கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம்
6 கடவுளிடமிருந்து அளவற்ற கருணையைப் பெற்றுக்கொண்ட பின்பு அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றாமல் இருந்துவிடாதீர்கள்+ என்று அவருடைய சக வேலையாட்களான நாங்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.+ 2 ஏனென்றால், “அனுக்கிரகக் காலத்தில் உன்னுடைய வேண்டுதலைக் கேட்டேன், மீட்பின் நாளில் உனக்கு உதவி செய்தேன்”+ என்று கடவுள் சொல்கிறார். இதோ! இப்போதே அனுக்கிரகக் காலம். இதோ! இப்போதே மீட்பின் நாள்.
3 எங்களுடைய ஊழியத்தில் யாரும் குறை கண்டுபிடிக்கக் கூடாது+ என்பதற்காக நாங்கள் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும்* உண்டாக்காமல் இருக்கிறோம். 4 எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.+ உபத்திரவங்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள்,+ 5 அடிகள், சிறைவாசங்கள்,+ கலகங்கள், பாடுகள், தூக்கமில்லாத இரவுகள், பட்டினிகள்+ ஆகியவற்றின்போது நாங்கள் காட்டிய சகிப்புத்தன்மையின் மூலமும், 6 தூய்மை, அறிவு, பொறுமை,+ கருணை,+ கடவுளுடைய சக்தி, வெளிவேஷமில்லாத அன்பு,+ 7 உண்மையான பேச்சு, கடவுளுடைய வல்லமை+ ஆகியவற்றின் மூலமும், வலது கையிலும்* இடது கையிலும்* பிடித்திருக்கிற நீதியின் ஆயுதங்கள்+ மூலமும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம். 8 அதோடு, மற்றவர்கள் எங்களைப் புகழ்ந்து பேசினாலும் கேவலமாகப் பேசினாலும், தாழ்வாகப் பேசினாலும் உயர்வாகப் பேசினாலும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம். அதுமட்டுமல்ல, நாங்கள் ஏமாற்றுக்காரர்களாகத் தோன்றினாலும் உண்மையுள்ளவர்களாகவும், 9 அறியப்படாதவர்களாகத் தோன்றினாலும் நன்கு அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்களாக* தோன்றினாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும்,+ தண்டிக்கப்பட்டவர்களாக* தோன்றினாலும் கொல்லப்படாதவர்களாகவும்,+ 10 துக்கப்படுகிறவர்களாகத் தோன்றினாலும் எப்போதுமே சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகளாகத் தோன்றினாலும் நிறைய பேரை பணக்காரர்களாக ஆக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களாகத் தோன்றினாலும் எல்லாவற்றையும் பெற்றவர்களாகவும்+ இருப்பதன் மூலமும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம்.
11 கொரிந்தியர்களே, நாங்கள் உங்களிடம் ஒளிவுமறைவில்லாமல் பேசியிருக்கிறோம், உங்களுக்காக எங்கள் இதயக் கதவை அகலமாகத் திறந்திருக்கிறோம். 12 எங்களுடைய இதயத்தில் உங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறோம்,+ ஆனால் உங்களுடைய இதயத்தில் எங்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்கிறீர்கள், எங்கள்மேல் கனிவான பாசத்தைக் காட்டாமல் இருக்கிறீர்கள். 13 அதனால், என்னுடைய பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் சொல்கிறேன், எங்களுக்காக நீங்களும் உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்.+
14 விசுவாசிகளாக* இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள்.*+ நீதிக்கும் அநீதிக்கும் என்ன உறவு இருக்கிறது?+ ஒளிக்கும் இருளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?+ 15 கிறிஸ்துவுக்கும் பொல்லாதவனுக்கும்* என்ன இசைவு இருக்கிறது?+ விசுவாசியாக இருப்பவனுக்கும் விசுவாசியாக இல்லாதவனுக்கும் என்ன பொருத்தம் இருக்கிறது?+ 16 கடவுளுடைய ஆலயத்துக்கும் சிலைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?+ நாம் உயிருள்ள கடவுளின் ஆலயமாக இருக்கிறோமே;+ இதைப் பற்றித்தான் கடவுள், “நான் அவர்கள் நடுவில் தங்கியிருந்து,+ அவர்கள் நடுவில் நடப்பேன். நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று சொன்னார். 17 “‘அதனால், நீங்கள் அவர்களைவிட்டு வெளியே வாருங்கள், அவர்களிடமிருந்து பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்’;+ ‘அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்’+ என்று யெகோவா* சொல்கிறார்.” 18 “‘அதோடு, நான் உங்களுக்குத் தகப்பனாக இருப்பேன்,+ நீங்கள் எனக்கு மகன்களாகவும் மகள்களாகவும் இருப்பீர்கள்’+ என்று சர்வவல்லமையுள்ளவரான யெகோவா* சொல்கிறார்.”