நீதிமொழிகள்
6 என் மகனே, நீ ஒருவனுடைய கடனுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டால்,+
முன்பின் தெரியாதவனோடு கைகுலுக்கி ஒப்பந்தம் செய்துகொண்டால்,+
2 உத்தரவாதம் கொடுத்துவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டால்,
வாக்குக் கொடுத்துவிட்டு பிரச்சினையில் சிக்கிக்கொண்டால்,+
3 என் மகனே, நான் சொல்வதுபோல் செய்து அதிலிருந்து தப்பித்துக்கொள்.
நீ அவனிடம் நன்றாக மாட்டிக்கொண்டதால்,
அவசரமாகப் போய், உன்னையே தாழ்த்தி, அவனிடம் கெஞ்சு.+
4 அதுவரைக்கும் கண் அசந்துவிடாதே.
உன் கண் இமைகளை மூடவிடாதே.
5 வேட்டைக்காரனின் கையிலிருந்து தப்பிக்கிற கலைமானை* போலவும்,
வேடனின் கையிலிருந்து தப்பிக்கிற பறவையைப் போலவும் நீ தப்பித்துக்கொள்.
7 அதற்குத் தலைவனும் இல்லை, அதிகாரியும் இல்லை, அரசனும் இல்லை.
8 ஆனாலும், கோடைக் காலத்தில் உணவைச் சேமித்து வைக்கிறது.+
அறுவடைக் காலத்தில் உணவுப் பொருள்களைச் சேர்த்து வைக்கிறது.
9 சோம்பேறியே, எவ்வளவு நேரம்தான் படுத்திருப்பாய்?
எப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பாய்?
10 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,
இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,
இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்”+ என்று சொன்னால்,
11 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,
ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+
12 உதவாக்கரையாகவும் அயோக்கியனாகவும்* இருப்பவன் பொய் பேசிக்கொண்டு அலைகிறான்.+
13 கண்ணால் ஜாடை காட்டுகிறான்,+ காலைத் தட்டியும், விரல்களை ஆட்டியும் சைகை காட்டுகிறான்.
14 அவனுடைய உள்ளம் நெறிகெட்டுப்போயிருப்பதால்,
எப்போதும் சதித்திட்டம் தீட்டுகிறான்,+ சண்டை சச்சரவுகளை மூட்டிவிடுகிறான்.+
15 அதனால், அவனுக்குத் திடீரென்று அழிவு வரும்.
நொடிப்பொழுதில் நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+
16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.
சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார்.
17 அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+
அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+
18 சதித்திட்டங்கள் போடுகிற இதயம்,+ கெட்டதைச் செய்ய வேகமாக ஓடுகிற கால்கள்,
20 என் மகனே, உன் அப்பா கொடுக்கிற கட்டளைக்குக் கீழ்ப்படி.
உன் அம்மா கொடுக்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளாதே.+
21 அவற்றை எப்போதும் உன் இதயத்தில் பதிய வைத்துக்கொள்.
உன் கழுத்தில் கட்டிக்கொள்.
22 நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்.
நீ படுக்கும்போது அவை உன்னைக் காவல்காக்கும்.
நீ எழுந்திருக்கும்போது அவை உன்னிடம் பேசும்.
25 உன் உள்ளத்தில் அவளுடைய அழகை ரசிக்காதே.+
அவளுடைய மயக்கும் பார்வையில் மயங்கிவிடாதே.
26 ஏனென்றால், விபச்சாரியிடம் போகிறவன் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுவான்.+
நடத்தைகெட்ட மனைவி ஒருவனுடைய அருமையான உயிருக்கே உலை வைத்துவிடுவாள்.
27 ஒருவன் நெருப்புத்தணலை நெஞ்சோடு வைத்துக்கொண்டால் அவனுடைய உடை கருகாமல் இருக்குமா?+
28 ஒருவன் எரிகிற தணல்மேல் நடந்தால் அவனுடைய பாதங்கள் வெந்துபோகாமல் இருக்குமா?
29 அடுத்தவனுடைய மனைவியோடு உறவுகொள்பவனுக்கும் இதே கதிதான்.
அவளைத் தொடுகிற எவனும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.+
30 வயிற்றுப் பசிக்காக ஒருவன் திருடினால்,
மக்கள் அவனைக் கேவலமாகப் பேச மாட்டார்கள்.
31 ஆனால் அவன் பிடிபடும்போது, ஏழு மடங்கு திருப்பித்தர வேண்டியிருக்கும்;
தன் வீட்டில் இருக்கும் விலைமதிப்புள்ள பொருள்களையெல்லாம் கொடுக்க வேண்டியிருக்கும்.+
35 நஷ்ட ஈடாக எதைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
எவ்வளவு பெரிய அன்பளிப்பைக் கொடுத்தாலும் சமாதானம் ஆக மாட்டான்.