ஏசாயா
60 “பெண்ணே, எழுந்திரு!+ ஒளிவீசு! உன்மேல் ஒளி உதித்துவிட்டது.
யெகோவாவின் மகிமை உன்மேல் பிரகாசிக்கிறது.+
2 பூமி இருண்டுபோகும்.
தேசங்கள் கும்மிருட்டில் மூழ்கிவிடும்.
ஆனால், உன்மேல் யெகோவா பிரகாசிப்பார்.
அவருடைய மகிமை உன்மேல் மின்னும்.
4 கண்களை உயர்த்தி, சுற்றிலும் பார்!
அவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி, உன்னிடம் வருகிறார்கள்.
உன்னுடைய மகன்கள் தொலைதூரத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.+
உன்னுடைய மகள்களும் இடுப்பில் சுமந்து வரப்படுகிறார்கள்.+
5 அப்போது, கடலின் செல்வங்கள் உன்னிடம் கொண்டுவரப்படும்.
தேசங்களின் சொத்துகள் உன்னிடம் வந்து சேரும்.+
நீ அதைப் பார்த்து பூரித்துப்போவாய்.+
உன் இதயம் சந்தோஷத்தில் பொங்கி வழியும்.
6 ஒட்டகங்கள் கூட்டம் கூட்டமாக உன் தேசத்துக்கு வரும்.
மீதியான், ஏப்பா தேசங்களிலிருந்து+ இளம் ஆண் ஒட்டகங்கள் வரும்.
சேபா தேசத்திலிருந்து ஜனங்கள் வருவார்கள்.
அவர்கள் தங்கத்தையும் சாம்பிராணியையும் எடுத்துக்கொண்டு வருவார்கள்.
அவர்கள் யெகோவாவின் புகழைப் பரப்புவார்கள்.+
7 கேதாரின்+ மந்தைகள் உன்னிடம் கொண்டுவரப்படும்.
நெபாயோத்தின்+ செம்மறியாட்டுக் கடாக்கள் உனக்குப் பயன்படும்.
என் பலிபீடத்தில் செலுத்தப்படும் அவற்றை நான் ஏற்றுக்கொள்வேன்.+
8 மேகங்களைப் போலவும் மாடங்களுக்குப் பறந்து வருகிற புறாக்களைப் போலவும்
வருகிற இவர்கள் யார்?
9 தீவுகள் என்மேல் நம்பிக்கை வைக்கும்.+
தொலைதூரத்திலிருந்து உன் மகன்களையும்,+
வெள்ளியையும் தங்கத்தையும் ஏற்றிக்கொண்டு,
தர்ஷீசின் கப்பல்கள் முன்வரிசையில் வருகின்றன.
உன் கடவுளும் இஸ்ரவேலின் பரிசுத்தருமான யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்க வருகின்றன.
10 மற்ற தேசத்து ஜனங்கள் உன் மதில்களைக் கட்டுவார்கள்.
அவர்களுடைய ராஜாக்கள் உனக்குப் பணிவிடை செய்வார்கள்.+
நான் கோபத்தில் உன்னைத் தண்டித்தேன்.
ஆனால், இனி பிரியத்தோடு உன்மேல் இரக்கம் காட்டுவேன்.+
11 தேசங்களின் சொத்துகள் உன்னிடம் கொண்டுவரப்படுவதற்காக,
உன் வாசல் கதவுகள் எப்போதும் திறந்து வைக்கப்படும்.+
அவை ராத்திரி பகலாகப் பூட்டப்படாமல் இருக்கும்.
அந்தச் சொத்துகளை ராஜாக்களே முதலில் எடுத்து வருவார்கள்.+
13 லீபனோனுக்குப் புகழ் சேர்க்கிற ஆபால் மரமும்,
சாம்பல் மரமும், ஊசியிலை மரமும் உன்னிடம் கொண்டுவரப்படும்.+
என் ஆலயத்தை அலங்கரிப்பதற்காக அவை எடுத்து வரப்படும்.
என் பாதம் இருக்கிற அந்த இடத்தை மகிமைப்படுத்துவேன்.+
14 உன்னைக் கொடுமைப்படுத்திய ஜனங்களின் பிள்ளைகள் உன் முன்னால் வந்து தலைவணங்குவார்கள்.
உன்னை மரியாதை இல்லாமல் நடத்துகிறவர்கள் உன் காலடியில் விழ வேண்டும்.
அவர்கள் உன்னை யெகோவாவின் நகரம் என்றும்,
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளுடைய சீயோன் என்றும் அழைக்க வேண்டும்.+
15 வெறுத்து ஒதுக்கப்பட்ட, வெறிச்சோடிப்போன இடமாக இனி நீ இருக்க மாட்டாய்.+
நான் உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்.
எல்லா தலைமுறைகளும் உன்னைப் பார்த்து சந்தோஷப்படும்படி செய்வேன்.+
16 குழந்தை அதன் தாயிடமிருந்து பால் குடிப்பது போல,
நீ தேசங்களிடமிருந்தும் ராஜாக்களிடமிருந்தும் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்வாய்.+
யெகோவாவாகிய நானே உன்னை மீட்கிறவர் என்றும்,
யாக்கோபின் வல்லமையுள்ள கடவுளே உன்னை விடுவிக்கிறவர் என்றும் நிச்சயம் புரிந்துகொள்வாய்.+
17 செம்புக்குப் பதிலாகத் தங்கத்தையும்,
இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும்,
மரத்துக்குப் பதிலாகச் செம்பையும்,
கற்களுக்குப் பதிலாக இரும்பையும் நான் கொண்டுவருவேன்.
சமாதானத்தை உன் கண்காணியாகவும்,
நீதியை உன் மேற்பார்வையாளராகவும் நியமிப்பேன்.+
18 இனி உன் தேசத்தில் வன்முறைச் சம்பவங்களே நடக்காது.
உன் எல்லைகளில் நாச வேலையையும் அழிவையும் பற்றிய பேச்சே கேட்காது.+
உன் மதில்களை மீட்பு என்றும்,+ உன் நுழைவாசல்களை புகழ் என்றும் அழைப்பாய்.
19 பகலில் ஒளிதர இனி உனக்குச் சூரியன் தேவை இல்லை.
ராத்திரியில் வெளிச்சம்தர இனி சந்திரன் தேவை இல்லை.
ஏனென்றால், யெகோவாவே உனக்கு என்றென்றும் ஒளியாக இருப்பார்.+
உன் கடவுளே உனக்கு அலங்காரமாக இருப்பார்.+
20 உன்னுடைய துக்க நாட்கள் முடிவுக்கு வரும்.+
யெகோவாவே உனக்கு என்றென்றும் ஒளியாக இருப்பார்.+
அதனால், உன்னுடைய சூரியன் இனி மறையாது.
உன்னுடைய சந்திரனும் தேய்ந்துபோகாது.
21 உன் ஜனங்கள் எல்லாரும் நீதிமான்களாக இருப்பார்கள்.
இந்தத் தேசத்தில் அவர்கள் என்றென்றும் குடியிருப்பார்கள்.
22 கொஞ்சம் பேர் ஆயிரம் பேராகவும்,
சாதாரண ஜனங்கள் சக்திபடைத்த தேசமாகவும் ஆவார்கள்.
யெகோவாவாகிய நானே சரியான நேரத்தில் இது வேகமாக நடக்கும்படி செய்வேன்.”