம் புகையால் நிறைந்தது.+ அந்த ஏழு தேவதூதர்களுடைய ஏழு தண்டனைகள்+ முடியும்வரை ஒருவராலும் அந்தப் பரிசுத்த இடத்துக்குள் நுழைய முடியவில்லை.