இசையை அனுபவித்தல்—திறவுகோல் என்ன?
முழுமையான ஒழுக்கக்கேடும் விக்கிரகாராதனையும் பண்டைய உலகில் அப்பியாசிக்கப்பட்டன. எனவே அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவ நடத்தையைக் குறித்து மிகவும் உறுதியான புத்திமதிக் கொடுப்பது அவசியமென்று கண்டான். எபேசுவிலுள்ள கிறிஸ்தவ சபைக்கு அவன் எழுதினான்: “ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்ற புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறது போல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருக்கிறார்கள்.”—எபேசியர் 4:17, 18.
இது இன்றிருக்கும் நிலைமைகளைப் பற்றிய ஒரு நல்ல விவரிப்பாகவும்கூட இல்லையா? இது இசை துறையையும்கூட உட்படுத்துகிறது. நவீன இசையின் பெரும்பாகம் ‘தெய்வீக வாழ்க்கைக்கு அந்நியமாக’ இருக்கும் ஒரு பாணியை பிரதிபலிக்கின்றது. அடிக்கடி உணர்ச்சி பாடல்கள் இரக்கமற்ற அல்லது அனுதாபமற்ற ‘கடினமான இருதயத்தை’ வெளிப்படுத்துகின்றன.
ஆனால் பவுல் பின்வருமாறு சொல்வதன் மூலம் தன் ஆலோசனையை ஒரு படி மேலே கொண்டு செல்கிறான். “சரி, தவறு பற்றிய உணர்வுகள் மரத்துப் போனபின்பு, அவர்கள் காமவெறிக்குத் தங்களையே ஒப்புக்கொடுத்து எல்லா வகையான அவலட்சணமானதையும் வாழ்க்கைப்பணியாக ஆவலோடே நாடித்தொடருகின்றனர்.”—எபேசியர் 4:19, ஜெருசலேம் பைபிள்.
இந்த ‘அவலட்சணமான வாழ்க்கைப்பணியை ஆவலோடே தொடருவது’ இன்றுள்ள இசையில் அதிகமாக பிரதிபலிக்கப்படுகிறது. உணர்ச்சி பாடல்களும் இசையின் பொருளும் பாலுறவு, வன்முறை, போதை மருந்துகள் மற்றும் சுகபோகம் ஆகியவைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒரு தலைமுறையை திருப்திப்படுத்துகின்றது. இவ்விதமான கெட்ட பழக்கங்களை கிறிஸ்தவர்கள் எவ்வாறு நோக்க வேண்டும்? பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி இவ்வாறு கற்றறியவில்லை. உங்களுக்கு இயேசுவைப்பற்றி அறிவிக்கப்பட்டதும் போதிக்கப்பட்டதும் அவரில் அடங்கியுள்ள உண்மைக்கு ஏற்ப இருந்ததன்றோ?”—எபேசியர் 4:20, 21, ஜெருசலேம் பைபிள்.
“ஓர் ஆவிக்குரிய புரட்சி” அவசியம்
உலகத்தின் ஆவியை பிரதிபலிக்கும் இசையின் காரியத்தில் எவ்வாறு இந்த எச்சரிப்பை நாம் பொருத்த முடியும்? இதில், நாம் ‘கிறிஸ்துவின் மனதைக்’ கொண்டிருந்தால், அதாவது, அவருடைய மனநிலையை நாம் கொண்டிருந்தால், ‘லெளகிகமான, மிருகத்தனமான மற்றும் பேய்த்தனமான’ இசைக்கு நாம் செவி கொடுக்க மாட்டோம்.—1 கொரிந்தியர் 2:16; யாக்கோபு 3:15.
ஆனால் நீங்கள் கேட்கலாம், ‘எவ்வாறு இசையில் என்னுடைய ரசனையை நான் மாற்ற முடியும்?’ மறுபடியும் இவ்வாறு சொல்லுவதன் மூலம் பவுல் உதவுகிறான்: “நீங்கள் உங்களுடைய பழைய வாழ்க்கை முறையை விட்டுவிட வேண்டும்; பொய்த் தோற்றங்களால் ஏமாற்றுகிற ஆசைகளை பின்பற்றுவதன் மூலம் மாசுபடும் உங்கள் பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட வேண்டும். உங்களுடைய மனம் ஓர் ஆவிக்குரிய புரட்சியினால் புதுப்பிக்கப்பட வேண்டும்.”—எபேசியர் 4:22, 23, ஜெருசலேம் பைபிள்.
விடை இதில் இருக்கிறது: ஓர் ஆவிக்குரிய புரட்சியின் மூலம் மனதை புதுப்பித்தல். இது இசையில் நம்முடைய ரசனையைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. இது தராதரங்களையும் மதிப்பீடுகளையும் உயர்த்துவதற்கான ஒரு மறுகல்வியை தேவைப்படுத்துகிறது. நாம் சிந்திக்கும் விதத்தில் ஒரு மாற்றத்தை, வித்தியாசமான அடிப்படை தத்துவங்களின் ஒரு தொகுதியை இது அர்த்தப்படுத்துகிறது. மேலும், கடவுளுடைய மற்றும் கிறிஸ்துவினுடைய நோக்குநிலையிலிருந்து காரியங்களை பார்ப்பதும் இதில் உட்படுகிறது. பவுல் இதை தெளிவாக வெளிப்படுத்தியது போல: “நீங்கள் புசித்தாலும் குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”—1 கொரிந்தியர் 10:31.
நவீன இசையின் பெரும்பாகம் கடவுளுக்கு எந்த மகிமையையும் கொண்டுவருகிறதில்லை. மாறாக, எந்த மதிப்பீடுகளுக்காக கிறிஸ்தவர்கள் நிலை நிற்பதற்கும் சிறைச்சாலைகளிலும் கான்சன்ட்ரேஷன் முகாம்களிலும் மரிப்பதற்கும் மனமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்களோ அவைகளையே வெறுத்தொதுக்குகின்றன. ஆகையால், ‘உலகத்தையும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதபடி’ நாம் நம்முடைய இசையின் ரசனையில் ஒரு மாற்றத்தைச் செய்ய வேண்டுமானால், ஏன் இதை ஒரு தியாகமாக கருத வேண்டும்?—1 யோவான் 2:15-17.
நல்ல இசை —இதனுடைய திறவுகோல் என்ன?
பைபிள் நியமங்களின் பேரில் நமக்கிருக்கும் மரியாதையினால், நாம் இழிவான இசையை நிராகரிக்கிறோமென்றால், எதனால் இதை மாற்றீடு செய்வோம்? சரி, இசையின் புதிய பாதைகளை ஏன் நாம் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? அவைகள் நாம் கடந்த காலத்தில் விரும்பி தேர்ந்தெடுத்தவைகளைக் காட்டிலும் அதிகம் அனுபவிக்கக்கூடியதாயும், கட்டியெழுப்புவதாயும் இருக்கக்கூடும். உதாரணமாக, ஒரு முன்னாள் ராக் இசை பாடகர் அவர் செய்த மாற்றங்களைக் குறித்து இதைச் சொன்னார்:
“எளிதில் வசப்படுத்துகின்ற ராக் ஒலியிலிருந்து ஓர் ஏற்கத்தகுந்த வகையான பிரபலமான இசைக்கும் ஆழமான கிளாசிக்கல் (தரமான) இசைக்கும் செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டியதிருந்தது. அவைகளுக்கு அதிகமான உண்மைப் பொருள் இருக்கிறது என்பதையும், பெரும்பாலான நவீன இசையின் ஆவியோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியாது என்பதையும் அறிந்தபோது, இது இலகுவாகவும் அதிக திருப்தியளிப்பதாகவும் ஆனது. இது திடீரென்று அதிக முழுநிறைவானதாக இருந்தது. இசையின் மாற்று வகைகளுக்கு எதிரான என்னுடைய முன்னாள் வெறுப்பினால் நான் எதை இழந்தேன் என்று அறிந்தேன்.”
ஒரு நல்ல இசை இழையையும், சுத்தமான உணர்ச்சிகளைத் தெரிவிக்கின்றதும் மற்றும் பைபிள் நியமங்களுக்கு முரணாக இல்லாத தத்துவத்தை வெளிப்படுத்துகிறதுமான கிளாசிக்கல் இசையும் நாட்டுப்புறப் பாடல்களும் மேலும் சில நவீன இசையும் ஏராளமாக இருக்கின்றன. ‘நீதியுள்ளதாயும், கற்புள்ளதாயும் நன்றாக பேசப்பட்டதாயும், நல்லொழுக்கமுள்ளதாயும் மற்றும் துதிக்கப்பட்டதாயும்’ இருந்து, தவறாக நம்முடைய சிந்தனைகளின் மீது செல்வாக்கு செலுத்தாத இசையைக் கண்டு பிடிப்பதும், அனுபவிப்பதுமே திறவுகோலாக இருக்கிறது.—பிலிப்பியர் 4:8.
ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் இசையின் பாகம்
சிலருக்கு, நல்ல இசையை அனுபவிக்க ஒரு வழி பாடுவது அல்லது ஓர் இசைக் கருவியை இசைப்பதற்கு கற்றுக்கொள்வதாகும். தனியாகவும் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து தொகுதியாக பாடுவதிலிருந்தும் பெரும் மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும். என்றபோதிலும், எல்லாக் காரியங்களிலும் போல சமநிலை தேவைப்படுகிறது. ஒரு மனமகிழ்வு அல்லது ஒரு பொழுதுபோக்கு ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் ஒருபோதும் ஆட்டிப்படைக்கும் ஒரு காரியமாக இருக்கக்கூடாது. அது ஏற்படுமானால், அதிகத்தின் காரணமாக, ஆரோக்கியமான இசையும்கூட ஆரோக்கியமற்ற விளைவுகளை உடையதாயிருக்கும். அப்போது ஒரு கிறிஸ்தவன் ‘தேவபிரியராயிராமல் சுகபோக பிரியனாக’ மாறும் ஆபத்திலிருப்பான்.—2 தீமோத்தேயு 3:4.
யெகோவாவின் நம்முடைய வணக்கத்திலும்கூட இசை ஓர் இன்றியமையாத பாகத்தைக் கொண்டிருக்கிறது. பண்டைய இஸ்ரவேலில், ஆசாபும் அவனுடைய சகோதரர்களும் பாடினார்கள்: “யெகோவாவைத் (NW) துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.” ஆம், இசை கடவுளைத் துதித்து அவரைப் பிரியப்படுத்தக்கூடும்.—1 நாளாகமம் 16:8, 9.
யெகோவாவின் சாட்சிகளால் அவர்களுடைய ராஜ்ய மன்றங்களில் உபயோகப்படுத்தப்படும் ராஜ்ய பாட்டுகள், பைபிள் வாக்கியங்கள், சங்கீதங்கள், ஜெபங்கள் மற்றும் போதகங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இந்தப் பரிசுத்த இசையை ஆழமாக அனுபவிக்கக்கூடும் அல்லவா? மேலும் இந்தப் பாட்டுகளை உணர்ச்சியோடும் உற்சாகத்தோடும் பாடுவதன் மூலம் நம்முடைய சந்தோஷத்தைக் காட்ட வேண்டுமல்லவா? கிறிஸ்தவக் கூட்டங்கள் அல்லாத நேரங்களில்கூட, அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட ராஜ்ய இன்னிசைகள் (Kingdom Melodies) என்றழைக்கப்படும் இந்தப் பாட்டுகளின் மூலம் நம்முடைய வாழ்க்கையின் கவலைகளை நாம் குறைக்கக்கூடும் அல்லவா?
இந்த இசைக்கருவி வழங்குதலில், எல்லா இசையாளர்களும் யெகோவாவின் சாட்சிகளே. சுரமேள இசை கருவிகளில் இசைப்பவர்களில் சிலர் வாழ்க்கை தொழிலர். மற்றவர்கள், மேலே குறிப்பிட்ட முன்னாள் ராக் இசையாளன் உட்பட வரம்பு மீறாத இசையின் அநேக விதங்களை அனுபவிக்கும் வரம்பெற்ற இளைஞர்கள். லெளகிக, பேய்தன மனநிலைகளை பிரதிபலிக்கும் இசையை தள்ளிவிட்டதன் காரணமாக அவர்கள் இழந்துவிட்டதாக உணரவில்லை. அவர்களுடைய நேர்த்தியான முன்மாதிரி, பைபிள் நியமங்கள் நம்முடைய தெரிவை கட்டுப்படுத்த இடமளிப்போமானால், நாமுங்கூட பொதுவான மற்றும் பரிசுத்த இசையில் அதிக நலந்தருகிற சந்தோஷத்தைக் காணமுடியும் என்று காட்டுகின்றது.—எபேசியர் 5:18-20. (w89 6/1)
[பக்கம் 21-ன் பெட்டி]
“ராக் இசை ஒரே ஒரு கவர்ச்சியை, பாலின இச்சைக்கு ஒரு காட்டுமிராண்டித்தனமான கவர்ச்சியை மாத்திரமே கொண்டிருக்கிறது—அன்பு அல்ல, காதல் அல்ல, ஆனால் முதிர்ச்சியில்லாத, சொல்லிக்கொடுக்கப்படாத பாலின ஆசை. . . . ராக்கிற்கு பாலுறவின் தாளம் இருப்பதை இளைஞர் அறிவர்.”—ஆலன் ப்ளூம் எழுதிய அமெரிக்க மனதை மூடுதல்.