பேதுருவின் முதலாம் கடிதம்
2 அதனால், எல்லா விதமான கெட்ட குணத்தையும் சூழ்ச்சியையும் வெளிவேஷத்தையும் பொறாமையையும் புண்படுத்துகிற பேச்சையும் விட்டுவிடுங்கள்.+ 2 பச்சிளம் குழந்தைகள்+ பாலுக்காக ஏங்குவதுபோல், கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற கலப்படமில்லாத* பாலுக்காக ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அதைக் குடிப்பதன் மூலம் நீங்கள் வளர்ச்சியடைந்து மீட்புப் பெறுவீர்கள்.+ 3 ஏனென்றால், நம் எஜமான் கருணையுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்து* பார்த்திருக்கிறீர்கள்.
4 மனிதர்களால் ஒதுக்கித்தள்ளப்பட்டதாக+ இருந்தாலும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவருடைய பார்வையில் விலைமதிப்புள்ளதாகவும் இருக்கிற உயிருள்ள கல்லாகிய நம் எஜமானிடம்+ வரும்போது, 5 உயிருள்ள கற்களாகிய நீங்களும்கூட ஆன்மீக வீடாகக் கட்டப்படுகிறீர்கள்.+ கடவுளுக்குப் பிரியமான ஆன்மீக பலிகளை+ இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கும்படி, பரிசுத்த குருமார்களாக இருக்க அப்படிக் கட்டப்படுகிறீர்கள். 6 ஏனென்றால், “இதோ! நான் சீயோனில் ஒரு மூலைக்கல்லை நாட்டுகிறேன்; அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலைமதிப்புள்ள மூலைக்கல்; அதன்மீது விசுவாசம் வைக்கிற யாருமே ஒருபோதும் ஏமாற்றம் அடைய* மாட்டார்கள்” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.+
7 அதனால், விசுவாசிகளாக* இருக்கிற உங்களுக்கு அவர் மதிப்புள்ளவராக இருக்கிறார். ஆனால் விசுவாசிகளாக இல்லாதவர்களுக்கு, “கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய+ கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது.”+ 8 அதோடு, “தடைக்கல்லாகவும், தடுக்கிவிழ வைக்கும் கற்பாறையாகவும் ஆனது.”+ கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால்தான் அவர்கள் தடுக்கி விழுகிறார்கள்; அதுதான் அப்படிப்பட்டவர்களுக்கு வரப்போகும் முடிவு. 9 ஆனால் நீங்கள், இருளிலிருந்து தன்னுடைய அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய+ “மகத்துவங்களை* எல்லா இடங்களிலும் அறிவிப்பதற்குத்+ தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக, ராஜ அதிகாரமுள்ள குருமார்களாக, பரிசுத்த ஜனமாக,+ அவருடைய விசேஷ சொத்தாக”+ இருக்கிறீர்கள். 10 முன்பு நீங்கள் கடவுளுடைய மக்களாக இருக்கவில்லை, இப்போதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்;+ முன்பு உங்களுக்குக் கடவுள் இரக்கம் காட்டவில்லை, இப்போதோ இரக்கம் காட்டியிருக்கிறார்.+
11 அன்பானவர்களே, நீங்கள் இந்த உலகத்தில் அன்னியர்களாகவும் தற்காலிகக் குடிமக்களாகவும்+ இருப்பதால், உங்களுக்கு எதிராகப் போர் செய்துகொண்டிருக்கிற+ பாவ ஆசைகளிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.+ 12 உலக மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல நடத்தை உள்ளவர்களாக இருங்கள்;+ அவர்கள் உங்களைக் கெட்டவர்கள் என்று சொன்னாலும், உங்களுடைய நல்ல செயல்களை நேரடியாகப் பார்த்து,+ கடவுள் சோதனையிடும் நாளில் அவரை மகிமைப்படுத்துவார்கள்.
13 அதிகாரத்தில் இருக்கிற எல்லாருக்கும்,*+ எஜமானை முன்னிட்டு கட்டுப்பட்டு நடங்கள்: உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற ராஜாவாக இருந்தாலும்+ சரி, 14 கெட்டது செய்கிறவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லது செய்கிறவர்களைப் பாராட்டுவதற்கும் அவரால் அனுப்பப்பட்ட ஆளுநராக இருந்தாலும் சரி, எல்லாருக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.+ 15 இப்படி நீங்கள் சரியான விதத்தில் நடந்து,* முட்டாள்தனமாகப் பேசுகிற புத்தியில்லாத ஆட்களின் வாயை அடைக்க வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பம்.*+ 16 நீங்கள் சுதந்திரமாக வாழுங்கள்.+ இருந்தாலும், உங்களுடைய சுதந்திரத்தைக் கெட்ட செயல்களை மறைக்கும் போர்வையாக* பயன்படுத்தாதீர்கள்,+ கடவுளுக்கு அடிமைகளாக வாழுங்கள்.+ 17 எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள்.+ கடவுளுக்குப் பயந்து நடங்கள்.+ ராஜாவுக்கு மதிப்புக் கொடுங்கள்.+
18 வேலைக்காரர்களே, உங்கள் முதலாளிகளுக்குத் தகுந்த மரியாதை காட்டி அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடங்கள்;+ நல்லவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இருக்கிற முதலாளிகளுக்கு மட்டுமல்ல, பிரியப்படுத்தக் கடினமானவர்களாக இருக்கிறவர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். 19 கடவுளுக்கு முன்னால் நீங்கள் சுத்தமான மனசாட்சியோடு இருப்பதற்காக அநியாயமாய்ப் பாடுகள் பட்டு வேதனைகளை* சகித்துக்கொண்டால்,+ அது கடவுளுக்குப் பிரியமாக இருக்கும். 20 நீங்கள் பாவம் செய்ததற்காக அடிக்கப்படும்போது சகித்துக்கொண்டால், அதில் என்ன விசேஷம்?+ ஆனால், நீங்கள் நன்மை செய்ததற்காகப் பாடுகள் படும்போது அவற்றைச் சகித்துக்கொண்டால், அதுதான் கடவுளுக்குப் பிரியமாக இருக்கும்.+
21 சொல்லப்போனால், நீங்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் உங்களை அழைத்திருக்கிறார். ஏனென்றால், கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு,+ நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.+ 22 அவர் பாவம் செய்யவில்லை,+ அவருடைய பேச்சில் சூதுவாது இருக்கவில்லை.+ 23 அவர் அவமானப்படுத்தப்பட்டபோது*+ பதிலுக்கு அவமானப்படுத்தவில்லை.*+ துன்புறுத்தப்பட்டபோது+ மிரட்டவில்லை; மாறாக, நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம்+ தன்னையே ஒப்படைத்தார். 24 நாம் பாவச் செயல்களுக்குச் செத்து நீதியான செயல்களுக்கென்று வாழ்வதற்காகத்தான், மரக் கம்பத்தில்* அறையப்பட்ட தன்னுடைய உடலில்+ அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தார்.+ “அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்.”+ 25 நீங்கள் வழிதவறித் திரிகிற ஆடுகளைப் போல் இருந்தீர்கள்.+ ஆனால் இப்போது, உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே திரும்பி வந்திருக்கிறீர்கள்.+