தெசலோனிக்கேயருக்கு இரண்டாம் கடிதம்
2 இருந்தாலும் சகோதரர்களே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தைப்+ பற்றியும், நாம் அவரோடு கூட்டிச்சேர்க்கப்படுவதைப்+ பற்றியும் நாங்கள் உங்களிடம் இதைக் கேட்டுக்கொள்கிறோம்: 2 யெகோவாவின்* நாள்+ வந்துவிட்டது என்று யாராவது அருள்வாக்கு சொன்னாலோ,+ செய்தி சொன்னாலோ, எங்களிடமிருந்து வந்த ஒரு கடிதத்தில் இருப்பதாகச் சொன்னாலோ, உடனே நிதானம் இழந்து பரபரப்பாகிவிடாதீர்கள்.
3 யாரும் எந்த விதத்திலும் உங்களை மோசம்போக்குவதற்கு அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், விசுவாசதுரோகம்+ முதலில் ஏற்பட்டு, அழிவின் மகனாகிய+ அக்கிரமக்காரன்+ வெளிப்பட்டால் தவிர அந்த நாள் வராது. 4 அவன் ஓர் எதிரி; கடவுள் என்று அழைக்கப்பட்டும் வணங்கப்பட்டும் வருகிற எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தன்னை உயர்த்திக்கொள்வான், கடவுளுடைய ஆலயத்தில் உட்கார்ந்து எல்லார் முன்னாலும் தன்னை ஒரு கடவுளாகக் காட்டிக்கொள்வான். 5 நான் உங்களோடு இருந்த சமயத்தில் இதைப் பற்றியெல்லாம் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?
6 குறித்த காலத்துக்கு முன்பு அவன் வெளிப்படாதபடி, அவனுக்குத் தடையாகச் செயல்படுவது எதுவென்று இப்போது உங்களுக்கே தெரியும். 7 மர்மமாக இருக்கிற இந்த அக்கிரமம் ஏற்கெனவே செயல்பட்டு வருவது உண்மைதான்.+ ஆனால், இப்போது தடையாகச் செயல்படுகிறவன் நீக்கப்படும்வரைதான் அது மர்மமாக இருக்கும். 8 அதன் பின்பு, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; நம் எஜமானாகிய இயேசு தான் பிரசன்னமாகி இருப்பதைத் தெரியப்படுத்தும்போது தன்னுடைய வாயிலிருந்து புறப்படும் வல்லமையால் அவனை அழித்து,+ ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்.+ 9 ஆனால், அந்த அக்கிரமக்காரன் செயல்பட்டு வருவதற்குச் சாத்தானின் செல்வாக்குதான்+ காரணமாக இருக்கும். அந்தச் சமயத்தில், எல்லா வகையான வல்லமையுள்ள செயல்களும், பொய்யான அடையாளங்களும் அற்புதங்களும்,+ 10 எல்லா விதமான அநீதியும் ஏமாற்று வேலைகளும் நடக்கும்.+ இவையெல்லாம் அழிவின் பாதையில் போகிறவர்களிடம் நடக்கும். ஏனென்றால், மீட்புப் பெறும்படி சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. 11 அதனால், அவர்கள் பொய்யை நம்பி வஞ்சகத்தின் பிடியில் சிக்கிக்கொள்வதற்குக்+ கடவுள் அவர்களை விட்டுவிடுவார். 12 சத்தியத்தை நம்பாமல் அநீதியை விரும்புகிற அவர்கள் எல்லாருக்கும் தண்டனைத் தீர்ப்பு கொடுப்பதற்காக அப்படிச் செய்வார்.
13 இருந்தாலும், யெகோவாவின்* அன்பைப் பெற்ற சகோதரர்களே, உங்களுக்காக எப்போதும் அவருக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்; நீங்கள் சத்தியத்தின்மீது விசுவாசம் வைத்ததால் அவர் தன்னுடைய சக்தியால் உங்களைப் பரிசுத்தமாக்கி,+ மீட்பதற்காக ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார்.+ 14 இந்த மீட்பைப் பெறுவதற்காக, நாங்கள் அறிவிக்கிற நல்ல செய்தியின் மூலம் அவர் உங்களை அழைத்தார்; நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மகிமை உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்படி அழைத்தார்.+ 15 அதனால் சகோதரர்களே, வாய்மொழியாகவோ கடிதம் மூலமாகவோ உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட விஷயங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டு+ உறுதியோடு நில்லுங்கள்.+ 16 நம்மேல் அன்பு காட்டி+ அளவற்ற கருணையால் நிரந்தர ஆறுதலையும் அருமையான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிற+ நம் தகப்பனாகிய கடவுளும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவும், 17 உங்கள் இதயத்துக்கு ஆறுதல் தந்து, நீங்கள் நல்லதையே சொல்வதற்கும் செய்வதற்கும் உங்களைப் பலப்படுத்துவார்களாக.