பேதுருவின் முதலாம் கடிதம்
5 கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியாக இருக்கிறவனும் வெளிப்படப்போகிற மகிமையில்+ பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், சக மூப்பர் என்ற முறையில் உங்கள் மத்தியில் இருக்கிற மூப்பர்களிடம் கேட்டுக்கொள்வது* இதுதான்: 2 கண்காணிகளாகச் சேவை செய்து,* உங்களுடைய பொறுப்பில் இருக்கிற கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்.+ கட்டாயத்தால் இல்லாமல் கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும்,+ அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல்+ ஆர்வமாகவும் இதைச் செய்யுங்கள். 3 கடவுளுடைய சொத்தாக இருக்கிற மந்தையின் மேல் ஆதிக்கம் செலுத்தாமல்,+ மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்.+ 4 அப்போதுதான், முதன்மை மேய்ப்பர்+ வெளிப்படும்போது, வாடாத கிரீடமான மகிமையின் கிரீடம் உங்களுக்குக் கிடைக்கும்.+
5 அதேபோல் இளைஞர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு* அடிபணிந்து நடங்கள்.+ எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.* ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.+
6 அதனால், கடவுளுடைய பலத்த கைக்குள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; அப்போது, சரியான நேரத்தில் கடவுள் உங்களை உயர்த்துவார்.+ 7 அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்.+ அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.+ 8 தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்!+ உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்.*+ 9 நீங்களோ விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனை எதிர்த்து நில்லுங்கள்.+ உலகத்தில் இருக்கிற உங்கள் சகோதரர்கள் எல்லாரும் நீங்கள் அனுபவிப்பது போன்ற துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமே.+ 10 அளவற்ற கருணை நிறைந்த கடவுள், கொஞ்சக் காலம் நீங்கள் கஷ்டம் அனுபவித்த பின்பு உங்களுடைய பயிற்சியை முடிப்பார். உங்களை உறுதிப்படுத்துவார்,+ உங்களைப் பலப்படுத்துவார்,+ உங்களை உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நிற்க வைப்பார். கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற உங்களுக்குத் தன்னுடைய முடிவில்லாத மகிமை+ கிடைக்க வேண்டும் என்பதற்காக உங்களை அழைத்திருக்கிறார். 11 அவருக்கே என்றென்றும் வல்லமை சொந்தம். ஆமென்.*
12 நம்பிக்கைக்குரிய சகோதரனாக நான் கருதுகிற சில்வானு*+ மூலம் இந்தக் கடிதத்தைச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். உங்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், கடவுளுடைய அளவற்ற கருணை உண்மையானது என்பதை உங்களுக்கு ஆணித்தரமாக எடுத்துக்காட்டுவதற்காகவும் இதை எழுதியிருக்கிறேன்; அந்த அளவற்ற கருணையை இழந்துவிடாதீர்கள். 13 பாபிலோனில் இருப்பவளும்,* அதாவது உங்களைப் போலவே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவளும், உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறாள். அப்படியே என் மகன் மாற்குவும்+ வாழ்த்துச் சொல்கிறான். 14 அன்பு முத்தத்தோடு ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.
கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற உங்கள் எல்லாருக்கும் சமாதானம் கிடைக்கட்டும்.