-
2 சாமுவேல் 17:27-29பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
27 தாவீது மக்னாயீமுக்கு வந்தவுடனே, அம்மோனியர்களின் நகரமான ரப்பாவைச்+ சேர்ந்த நாகாசின் மகன் சோபியும் லோ-தேபாரைச் சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும்+ ரோகிலிமைச் சேர்ந்த கீலேயாத்தியரான பர்சிலாவும்+ அவரைப் பார்க்க வந்தார்கள். 28 பாய்கள், பாத்திரங்கள், மண்பானைகள், கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், மொச்சைப் பயறுகள், பருப்புகள், சுட்ட கதிர்கள், 29 தேன், வெண்ணெய், செம்மறியாடுகள், பாலாடைக் கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். தாவீதும் அவருடன் இருந்தவர்களும் சாப்பிடுவதற்காக இவற்றையெல்லாம் கொண்டுவந்தார்கள்.+ “வனாந்தரத்தில் இந்த மக்கள் பசிதாகத்தோடு இருப்பார்கள், களைத்துப்போயிருப்பார்கள் என்பதால் இவற்றைக் கொண்டுவந்தோம்”+ என்று சொன்னார்கள்.
-