ஏசாயா
நம் கடவுளான யெகோவாவின் மகிமையையும் மேன்மையையும் அவர்கள் பார்ப்பார்கள்.
4 பதற்றத்தில் இருப்பவர்களைப் பார்த்து,
“தைரியமாக இருங்கள், பயப்படாதீர்கள்.
உங்களுடைய எதிரிகளை உங்கள் கடவுள் பழிவாங்க வருகிறார்.
அவர்களைப் பழிதீர்ப்பதற்கு வருகிறார்.+
அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார்”+ என்று சொல்லுங்கள்.
வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கும்.
பாலைநிலத்தில் ஆறுகள் பாய்ந்தோடும்.
நரிகள் தங்கிய இடத்தில்+
பசும்புல்லும் நாணற்புல்லும் கோரைப்புல்லும் வளரும்.
பரிசுத்தமில்லாத யாருமே அதில் நடந்துபோக மாட்டார்கள்.+
தகுதியுள்ள மக்கள் மட்டுமே போவார்கள்.
புத்திகெட்ட யாராலும் அந்த வழியில் கால்வைக்க முடியாது.
9 அங்கே சிங்கம் இருக்காது.
கொடிய காட்டு மிருகங்கள் எதுவுமே இருக்காது.
10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+
மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+
எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.
அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+