சங்கீதம்
2 நான் யெகோவாவிடம், “நீங்கள் என் அடைக்கலம், என் கோட்டை,+
நான் நம்பியிருக்கிற கடவுள்”+ என்று சொல்வேன்.
3 அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும்,
கொடிய கொள்ளைநோயிலிருந்தும் பாதுகாப்பார்.
அவருடைய உண்மைத்தன்மை+ உனக்கு ஒரு பெரிய கேடயமாகவும்,+
பாதுகாப்பான மதிலாகவும்* இருக்கும்.
5 ராத்திரியில் வருகிற ஆபத்துகளுக்கும்,+
பகலில் பறக்கிற அம்புக்கும்,+
6 இருட்டில் பரவுகிற கொள்ளைநோய்க்கும்,
மத்தியானத்தில் பாழாக்குகிற பேரழிவுக்கும் நீ பயப்பட மாட்டாய்.
7 உன் பக்கத்தில் ஆயிரம் பேரும்,
உன் வலது பக்கத்தில் பத்தாயிரம் பேரும் விழுவார்கள்.
ஆனால், உனக்கு ஒன்றுமே ஆகாது.+
8 பொல்லாதவர்களுக்குக் கிடைக்கப்போகிற தண்டனையை நீ வெறுமனே பார்ப்பாய்.
அதை உன் கண்களால் வெறுமனே பார்ப்பாய்.
9 ஏனென்றால், “யெகோவா என் அடைக்கலம்” என்று நீ சொன்னாய்.
உன்னதமான கடவுளை உன் குடியிருப்பாக* ஆக்கிக்கொண்டாய்.+
10 உனக்கு எந்த விபரீதமும் நடக்காது.+
உன் கூடாரத்தை எந்த ஆபத்தும் நெருங்காது.
13 இளம் சிங்கத்தையும் நாகப்பாம்பையும் நீ மிதிப்பாய்.
வளர்ந்த சிங்கத்தையும் பெரிய பாம்பையும் உன் காலடியில் நசுக்குவாய்.+
14 கடவுள் சொன்னது இதுதான்:
“அவன் என்மேல் பாசம் வைத்திருப்பதால், நான் அவனைக் காப்பாற்றுவேன்.+
அவன் என் பெயரைத் தெரிந்து வைத்திருப்பதால், அவனைப் பாதுகாப்பேன்.+
15 அவன் என்னைக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்.+
இக்கட்டான காலத்தில் அவனோடு இருப்பேன்.+
அவனைக் காப்பாற்றி, கௌரவப்படுத்துவேன்.