1 நாளாகமம்
6 லேவியின் மகன்கள்:+ கெர்சோன், கோகாத்,+ மெராரி.+ 2 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சேயார்,+ எப்ரோன், ஊசியேல்.+ 3 அம்ராமின்+ பிள்ளைகள்:* ஆரோன்,+ மோசே,+ மிரியாம்.+ ஆரோனின் மகன்கள்: நாதாப், அபியூ,+ எலெயாசார்,+ இத்தாமார்.+ 4 எலெயாசாரின் மகன் பினெகாஸ்;+ பினெகாசின் மகன் அபிசுவா. 5 அபிசுவாவின் மகன் புக்கி; புக்கியின் மகன் உசீ. 6 உசீயின் மகன் செராகியா; செராகியாவின் மகன் மெராயோத். 7 மெராயோத்தின் மகன் அமரியா; அமரியாவின் மகன் அகிதூப்.+ 8 அகிதூப்பின் மகன் சாதோக்;+ சாதோக்கின் மகன் அகிமாஸ்.+ 9 அகிமாசின் மகன் அசரியா; அசரியாவின் மகன் யோகனான். 10 யோகனானின் மகன் அசரியா. எருசலேமில் சாலொமோன் கட்டிய ஆலயத்தில் அவர் குருவாகச் சேவை செய்தார்.
11 அசரியாவின் மகன் அமரியா; அமரியாவின் மகன் அகிதூப். 12 அகிதூப்பின் மகன் சாதோக்;+ சாதோக்கின் மகன் சல்லூம். 13 சல்லூமின் மகன் இல்க்கியா;+ இல்க்கியாவின் மகன் அசரியா. 14 அசரியாவின் மகன் செராயா;+ செராயாவின் மகன் யோசதாக்.+ 15 யெகோவா, நேபுகாத்நேச்சாரைப் பயன்படுத்தி யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் சிறைபிடித்துக்கொண்டு போனபோது, யோசதாக்கும் கொண்டுபோகப்பட்டார்.
16 லேவியின் மகன்கள்: கெர்சோம்,* கோகாத், மெராரி. 17 கெர்சோமின் மகன்களுடைய பெயர்கள்: லிப்னி, சீமேயி.+ 18 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல்.+ 19 மெராரியின் மகன்கள்: மகேலி, மூசி.
லேவியர்களின் முன்னோர்களும் அவர்களின் குடும்பங்களும்:+ 20 கெர்சோமின் வம்சத்தில் வந்தவர்கள்:+ அவருடைய மகன் லிப்னி, லிப்னியின் மகன் யாகாத், யாகாத்தின் மகன் சிம்மா, 21 சிம்மாவின் மகன் யோவா; யோவாவின் மகன் இத்தோ; இத்தோவின் மகன் சேராகு; சேராகுவின் மகன் யாத்திராய்; 22 கோகாத்தின் வம்சத்தில் வந்தவர்கள்: அவருடைய மகன் அம்மினதாப், அம்மினதாபின் மகன் கோராகு,+ கோராகுவின் மகன் ஆசீர், 23 ஆசீரின் மகன் எல்க்கானா; எல்க்கானாவின் மகன் எபியாசாப்,+ எபியாசாப்பின் மகன் ஆசீர், 24 ஆசீரின் மகன் தாகாத், தாகாத்தின் மகன் ஊரியேல், ஊரியேலின் மகன் உசியா, உசியாவின் மகன் சாவூல். 25 எல்க்கானாவின் மகன்கள்: அமாசாய், ஆகிமோத். 26 எல்க்கானாவின் வம்சத்தில் வந்தவர்கள்: அவருடைய மகன் சோபாய், சோபாயின் மகன் நாகாத், 27 நாகாத்தின் மகன் எலியாப், எலியாபின் மகன் எரோகாம், எரோகாமின் மகன் எல்க்கானா.+ 28 சாமுவேலின்+ மகன்கள்: மூத்த மகன் யோவேல், இரண்டாம் மகன் அபியா.+ 29 மெராரியின் வம்சத்தில் வந்தவர்கள்: அவருடைய மகன் மகேலி,+ மகேலியின் மகன் லிப்னி, லிப்னியின் மகன் சீமேயி, சீமேயியின் மகன் ஊசா, 30 ஊசாவின் மகன் சிமேயா, சிமேயாவின் மகன் ஹகியா, ஹகியாவின் மகன் அசாயா.
31 யெகோவாவின் வீட்டில் ஒப்பந்தப் பெட்டியை வைத்த பின்பு, பாடகர்களுக்குத் தலைவர்களாகச் சிலரை தாவீது நியமித்தார்.+ 32 வழிபாட்டுக் கூடாரமாகிய சந்திப்புக் கூடாரத்தில் பாடப்படும் பாடல்களுக்கு இவர்கள்தான் பொறுப்பு. எருசலேமில் யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தை சாலொமோன் கட்டும்வரை+ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை அவர்கள் செய்துவந்தார்கள்.+ 33 தங்களுடைய மகன்களுடன் சேர்ந்து சேவை செய்தவர்கள் இவர்களே: கோகாத்தியர்களில் பாடகர் ஏமான்;+ இவருடைய தகப்பன் யோவேல்,+ யோவேலின் தகப்பன் சாமுவேல், 34 சாமுவேலின் தகப்பன் எல்க்கானா,+ எல்க்கானாவின் தகப்பன் எரோகாம், எரோகாமின் தகப்பன் ஏலியேல், ஏலியேலின் தகப்பன் தோவா, 35 தோவாவின் தகப்பன் சூப், சூப்பின் தகப்பன் எல்க்கானா, எல்க்கானாவின் தகப்பன் மகாத், மகாத்தின் தகப்பன் அமாசாய், 36 அமாசாயின் தகப்பன் எல்க்கானா, எல்க்கானாவின் தகப்பன் யோவேல், யோவேலின் தகப்பன் அசரியா, அசரியாவின் தகப்பன் செப்பனியா, 37 செப்பனியாவின் தகப்பன் தாகாத், தாகாத்தின் தகப்பன் ஆசீர், ஆசீரின் தகப்பன் எபியாசாப், எபியாசாப்பின் தகப்பன் கோராகு. 38 கோராகுவின் தகப்பன் இத்சேயார், இத்சேயாரின் தகப்பன் கோகாத், கோகாத்தின் தகப்பன் லேவி, லேவியின் தகப்பன் இஸ்ரவேல்.
39 ஏமானின் வலது பக்கத்தில் அவருடைய சகோதரரான ஆசாப்+ நிற்பார்; ஆசாப்பின் தகப்பன் பெரகியா, பெரகியாவின் தகப்பன் சிமேயா. 40 சிமேயாவின் தகப்பன் மிகாவேல், மிகாவேலின் தகப்பன் பாசெயா, பாசெயாவின் தகப்பன் மல்கீயா, 41 மல்கீயாவின் தகப்பன் எத்னி, எத்னியின் தகப்பன் சேராகு, சேராகுவின் தகப்பன் அதாயா, 42 அதாயாவின் தகப்பன் ஏத்தான், ஏத்தானின் தகப்பன் சிம்மா, சிம்மாவின் தகப்பன் சீமேயி. 43 சீமேயியின் தகப்பன் யாகாத், யாகாத்தின் தகப்பன் கெர்சோம், கெர்சோமின் தகப்பன் லேவி.
44 ஏமானின் இடதுபக்கத்தில் அவருடைய சகோதரரான ஏத்தான் நிற்பார்; இவர் மெராரி வம்சத்தைச்+ சேர்ந்தவர்; ஏத்தானின்+ தகப்பன் கிஷி, கிஷியின் தகப்பன் அப்தி, அப்தியின் தகப்பன் மல்லூக், 45 மல்லூக்கின் தகப்பன் அஷபியா, அஷபியாவின் தகப்பன் அமத்சியா, அமத்சியாவின் தகப்பன் இல்க்கியா, 46 இல்க்கியாவின் தகப்பன் அம்சி, அம்சியின் தகப்பன் பானி, பானியின் தகப்பன் சேமேர், 47 சேமேரின் தகப்பன் மகேலி, மகேலியின் தகப்பன் மூசி, மூசியின் தகப்பன் மெராரி, மெராரியின் தகப்பன் லேவி.
48 இவர்களுடைய சகோதரர்களான மற்ற லேவியர்கள் வழிபாட்டுக் கூடாரத்திலிருந்த, அதாவது உண்மைக் கடவுளின் வீட்டிலிருந்த, வேலைகள் அனைத்தையும் செய்வதற்கு நியமிக்கப்பட்டார்கள்.+ 49 ஆரோனும் அவருடைய மகன்களும்+ தகன பலிக்கான பலிபீடத்தில் பலிகளை எரித்து+ புகை எழும்பிவரச் செய்தார்கள்; தூபப்பொருளைத் தூபபீடத்தில் எரித்தார்கள்;+ மகா பரிசுத்த பொருள்கள் சம்பந்தமான எல்லா வேலைகளையும் செய்தார்கள், இஸ்ரவேலர்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தார்கள்,+ இவை எல்லாவற்றையும் உண்மைக் கடவுளின் ஊழியரான மோசே கட்டளையிட்டபடியே செய்தார்கள். 50 ஆரோனின் வம்சத்தார்:+ அவருடைய மகன் எலெயாசார்,+ எலெயாசாரின் மகன் பினெகாஸ், பினெகாசின் மகன் அபிசுவா, 51 அபிசுவாவின் மகன் புக்கி, புக்கியின் மகன் உசீ, உசீயின் மகன் செராகியா, 52 செராகியாவின் மகன் மெராயோத், மெராயோத்தின் மகன் அமரியா, அமரியாவின் மகன் அகிதூப்,+ 53 அகிதூப்பின் மகன் சாதோக், சாதோக்கின்+ மகன் அகிமாஸ்.
54 லேவியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முகாம்போட்டிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த இடங்கள் இவையே: ஆரோனின் வம்சத்தில் வந்த கோகாத்தியர்களுக்கு முதல் குலுக்கல் விழுந்தது. 55 அதன்படி, யூதா பிரதேசத்தில் எப்ரோனும் அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.+ 56 ஆனால், அந்த நகரத்தைச் சேர்ந்த காட்டுவெளிகளும் அதன் கிராமங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குக் கொடுக்கப்பட்டன.+ 57 ஆரோனின் வம்சத்தாருக்கு அடைக்கல நகரங்களான*+ எப்ரோனும்,+ அதோடு, லிப்னாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாத்தீரும்,+ எஸ்தெமொவாவும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,+ 58 ஈலேனும் அதன் மேய்ச்சல் நிலங்களும், தெபீரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 59 ஆசானும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், பெத்-ஷிமேசும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன; 60 ஆரோனின் வம்சத்தாருக்கு பென்யமீன் கோத்திரத்தார் கொடுத்த இடங்கள்: கெபாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அலெமேத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், ஆனதோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். மொத்தம் 13 நகரங்கள் அவர்களுடைய வம்சத்தாருக்குக் கிடைத்தன.+
61 கோகாத்தியர்களான மற்றவர்களுக்கு 10 நகரங்கள் கொடுக்கப்பட்டன;* இன்னொரு கோத்திரத்தைச் சேர்ந்த குடும்பத்துக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து இவை கொடுக்கப்பட்டன.+
62 கெர்சோம் வம்சத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு 13 நகரங்கள் கொடுக்கப்பட்டன; இசக்கார் கோத்திரத்துக்கும் ஆசேர் கோத்திரத்துக்கும் நப்தலி கோத்திரத்துக்கும் பாசானிலுள்ள மனாசே கோத்திரத்துக்கும் ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து இவை கொடுக்கப்பட்டன.+
63 மெராரியர்களின் குடும்பங்களுக்கு 12 நகரங்கள் கொடுக்கப்பட்டன; இவை ரூபன் கோத்திரத்துக்கும் காத் கோத்திரத்துக்கும் செபுலோன் கோத்திரத்துக்கும் ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்டன.+
64 இப்படி, இந்த நகரங்களையும் இவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் இஸ்ரவேலர்கள் லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.+ 65 பேர் பேராகக் குறிப்பிடப்பட்ட இந்த நகரங்கள் யூதா கோத்திரத்துக்கும் சிமியோன் கோத்திரத்துக்கும் பென்யமீன் கோத்திரத்துக்கும் ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து குலுக்கல் முறையில் கொடுக்கப்பட்டன.
66 எப்பிராயீம் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்த நகரங்கள் கோகாத் வம்சத்தில் வந்த சிலருக்குக் கொடுக்கப்பட்டன.+ 67 அவர்களுக்கு அடைக்கல நகரங்களான* சீகேமும்+ எப்பிராயீம் மலைப்பகுதியிலுள்ள அதன் மேய்ச்சல் நிலங்களும், கேசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 68 யோக்மேயாமும் அதன் மேய்ச்சல் நிலங்களும் பெத்-ஓரோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 69 ஆயலோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், காத்-ரிம்மோனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன; 70 கோகாத்தியர்களின் மற்ற குடும்பங்களுக்கு, மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்த ஆநேரும் அதன் மேய்ச்சல் நிலங்களும் பீலியாமும் அதன் மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கப்பட்டன.
71 கெர்சோம் வம்சத்துக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகள்: மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து பாசானில் இருக்கிற கோலானும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அஸ்தரோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும்;+ 72 இசக்கார் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து கேதேசும் அதன் மேய்ச்சல் நிலங்களும், தாபராத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்,+ 73 ராமோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், ஆனேமும் அதன் மேய்ச்சல் நிலங்களும்; 74 ஆசேர் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து மாஷாலும் அதன் மேய்ச்சல் நிலங்களும், அப்தோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும்,+ 75 உக்கோக்கும் அதன் மேய்ச்சல் நிலங்களும், ரேகோபும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்; 76 நப்தலி கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து கலிலேயாவில்+ இருக்கிற கேதேசும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், ஹம்மோனும் அதன் மேய்ச்சல் நிலங்களும், கீரியாத்தாயீமும் அதன் மேய்ச்சல் நிலங்களும்.
77 மெராரியர்களான மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகள்: செபுலோன் கோத்திரத்துக்கு+ ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து ரிம்மோனோவும் அதன் மேய்ச்சல் நிலங்களும், தாபோரும் அதன் மேய்ச்சல் நிலங்களும்; 78 ரூபன் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து, அதாவது யோர்தான் பிரதேசத்தில் எரிகோவுக்கு அருகிலும் யோர்தானுக்குக் கிழக்கிலும் இருந்த பகுதியிலிருந்து, வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதன் மேய்ச்சல் நிலங்களும், யாகாசும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்; 79 அதோடு, கெதெமோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், மேபாகாத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும்; 80 காத் கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து கீலேயாத்தில் இருக்கிற ராமோத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், மக்னாயீமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், 81 எஸ்போனும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், யாசேரும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்.