சங்கீதம்
104 என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.+
என் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மிகவும் மகத்தானவர்.+
மகத்துவத்தையும்* மேன்மையையும் ஆடைபோல் அணிந்திருப்பவர்.+
3 அவர் வானத்திலுள்ள தண்ணீர்மேல்
விட்டங்களை வைத்துத் தன் மாடி அறைகளைக் கட்டி,+
மேகங்களை ரதமாக்கி,+
காற்றின் சிறகுகள்மேல் பயணம் செய்கிறார்.+
6 ஆடையினால் போர்த்துவதுபோல் ஆழ்கடல்களினால் நீங்கள் அதைப் போர்த்தினீர்கள்.+
மலைகளுக்குமேல் தண்ணீர் நின்றது.
7 உங்கள் அதட்டலைக் கேட்டு தண்ணீர் விலகி ஓடியது.+
உங்கள் இடிமுழக்கத்தைக் கேட்டு பயந்து ஓடியது.
8 நீங்கள் ஏற்படுத்திய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.
அதனால் மலைகள் உயர்ந்தன,+ பள்ளத்தாக்குகள் இறங்கின.
10 அவர் பள்ளத்தாக்குகளில்* நீரூற்றுகளைப் பெருக்கெடுத்து ஓட வைக்கிறார்.
மலைகளுக்கு நடுவே அவற்றைப் பாய்ந்தோட வைக்கிறார்.
11 அவை காட்டு விலங்குகளுக்கெல்லாம் தண்ணீரைக் கொடுக்கின்றன.
காட்டுக் கழுதைகளின் தாகத்தைத் தீர்க்கின்றன.
12 அந்த நீரூற்றுகளின் ஓரமாக நிற்கும் மரங்களில் பறவைகள் தங்குகின்றன.
அடர்ந்த மரக் கிளைகளில் உட்கார்ந்து பாட்டுப் பாடுகின்றன.
13 அவர் தன்னுடைய மாடி அறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்.+
உங்கள் கைகளின் பலன்களால் பூமி திருப்தியடைகிறது.+
14 நிலத்திலிருந்து அவர் உணவை விளையச் செய்கிறார்.
ஆடுமாடுகளுக்காகப் புல்லையும்,
மனிதர்களுக்காகச் செடிகொடிகளையும் முளைக்க வைக்கிறார்.+
15 மனிதனுடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்த திராட்சமதுவையும்,+
முகத்தைப் பளபளப்பாக்க எண்ணெயையும்,
இதயத்துக்குத் தெம்பளிக்க உணவையும் தருகிறார்.+
16 யெகோவாவின் மரங்கள் தண்ணீரை உறிஞ்சித் திருப்தியடைகின்றன.
அவர் நட்டு வைத்த லீபனோனின் தேவதாரு மரங்கள் திருப்தியடைகின்றன.
17 அந்த மரங்களில் பறவைகள் கூடு கட்டுகின்றன.
ஆபால் மரங்களில் நாரைகள்+ தங்குகின்றன.
19 காலங்களைக் குறிப்பதற்கு அவர் சந்திரனைப் படைத்தார்.
சூரியனுக்குத் தான் மறைய வேண்டிய நேரம் நன்றாகத் தெரியும்.+
20 நீங்கள் இருளை வர வைக்கிறீர்கள், இரவும் வருகிறது.+
அப்போது, காட்டு விலங்குகளெல்லாம் சுற்றித் திரிகின்றன.
22 சூரியன் உதித்ததும்,
தங்கள் குகைகளில் போய்ப் படுத்துக்கொள்கின்றன.
23 மனிதன் வேலைக்குப் போகிறான்.
சாயங்காலம்வரை பாடுபடுகிறான்.
24 யெகோவாவே, உங்களுடைய படைப்புகள்தான் எத்தனை எத்தனை!+
அவை எல்லாவற்றையும் ஞானமாகப் படைத்திருக்கிறீர்கள்.+
பூமி உங்களுடைய படைப்புகளால் நிறைந்திருக்கிறது.
25 பரந்து விரிந்த கடலும் அவற்றில் ஒன்று.
சிறியதும் பெரியதுமான கணக்குவழக்கில்லாத உயிரினங்கள் அதில் இருக்கின்றன.+
27 அவையெல்லாம் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
அந்தந்த நேரத்தில் உணவு தருவீர்களென்று காத்திருக்கின்றன.+
28 நீங்கள் கொடுக்கும்போது, அவை வாங்கிக்கொள்கின்றன.+
உங்கள் கையைத் திறக்கும்போது, அவை ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் திருப்தியடைகின்றன.+
29 உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளும்போது, அவை கலங்குகின்றன.
அவற்றின் உயிர்சக்தியை எடுத்துவிடும்போது, அவை செத்துப்போய் மண்ணுக்குத் திரும்புகின்றன.+
31 யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருக்கும்.
யெகோவா தன்னுடைய படைப்புகளைப் பார்த்து சந்தோஷப்படுவார்.+
34 என் யோசனைகள் அவருக்குப் பிரியமாக இருக்கட்டும்.*
நான் யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவேன்.
என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும். “யா”வைப் புகழுங்கள்!*