சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
2 இரைச்சல் கேட்கிற ஆழமான குழியிலிருந்தும்,
சேற்றிலிருந்தும் என்னைத் தூக்கிவிட்டார்.
மாபெரும் கற்பாறைமேல் என்னை நிறுத்தினார்.
என்னைக் காலூன்றி நிற்க வைத்தார்.
நிறைய பேர் பிரமிப்போடு பார்த்து,
யெகோவாமேல் நம்பிக்கை வைப்பார்கள்.
5 என் கடவுளாகிய யெகோவாவே,
எங்களுக்காக நீங்கள் செய்திருக்கிற அதிசயங்கள் எத்தனை எத்தனை!
எங்களுக்காக நீங்கள் யோசித்திருக்கிற விஷயங்கள் எத்தனை எத்தனை!+
அவை கணக்கில் அடங்காதவை!+
அவற்றையெல்லாம் நான் விவரித்துச் சொல்ல ஆரம்பித்தால் முடிக்கவே முடியாது.
கடவுளே, உங்களைப் போன்றவர் வேறு யாருமே இல்லை!+
6 பலியையும் காணிக்கையையும் நீங்கள் விரும்பவில்லை.+
தகன பலிகளையும் பாவப் பரிகார பலிகளையும் நீங்கள் கேட்கவில்லை.+
ஆனால், உங்கள் வார்த்தையைக் கேட்க என்னுடைய காதுகளைத் திறந்தீர்கள்.+
7 அப்போது நான், “இதோ, வந்துவிட்டேன்.
சுருளில் என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது.+
8 என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்.*+
உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.+
9 உங்களுடைய நீதியைப் பற்றிய நல்ல செய்தியை
மாபெரும் சபையில் சொல்கிறேன்.+
பாருங்கள், என் உதடுகளை நான் மூடுவதே இல்லை.+
யெகோவாவே, இது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
10 நான் உங்களுடைய நீதியை என் இதயத்தில் மறைத்து வைப்பதில்லை.
உங்களுடைய நம்பகத்தன்மையையும் மீட்பையும் பற்றிப் பேசுகிறேன்.
உங்களுடைய மாறாத அன்பையும் உண்மையையும் பற்றி
மாபெரும் சபையில் மறைக்காமல் சொல்கிறேன்”+ என்றேன்.
11 யெகோவாவே, எனக்கு இரக்கம் காட்டாமல் இருந்துவிடாதீர்கள்.
உங்களுடைய மாறாத அன்பும் உண்மையும் எப்போதுமே என்னைப் பாதுகாக்கட்டும்.+
12 எண்ண முடியாத அளவுக்கு ஏகப்பட்ட கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன.+
வழியே தெரியாத அளவுக்கு என் குற்றங்கள் மலைபோல் குவிந்து நிற்கின்றன.+
அவை என் தலைமுடியைவிட ஏராளமாக இருக்கின்றன.
அதனால், என் இதயம் நொந்துபோயிருக்கிறது.
13 யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்.+
யெகோவாவே, சீக்கிரமாக என் உதவிக்கு வாருங்கள்.+
14 என்னைத் தீர்த்துக்கட்ட வழிதேடுகிற எல்லாரும்
அவமானத்தில் தலைகுனியட்டும்.
நான் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்கள்
வெட்கப்பட்டுப் பின்வாங்கட்டும்.
15 என்னைப் பார்த்துக் கேலி செய்கிறவர்கள்
தங்களுக்கு வரும் அவமானத்தால் அதிர்ச்சி அடையட்டும்.
நீங்கள் தருகிற மீட்பை விரும்புகிறவர்கள்,
“யெகோவாவுக்கு மகிமை சேரட்டும்!”+ என்று எப்போதும் சொல்லட்டும்.
17 நானோ ஆதரவற்ற ஒரு ஏழை.
யெகோவாவே, என்னைக் கவனியுங்கள்.