சங்கீதம்
தாவீதின் பாடல்.
א [ஆலெஃப்]
ב [பேத்]
4 யெகோவாவை வணங்குவதில்* அளவில்லாமல் சந்தோஷப்படு.
அப்போது, உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார்.
ג [கீமெல்]
6 உன்னுடைய நீதியை விடியற்கால வெளிச்சம் போலவும்,
உன்னுடைய நியாயத்தை நடுப்பகல் வெளிச்சம் போலவும் அவர் பிரகாசிக்க வைப்பார்.
ד [டாலத்]
சதித்திட்டங்கள் தீட்டி அவற்றைச் சாமர்த்தியமாக நடத்திக் காட்டுகிற
மனுஷனைப் பார்த்து நீ எரிச்சலடையாதே.+
ה [ஹே]
இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+
ו [வா]
10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.+
அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது.+
11 ஆனால், தாழ்மையானவர்கள்* இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.+
அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.+
ז [ஸாயின்]
12 நீதிமானுக்கு எதிராகப் பொல்லாதவன் சூழ்ச்சி செய்கிறான்.+
அவனைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடிக்கிறான்.
13 ஆனால், அந்தப் பொல்லாதவனைப் பார்த்து யெகோவா சிரிப்பார்.
ஏனென்றால், அவனுக்கு முடிவு வருமென்று அவருக்குத் தெரியும்.+
ח [ஹேத்]
14 அடக்கி ஒடுக்கப்படுகிற ஏழைகளைக் கொன்றுபோடுவதற்காக,
நேர்மையாக நடக்கிறவர்களைப் படுகொலை செய்வதற்காக,
பொல்லாதவர்கள் தங்களுடைய வாளை உருவுகிறார்கள், வில்லை வளைக்கிறார்கள்.
ט [டேத்]
17 பொல்லாதவர்களின் கைகள் முறிக்கப்படும்.
ஆனால், நீதிமான்களுக்கு யெகோவா கைகொடுத்து உதவுவார்.
י [யோத்]
18 குற்றமற்றவர்கள் படுகிற கஷ்டம் யெகோவாவுக்குத் தெரியும்.
அவர்களுடைய சொத்து அழியாமல் என்றென்றும் நிலைத்திருக்கும்.+
19 அழிவு காலத்தில் அவர்களுக்குத் தலைகுனிவு ஏற்படாது.
பஞ்ச காலத்தில் அவர்களிடம் ஏராளமான உணவு இருக்கும்.
כ [காஃப்]
20 ஆனால், பொல்லாதவர்கள் அழிந்துபோவார்கள்.+
யெகோவாவின் எதிரிகள் செழுமையான புல்வெளிகளைப் போலவும்,
புகையைப் போலவும் மறைந்துபோவார்கள்.
ל [லாமெத்]
21 பொல்லாதவன் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிக்கொடுக்காமல் இருக்கிறான்.
22 கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
ஆனால், அவருடைய சாபத்தைப் பெற்றவர்கள் அழிந்துபோவார்கள்.+
מ [மேம்]
23 ஒருவன் போகிற வழி யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,+
அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவனுக்கு அவர் வழிகாட்டுவார்.*+
24 அவன் தடுமாறினாலும் கீழே விழுந்துவிட மாட்டான்.+
ஏனென்றால், யெகோவா அவனுடைய கையைப் பிடித்திருக்கிறார்.+
נ [நூன்]
25 நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன்.
ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ,+
அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோ
இதுவரை நான் பார்த்ததில்லை.+
ס [சாமெக்]
ע [ஆயின்]
פ [பே]
צ [சாதே]
32 நீதிமானைப் பொல்லாதவன் நோட்டமிடுகிறான்.
அவனைத் தீர்த்துக்கட்ட வழிதேடுகிறான்.
33 ஆனால், யெகோவா அவனைப் பொல்லாதவனுடைய கையில் விட்டுவிட மாட்டார்.+
அவனைக் குற்றவாளி என்று நியாயந்தீர்க்க மாட்டார்.+
ק [கோஃப்]
34 யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்து, அவருடைய வழியில் நட.
அப்போது, அவர் உன்னை உயர்த்துவார், இந்தப் பூமியை உனக்குச் சொந்தமாகக் கொடுப்பார்.
பொல்லாதவர்கள் அழிந்துபோவதை+ நீ பார்ப்பாய்.+
ר [ரேஷ்]
35 ஈவிரக்கமே இல்லாத அக்கிரமக்காரனை நான் பார்த்தேன்.
சொந்த மண்ணில் செழித்து வளர்ந்திருக்கிற மரம்போல் அவன் இருந்தான்.+
36 ஆனால் திடீரென்று ஒருநாள், அவன் இல்லாமல் போய்விட்டான்.+
அவனை எவ்வளவோ தேடினேன், ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.+
ש [ஷீன்]
ת [ட்டா]
40 யெகோவா அவர்களுக்கு உதவி செய்வார், அவர்களைக் காப்பாற்றுவார்.+
பொல்லாதவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து, பாதுகாப்பார்.
ஏனென்றால், அவர்கள் அவரிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.+