உபாகமம்
2 என் அறிவுரைகள் மழைபோல் பொழியும்.
என் வார்த்தைகள் பனிபோல் இறங்கும்.
அவை புல்மேல் விழும் தூறல்போல் இருக்கும்.
பயிர்மேல் கொட்டும் மழைபோல் இருக்கும்.
3 யெகோவாவின் பெயரை நான் புகழ்வேன்.+
நம் கடவுளுடைய மகத்துவத்தை+ எல்லாருக்கும் சொல்லுங்கள்!
5 அவர்கள்தான் தறிகெட்டு நடந்தார்கள்.+
அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல.
குறையெல்லாம் அவர்கள்மேல்தான் இருக்கிறது.+
அவர்கள் சீர்கெட்டும் நெறிகெட்டும் நடக்கிற தலைமுறை!+
உங்களுக்கு உயிர் கொடுத்த தகப்பன் அவர்தானே?+
உங்களை உருவாக்கி, உங்களை நிலைநாட்டியவர் அவர்தானே?
7 பழங்காலத்தை நினைத்துப் பாருங்கள்.
கடந்த தலைமுறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
8 உன்னதமான கடவுள், ஆதாமின் பிள்ளைகளை* தனித்தனியாகப் பிரித்து,+
எல்லாருக்கும் சொத்தைப் பங்குபோட்டபோது,+
இஸ்ரவேலர்களின்+ எண்ணிக்கையை மனதில் வைத்து,
அந்தந்த தேசத்தின் எல்லையைத் தீர்மானித்தாரே.+
10 அவனை வனாந்தரத்தில்+ அவர் கண்டுபிடித்தார்.
மிருகங்கள் ஓலமிடும் வெறுமையான பாலைவனத்தில்+ அவனைப் பார்த்தார்.
வேலிபோல் அவனைச் சூழ்ந்து நின்று பாதுகாத்தார்,+
கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்.
கண்மணிபோல் காத்தார்.+
11 கழுகு தன் குஞ்சுகளைக் கூட்டிலிருந்து கலைத்து,*
அவற்றின் மேல் வட்டமிட்டுப் பறந்து,
பின்பு கீழாக வந்து தன் இறக்கைகளை விரித்து,
சிறகுகளில் அவற்றைச் சுமந்துகொண்டு போவது போல,+
12 யெகோவா ஒருவரே அவனை* சுமந்து வந்தார்.+
வேறு எந்தத் தெய்வமும் அவரோடு இல்லை.+
13 பூமியின் உயர்ந்த இடங்களை அவன் கைப்பற்றும்படி செய்தார்.+
வயலின் விளைச்சலைச் சாப்பிடக் கொடுத்தார்.+
மலையிலிருந்து தேனையும் கற்பாறையிலிருந்து எண்ணெயையும் தந்து போஷித்தார்.
14 பசுமாட்டு வெண்ணெயும் ஆட்டுப் பாலும் ஊட்டினார்.
கொழுத்த செம்மறியாடுகளையும், பாசானின் செம்மறியாட்டுக் கடாக்களையும்,
வெள்ளாட்டுக் கடாக்களையும் தந்தார்.
தரமான கோதுமையைக் கொடுத்தார்.+
திராட்சைப் பழங்களின் ரசத்தை* நீ குடித்தாய்.
15 ஆனால் யெஷுரனே,* நீ கொழுத்தபோது அவரையே எட்டி உதைத்தாய்.
நீ பெருத்துப்போனாய், தடித்துப்போனாய், ஊதிப்போனாய்.+
அதனால் உன்னைப் படைத்த கடவுளைவிட்டே விலகினாய்.+
உன்னுடைய மீட்பின் கற்பாறையை அவமதித்தாய்.
16 பொய் தெய்வங்களை வணங்கி அவருடைய எரிச்சலைக் கிளப்பினாய்.+
அருவருப்பான காரியங்களைச் செய்து அவரைக் கோபப்படுத்தினாய்.+
17 கடவுளுக்குப் பலி செலுத்தாமல், பேய்களுக்குப் பலி செலுத்தினாய்.+
முன்பின் தெரியாத தெய்வங்களுக்கு,
நேற்று முளைத்த தெய்வங்களுக்கு,
உன் முன்னோர்களுக்குத் தெரியாத தெய்வங்களுக்குப் பலி செலுத்தினாய்.
18 கற்பாறைபோல் இருக்கும் உன் கடவுளை மறந்துவிட்டாய்.+
உனக்கு உயிர் கொடுத்தவரை நினைக்கத் தவறிவிட்டாய்.+
19 யெகோவா அதைப் பார்த்தார்.
தன்னுடைய மகன்களும் மகள்களும் தன்னைக் கோபப்படுத்தியதால் அவர்களை உதறித்தள்ளினார்.+
20 பின்பு அவர், ‘என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்வேன்.+
அவர்களுக்கு நடக்கப்போவதைப் பார்ப்பேன்.
21 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை* கும்பிட்டு என் கோபத்தைக் கிளறினார்கள்.+
வீணான சிலைகளை வணங்கி என்னை நோகடித்தார்கள்.+
அதனால், ஒன்றுக்கும் உதவாத ஜனத்தைக்கொண்டு நானும் அவர்களுடைய கோபத்தைக் கிளறுவேன்.+
முட்டாள்தனமான தேசத்தைக்கொண்டு நானும் அவர்களை நோகடிப்பேன்.+
22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+
அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+
பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.
மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.
23 நான் வேதனைக்குமேல் வேதனையைக் கொண்டுவருவேன்.
அவர்கள்மேல் என் அம்புகளை எறிவேன்.
கொடிய மிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.+
நிலத்தில் ஊரும் விஷப் பிராணிகள் அவர்களைக் கடிக்கும்.
25 வாலிபர்களோ கன்னிப்பெண்களோ,
குழந்தைகளோ கிழவர்களோ,+
வெளியே இருக்கிற எல்லாரையும் வாள் வெட்டித்தள்ளும்!+
உள்ளே இருக்கிற எல்லாரையும் திகில் கவ்விக்கொள்ளும்!+
26 நான் உங்களிடம், “உங்களைச் சிதறிப்போக வைத்துவிடுவேன்,
உங்களைப் பற்றிய நினைவே உலகத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்” என்று சொல்ல நினைத்தேன்.
27 ஆனால் எதிரிகள் உண்மையைப் புரட்டி,+ “எங்கள் வீரத்தால்தான் ஜெயித்தோம்,+
யெகோவா எதுவும் செய்யவில்லை” என்று பெருமையடிப்பார்களோ என்று நினைத்தேன்.+
அதனால் அப்படிச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
28 இஸ்ரவேலர்கள் அறிவில்லாத* ஜனங்கள்,
வரப்போகும் கதியை நினைத்துப் பார்ப்பார்களே.+
30 அவர்களுக்குக் கற்பாறைபோல் இருந்தவர் அவர்களைக் கைவிட்டுவிட்டார்.+
யெகோவா அவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார்.
அதனால்தான் அவர்களில் ஆயிரம் பேரை ஒருவனால் விரட்ட முடிந்தது.
அவர்களில் பத்தாயிரம் பேரை வெறும் இரண்டு பேரால் துரத்த முடிந்தது.+
32 அவர்களுடைய திராட்சைக் கொடி சோதோமின் திராட்சைக் கொடி,
கொமோராவின் தோட்டங்களில் விளைந்த திராட்சைக் கொடி.+
அவர்களுடைய திராட்சைப் பழங்கள் விஷம் நிறைந்தவை.
அவர்களுடைய திராட்சைக் குலைகள் கசப்பானவை.+
33 அவர்களுடைய திராட்சமது பாம்புகளின் விஷம்,
அது நாகப்பாம்புகளின் கொடிய நஞ்சு.
35 பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் என் பொறுப்பு.+
குறித்த நேரத்தில் அவர்கள் தடுக்கி விழுவார்கள்.+
அவர்களுடைய அழிவு நாள் நெருங்கிவிட்டது.
அவர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சீக்கிரத்தில் நடக்கும்’ என்று சொன்னார்.
36 யெகோவா தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+
தன்னுடைய ஊழியர்களின் பலம் குறைந்துவிட்டதைப் பார்க்கும்போதும்,
ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும் மட்டுமே மீந்திருப்பதைப் பார்க்கும்போதும்,
அவர் பரிதாபப்படுவார்.+
37 அப்போது அவர், ‘அவர்களுடைய தெய்வங்கள் எங்கே?+
அவர்கள் அடைக்கலம் தேடிய கற்பாறை எங்கே?
38 அவர்களுடைய பலிகளின் கொழுப்பைத் தின்ற தெய்வங்கள் எங்கே?
அவர்கள் செலுத்திய திராட்சமதுவைக் குடித்த தெய்வங்கள் எங்கே?+
அவை வந்து அவர்களுக்கு* உதவி செய்யட்டும்.
அவை அவர்களுக்குப் பாதுகாப்பு தரட்டும்.
உயிர் கொடுக்கிறவரும் உயிர் எடுக்கிறவரும் நானே.+
காயப்படுத்துகிறவரும்+ குணப்படுத்துகிறவரும் நானே.+
என் கையிலிருந்து யாரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.+
41 என்னுடைய பளபளப்பான வாளைத் தீட்டுவேன்.
தீர்ப்பு கொடுப்பதற்குத் தயாராவேன்.+
என் எதிரிகளைப் பழிவாங்குவேன்.+
என்னை வெறுக்கிறவர்களைப் பழிதீர்ப்பேன்.
42 எதிரிகளுடைய தலைவர்களின் தலைகளை
என் வாள் விழுங்கும்.
வெட்டப்பட்டவர்களின் இரத்தத்தையும், சிறைபிடிக்கப்பட்டவர்களின் இரத்தத்தையும்
என் அம்புகள் குடிக்கும்’ என்று சொல்வார்.
43 தேசங்களே, அவருடைய ஜனங்களோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.+
ஏனென்றால், அவருடைய ஊழியர்களின் இரத்தத்துக்காக அவர் பழிவாங்குவார்.+
எதிரிகளுக்குப் பதிலடி தருவார்.+
தன்னுடைய ஜனங்களின் தேசத்தைச் சுத்திகரிப்பார்.”
44 மோசே இந்தப் பாடல் வரிகளை ஜனங்களுடைய காதில் விழும்படி சொன்னார்.+ நூனின் மகன் ஓசெயாவும்*+ அவரோடு இருந்தார். 45 இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபின், 46 மோசே அவர்களிடம், “இன்று நான் கொடுக்கும் எச்சரிக்கையை இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.+ இந்தத் திருச்சட்டத்தின்படி நடக்க வேண்டுமென்று உங்களுடைய மகன்களுக்குக் கட்டளை கொடுங்கள்.+ 47 இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் அல்ல, வாழ்வு தரும் வார்த்தைகள்.+ இவற்றின்படி நடந்தால், நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் சொந்தமாக்கப்போகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்” என்று சொன்னார்.
48 அதே நாளில் யெகோவா மோசேயிடம், 49 “மோவாப் தேசத்தில், எரிகோவைப் பார்த்தபடி இருக்கிற இந்த அபாரீம் மலைத்தொடரிலுள்ள+ நேபோ மலைக்கு+ நீ ஏறிப்போ. நான் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்போகிற கானான் தேசத்தை+ அங்கிருந்து பார். 50 ஓர் என்ற மலையில் உன் அண்ணன் ஆரோன் இறந்தது போல,+ நேபோ மலையில் நீயும் இறந்துபோவாய்.* 51 ஏனென்றால், சீன் வனாந்தரத்திலுள்ள காதேசில் இருக்கிற மேரிபாவின் தண்ணீர் விஷயத்தில், நீங்கள் இரண்டு பேரும் இஸ்ரவேலர்களின் முன்னால் எனக்கு உண்மையாக நடக்கவில்லை,+ என்னை மகிமைப்படுத்தவில்லை.+ 52 இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் தருகிற தேசத்தை நீ தூரத்திலிருந்துதான் பார்ப்பாய், அதற்குள் நீ போக மாட்டாய்”+ என்று சொன்னார்.