சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
2 ஒவ்வொரு பகலிலும் அவை வார்த்தைகளைப் பொழிகின்றன.
ஒவ்வொரு இரவிலும் அறிவை வெளிப்படுத்துகின்றன.
3 அவற்றுக்குப் பேச்சும் இல்லை, வார்த்தைகளும் இல்லை.
அவற்றின் குரல் கேட்கப்படுவதும் இல்லை.
4 ஆனாலும், அவற்றின் சத்தம்* பூமியெங்கும் எட்டுகிறது.
அவற்றின் செய்தி பூமியின் எல்லைகள்வரை போய்ச் சேருகிறது.+
சூரியனுக்காக வானத்தில் ஒரு கூடாரத்தைக் கடவுள் போட்டிருக்கிறார்.
5 மணவறையிலிருந்து வருகிற மணமகனைப் போல அது பிரகாசத்தோடு வருகிறது.
ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிற வீரனைப் போல அது தன் பாதையில் சந்தோஷமாக ஓடுகிறது.
6 வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,
அதன் மறுமுனைவரை சுற்றியோடுகிறது.+
அதன் வெப்பத்திலிருந்து எதுவும் தப்பிக்க முடியாது.
7 யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது,+ அது புதுத்தெம்பு அளிக்கிறது.+
யெகோவாவின் நினைப்பூட்டுதல் நம்பகமானது,+ அது பேதையை* ஞானியாக்குகிறது.+
8 யெகோவாவின் ஆணைகள் நீதியானவை, அவை இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன.+
யெகோவாவின் கட்டளைகள் தூய்மையானவை, அவை கண்களைப் பிரகாசிக்க வைக்கின்றன.+
9 யெகோவாவைப் பற்றிய பயம்+ தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது.
யெகோவாவின் நீதித்தீர்ப்புகள் உண்மையானவை, முழுக்க முழுக்க நீதியானவை.+
தேன்கூட்டிலிருந்து சொட்டுகிற தேனைவிடவும் தித்திப்பானவை.
12 தன் தவறுகளை உணர்ந்துகொள்கிறவன் யார்?+
நான் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்துவிடுங்கள்.