ஏசாயா
40 “ஆறுதல் சொல்லுங்கள், என் ஜனங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்” என்று உங்கள் கடவுள் சொல்கிறார்.+
2 “எருசலேம் ஜனங்களின் உள்ளத்தைத் தொடும் விதத்தில்* பேசுங்கள்.
அவர்களுடைய கஷ்ட காலம் முடிந்தது என்று சொல்லுங்கள்.
அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனை கொடுக்கப்பட்டது.+
அவர்கள் செய்த பாவங்களுக்கான கூலியை யெகோவாவின் கையிலிருந்து முழுமையாக* வாங்கிவிட்டார்கள்.”+
3 வனாந்தரத்தில் ஒருவர்,
“யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்!*+
நம் கடவுளுக்காக பாலைவனத்தில்+ ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.+
4 எல்லா பள்ளத்தாக்குகளையும் உயர்த்துங்கள்.
எல்லா மலைகளையும் குன்றுகளையும் தாழ்த்துங்கள்.
மேடுபள்ளமான நிலத்தைச் சமமாக்குங்கள்.
கரடுமுரடான நிலத்தைச் சமவெளியாக்குங்கள்.+
5 யெகோவா தன்னுடைய மகிமையைக் காட்டுவார்.+
ஜனங்கள் எல்லாரும் அதைப் பார்ப்பார்கள்.+
யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்” என்று சத்தமாகச் சொல்கிறார்.
6 கேள்! யாரோ ஒருவர், “அறிவிப்பு செய்!” என்று சொல்கிறார்.
“எதை அறிவிப்பு செய்ய வேண்டும்?” என்று இன்னொருவர் கேட்கிறார்.
“மனுஷர்கள் எல்லாரும் பசும்புல்லைப் போல் இருக்கிறார்கள்.
அவர்கள் காட்டும் விசுவாசம்* புல்வெளிப் பூவைப் போல் இருக்கிறது.+
உண்மையில், ஜனங்கள் பசும்புல்லைப் போலவே இருக்கிறார்கள்.
8 பசும்புல் காய்ந்துபோகிறது.
பூ வாடிப்போகிறது.
நம் கடவுளின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது.”+
எருசலேமுக்காக நல்ல செய்தியைக் கொண்டுவருபவளே,
உன் குரலை உயர்த்தி சத்தமாகச் சொல்.
பயப்படாமல் தைரியமாகச் சொல்.
“இதோ, உங்கள் கடவுள் வருகிறார்” என்று யூதாவிலுள்ள நகரங்களில் சொல்.+
இதோ! அவர் பரிசை எடுத்துக்கொண்டு வருகிறார்.
கொடுக்கப்போகிற கூலியை எடுத்துக்கொண்டு வருகிறார்.+
11 ஒரு மேய்ப்பனைப் போல அவர் தன்னுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வார்.*+
ஆட்டுக்குட்டிகளைத் தன்னுடைய கைகளால் வாரிக்கொள்வார்.
அவற்றைத் தன் நெஞ்சில் வைத்து சுமப்பார்.
கறவை* ஆடுகளை மெதுவாக* நடத்திக்கொண்டு போவார்.+
பூமியின் மண்ணைப் படியால் அளந்தவன் யார்?+
மலைகளை எடைபோட்டுப் பார்த்தவன் யார்?
குன்றுகளைத் தராசில் நிறுத்தியவன் யார்?
14 அவர் யாரிடம் அறிவுரை கேட்டுப் புரிந்துகொண்டார்?
அவருக்கு நியாயத்தைச் சொல்லிக்கொடுக்கிறவன் யார்?
அவருக்கு அறிவு புகட்டுகிறவன் யார்?
15 இதோ, தேசங்களெல்லாம் வாளியிலிருந்து சிந்தும் ஒரு துளி தண்ணீரைப் போலவும்,
தராசில் படிந்திருக்கும் தூசி போலவும் இருக்கின்றன.+
இதோ, அவர் தீவுகளைப் புழுதிபோல் தூக்குகிறார்.
16 பலிபீடத்தில் எரிப்பதற்கு லீபனோனில் இருக்கும் மரங்கள்கூட போதாது.
தகன பலி செலுத்துவதற்கு அங்கிருக்கும் மிருகங்களும் போதாது.
18 கடவுளை நீங்கள் யாருக்கு ஒப்பிடுவீர்கள்?+
யாருடைய சாயலுக்கு ஒப்பிடுவீர்கள்?+
19 கைத்தொழிலாளி ஒரு சிலையைச் செய்கிறான்.
ஆசாரி அதற்குத் தங்கத் தகடு அடிக்கிறான்.+
வெள்ளிச் சங்கிலிகளைச் செய்கிறான்.
20 சிலையைச் செய்வதற்காக ஒருவன் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.+
உளுத்துப்போகாத மரமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கிறான்.
விழாமல் நிற்கிற ஒரு சிலையைச் செதுக்குவதற்காக
திறமையான கைத்தொழிலாளியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான்.+
21 உங்களுக்குத் தெரியாதா?
நீங்கள் கேள்விப்பட்டது கிடையாதா?
ஆரம்பத்திலிருந்தே யாரும் உங்களுக்குச் சொன்னதில்லையா?
பூமி உண்டான சமயத்திலிருந்தே தெளிவாகத் தெரிவதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா?+
22 உருண்டையான* பூமிக்கு மேலே கடவுள் குடியிருக்கிறார்.+
பூமியில் வாழ்கிற மனுஷர்கள் அவருக்கு முன்னால் வெட்டுக்கிளிகள்போல் இருக்கிறார்கள்.
லேசான வலைத்துணியை விரிப்பதுபோல் அவர் வானத்தை விரிக்கிறார்.
குடியிருப்பதற்கான கூடாரம்போல் அதை அமைக்கிறார்.+
24 அவர்கள் நடப்படுவதற்குள்ளே,
விதைக்கப்படுவதற்குள்ளே,
வேரூன்றுவதற்குள்ளே,
அவர்கள்மேல் ஊதுகிறார்; அவர்கள் பட்டுப்போகிறார்கள்.
பதரைப் போல் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறார்கள்.+
25 “என்னை யாரோடு ஒப்பிடுவீர்கள், யாருக்குச் சமமாக்குவீர்கள்?” என்று பரிசுத்தமானவர் கேட்கிறார்.
26 “வானத்தை அண்ணாந்து பாருங்கள்.
அங்கே இருக்கும் நட்சத்திரங்களைப் படைத்தது யார்?+
அவற்றை ஒவ்வொன்றாக எண்ணி ஒரு படைபோல் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற கடவுள்தான் அவர்.
அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்.+
அவருடைய அபாரமான ஆற்றலினாலும் பிரமிக்க வைக்கிற பலத்தினாலும்,+
அவற்றில் ஒன்றுகூட குறையாமல் இருக்கிறது.
27 யாக்கோபே, இஸ்ரவேலே,
‘என் வழியை யெகோவா பார்ப்பதில்லை,
அவர் எனக்கு நியாயம் செய்வதில்லை’ என்று ஏன் சொல்கிறாய்?+
28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா?
பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார்.+
அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.+
அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.*+
29 சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்.
தெம்பு இல்லாதவர்களுக்கு எல்லா பலமும் கொடுக்கிறார்.+
30 சிறுவர்கள் சோர்வடைந்து களைத்துப்போகலாம்,
வாலிபர்களும் தடுமாறி விழலாம்,
31 ஆனால், யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள்.
கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாகப் பறப்பார்கள்.+
ஓடினாலும் களைத்துப்போக மாட்டார்கள்.
நடந்தாலும் சோர்ந்துபோக மாட்டார்கள்.”+