ஏசாயா
11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.
அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.
2 யெகோவாவின் சக்தி அவர்மேல்* தங்கியிருக்கும்.+
அது அவருக்கு ஞானத்தையும்,+ புரிந்துகொள்ளும் திறனையும்,
அறிவுரை சொல்லும் ஆற்றலையும், வல்லமையையும்,+
அறிவையும், யெகோவாவைப் பற்றிய பயத்தையும் கொடுக்கும்.
3 யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் அவர் சந்தோஷப்படுவார்.+
கண்ணால் பார்ப்பதை வைத்து தீர்ப்பு சொல்ல மாட்டார்.
காதால் கேட்பதை வைத்து கண்டிக்க மாட்டார்.+
4 பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
தாழ்மையானவர்களின்* சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார்.
6 அப்போது, ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்.+
வெள்ளாட்டுக் குட்டி சிறுத்தையோடு படுத்துக்கொள்ளும்.
கன்றுக்குட்டியும் சிங்கமும் கொழுத்த காளையும்* ஒன்றாக இருக்கும்.*+
ஒரு சின்னப் பையன் அவற்றை ஓட்டிக்கொண்டு போவான்.
7 பசுவும் கரடியும் சேர்ந்து மேயும்.
அவற்றின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்.
சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்னும்.+
8 பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்புப் புற்றின் மேல் விளையாடும்.
பால் மறந்த பிள்ளை விஷப் பாம்பின் பொந்தில் தன் கையை விடும்.
9 என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+
எந்தக் கேடும் வராது.+
ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல
பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+
10 அந்த நாளில், ஈசாயின் வேராக+ இருப்பவர் ஜனங்களுக்கு ஒரு கொடிக் கம்பம் போல நிற்பார்.+
11 அந்த நாளில், யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்வதற்காக இரண்டாவது தடவை கைகொடுப்பார். அசீரியாவிலிருந்தும்,+ எகிப்திலிருந்தும்,+ பத்ரோசிலிருந்தும்,+ கூஷிலிருந்தும்,+ ஏலாமிலிருந்தும்,+ சினேயாரிலிருந்தும்,* காமாத்திலிருந்தும், தீவுகளிலிருந்தும்+ அவர்களைத் திரும்பி வரச் செய்வார். 12 எல்லா தேசங்களும் பார்க்கிற விதமாக ஒரு கொடிக் கம்பத்தை நாட்டி, சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பார்;+ பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களை ஒன்றுசேர்ப்பார்.+
இனி எப்பிராயீமுக்கு யூதாமேல் பொறாமை இருக்காது.
யூதாவுக்கு எப்பிராயீம்மேல் பகை இருக்காது.+
14 அவர்கள் மேற்கிலுள்ள பெலிஸ்தியர்களின் சரிவான பகுதிகளுக்குப் பாய்ந்து வருவார்கள்.
கிழக்கிலுள்ள ஜனங்களிடம் இருப்பதையெல்லாம் கைப்பற்றுவார்கள்.