ஏசாயா
61 உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது.+
ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு* நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார்.*+
உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும்,*
சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும்,
கைதிகளின் கண்கள் அகலமாகத் திறக்கப்படும்+ என்று சொல்வதற்காகவும்,
2 யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றித் தெரிவிப்பதற்காகவும்,
நம் கடவுள் பழிவாங்கப்போகிற நாளைப்+ பற்றி அறிவிப்பதற்காகவும்,
துக்கப்படுகிற எல்லாருக்கும் ஆறுதல் சொல்வதற்காகவும்+ அவர் என்னை அனுப்பினார்.
3 சீயோனுக்காக வருத்தப்படுகிறவர்களின் கோலத்தை மாற்றுவதற்காக
அவர்களுடைய தலையில் உள்ள சாம்பலை நீக்கி, மலர்க் கிரீடத்தைச் சூட்டவும்,
சோகத்தைப் போக்கி ஆனந்தத் தைலத்தை ஊற்றவும்,
விரக்தியை நீக்கி புகழின் உடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பினார்.
யெகோவா தன்னுடைய மகிமைக்காக* நாட்டிய
நீதியின் பெரிய மரங்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.+
4 பூர்வ காலத்தில் பாழாக்கப்பட்ட இடங்களை அவர்கள் புதிதாக்குவார்கள்.+
இடித்துப் போடப்பட்டதைத் திரும்பக் கட்டுவார்கள்.
தலைமுறை தலைமுறையாகச் சிதைந்து கிடக்கிற நகரங்களை+
மறுபடியும் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவார்கள்.+
5 “மற்ற தேசத்து ஜனங்கள்+ உங்கள் வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் வேலை பார்ப்பார்கள்.+
முன்பின் தெரியாதவர்கள் உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள்.
6 நீங்களோ யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருமார்கள் என்றும்,+
நம் கடவுளுடைய ஊழியர்கள் என்றும் அழைக்கப்படுவீர்கள்.
7 கடவுளுடைய ஜனங்கள் அவமானத்துக்குப் பதிலாக இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.
தலைகுனிந்து நிற்பதற்குப் பதிலாகத் தங்களுக்குக் கிடைத்த பங்கை நினைத்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.
ஏனென்றால், தேசத்தில் இரண்டு மடங்கு சொத்தைப் பெறுவார்கள்.+
என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+
அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியை உண்மையோடு கொடுப்பேன்.
என்றென்றும் நிலைத்திருக்கிற ஒப்பந்தத்தை அவர்களோடு செய்வேன்.+
9 அவர்களுடைய வம்சத்தில் வருகிறவர்கள் எல்லா தேசங்களின் மத்தியிலும்,
இனங்களின் மத்தியிலும் புகழ் பெற்றிருப்பார்கள்.+
அவர்களைப் பார்க்கிற எல்லாரும்
அவர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற வம்சம்+ என்று புரிந்துகொள்வார்கள்.”
10 நான் யெகோவாவை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவேன்.
என் கடவுளை நினைத்து உள்ளமெல்லாம் பூரித்துப்போவேன்.+