சங்கீதம்
71 யெகோவாவே, நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.
என்னை ஒருபோதும் அவமானப்பட விட்டுவிடாதீர்கள்.+
2 உங்களுடைய நீதியால் என்னை விடுவித்துக் காப்பாற்றுங்கள்.
என் ஜெபத்தைக் காதுகொடுத்து* கேட்டு, என்னைக் காப்பாற்றுங்கள்.+
3 என்னுடைய கற்பாறைக் கோட்டையாக இருங்கள்.
நான் எப்போதுமே உங்களிடம் ஓடிவருவேன்.
என்னைக் காப்பாற்றுவதற்குக் கட்டளை கொடுங்கள்.
ஏனென்றால், நீங்கள்தான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை.+
4 கடவுளே, பொல்லாதவர்களின் கையிலிருந்தும்,+
அநியாயமாக அடக்கி ஒடுக்குகிறவர்களின் பிடியிலிருந்தும் என்னை விடுவியுங்கள்.
5 உன்னதப் பேரரசரான யெகோவாவே, நீங்கள்தான் என்னுடைய நம்பிக்கை.
சிறுவயதிலிருந்தே உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.+
6 பிறந்ததிலிருந்தே உங்களைத்தான் சார்ந்திருக்கிறேன்.
என் தாயின் வயிற்றிலிருந்து நீங்கள்தான் என்னை எடுத்தீர்கள்.+
உங்களை எப்போதும் புகழ்கிறேன்.
7 நிறைய பேர் என்னை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.
ஆனால், நீங்கள்தான் எனக்குப் பலத்த அடைக்கலம்.
9 என்னுடைய வயதான காலத்தில் என்னை ஒதுக்கித்தள்ளாதீர்கள்.+
என் உடல் தளர்ந்துபோகும்போது என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்.+
10 எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
என்னைக் கொல்லத் துடிப்பவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள்.+
11 “கடவுள் அவனைக் கைவிட்டுவிட்டார்.
அவனைத் துரத்திப் பிடியுங்கள்.
அவனைக் காப்பாற்ற யாருமே இல்லை” என்று சொல்கிறார்கள்.+
12 கடவுளே, என்னைவிட்டுத் தூரமாக இருக்காதீர்கள்.
என் கடவுளே, சீக்கிரமாக என் உதவிக்கு வாருங்கள்.+
13 என்னை எதிர்க்கிறவர்கள் அவமானப்பட்டு அழிந்துபோகட்டும்.+
எனக்குக் கேடு செய்யத் துடிக்கிறவர்கள்
கேவலப்பட்டும் வெட்கப்பட்டும் போகட்டும்.+
14 ஆனால், நான் உங்களுக்காகக் காத்துக்கொண்டே இருப்பேன்.
உங்களுடைய புகழுக்குப் புகழ் சேர்ப்பேன்.
15 உங்களுடைய நீதியான செயல்களும்,+
உங்களுடைய மீட்பின் செயல்களும்
எண்ண முடியாத அளவுக்கு ஏராளமாக இருந்தாலும்,+
அவற்றைப் பற்றி நாளெல்லாம் சொல்வேன்.
16 உன்னதப் பேரரசரான யெகோவாவே,
நான் போய் உங்களுடைய வல்லமையான செயல்களைப் பற்றிச் சொல்வேன்.
உங்கள் நீதியைப் பற்றிச் சொல்வேன், உங்கள் நீதியைப் பற்றி மட்டுமே சொல்வேன்.
17 கடவுளே, சிறுவயதிலிருந்து நீங்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.+
உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி இதுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.+
18 கடவுளே, எனக்கு வயதாகி முடி நரைத்துப்போனால்கூட என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்.+
ஏனென்றால், உங்களுடைய வல்லமையைப் பற்றி அடுத்த தலைமுறைக்குச் சொல்ல விரும்புகிறேன்.
உங்களுடைய பலத்தைப் பற்றி வருங்காலச் சந்ததிக்குச் சொல்லத் துடிக்கிறேன்.+
19 கடவுளே, உங்களுடைய நீதி வானளவுக்கு உயர்ந்தது.+
நீங்கள் மாபெரும் செயல்களைச் செய்திருக்கிறீர்கள்.
கடவுளே, உங்களுக்கு நிகர் யார்?+
20 நீங்கள் எனக்கு நிறைய வேதனைகளையும் கஷ்டங்களையும் அனுமதித்திருந்தாலும்கூட,+
இப்போது எனக்குப் புத்துயிர் கொடுங்கள்.
21 நான் உயர்ந்துகொண்டே போவதற்கு உதவுங்கள்.
என்னைச் சுற்றிலும் இருந்து, ஆறுதல் கொடுங்கள்.
என் கடவுளே, இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளே,
யாழை மீட்டி உங்களைப் புகழ்ந்து பாடுவேன்.*