மத்தேயு எழுதியது
1 ஆபிரகாமின் மகனாகிய+ தாவீதின் மகன்+ இயேசு கிறிஸ்துவின் சரித்திரத்தை* பற்றிய புத்தகம்:
ஈசாக்கின் மகன் யாக்கோபு;+
யாக்கோபின் மகன்கள் யூதாவும்,+ யூதாவின் சகோதரர்களும்;+
3 யூதாவுக்கும் தாமாருக்கும்+ பிறந்த மகன்கள் பாரேஸ், சேராகு;+
பாரேசின் மகன் எஸ்ரோன்;+
எஸ்ரோனின் மகன் ராம்;+
4 ராமின் மகன் அம்மினதாப்;
அம்மினதாபின் மகன் நகசோன்;+
நகசோனின் மகன் சல்மோன்;
5 சல்மோனுக்கும் ராகாபுக்கும்+ பிறந்த மகன் போவாஸ்;+
போவாசுக்கும் ரூத்துக்கும்+ பிறந்த மகன் ஓபேத்;+
ஓபேத்தின் மகன் ஈசாய்;+
தாவீதுக்கும் உரியாவின்+ மனைவிக்கும்* பிறந்த மகன் சாலொமோன்;+
7 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;+
ரெகொபெயாமின் மகன் அபியா;+
அபியாவின் மகன் ஆசா;+
யோசபாத்தின் மகன் யோராம்;+
யோராமின் மகன் உசியா;+
யோதாமின் மகன் ஆகாஸ்;+
ஆகாசின் மகன் எசேக்கியா;+
மனாசேயின் மகன் ஆமோன்;+
ஆமோனின் மகன் யோசியா;+
11 யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன காலத்தில்,+ யோசியாவுக்குப்+ பிறந்த மகன்கள் எகொனியாவும்,+ எகொனியாவின் சகோதரர்களும்;
12 பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன பின்பு, எகொனியாவுக்குப் பிறந்த மகன் சலாத்தியேல்;
சலாத்தியேலின் மகன் செருபாபேல்;+
13 செருபாபேலின் மகன் அபியூத்;
அபியூத்தின் மகன் எலியாக்கீம்;
எலியாக்கீமின் மகன் ஆசோர்;
14 ஆசோரின் மகன் சாதோக்;
சாதோக்கின் மகன் ஆகீம்;
ஆகீமின் மகன் எலியூத்;
15 எலியூத்தின் மகன் எலெயாசார்;
எலெயாசாரின் மகன் மாத்தான்;
மாத்தானின் மகன் யாக்கோபு;
16 யாக்கோபின் மகன் யோசேப்பு; இந்த யோசேப்புதான் மரியாளின் கணவர்; இந்த மரியாளுக்குத்தான் இயேசு பிறந்தார்.+ இவர் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்.+
17 இப்படி, ஆபிரகாம்முதல் தாவீதுவரை 14 தலைமுறைகள்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்வரை+ 14 தலைமுறைகள்; பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன யூதர்கள்முதல் கிறிஸ்துவரை 14 தலைமுறைகள்.
18 இயேசு கிறிஸ்து பிறந்த விவரம் இதுதான்: அவருடைய அம்மா மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள்;+ அவர்களுக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்பே, கடவுளுடைய சக்தியின் மூலம் மரியாள் கர்ப்பமானாள்.+ 19 ஆனால், அவளுடைய கணவரான யோசேப்பு நீதிமானாக இருந்ததால், எல்லார் முன்னாலும் அவளை அவமானப்படுத்த விரும்பவில்லை; அதனால், அவளை ரகசியமாக விவாகரத்து* செய்ய* நினைத்தார்.+ 20 இந்த விஷயங்களைப் பற்றி யோசித்த பின்பு அவர் தூங்கிவிட்டார்; அப்போது யெகோவாவின் தூதர் அவருடைய கனவில் வந்து, “யோசேப்பே, தாவீதின் மகனே, உன் மனைவி மரியாளை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வர பயப்படாதே; கடவுளுடைய சக்தியின் மூலம்தான் அவள் கர்ப்பமாகியிருக்கிறாள்.+ 21 அவளுக்கு ஒரு மகன் பிறப்பார்; அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்;+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்களைப் பாவத்திலிருந்து மீட்பார்”+ என்று சொன்னார். 22 யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசியின் மூலம் சொன்னது நிறைவேற வேண்டும் என்பதற்காகவே இதெல்லாம் நடந்தது. 23 “இதோ! ஒரு கன்னிப்பெண் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவனுக்கு இம்மானுவேல் என்று பெயர் வைப்பார்கள்”+ என்று அவர் சொல்லியிருந்தார். இம்மானுவேல் என்றால், “கடவுள் நம்மோடு* இருக்கிறார்”+ என்று அர்த்தம்.
24 யோசேப்பு தூங்கியெழுந்த பின்பு, யெகோவாவின் தூதர் சொன்னபடி தன்னுடைய மனைவியை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். 25 ஆனால், அவளுக்கு ஒரு மகன் பிறக்கும்வரை+ அவளோடு அவர் உறவுகொள்ளவில்லை; அந்த மகனுக்கு இயேசு என்று பெயர் வைத்தார்.+