சங்கீதம்
2 “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”
என்று இஸ்ரவேல் மக்கள் சொல்லட்டும்.
3 “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”
என்று ஆரோனின் வம்சத்தார் சொல்லட்டும்.
4 “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”
என்று யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்லட்டும்.
5 நான் வேதனையில் தவித்தபோது, “யா”வை* நோக்கிக் கூப்பிட்டேன்.
“யா” என் குரலைக் கேட்டு, என்னைப் பாதுகாப்பான* இடத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.+
6 யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன்.+
மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?+
7 யெகோவா என் பக்கத்திலேயே எனக்குத் துணையாக இருக்கிறார்.*+
என்னை வெறுக்கிறவர்களை நான் வெற்றிப் பெருமிதத்தோடு பார்ப்பேன்.+
10 எல்லா தேசத்து மக்களும் என்னைச் சுற்றிவளைத்தார்கள்.
ஆனால், யெகோவாவின் பெயரால் அவர்களை விரட்டியடித்தேன்.+
11 அவர்கள் என்னைச் சுற்றிவளைத்தார்கள், தப்பிக்க முடியாதபடி சுற்றிவளைத்தார்கள்.
ஆனால், யெகோவாவின் பெயரில்
அவர்களை விரட்டியடித்தேன்.
12 தேனீக்கள்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
ஆனால், முட்செடியில் பற்றிய நெருப்புபோல் சட்டென்று அணைந்துபோனார்கள்.
யெகோவாவின் பெயரில்
அவர்களை விரட்டியடித்தேன்.+
யெகோவாவின் வலது கை அவருடைய வல்லமையை வெளிக்காட்டுகிறது.+
16 யெகோவாவின் வலது கை உயர்ந்தோங்கியிருக்கிறது.
யெகோவாவின் வலது கை அவருடைய வல்லமையை வெளிக்காட்டுகிறது.+
20 இது யெகோவாவின் கதவு.
நீதிமான்கள் அதன் வழியாகப் போவார்கள்.+
21 கடவுளே, நீங்கள் எனக்குப் பதில் தந்து, என் மீட்பராக இருந்தீர்கள்.
அதனால், நான் உங்களைப் புகழ்வேன்.+
24 இது யெகோவா வர வைத்திருக்கும் நாள்.
இந்த நாளில் நாம் சந்தோஷத்தில் பூரித்துப்போவோம்.
25 யெகோவாவே, தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள், உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறோம்.
யெகோவாவே, தயவுசெய்து எங்களுக்கு வெற்றி கொடுங்கள்!
26 யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.+
நாங்கள் யெகோவாவின் ஆலயத்திலிருந்து உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிக்கிறோம்.
27 யெகோவாதான் கடவுள்.
அவர் நமக்கு வெளிச்சம் தருகிறார்.+
கையில் கிளைகளைப் பிடித்துக்கொண்டு பண்டிகை ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.+
பலிபீடத்தின் கொம்புகள்வரை+ போங்கள்.