மீகா
1 யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகிய ராஜாக்கள்+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில், மொரேசாவைச் சேர்ந்த மீகாவுக்கு* சமாரியாவையும் எருசலேமையும் பற்றி யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது.+ அதில் அவர்,
2 “ஜனங்களே, கேளுங்கள்!
பூமியே, அதில் உள்ளவையே, கவனித்துக் கேளுங்கள்!
உன்னதப் பேரரசராகிய யெகோவா உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைக்+ கேளுங்கள்!
பரிசுத்த ஆலயத்தில் இருக்கிற யெகோவா சொல்வதைக் கவனியுங்கள்!
3 இதோ! யெகோவா தன்னுடைய இடத்திலிருந்து வருகிறார்.
அவர் கீழே வந்து, பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.
4 நெருப்பு பட்ட மெழுகு போலவும்,
செங்குத்தான பாறையிலிருந்து கொட்டும் தண்ணீர் போலவும்,
அவருடைய காலடியில் மலைகள் உருகியோடும்,+
பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.
யாக்கோபின் குற்றங்களுக்கு யார் பொறுப்பு?
சமாரியா ஜனங்கள்தானே?+
யூதாவில் இருக்கிற ஆராதனை மேடுகளுக்கு யார் பொறுப்பு?+
எருசலேம் ஜனங்கள்தானே?
6 நான் சமாரியாவைக் கல்லும் மண்ணும் கிடக்கிற இடமாகவும்,
திராட்சைக் கொடிகளை நடுகிற இடமாகவும் ஆக்குவேன்.
அவளுடைய கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு,
அவளுடைய அஸ்திவாரங்கள் வெளியே தெரியும்படி செய்வேன்.
தன் உடலை விற்று அவள் வாங்கிக்கொண்ட எல்லாவற்றையும் எரித்துவிடுவேன்.+
விபச்சாரத்துக்குக் கூலியாக அவள் பெற்றுக்கொண்ட எல்லாமே
மறுபடியும் விபச்சாரிகளுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்” என்று சொன்னார்.
8 இதனால், நான் சத்தமாக அழுது புலம்புவேன்.+
காலில் செருப்பு இல்லாமலும் உடம்பில் துணி இல்லாமலும் நடப்பேன்.+
நரியைப் போல ஊளையிடுவேன்.
நெருப்புக்கோழியைப் போல அலறுவேன்.
அழிவு என் ஜனங்களுடைய நுழைவாசலுக்கு வந்துவிட்டது, எருசலேமை எட்டிவிட்டது.+
10 “காத் நகரத்தில் இதை அறிவிப்பு செய்யாதீர்கள்.
ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாதீர்கள்.
பெத்-அப்ராவின் மண்ணில் புரளுங்கள்.
11 சாப்பீர் ஜனங்களே, வெற்று உடம்போடும் வெட்கத்தோடும் புறப்பட்டுப் போங்கள்.
சாயனான் ஜனங்கள் வெளியில் தலைகாட்டாமல் இருக்கிறார்கள்.
பெத்-ஏசேலில் ஒப்பாரிச் சத்தம் கேட்கும்; இனி அங்கே உங்களுக்கு உதவி கிடைக்காது.
12 நல்லது வருமென்று மாரோத் ஜனங்கள் காத்திருந்தார்கள்.
ஆனால், எருசலேமின் நுழைவாசலுக்கு யெகோவாவிடமிருந்து கெடுதல்தான் வந்திருக்கிறது.
13 லாகீஸ் ஜனங்களே,+ குதிரைகளை ரதத்தில் பூட்டுங்கள்.
சீயோன் மகள் பாவம் செய்ய ஆரம்பித்தது உங்களால்தான்.
இஸ்ரவேலர்கள் பல குற்றங்கள் செய்தது உங்கள் ஊரில்தான்.+
14 அதனால், மொரேசா-காத்துக்கு அன்பளிப்புகள் கொடுத்து வழியனுப்புவீர்கள்.
இஸ்ரவேலின் ராஜாக்கள் அக்சீப்பின்+ வீடுகளை நம்பி ஏமாந்துபோனார்கள்.
15 மரேஷா+ ஜனங்களே, ஒரு வெற்றிவீரரை நான் உங்களிடம் அனுப்புவேன்.+
இஸ்ரவேலின் மகிமையாக இருக்கிறவர் அதுல்லாம் நகரம்வரை+ வருவார்.*
16 உங்கள் அருமைப் பிள்ளைகள் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்களே!+
அந்தத் துக்கத்தில் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் தலையைக் கழுகின் தலையைப் போல மொட்டை அடித்துக்கொள்ளுங்கள்.”