-
மத்தேயுயெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
கண்தான் உடலுக்கு விளக்கு: ஒருவருடைய கண் நல்ல நிலைமையில் இருக்கும்போது அது அவருடைய உடலுக்கு விளக்குபோல் இருக்கிறது; அதாவது, இருளில் வெளிச்சம் தரும் விளக்கைப் போல இருக்கிறது. எல்லாவற்றையும் பார்க்கவும் உணரவும் அது அவருக்கு உதவுகிறது. இங்கே “கண்” என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.—எபே 1:18.
ஒரே விஷயத்தின் மேல் கவனமாக: வே.வா., “தெளிவாக; ஆரோக்கியமாக.” கிரேக்கில், ஹேப்ளஸ். இதன் அடிப்படை அர்த்தம், “ஒருமுகமாக; எளிமையாக.” ஒரே மனதோடு இருப்பதை அல்லது ஒரே விஷயத்துக்கு முழு ஈடுபாடு காட்டுவதை அது குறிக்கலாம். பார்வையை ஒருமுகப்படுத்தும் திறன் நம்முடைய கண்ணுக்கு இருந்தால்தான், அது நல்ல நிலைமையில் இருக்கிறதென்று சொல்ல முடியும். நம்முடைய அடையாளப்பூர்வமான கண் ஒரே விஷயத்தின் மேல், அதுவும் சரியான விஷயத்தின் மேல், “கவனமாக இருந்தால்” (மத் 6:33), நம்முடைய மொத்த சுபாவமுமே மெருகேறும்.
-