ரோமருக்குக் கடிதம்
12 அதனால் சகோதரர்களே, கடவுள் கரிசனையுள்ளவராக இருப்பதால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். உங்களுடைய உடலை+ உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும்+ கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள். சிந்திக்கும் திறனைப்+ பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள். 2 இந்த உலகத்தின்* பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள்.+ அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம்* என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.*+
3 உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல்,+ அவரவருக்குக் கடவுள் கொடுத்திருக்கிற* விசுவாசத்தின்படியே+ எண்ண வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையால் இதை உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன். 4 ஒரே உடலில் பல உறுப்புகள் இருந்தாலும்+ எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை; 5 அதேபோல், நாமும் பலராக இருந்தாலும் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு ஒரே உடலாக இருக்கிறோம். ஆனால், ஒன்றையொன்று சார்ந்திருக்கிற தனித்தனி உறுப்புகளாக இருக்கிறோம்.+ 6 நமக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையின்படி நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வரங்கள் இருக்கின்றன.+ இதனால், அவரவருக்குக் கொடுக்கப்பட்ட விசுவாசத்தின்படியே, தீர்க்கதரிசனம் சொல்கிறவர்கள் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லட்டும். 7 ஊழியம் செய்கிறவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்யட்டும். கற்றுக்கொடுக்கிறவர்கள் தொடர்ந்து கற்றுக்கொடுக்கட்டும்.+ 8 உற்சாகப்படுத்துகிறவர்கள்* தொடர்ந்து உற்சாகப்படுத்தட்டும்.*+ பகிர்ந்து கொடுக்கிறவர்கள் தாராளமாகப் பகிர்ந்து கொடுக்கட்டும்.*+ தலைமை தாங்குகிறவர்கள் ஊக்கம் தளராமல்* தலைமை தாங்கட்டும்.+ இரக்கம் காட்டுகிறவர்கள் சந்தோஷமாக இரக்கம் காட்டட்டும்.+
9 உங்களுடைய அன்பு போலியாக இருக்க வேண்டாம்.+ பொல்லாததை அடியோடு வெறுத்துவிடுங்கள்.+ நல்லதை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். 10 ஒருவருக்கொருவர் சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும் காட்டுங்கள். ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.*+ 11 சுறுசுறுப்பாக* இருங்கள், சோம்பேறியாக இருக்காதீர்கள்.*+ யெகோவாவின்* சக்தியால் நிறைந்து ஆர்வத்துடிப்போடு செயல்படுங்கள்.+ அவருக்கு அடிமைகளாக வேலை செய்யுங்கள்.+ 12 நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்தில் சகித்திருங்கள்;+ விடாமல் ஜெபம் செய்யுங்கள்.+ 13 உங்களிடம் இருப்பதைப் பரிசுத்தவான்களுடைய தேவைகளுக்கு ஏற்ப அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.+ உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.+ 14 உங்களைக் கொடுமைப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிக்கச் சொல்லி கடவுளிடம் தொடர்ந்து கேளுங்கள்.+ ஆம், ஆசீர்வதிக்கச் சொல்லிக் கேளுங்கள், அவர்களைச் சபிக்காதீர்கள்.+ 15 சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள். அழுகிறவர்களோடு அழுங்கள். 16 உங்களைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களைப் பற்றியும் நினையுங்கள். மேட்டிமையான விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்,* மனத்தாழ்மையாக இருங்கள்.+ உங்களை ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+
17 யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்.+ எல்லாருடைய பார்வையிலும் எது நல்லதோ அதையே செய்யுங்கள். 18 கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.+ 19 அன்புக் கண்மணிகளே, “‘பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்’ என்று யெகோவா* சொல்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பதால்,+ நீங்கள் பழிக்குப்பழி வாங்காமல் அதைக் கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்.+ 20 “உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்கள். அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள். இப்படிச் செய்யும்போது நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பீர்கள்.”*+ 21 தீமை உங்களை வெல்ல விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.+