நீதிமொழிகள்
4 என் மகன்களே, அப்பா சொல்கிற புத்திமதியைக் கேளுங்கள்.+
புத்தியை* அடைவதற்குக் கவனம் செலுத்துங்கள்.
2 ஏனென்றால், நான் உங்களுக்கு நல்ல அறிவுரைகளைத் தருவேன்.
4 என் அப்பா எனக்கு இப்படிப் போதித்தார்:
“என் வார்த்தைகளை எப்போதும் உன் இதயத்தில் வைத்துக்கொள்.+
என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது நீண்ட காலம் வாழ்வாய்.+
5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும்* சம்பாதி.+
நான் சொல்வதை மறந்துவிடாதே, அதை விட்டுவிலகாதே.
6 ஞானத்தை ஒதுக்கித்தள்ளாதே, அது உன்னைப் பாதுகாக்கும்.
அதை நேசி, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
8 அதை உயர்வாக மதித்தால், அது உன்னை உயர்த்தும்.+
அதை விரும்பி ஏற்றுக்கொண்டால், அது உனக்கு மதிப்புச் சேர்க்கும்.+
9 அது உன் தலையில் அலங்காரக் கிரீடத்தைச் சூட்டும்.
அழகிய கிரீடத்தால் உன்னை அலங்கரிக்கும்.”
11 ஞானமான வழியை நான் உனக்குச் சொல்லிக்கொடுப்பேன்.+
நேர்மையான பாதையில் உன்னைக் கூட்டிக்கொண்டு போவேன்.+
12 நடக்கும்போது நீ தடுமாற மாட்டாய்.
ஓடினாலும் தடுக்கி விழ மாட்டாய்.
13 புத்திமதிகளை உறுதியாகப் பிடித்துக்கொள், அவற்றை விட்டுவிடாதே.+
அவற்றைப் பாதுகாத்துக்கொள், அவை உனக்கு வாழ்வு தரும்.+
16 அக்கிரமம் செய்யாவிட்டால் அவர்களுக்குத் தூக்கமே வராது.
யாருக்காவது குழி பறிக்கும்வரை அவர்களால் தூங்கவே முடியாது.
17 அவர்கள் அக்கிரமத்தின் உணவைச் சாப்பிடுகிறார்கள்.
வன்முறையின் திராட்சமதுவைக் குடிக்கிறார்கள்.
18 ஆனால், நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற
விடியற்கால வெளிச்சம்போல் இருக்கிறது.+
19 பொல்லாதவர்களின் பாதையோ இருள்போல் இருக்கிறது.
எது தங்களைத் தடுக்கி விழ வைக்கிறது என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை.
20 என் மகனே, என் வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேள்.
என் ஆலோசனைகளைக் கவனமாகக் கேள்.
21 அவற்றை எப்போதும் உன் கண் முன்னால் வைத்துக்கொள்.
உன் நெஞ்சில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்.+
22 அவற்றைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவை வாழ்வு தரும்.+
அவர்களுடைய முழு உடலுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.