உலகத்தை மாற்றிய அந்த வாரம்
“யெகோவாவின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!”—மத்தேயு 21:9, NW.
1. கடந்த ஆகஸ்ட் மாதம் எந்த இரண்டு மாறுபட்ட தொகுதிகள் சம்பவங்களால் பாதிக்கப்பட்டன?
“உலகத்தைக் குலுக்கிய அதிக மனவேதனை உண்டுபண்ணிய மூன்று நாட்கள்.” ஆகஸ்ட் 1991-ல் இது போன்ற செய்தித்துறையின் தலைப்புச் செய்திகள் ஒரு சில நாட்களிலேயே உலகம் தலைகீழாக மாற்றப்படக்கூடும் என்ற உண்மையை வலியுறுத்தின. ஆம், ஆகஸ்ட் மாதத்தின் இறுதி நாட்கள் உலகத்துக்கு மாத்திரமல்ல, ஆனால் இயேசு, “அவர்கள் உலகத்தாரல்ல” என்பதாக குறிப்பிட்டு பேசின அந்த ஒரு தொகுதிக்கும்கூட முக்கியமானதாக இருந்தது. இந்தத் தொகுதி இன்று யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்படுகிறது.—யோவான் 17:14.
2, 3. (எ) போர் மேகங்கள் இருந்த போதிலும் ஜாக்ரெபில் சுயாதீனம் எவ்விதமாக உயர்த்திக் காண்பிக்கப்பட்டது? (பி) ஒடிசாவில் பலமான விசுவாசம் எவ்விதமாக பலனளிக்கப்பட்டது?
2 யுகோஸ்லாவியாவில் திட்டமிடப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய முதல் சர்வ தேச மாநாடு ஆகஸ்ட் 16 முதல் 18 வரையாக நடத்தப்படவிருந்தது. உள்நாட்டுப் போர் ஏற்படும் தறுவாயில் இருந்த ஒரு தேசத்திற்குள் நடைபெறும் யெகோவாவின் ஜனங்களுடைய முதலாவதான பெரிய மாநாடாகவும்கூட இது இருக்கும். உள்ளூர் சாட்சிகள், அண்டை நாடுகளில் இருந்து வந்த வாலன்டியர்களோடு சேர்ந்து ஜாக்ரெபில் ஹாஸ்க் க்ரடான்ஸி உதைப்பந்தாட்ட விளையாட்டரங்கத்தை முழுமையாக செப்பனிட்டு புதுப்பிக்க அயராது பாடுபட்டிருந்தனர். அது புதுப் பொலிவுடன் “தெய்வீக சுயாதீனப் பிரியர்” மாநாட்டுக்கு மிகச் சிறந்த இடமாக இருந்தது. ஐக்கிய மாகாணங்களிலிருந்து 600 பேர் உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் ஆஜராயிருக்க திட்டமிட்டிருந்தனர். உள்நாட்டுப் போர் மேகங்கள் அச்சுறுத்திய போது, “அமெரிக்க நாட்டவர் ஒருபோதும் வரமாட்டார்கள்” என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் மற்ற அநேக தேசங்களிலிருந்து வந்த பிரதிநிதிகளோடுகூட அவர்களும் வந்தார்கள். 10,000 பேர் ஆஜராயிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடைசி நாள் அரங்கத்தில் 14,684 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் வெகுவாக ஆசீர்வதிக்கப்பட்டனர், ஏனென்றால், அவர்கள் ‘ஒன்றாக கூடிவருதலை அசட்டை செய்யவில்லை.’—எபிரெயர் 10:25.
3 ஜாக்ரெப் மாநாட்டைத் தொடர்ந்து மூன்று நாட்களின் போது, சோவியத் யூனியனில் அரசை கவிழ்க்க வெற்றியுறாத ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சமயம் தெய்வீக சுயாதீனப் பிரியர்கள் யுக்ரேனில் ஒடிசாவில் தங்கள் மாநாட்டுக்காக முடிவான தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தனர். மாநாடு நடத்தப்பட முடியுமா? பலமான விசுவாசத்தோடு சகோதரர்கள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டிருந்த அரங்கத்தின் மீது கடைசி திருத்தங்களைச் செய்துகொண்டிருந்தனர், பிரதிநிதிகள் வந்த வண்ணமாகவே இருந்தனர். ஓர் அற்புதம் நிகழ்ந்தது போல அரசியல் புரட்சி முடிவடைந்தது. மகிழ்ச்சிகரமான ஒரு மாநாடு ஆகஸ்ட் 24, 25-ல் நடத்தப்பட்டது, 12,115 பேர் ஆஜரானார்கள், 1,943 பேர் முழுக்காட்டப்பட்டனர்—ஆஜரானவர்களின் உச்சநிலை எண்ணிக்கையில் இது 16 சதவீதமாக இருந்தது! இந்தப் புதிய சாட்சிகள், நீண்டகாலமாக உத்தமத்தைக் காத்துக் கொண்டவர்களோடு சேர்ந்து, யெகோவாவின் மீது முழு நம்பிக்கையோடு மாநாட்டுக்கு வந்திருந்தமைக்காக களிகூர்ந்தார்கள்.—நீதிமொழிகள் 3:5, 6.
4. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள சாட்சிகள் இயேசு வைத்த எந்த மாதிரியை பின்பற்றிக் கொண்டிருந்தார்கள்?
4 இந்த உண்மையுள்ள சாட்சிகள் நம்முடைய முன்மாதிரியான இயேசு கிறிஸ்து வைத்த மாதிரியை பின்பற்றிக்கொண்டிருந்தார்கள். யூதர்கள் அவரை கொலைசெய்ய வகைதேடிக் கொண்டிருந்த போதிலும், யெகோவா கட்டளையிட்டிருந்த பண்டிகைகளுக்குச் செல்வதை அவர் ஒருபோதும் அசட்டை செய்யவில்லை. தம்முடைய கடைசி பஸ்காவுக்காக அவர் எருசலேமுக்கு வந்த போது, இவர்கள் ஆலயத்தில் எல்லாப் பக்கங்களிலும் நின்றுகொண்டு, “உங்களுக்குக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ” என்று பேசிக்கொண்டார்கள். (யோவான் 11:56) ஆனால் அவர் நிச்சயமாக வந்தார்! இது மனித சரித்திரத்தின் போக்கையே தலைகீழாக மாற்றிய அந்த உச்சக்கட்ட வாரத்துக்கு வழியை தயார் செய்தது. அந்த வாரத்தின்—யூத நாட்காட்டியில் நிசான் 8 முதல் 14—சிறப்பு அம்சங்களில் சிலவற்றை நாம் இப்போது விமர்சிப்போமா?
நிசான் 8
5. பொ.ச. 33, நிசான் 8-ல் பெத்தானியாவுக்கு பயணப்பட்டுப் போகையில் இயேசு எதை அறிந்தவராக இருக்கிறார்?
5 இந்நாளில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் பெத்தானியாவுக்கு வந்து சேருகிறார்கள். இங்கே, இயேசு சமீபத்தில் மரித்தோரிலிருந்து எழுப்பியிருந்த தம்முடைய அருமை நண்பன் லாசருவின் வீட்டில் ஆறு இரவுகள் தங்குவார். பெத்தானியா எருசலேமுக்கு அருகில் இருக்கிறது. இயேசு தம்முடைய சீஷர்களை தனியே அழைத்து, ஏற்கெனவே அவர்களிடம் பின்வருமாறு சொல்லியிருந்தார்: “இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, அவரைப் பரியாசம் பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்.” (மத்தேயு 20:18, 19) வேதனையான சோதனைகளை இப்பொழுது எதிர்ப்பட வேண்டும் என்பதை இயேசு முழுமையாக அறிந்திருக்கிறார். என்றபோதிலும், உச்சஅளவான சோதனையின் அந்த நேரம் நெருங்குகையில் தம்முடைய சகோதரர்களுக்கு அன்பாக ஊழியஞ் செய்ய எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே” நம்மிலும் எப்போதும் இருக்கட்டும்.—பிலிப்பியர் 2:1-5; 1 யோவான் 3:16.
நிசான் 9
6. நிசான் 9 மாலை மரியாள் என்ன செய்தாள்? இயேசு யூதாஸிடம் என்ன சொன்னார்?
6 அடுத்த சூரிய மறைவைத் தொடர்ந்து நிசான் 9 ஆரம்பிக்கையில், இயேசு முன்னாள் குஷ்டரோகியான சிமியோன் வீட்டில் விருந்து ஒன்றை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இங்குதானே லாசருவின் சகோதரியான மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தை இயேசுவின் தலையிலும் பாதங்களிலும் பூசி, தன் தலை மயிரால் அவருடைய பாதங்களைத் தாழ்மையாக துடைக்கிறாள். யூதாஸ் அதை ஆட்சேபித்த போது, இயேசு சொல்கிறார்: “இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.” யூதர்களில் அநேகர் பெத்தானியாவுக்குச் செல்கிறார்கள், இயேசுவில் விசுவாசம் வைக்கிறார்கள் என்பதை கேள்விப்படுகையில், பிரதான ஆசாரியர்கள் அவரையும் லாசருவையும் கொல்ல திட்டம்பண்ணுகிறார்கள்.—யோவான் 12:1-7.
7 அடுத்த நாள் காலை இயேசு எருசலேமுக்கு பயணப்படுகிறார். திரளான ஜனங்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று ஆர்ப்பரித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டு போகிறார்கள். இயேசு அப்போது நகரத்துக்கு ஒரு கழுதையின் மேல் ஏறி வருவதன் மூலம், சகரியா 9:9 தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார். அவர் எருசலேமை நெருங்கி வருகையில், அதற்காக அவர் அழுது, ரோமர்கள் சூழ மதில்போட்டு வளைத்துக்கொண்டு அதை முழுவதுமாக அழித்துவிடுவார்கள் என்று முன்னுரைக்கிறார்—37 வருடங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தை கொண்டிருக்கவிருந்த ஒரு தீர்க்கதரிசனம். (பூர்வ எருசலேமை பின்பற்றி விசுவாச துரோகம் செய்திருக்கும் கிறிஸ்தவமண்டலத்துக்கு இது தொந்தரவை சுட்டிக்காண்பிக்கிறது.) யூத ஆட்சியாளர்கள் இயேசுவை தங்கள் அரசராக கொண்டிருக்க விரும்பவில்லை. கோபத்தில் அவர்கள், “இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே” என்கிறார்கள்.—யோவான் 12:13, 19.
நிசான் 10
8. நிசான் 10-ம் தேதி, இயேசு எவ்விதமாக யெகோவாவின் ஜெப வீட்டுக்கு ஆழ்ந்த மரியாதையைக் காண்பித்தார்? என்ன பின்தொடர்ந்தது?
8 இயேசு மறுபடியுமாக ஆலயத்தைச் சென்று பார்க்கிறார். இரண்டாவது முறையாக அவர் பேராசையுள்ள வியாபாரிகளையும் காசுக்காரர்களையும் துரத்தி விடுகிறார். “வியாபார மனப்பான்மை—“பண ஆசை”—யெகோவாவின் ஜெப வீட்டில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது! (1 தீமோத்தேயு 6:9, 10) இயேசு விரைவில் மரிக்க இருக்கிறார். இதை விளக்க, ஒரு விதை விதைப்பதைப் பற்றி அவர் பேசுகிறார். விதைக்கிற விதை மரிக்கிறது, ஆனால் அது ஏராளமான கதிர்களை விளைவிக்கும் ஒரு தாளை உண்டுபண்ண துளிர்க்கிறது. அதேவிதமாகவே, இயேசுவின் மரணம், அவரில் விசுவாசத்தை அப்பியாசிக்கிற திரளான ஜனங்களுக்கு நித்திய ஜீவனில் விளைவடையும். நெருங்கி வந்து கொண்டிருந்த தம்முடைய மரணத்தைப் பற்றிய எண்ணத்தால் கலங்கியவராய், இயேசு இதன் மூலமாக தம்முடைய பிதாவின் நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதாக ஜெபிக்கிறார். இதற்கு பிரதிபலிப்பாக, அங்கிருந்த அனைவரும் கேட்கக்கூடிய வகையில் பரலோகத்திலிருந்து கடவுளுடைய குரல் இடிமுழக்கமாய் கேட்கிறது: “மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்.”—யோவான் 12:27, 28.
நிசான் 11—சுறுசுறுப்பான ஒரு நாள்
9. (எ) நிசான் 11-ம் நாளின் ஆரம்பத்தில், இயேசு விசுவாசதுரோக யூதர்களை கண்டனம் செய்வதில் எவ்விதமாக உவமைகளை உபயோகித்தார்? (பி) இயேசுவினுடைய உவமையின்படி, மகத்தான சிலாக்கியத்தை யார் இழந்துவிட்டிருக்கிறார்கள்?
9 வேலைகள் நிறைந்த ஒரு முழு நாளுக்காக இயேசுவும் அவருடைய சீஷர்களும் மறுபடியுமாக பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். விசுவாச துரோக யூதர்கள் ஏன் கண்டனம் செய்யப்படுகிறார்கள் என்பதைக் காண்பிக்க இயேசு மூன்று உவமைகளைப் பயன்படுத்துகிறார். போகிற வழியில், கனிக்கொடாத ஓர் அத்திமரத்தை அவர் சபித்து, இவ்விதமாக உண்மையற்ற கனிகொடாத யூத தேசத்தை தாம் கண்டனம் செய்வதை விளக்குகிறார். ஆலயத்துக்குள் பிரவேசிக்கையில், எவ்விதமாக ஓர் எஜமானருடைய திராட்சத்தோட்டத்தின் தகுதியில்லாத தோட்டக்காரர்கள் கடைசியாக எஜமானின் குமாரனும் சுதந்தரவாளியுமானவரை கொலை செய்கிறார்கள் என்பதை விவரிக்கிறார்—யெகோவாவிடமிருந்து வந்த அவர்களுடைய பொறுப்புக்கு யூதர்கள் உண்மையற்றவர்களாய், இயேசுவை அவர்கள் கொலை செய்வதன் மூலம் அது உச்சக்கட்டத்தை அடைய போவதற்கு அது படமாக இருக்கிறது. ஒரு ராஜா—யெகோவா—ஏற்பாடு செய்திருந்த ஒரு விவாக விருந்துக்கு, அழைக்கப்பட்ட விருந்தினர்கள் (யூதர்கள்) வராமல் இருப்பதற்கு தன்னலமான சாக்குப்போக்குகளை கூறுவதை அவர் விவரிக்கிறார். ஆகவே அழைப்பு புறம்பேயிருக்கிறவர்களுக்கு—புறஜாதியாருக்கு—கொடுக்கப்படுகிறது. இவர்களில் சிலர் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் கலியாண வஸ்திரமில்லாத ஒரு மனிதன் வெளியே தள்ளப்படுகிறான். அவன் கிறிஸ்தவமண்டலத்தின் போலி கிறிஸ்தவர்களை பிரதிநிதித்துவம் செய்கிறான். இயேசுவின் நாளிலிருந்த அநேக யூதர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளும் முத்தரிக்கப்பட்டவர்களான 1,44,000 பேரில் இருக்கும்படியாக அழைக்கப்பட்டார்கள், ஆனால், “தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்.”—மத்தேயு 22:14; வெளிப்படுத்துதல் 7:4.
10-12. (எ) இயேசு ஏன் யூத மத குருக்களை கண்டித்து பேசினார்? அந்த மாய்மாலக்காரர் மீது அவர் என்ன புண்படுத்துகின்ற கண்டனங்களை குவிக்கிறார்? (பி) விசுவாசதுரோக யூதர்கள் மீது கடைசியாக நியாயத்தீர்ப்பு எவ்விதமாக நிறைவேறியது?
10 மாய்மாலமான யூத மதகுருக்கள், இயேசுவை பிடிக்க ஒரு சந்தர்ப்பத்துக்காக வகைதேடிக்கொண்டிருக்கின்றனர், ஆனால் அவர்களுடைய தந்திரமான அநேக கேள்விகளுக்கு அவர் பதிலளித்து, ஜனங்களுக்கு முன்பாக அவர்களை குழப்பமடையச் செய்கிறார். ஓ, அந்த விசுவாச துரோக மதப்பற்றுள்ள யூதர்கள்! எத்தனை வெளிப்படையாக இயேசு அவர்களை கண்டனம் செய்கிறார்! நம்முடைய நாளிலுள்ள அநேக பாதிரிமாரைப் போலவே அவர்கள் முதன்மையான ஸ்தானத்துக்கு, விசேஷித்த சிறப்புடுப்புக்கு, “ரபீ” “தந்தை” போன்று உயர்வாக தொனிக்கும் பட்டப்பெயர்களுக்காக மிகுந்த ஆசையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இயேசு பொது நியதியை கூறுகிறார்: “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—மத்தேயு 23:12.
11 இயேசு புண்படுத்தும் வகையில் அந்த மதத்தலைவர்களை வெளிப்படையாக கண்டனம் செய்கிறார். ஏழு தடவைகள் “உங்களுக்கு ஐயோ!” என்று சொல்லி, குருடரான வழிகாட்டிகள் என்றும் மாய்மாலக்காரர் என்றும் அழைக்கிறார். ஒவ்வொரு சமயமும் கண்டனத்துக்குரிய தெளிவான காரணத்தையும் அவர் கொடுக்கிறார். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதை அவர்கள் தடை பண்ணுகிறார்கள். அவர்கள் ஒருவனை தந்திரமாக மதம் மாறும்படி செய்விக்கும் போது, அவன் இரட்டிப்பாக கெஹன்னாவின் மகனாகிறான், ஒருவேளை முற்காலத்தில் அவனுடைய படுமோசமான பாவம் அல்லது மதவெறியின் காரணமாக ஏற்கெனவே அவன் அழிவுக்காக காத்திருப்பதனால் அவ்விதமாக ஆகிறான். பரிசேயர்கள் ஆலயத்தில் தூய்மையான வணக்கத்தை காத்துக்கொள்வதற்கு பதிலாக ஆலயத்திலுள்ள பொன்னின் மீது கவனத்தை ஊன்ற வைத்த காரணத்தால், இயேசு அவர்களை “மதிகேடரே, குருடரே!” என்று அறிவிக்கிறார். அவர்கள் இச்சிக்கப்பட்ட ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் அசட்டை செய்கிறார்கள். நியாயப்பிரமாணத்தின் முக்கியமான விஷயங்களை கவனியாமற் போகிறார்கள். சடங்கு முறையாக கழுவுதல் அவர்களுடைய உட்புற அசுத்தத்தை ஒருபோதும் நீக்காது. நெருங்கிவந்து கொண்டிருந்த இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட ஓர் இருதயமே அதைச் செய்ய முடியும். அவர்களுடைய புறம்பே “வெள்ளையடிக்கப்பட்டிருக்கும்” எதையும் அவர்களுடைய உட்புற மாய்மாலமும் அக்கிரமும் பொய்யென காட்டுகிறது.—மத்தேயு 23:13-29.
12 ஆம், உண்மையிலேயே பூர்வ காலத்து “தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருந்த” பரிசேயர்களுக்கு அது ஐயோவாக இருக்கிறது! கெஹன்னாவுக்காக வைக்கப்பட்டிருக்கும் சர்ப்பங்களும் விரியன் பாம்புக் குட்டிகளுமாக அவர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் இயேசுவை மாத்திரமல்ல, அவர் அனுப்புகின்றவர்களையும்கூட கொலை செய்வார்கள், இது “இந்தச் சந்ததியின் மேல்” நிறைவேற இருந்த நியாயத்தீர்ப்பாக இருக்கிறது. இதன் நிறைவேற்றமாக, எருசலேம் 37 ஆண்டுகளுக்குப் பிற்பாடு முழுவதுமாக அழிக்கப்பட்டது.—மத்தேயு 23:30-36.
13. ஆலய காணிக்கைகளைப் பற்றிய இயேசுவின் குறிப்புகள், இன்று என்ன நிலைமைகளில் பிரதிபலிக்கப்படுகின்றன?
13 ஆலயத்தைவிட்டுப் புறப்படுவதற்கு முன்பு இயேசு இரண்டு காசுகளை—“தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம்”—காணிக்கைப் பெட்டிக்குள் போடும் ஓர் ஏழை விதவையை பாராட்டிப் பேசுகிறார். அடையாள காணிக்கையை மாத்திரமே போடும் பேராசையுள்ள செல்வந்தர்களிலிருந்து நிச்சயமாகவே ஒரு வேறுபாடு! ஏழையான அந்த விதவையைப் போல யெகோவாவின் சாட்சிகள் இன்று உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிக்கவும் விஸ்தரிக்கவும் மனமுவந்து தங்கள் நேரத்தையும் சக்திகளையும் பணத்தையும் தியாகம் செய்கிறார்கள். மந்தையை ஏமாற்றி, சொந்த செல்வ சாம்ராஜ்யங்களைக் கட்டிக்கொள்ளும் ஒழுக்கமற்ற டிவி சுவிசேஷகர்களிலிருந்து எத்தனை வித்தியாசம்!—லூக்கா 20:45–21:4.
நிசான் 11 முடிவுக்கு வருகையில்
14. இயேசு என்ன வருத்தத்தைத் தெரிவித்தார்? தம்முடைய சீஷர்களின் கூடுதலான கேள்விக்கு அவர் எவ்விதமாக பதிலளித்தார்?
14 இயேசு எருசலேமுக்காகவும் அதன் மக்களுக்காகவும் புலம்பி இவ்விதமாக அறிவிக்கிறார்: “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இது முதல் என்னைக் காணாதிருப்பீர்கள்.” (மத்தேயு 23:37-39) பின்னால், சீஷர்கள் இதைக் குறித்துக் கேட்கிறார்கள். இதற்குப் பதிலாக இயேசு ராஜ்ய வல்லமையில் தம்முடைய பிரசன்னத்தையும் சாத்தானுடைய பொல்லாத ஒழுங்கு முறையின் முடிவையும் சுட்டிக்காட்டும் அடையாளத்தை விவரிக்கிறார்.—மத்தேயு 24:1–25:46; மாற்கு 13:1-37; லூக்கா 21:5-36.
15. இயேசுவுடைய நியாயத்தீர்ப்புக்கான பிரசன்னத்தைக் குறித்து அவர் என்ன அடையாளத்தைக் கொடுத்தார்? எப்போது முதற்கொண்டு அது நிறைவேறி வருகிறது?
15 ஆலயத்தின் மீது விரைவில் நிறைவேற்றப்பட இருந்த யெகோவாவின் நியாயத்தீர்ப்பைக் குறிப்பிட்டு, இயேசு இது முழு காரிய ஒழுங்கின் முடிவில் நடைபெற இருக்கும் எதிர்கால அழிவுக்குரிய சம்பவங்களுக்கு மாதிரியாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அவருடைய பிரசன்னத்தின் அந்தச் சமயம் முன்னொருபோதுமிராத அளவில் போர்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள் ஆகியவற்றோடுகூட அன்பற்றத்தன்மையாலும் அக்கிரமத்தாலும் தனிப்படுத்திக் காட்டப்படும். 1914 முதற்கொண்டு நம்முடைய 20-ம் நூற்றாண்டு உலகில் இது எத்தனை உண்மையாக இருந்திருக்கிறது!
16, 17. என்ன உலக சம்பவங்களை இயேசு விவரித்தார்? தீர்க்கதரிசனத்துக்கு கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
16 “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்தில்” உச்சக்கட்டம் எட்டப்படும். இது நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தைப் போன்றே அத்தனை நாசம் விளைவிப்பதாக இருக்கப்போவதன் காரணமாக, உலகப்பிரகாரமான உத்தியோகங்களில் ஆழ்ந்துவிடுவதற்கு எதிராக இயேசு எச்சரிக்கிறார். “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.” எச்சரிப்பதற்காகவும் அவருடைய பிரசன்னத்தின் இந்த நாளில் ஏராளமான ஆவிக்குரிய உணவை அளிப்பதற்காகவும் எஜமான் அபிஷேகம் பண்ணப்பட்ட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யை நியமித்திருப்பதற்காக நாம் எவ்வளவு சந்தோஷமாயிருக்கலாம்!—மத்தேயு 24:21, 42, 45-47.
17 நம்முடைய 20-ம் நூற்றாண்டில், “பூமியின் மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டா”வதையும் “பூமியின் மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்ப்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து” போவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இயேசு நமக்குச் சொல்கிறார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.” அவர் நம்மை எச்சரிக்கிறார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.” விழித்திருப்பதன் மூலமாக மட்டுமே, நாம் இயேசுவுக்கு “மனுஷகுமாரனுக்கு” முன்பாக அவருடைய பிரசன்னத்தின் போது அங்கீகரிக்கப்பட்டவர்களாக நிற்க முடியும்.—லூக்கா 21:25-28, 34-36.
18. பத்து கன்னிகைகளையும் தாலந்துகளையும் பற்றிய இயேசுவின் உவமைகளிலிருந்து நாம் என்ன உற்சாகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்?
18 நவீன-நாளைய சம்பவங்களின் தம்முடைய தனிச்சிறப்புவாய்ந்த முற்காட்சியை முடிக்கையில், இயேசு மூன்று உவமைகளைக் கொடுக்கிறார். முதலில், பத்து கன்னிகைகளின் உவமையில் “விழித்திருக்க” வேண்டிய அவசியத்தை அவர் மறுபடியுமாக வலியுறுத்துகிறார். பின்னர், ஊழியக்காரர்களையும் தாலந்துகளையும் பற்றிய உவமையில் ‘எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி’ என்ற அழைப்பின் மூலம் கடுமையான உழைப்புக்கு எவ்விதமாக பலனளிக்கப்படுகிறது என்பதை அவர் காண்பிக்கிறார். இந்த உவமைகளில் முன்நிழலாக குறிப்பிடப்படும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும், வேறே ஆடுகளும் இந்தத் தெளிவான வருணனைகளிலிருந்து மிகுதியான உற்சாகத்தை பெற்றுக்கொள்ள முடியும்.—மத்தேயு 25:1-30.
19, 20. செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் உவமையில் என்ன மகிழ்ச்சிகரமான நவீன-நாளைய உறவு சிறப்பித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது?
19 இயேசு தம்முடைய மகிமையுள்ள பரலோக சிங்காசனத்தின் மேல் உட்காருவதற்கு வந்து சேர்ந்த பின்பு, ராஜ்ய வல்லமையில் அவருடைய பிரசன்னத்தைப் பற்றி மூன்றாவது உவமை குறிப்பிடுகிறது. தேசங்களை நியாயத்தீர்ப்பு செய்வதற்கும், பூமியிலுள்ள மக்களை இரண்டு தொகுதிகளாக, மனத்தாழ்மையுள்ள செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களை ஒரு தொகுதியாகவும், பிடிவாதமான வெள்ளாடுகளைப் போன்ற ஆட்களை மற்றொரு தொகுதியாகவும் பிரிப்பதற்குமுரிய காலமாக இது இருக்கிறது. செம்மறியாடுகள் ராஜாவின் சகோதரர்களுக்கு—உலகினுடைய முடிவின் இந்தக் காலத்தில் பூமியின் மீது மீந்திருக்கும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு—தாங்கள் ஆதரவாயிருப்பதைக் காண்பிக்க இயல்பானதைவிட பேரளவான முயற்சியை எடுக்கின்றனர். இந்தச் செம்மறியாடுகளுக்கு ஜீவன் பலனாக கிடைக்கையில், போற்றுதலில்லாத வெள்ளாடுகள் நித்திய அழிவுக்குள் போகிறார்கள்.—மத்தேயு 25:31-46.
20 இந்தக் காரிய ஒழுங்கின் முடிவின் சமயத்தில் வேறே ஆடுகளுக்கும் ராஜாவின் சகோதரர்களுக்குமிடையே நாம் என்னே ஓர் அதிசயமான உறவை பார்க்கிறோம்! ராஜாவின் பிரசன்னத்தினுடைய ஆரம்பக் காலத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரே உத்தரவாத பாரத்தை சுமந்த போதிலும், இப்பொழுது இலட்சக்கணக்கான வைராக்கியமுள்ள வேறே ஆடுகள் பூமியில் கடவுளுடைய ஊழியர்களில் 99.8 சதவீதத்தை உண்டுபண்ணுகிறார்கள். (யோவான் 10:16) உத்தமத்தைக் காத்துக் கொள்ளும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் தோழர்களாக இவர்களும்கூட, ‘பசி, தாகம், நிர்வாணம், வியாதி மற்றும் காவலை’ சகித்துக் கொள்ள மனமுள்ளவர்களாகத் தங்களைக் காண்பித்திருக்கிறார்கள்.a
நிசான் 12
21. நிசான் 12-ம் தேதி எது மும்முரமாக நடைபெறுகிறது? எவ்விதமாக?
21 இயேசுவை கொலை செய்வதற்கான சதிஆலோசனை மும்முரமாக நடைபெறுகிறது. யூதாஸ் இயேசுவை 30 வெள்ளிக்காசுகளுக்கு காட்டிக்கொடுக்க ஒப்புக்கொண்டு ஆலயத்திலுள்ள பிரதான ஆசாரியர்களைச் சென்று பார்க்கிறான். இதுவும்கூட முன்னுரைக்கப்பட்டுள்ளது.—சகரியா 11:12.
நிசான் 13
22. நிசான் 13-ம் தேதி என்ன ஆயத்தம் செய்யப்பட்டது?
22 ஜெபிப்பதற்காகவும் தியானிப்பதற்காகவும் பெத்தானியாவில் தங்கியிருக்கும் இயேசு, “இன்னாரிடத்திற்குப்” போக எருசலேமுக்குள் தம்முடைய சீஷர்களை அனுப்புகிறார். இந்த மனிதனுடைய வீட்டின் மேல் அறையில் அவர்கள் பஸ்காவுக்காக ஆயத்தஞ் செய்கிறார்கள். (மத்தேயு 26:17-19) நிசான் 13-ம் தேதி சூரியன் மறைகையில், எல்லா சரித்திரத்திலும் மிக முக்கியமான கொண்டாட்டத்துக்காக இயேசு அங்கே அவர்களைச் சேர்ந்து கொள்கிறார். நிசான் 14-ல் இப்பொழுது என்ன காத்திருக்கிறது? எமது அடுத்த கட்டுரை சொல்லும். (w92 3/1)
நீங்கள் எவ்வாறு சுருக்கமாக கூறுவீர்கள்?
◻ நிசான் 8 முதல் 10 வரையாக என்ன உபசரணையையும் வரவேற்பையும் சிலர் இயேசுவுக்கு அளித்தார்கள்?
◻ நிசான் 11-ம் தேதி மாய்மாலமான மதகுருமாரை இயேசு எவ்விதமாக வெளிப்படுத்தினார்?
◻ என்ன பெரிய தீர்க்கதரிசனத்தை இயேசு கொடுத்தார்? அது இன்று எவ்விதமாக நிறைவேறி வருகிறது?
◻ நிசான் 12 மற்றும் 13 தேதிகளில் சம்பவங்கள் எவ்விதமாக உச்சக்கட்டத்தை நோக்கி முன்னேறின?
7. நிசான் 9-ம் தேதி காலை, யெகோவாவின் நாமம் எவ்வாறு கனப்படுத்தப்பட்டது? இயேசு என்ன முன்னுரைத்தார்?
a அபிஷேகம் பண்ணப்பட்ட சிறு மந்தைக்கும் மற்ற செம்மறியாடுகளுக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவை மேலுமதிகமாக போற்றுவதற்கு பின்வரும் கட்டுரை நமக்கு உதவிசெய்யும்.
[பக்கம் 12-ன் படம்]
இயேசு இரண்டு காசுகளை—தனக்கிருந்த எல்லாவற்றையும்—காணிக்கையாக கொடுத்த ஏழை விதவையை பாராட்டுகிறார்