-
உபாகமம் 18:10-12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க* கூடாது.+ குறிசொல்லவோ,+ மாயமந்திரம் செய்யவோ,+ சகுனம் பார்க்கவோ,+ சூனியம் வைக்கவோ,+ 11 வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம்+ அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ,+ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.+ 12 ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார்.
-
-
வெளிப்படுத்துதல் 21:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 ஆனால் கோழைகள், விசுவாசமில்லாதவர்கள்,+ அசுத்தமும் அருவருப்பும் நிறைந்தவர்கள், கொலைகாரர்கள்,+ பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ ஆவியுலகத் தொடர்புகொள்கிறவர்கள், சிலைகளை வணங்குகிறவர்கள், பொய் பேசுகிறவர்கள்+ ஆகிய எல்லாருக்கும் நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரிதான் கதி;+ இது இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்.
-