யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்
5 சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவருடைய+ வலது கையில் ஒரு சுருளைப் பார்த்தேன். அதன் இரண்டு பக்கத்திலும்* எழுதப்பட்டிருந்தது, ஏழு முத்திரைகளால் நன்றாக முத்திரை போடப்பட்டிருந்தது. 2 அதோடு, பலமுள்ள ஒரு தேவதூதர் உரத்த குரலில், “முத்திரைகளை உடைத்து, சுருளை விரிக்க யாருக்குத் தகுதி இருக்கிறது?” என்று கேட்டார். 3 ஆனால், சுருளை விரிப்பதற்கும் அதைப் படித்துப் பார்ப்பதற்கும், பரலோகத்திலோ பூமியிலோ பூமிக்கடியிலோ இருக்கிற ஒருவரால்கூட முடியவில்லை. 4 சுருளை விரிப்பதற்கும் அதைப் படித்துப் பார்ப்பதற்கும் தகுதியுள்ளவர் ஒருவர்கூட இல்லை என்பதால் நான் தேம்பித் தேம்பி அழுதேன். 5 ஆனால் மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “அழாதே. இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கமும்+ தாவீதின்+ வேருமானவர்+ ஜெயித்துவிட்டார்.+ அதனால், அந்தச் சுருளின் ஏழு முத்திரைகளையும் உடைத்து அவரால் அதை விரிக்க முடியும்” என்று சொன்னார்.
6 சிம்மாசனத்துக்கும் நான்கு ஜீவன்களுக்கும் மூப்பர்களுக்கும்+ நடுவில் ஓர் ஆட்டுக்குட்டி+ நிற்பதைப் பார்த்தேன். அது வெட்டப்பட்டதுபோல் இருந்தது.+ அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. இந்தக் கண்கள், பூமி முழுவதும் அனுப்பப்பட்டிருக்கிற கடவுளுடைய ஏழு சக்திகளைக் குறிக்கின்றன.+ 7 உடனே, அந்த ஆட்டுக்குட்டியானவர் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவரிடம்+ போய், அவருடைய வலது கையிலிருந்த சுருளை வாங்கினார். 8 அவர் அந்தச் சுருளை வாங்கியபோது, நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும்+ ஆட்டுக்குட்டியானவருக்கு முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் யாழையும், தூபப்பொருள் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள். அந்தத் தூபப்பொருள் பரிசுத்தவான்களின் ஜெபங்களைக் குறிக்கிறது.+ 9 அவர்கள் இந்தப் புதுப்பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:+ “சுருளை வாங்கிக்கொள்வதற்கும் அதன் முத்திரைகளை உடைப்பதற்கும் உங்களுக்குத்தான் தகுதி இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் வெட்டிக் கொல்லப்பட்டீர்கள், உங்களுடைய இரத்தத்தால் எல்லா கோத்திரங்களையும் மொழிகளையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்தவர்களிலிருந்து+ ஆட்களைக் கடவுளுக்காக விலைகொடுத்து வாங்கினீர்கள்.+ 10 அவர்களை ராஜாக்களாகவும்+ நம்முடைய கடவுளுக்குச் சேவை செய்கிற குருமார்களாகவும்+ நியமித்தீர்கள்; அவர்கள் ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள்.”+
11 அதன் பின்பு, சிம்மாசனத்தையும் நான்கு ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றி கோடிக்கணக்கிலும்* லட்சக்கணக்கிலும் தேவதூதர்கள் இருப்பதைப் பார்த்தேன்,+ அவர்களுடைய குரலையும் கேட்டேன். 12 அவர்கள் உரத்த குரலில், “வெட்டிக் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியானவர்+ அதிகாரத்தையும் செல்வத்தையும் ஞானத்தையும் பலத்தையும் மாண்பையும் மகிமையையும் புகழையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்”+ என்று சொன்னார்கள்.
13 பரலோகத்திலும் பூமியிலும் பூமிக்கடியிலும்+ கடலிலும் அவை எல்லாவற்றிலும் இருக்கிற ஒவ்வொரு ஜீவனும், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவருக்கும்+ ஆட்டுக்குட்டியானவருக்கும்+ புகழும் மாண்பும்+ மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாவதாக”+ என்று சொல்வதைக் கேட்டேன். 14 அந்த நான்கு ஜீவன்களும், “ஆமென்!”* என்றன. அந்த மூப்பர்கள் மண்டிபோட்டு, கடவுளை வணங்கினார்கள்.